அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு மேலும் ஒரு பதவி !

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக உள்ளார். இவருக்கு  அண்மையில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில்  அங்கத்துவம் வழங்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் தலைவராக ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஷ செயலாற்றி வருகின்றார்.

1622716279 namal 2

இந்நிலையில் அமைச்சர்  நாமல் ராஜபக்ஷவிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டு   பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்,  அவர் இன்று (வியாழக்கிழமை ) பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *