Friday, August 6, 2021

பரப்பான போட்டியில் ரஸலுக்கு வித்தை காட்டிய ஸ்டார்க் – 4 ஓட்டங்களால் வென்றது ஆஸி !

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்டதான 20 இருபது  போட்டி இனறைய தினம் நடைபெற்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கும் மேற்கிந்திய தீவுகள் நம்பிக்கையுடனும் ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டும் என்ற நோக்கில்  அவுஸ்திரேலிய இன்றைய போட்டியில் களமிறங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் இந்த தொடரின் மூன்றாவது அரைசதத்தை மிகச் சிறப்பாக மிட்செல் மார்ஷ் பெற்று கொடுத்தமையும் கவனிக்கத்தக்கது.

பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் லென்டில் சிம்மன்ஸ் 48 பந்தில் 72 ரன்கள் குவித்தார். எவின் லீவிஸ் 14 பந்தில் 31 ரன்கள் விளாசினார். கெய்ல் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
கடைசி 2 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த்ரே ரஸல், பேஃபியன் ஆலன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஸல் ஒரு சிக்ஸ், ஆலன் 3 சிக்ஸ் விளாசினர். ஆனால் கடைசி பந்தில் ஆலன் ஆட்டமிழந்தார். என்றாலும் 25 ரன்கள் இந்த ஓவரில் கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ரசல் களத்தில் இருக்க ஸ்டார்க் வீசிய முதல் 5 பந்துகளிலும் ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்கவில்லை ,இறுதிப் பந்தில் மட்டும் சிக்சர் அடித்தார்.

பரபரப்பான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *