மே 31 இல் அரச பேரினவாதம் நூலகத்தை அழித்தது! தமிழர்கள் நூலகச் சிந்தனையை அழித்தனர்: த ஜெயபாலன்

ஆண்டுகள் உருண்டோடி யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டு நாற்பதாவது ஆண்டு ஆகிவிட்டது. ஆண்டுகளைக் கடந்து செல்வது போல் எமது வரலாறுகளையும் பதிவுகளையும் கூட நாம் மிக எளிதில் கடந்து அல்ல பாய்ந்தே சென்றுவிடுகின்றோம். வேகத்திற்கு அளித்த மதிப்பை விவேகத்திற்கு அளிகாததால் தமிழ் சமூகம் இன்று தனது இருத்தலுக்கான அடிப்படைகளையே இழந்துகொண்டிருக்கின்றது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற விவேகமற்ற கோசங்கள் என்னத்தையாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்ற நிலையில் நிற்கின்றோம்.

இலங்கையில் தமிழ் அறிவுப்புலத்தின் மையப்புள்ளியாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைந்தது. யாழ்ப்பாண நூலகம் பற்றிய குறிப்பு ஏப்ரல் 10 1894 இல் தி ஓவர்லன்ட் சிலோன் ஓப்சேர்வர் என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இது யாழ்ப்பாண நூலகத்தின் தொன்மையயை வெளிப்படுத்தி நிற்கின்றது. நூறாண்டுகளைக் கடந்த யாழ்ப்பாண நூலகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் யாழ்ப்பாண அறிவுப்புலத்தின் எழுச்சியயையும் வீழ்ச்சியயையும் பிரதிபலிக்கpன்றது. இது யாழ்ப்பாண அறிவுப்புலத்தை மட்டுமல்ல அச்சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிக்கும் ஒரு நிறுவனமாகவும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலையின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

வண. பிதா. லோங் அடிகளாரின் சிந்தனையில் தோண்றிய நூலக எண்ணக்கருவுக்காக ஆரம்பத்தில் அவருடைய உருவச்சிலையே நூலகத்தின் முன் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் சைவத்தின் எழுச்சியோடு அந்த இடத்தை கல்விக் கடவுளான சரஸ்வதி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 1981 மே 31 இரவு முதல் இலங்கைப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறையின் அடையாளச் சின்னமாக யாழ்பாணப் பொது நூலகம் உலகறியப்பட்டது. அந்த ஒடுக்குறை அடையாளத்தை புத்தனின் வெண்தாமரையை க் கொண்டு மறைக்க நூலகம் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டது.

ஆனால் மீளக்கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைப்பதுஇ யார் திறந்து வைப்பது என்பதில் சிக்கல்கள் உருவானது. நூலகத்தை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்போதைய யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையன் திறந்து வைக்கக்கூடாது என்பதில் சாதிமான்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மிகத் தெளிவாக இருந்தனர். அதனால் கட்சியின் தலைவரான வி ஆனந்தசங்கரியயை வைத்து நூலகத்தைத் திறந்து தங்கள் அரசியல் லாபத்தையீட்ட தீவிரமாக செயற்பட்டனர். ஆனால் அது திறக்கப்படுவதை தங்கள் எதிரியான வி ஆனந்தசங்கரியினால் திறக்கப்படுவதை அரசியல் காரணங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. நூலக மீள்திறப்பு பந்தாடப்பட்டது.

அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட சாதிமான்களின் கூடாரமான தமிழர் விடுதலைக் கூட்டணி சாதுரியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லன் கந்தையன் நூலகத்தை திறப்பதை விரும்பவில்லை என ஒரு பல்டி அடித்தது. பல புலி எதிர்ப்பு வாதிகளுக்கும் இந்த விளக்கம் மிகச்சௌகரிகமாக அமைந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் தமிழ் மக்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பாகவே இன்றும் உள்ளது.

யாழ்ப்பாணச் சமூகமானது தன்னுடைய செயற்பாடுகளுக்கும் சிந்தனைக்கும் இடையே பாரிய இடைவெளியயைக் கொண்ட சமூகமாகவே இன்றும் உள்ளது. சிங்கள சமூகத்தின் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையயை எதிர்த்த யாழ்ப்பாண சமூகம் தான் ஏனைய சமூகங்கள் மீது கட்டற்ற ஒடுக்குமுறையயை மிகத்தீவிரமாகக் கைக்கொண்டது. யாழ்ப்பாணப் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்படுவதற்கு முன்னதாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பள்ளி, நூலகம் என்பன யாழ் ஆதிக்க சமூகத்தினரால் எரியூட்டப்பட்டு இருந்தது. இன்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களை ஏற்றுக்கொள்ளாத அரச பாடசாலைகள் யாழ் மண்ணில் உள்ளது. மனித உரிமைகளைக் கோருகின்ற இன்றைய யாழ்ப்பாண சமூகம் ஏனைய சமூகங்களின் அடிப்படை உரிமைகளைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயாரற்ற சமூகமாகவே உள்ளது.

நாற்பது ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூருகின்ற யாழ்ப்பாண சமூகம் இன்னமும் அந்நூலகம் எந்நாளில் எரிக்கப்பட்டது என்ற விடயத்தில் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. வாய்மொழி வந்த செய்திகளிலும் அந்தச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டஇ பேசப்பட்ட விடயங்களையும் கொண்டே இந்தப் புனைவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ‘கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தன்’ என்ற பழமொழிக்கு ஏற்றாற் போல் எம்மத்தியில் உள்ள சில கேள்விச் செவியர்கள் ‘தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர். அறிவியல் தேடலே இல்லாமல் கூடத்தின் வரலாற்று நிகழ்வொன்றின் முக்கிய தினத்தையே மாற்றிட முனைகின்றனர். இதுவும் ஒரு முரண்நகையே.

அறிவியலின் அடிப்படையே தேடல் ஆனால் யாழ்ப்பாண சமூகம் ஒரு தேடலற்ற சமூகமாக தேடுபவர்களை அவமதிக்கின்ற சமூகமாக மாறிவிட்டது. அறிவு என்பது பரீட்சையில் சித்தியடைவது என்ற நிலைக்கு யாழ்ப்பாணசமூகம் குறுகி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பொதுவான விடயங்களைத் தேடுவதுஇ அறிவதுஇ கற்பது வீண் விரயம் என்று பாடப்புத்தகங்களுக்குள்ளேயே தன்னை அடக்கியது. பாடப் புத்தகங்களும் வீண் விரயமாகி தற்போது துரித மீட்டல் புத்தகங்களும் வினாவிடைப் புத்தகங்களும் படித்து குறுக்கு வழியில் அறிவைப் பெற்றுவிடலாம் என்று விழுந்து விழுந்து படித்து இப்போது யாழ்ப்பாணத்தினது மட்டுமல்ல தமிழர்களின் கல்வி நிலையே வீழ்ந்து கிடக்கின்றது. ஆனாலும் அங்கு நூலகங்களின் அவசியம் இன்னமும் உணரப்படவில்லை.

யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31இல் எரியூட்டப்பட்டது என்பதை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நுலகவியலாளராக வாழ்நாள் நூலகவியலாளராக உள்ள என் செல்வராஜா மிகத் தெளிவாக வரலாற்று ஆவணங்கள் மூலமாகப் பதிவு செய்துள்ளார். இன்று அவருடைய ஆவணத் தொகுப்புகள் மட்டுமே யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் வரலாற்றை அழிந்து போகாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

2003இல் என் செல்வராஜாவினால் ‘றைஸிங் ப்ரொம் தி ஆஸஸ்’ என்ற ஆவணம் ஆங்கில மொழியில் 110 பக்கங்களுடன் தேசம் வெளியீடாக வெளிவந்தது. அதனை நான் (த ஜெயபாலன்) வடிவமைத்து இருந்தேன். தற்போது நூலகவியலாளர் என் செல்வராஜா மேலதிக தகவல்களைத் திரட்டி 200 வரையான பக்கங்களுடன் நூலக எரிப்பின் நாற்பதாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் வெளிக்கொணர்ந்துள்ளார். யாழ் நூலக எரிப்புப் பற்றி ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே ஆவணம் இதுவாகும். என் செல்வராஜா யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றிய தமிழ் ஆவணத் தொகுப்பு ஒன்றையும் வெளயிட்டு உள்ளார்.

அரச பேரினவாதம் நூலகத்தையும் நூல்களையும் எரித்ததால் நாம் இன்றும் நூலகம் எரித்த நாளை நினைவுகூருகின்றோம். நூலகத்தின் பௌதீகக் கட்டமைப்பை அரசு எரித்து தீக்கிரையாக்கியது. ஆனால் நாம் நூலகச் சிந்தனையையே எமது அடியோடு அழித்துவிட்டோம். எத்தனை நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. எத்தனை பாடசாலைகளில் நூலகங்கள் இயங்குகின்றன. எத்தனை பேர் நூல்களை, பத்திரிகைகளை வாசிக்கின்றனர். அன்று அரச பேரினவாதம் நூலகத்தை எரித்திராவிட்டால் சிலசமயம் இன்று கறையான் அரித்திருக்கும். எரித்த நாளே எமக்கு தெரியாத போது அரித்தநாள் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

Show More
Leave a Reply to Democracy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Democracy
    Democracy

    “அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட சாதிமான்களின் கூடாரமான தமிழர் விடுதலைக் கூட்டணி (RATS) சாதுரியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் (ELI) ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லன் கந்தையன் நூலகத்தை திறப்பதை விரும்பவில்லை என ஒரு பல்டி அடித்தது. பல புலி எதிர்ப்பு வாதிகளுக்கும் இந்த விளக்கம் மிகச்சௌகரிகமாக அமைந்தது. (Rats eat Eli)”

    In Tamilnadu state the curbed World-view was even until in 1500 AD முன் எழுதியதாக கூறப்படும் பழனி செப்பேட்டில், “வங்களர் சிங்கிளர் சீனகர் சோனகர் ஆரிய ரொட்டியர் பற்பலர் மதங்கள் (#SECTARIANISM) மச்சலர் குச்சலர் மாளுவர் மலையாளர் கொங்கர் (chalukya Gauda) கலிங்கர் கருனாடர் துலுக்க மறவர் (அஞ்சுவண்ணம்) மராத்திகரென்னப்பட்ட பதினென் பூமியும் ஏழு தீவும் சூழ்ந்த (#Lakshadweep) நாகலோக பெருந்தீவில் (#Indian mainland or Boga-bhumi or Omnisciemce) நரபதியாகிய பூலோக புரந்தர பூருவா பச்சிமா தெச்சனா ருத்திர சத்த சமுத்திராபதி (that time a small king)”.

    இதில் தெரிவது என்னவென்றால், கடைசியாக நினைவிலிருந்து அழிக்கப்பட்ட, அதாவது, “விஜயநகர அரசு” சம்ஸ்கிருத பார்பான்களை ஆதரித்து, கிருஸ்தவருடன் (ஆபிரகாம்) தர்க்கம் செய்ய ஆரம்பித்தபோது, “தமிழ்-சைவ-வெள்ளாளர்கள்”, கிருஸ்தவருடன் தர்க்கம் செய்தாலும் (ஆறுமுக நாவலர்), வளர்ந்துவரும் காலனித்துவ வேலைவாய்ப்பு கருதி, “திராவிட கருத்துயலுக்குள்” வந்தனர்! இதுதான் யாழ்ப்பாண நூலகத்தின் சிறப்பு!

    இந்த “பரிணாம வளர்ச்சியை” ஆவணப்படுத்திய ஏடுகள் யாழ்ப்பாண நுலகத்துலேயே இருந்தன! இந்தியாவில் இல்லை!
    முக்கியமாக, “சமண மதத்திலிருந்து” சைவ மதத்திற்கு மாறிய திருநாவுக்கரசர் போன்றவர்கள், ஜாதிப்பிரிவுகளை ஒரு “SECTARIANISM யனாக” பரிணமித்தது, புத்தமதத்தில் இல்லாத ஒன்று. அதனால்தான் “லெபனான்” மாதிரி, பல்வேறு ஈழ அமைப்புகளிடையே அடித்துக்கொண்டு, அதே சமயத்தில் இந்த உள் வெட்டுக்குத்து குறைவாக இருந்த “சிங்கள-புத்த” இயங்கியலிடம் சின்னாபின்னப் பட்டது!?

    Reply
  • Democracy
    Democracy

    /I got calls from Colombo journalists saying I had challenged Sri Lanka’s sovereignty and attacked its judiciary, etc. This is fallacious. I believe, on the contrary, that Mahinda Rajapaksa made a historic contribution to his nation and did a great favour to India and Tamil Nadu by ridding us all of the cruellest, most deceitful, fascist force in our history. He deserves India’s gratitude. And the LTTE deserves nobody’s sympathy. But Sri Lanka’s peace dividend should not be confined to a construction boom./ – Shekhar Gupta, IndiaToday, Dec 2017.

    The New Delhi outer circle (now BJP or Hindutva) who has not direct contact with Sri LankanTamil militant in 1970-80s, but clisly observed the handlung of Congress govt amid COLD WAR.

    /The idea of a single god (MONOISM) was not the only essentially Zoroastrian tenet to find its way into other major faiths, most notably the ‘big three’: Judaism, Christianity and Islam. The concepts of Heaven and Hell, Judgment Day and the final revelation of the world, and angels and demons (Daewa) all originated in the teachings of Zarathustra, as well as the later canon of Zoroastrian literature they inspired. Even the idea of Satan (NAGAR or SNAKE world) is a fundamentally Zoroastrian one; in fact, the entire faith of Zoroastrianism is predicated on the struggle between God and the forces of goodness and light (represented by the Holy Spirit, Spenta Manyu) and Ahriman, who presides over the forces of darkness and evil (DARK KRISHNA)./

    /How did Zoroastrian ideas find their way into the Abrahamic faiths and elsewhere? According to scholars, many of these concepts were introduced to the Jews of Babylon upon being liberated by the Persian emperor Cyrus the Great.

    After their acquaintance with Iranian religion and philosophy, however, GREEKS began to feel more as if they were the masters of their destinies, and that their decisions were in their own hands.
    Fight against EVIL (Nagas) consider them as GOOD or LIGHT or WHITE (Vellai), gave CONFIDENCE to decide a Good life after destroying DARK peopel, a base for EUGENICS!

    முதலில் தெரிய வேண்டியது, “சோராஷ்ட்ரிய” மதமும் “சமண மதமும்” புத்த மதத்திற்கும், கிருஸ்துவ மதத்திற்கும், சைவ மதத்திற்கும், முந்தியது!
    24 ஆம் மற்றும் கடைசி தீர்த்தக் காரரான மகாவீரர்தான் புத்தரின் சமகாலத்தவர்! சோராஷ்டிரீயமும், சமணமும், அப்போது நிலவிய இந்திய நம்பிக்கைகளிலிருந்து பிரிக்கமுடியாதவை!
    ஆனால் மத்திய மற்றும் கிழக்காசிய மக்களின் கலப்பு, “ஆரியம்” என்ற சொல்லை தமிழில் உருவாக்கி, “#அமைதியாகதான்” உள்வாங்கியது!

    இதுதான் “பிரம்மா” என்ற பலத்தலைகள் கொண்ட (பல கலாச்சாரம்) கொண்ட “சமஸ்கிருதம்”!
    இவர்கள், சமண மதத்தின் கண்ணாடி பிரதிபலிப்பே (MIRROR IMAGE)! இது வடஇந்தியாவில், பிறகு ஆரிய மக்கட்தொகை பெருக்கத்தால், அம்மையப்பட்டுவிட்டது! ஒரிஜினல் பிரதி திகம்பரர்களிடமும் கபாலிக்கர்களிடமும் இருந்தது! பிறகு ஆதி சங்கரர் “பக்தி இயக்கம்” துவங்கியபோது திகம்பரர்களையும் கபாலிக்கர்களையும் ஒதுக்கி விட்டார். இது பரிணாம வளர்ச்சி (ENLIGHTENMENT) காரணமாக BECAME “GOD” instead of its MIRROR IMAGE “DOG (PLATO’s shadow)”!

    https://www.bbc.com/culture/article/20170406-this-obscure-religion-shaped-the-west

    Reply
  • T Jeyabalan

    நீங்கள் எழுதிய பதிவுக்கும் நூலகத்திற்கும் என்ன சம்பந்தம் Democracy?

    Reply
    • Democracy
      Democracy

      நல்லது, Thiru T.Jayabalan,
      நாம் கூறும் கருத்துக்கள் அந்த அமெரிக்க அறிஞர், ஐரோப்பிய அறிஞர், சீன அறிஞர் சொல்லிவிட்டார் என்ற படிப்பறிவை காட்டுவதானாலும், “தமிழன் பெரிய அறிவாளி” என்று பீற்றிக்கொள்ளுவதிலும் உள்ள ஆபத்துகளைவிட, தமிழர்களை ஏன் “முட்டாள்கள்” என்று “சர்வதேச சமூகம்” எண்ணுகிறது என்று உணராமல் இருப்பதிலேயே ஆபத்து அதிகம் உள்ளது!?

      யாழ்ப்பாண நூலகத்தில் இதற்கான விடை இருந்தது? நான் ஏற்கனவே கூறியமாதிரி பரிணாம வளர்ச்சியின் முக்கியக் கட்டங்களான 1800களில் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவை அறிந்துக்கொள்ள வந்தவர்கள், சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ செல்லவில்லை, இலங்கைக்குத்தான் வந்தார்கள்.
      அது புத்தமதத்தை பற்றியதானாலும், இந்துமதம் என்று கூறுவதை பற்றியதானாலும், ஓல்குல்ட் போன்ற ‘தியோசாபிகல் சொசைட்டியானாலும்’ சரி!

      யாழ்ப்பாண யோகசாமி என்பவரைப் பற்றி நினைவு உள்ளதா? அவர் உதவியாளராக குள்ளமாக சின்னசாமி என்பவரையும், உயரமாக பெரியசாமி என்பவரையும் வைத்திருந்தார். இதன் பொருள் சின்னசாமி = கண்ணன், பெரியசாமி = வலியோன் அல்லது பலராமன். சமண மதத்தில் தீர்த்த காரர்களுக்கு கொடுக்கப்பட்ட விலங்கினங்களின் பெயர்களான பூனைக்குட்டி, புலிக்குட்டி, போன்ற பெயர்களும் நிலவின… இதற்கான விளக்கங்கள் அழிந்த நூலக ஏடுகளில் இருந்தன?
      இது புரியாத நிலையில் உள்ள போதுதான் “DOG” என்று கூறுகிறோம் (வைரவரின் வாகனம்). இது புரியாத நிலையிலேயே மற்றவரை சென்றடையும் போது “மூடநம்பிக்கைகள்” என்கிறார்கள்.
      இதில் தெளிவாக இருக்கவேண்டும், அல்லது இதிலிருந்து வெளிவரவேண்டும்!
      இதை புரியாத நிலையிலேயே வைத்திருக்க முயலும் இந்துத்துவாவுக்குள் புகுவது முள்ளியவாய்க்கால் II க்குள் புகுவது போன்றது!
      இந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராகத்தான் சீனப் (CULTURAL) புரட்சி நடந்தது.

      சமீபத்தில் “குளோபல் டைம்ஸ்” ஆசிரியர் ஒரு கருத்தை கூறினார், “இந்தியாவின் மனசாட்சியை “நாய்” தின்றுவிட்டதென்று” இதிலிருந்து வரப்போகும் ஆபத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்!

      Reply