Thursday, September 23, 2021

“போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களை அரசு மடியில் வைத்துக்கொண்டிருக்கிறது.” – இரா.சாணக்கியன் காட்டம் !

“புனர்வாழ்வு அளிக்கப்படாமல் போராட்டத்தை காட்டிக் கொடுத்த சில அரசியல்வாதிகளை உங்களது மடியில் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயகப் போராளி அமைப்பில் இருக்கும் சில நபர்களை குறிவைத்து இந்த அரசாங்கம் விசாரணை நடத்துவது மட்டுமல்லாமல் கைது செய்துகொண்டு வருகின்ற செயற்பாடு ஒரு கேவலமான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

புனர்வாழ்வு அளிக்கப்படாமல் போராட்டத்தை காட்டிக் கொடுத்த சில அரசியல்வாதிகளை உங்களது மடியில் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். எமது இனத்துக்காக போராடி ஜனநாயக வழியிலேயே அரசியலில் கால் பதித்து வருபவர்களை கைது செய்வதை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.

இது இந்த அரசாங்கத்தின் ஒரு கேவலமான செயற்பாடு என்பதை நாம் உணரவேண்டும் இதுவே இன்று நடக்கின்றது .

எமது விடுதலைக்காக போராடி தற்போது ஜனநாயக ரீதியில் ஜனநாயகத்திற்காக ஜனநாயக அரசியல் வழியிலே இணைந்து செயற்படுகின்ற இந்த அமைப்பினருக்கு உதவி செய்ய பலரும் முன் வர வேண்டும். அவ்வாறு முன் வருபவர்கள்களை வரவேற்கின்றேன் விசேடமாக இவ்விடத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *