Monday, October 18, 2021

‘கொப்பிக்கற்’ (copycat) தீக்குளிப்புகள் இன்றைய பிரச்சினைக்குத் தீர்வாகாது! : த ஜெயபாலன்

Stop_Suicideபெப்ரவரி 14 உலகம் முழுவதும் காதலர் தினத்தைக் கொண்டாட லண்டன் தமிழ் இளைஞர் ஒருவர் தனது தலையில் பெற்றோலை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்து உள்ளார். பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் இச்சம்பவம் பெப் 14 பிற்பகல் இடம்பெற்று உள்ளது. பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்க முன்னால் இலங்கை அரசுக்கு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்திற்கு அருகேயே தனது நண்பர்களுடன் வந்த இளைஞர் தன்மீது பெற்றோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். ஆனால் அவ்விளைஞர் தன்னைப் பற்ற வைக்க முன்னதாகவே பொலிசார் உடனடியாக செயற்பட்டு இன்னுமொரு மனிதத் தீப்பந்து கொழுந்தவிட்டு எரிவதைத் தடுத்து உள்ளனர்.

மற்றுமொரு லண்டன் தமிழ் இளைஞர் முருகதாஸ் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் தீக்குளித்து தன்னை மாய்த்துள்ளார். அவரை கௌரவப்படுத்தும் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் லண்டன் முழுவதும் ஒட்டப்பட மகனைப் பறிகொடுத்த தந்தை சுவிஸ்லாந்தக்குப் பயணமாகிறார். முத்துக்குமாரனுடன் ஆரம்பமான தீக்குளிப்பு இன்று மேற்குலகு நோக்கியும் நகர்ந்துள்ளது. வட இலங்கையின் வன்னிப் பிரதேசத்து மக்களின் அவலங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய உணர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த உணர்வலையை குறுகிய அரசியல் நோக்கங்களுடன் இன உணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரப்படுத்தி அரசியல் லாபம் பெறும் போக்கு ஒன்று இன்று ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு வாரங்களில் தீக்குளித்தவர்கள்:
முருகதாசன் (26), சுவிஸ்லாந் – 13 பெப்ரவரி 2009
ராஜா (27), மலேசியா – 08 பெப்ரவரி 2009
ரவிச்சந்திரன் (47), இந்தியா – 07 பெப்ரவரி 2009
முத்துக்குமார் (27), இந்தியா – 29 ஜனவரி 2009

அறியப்பட்ட தீக்குளிப்பு முயற்சிகள்:
பெயர் தெரியவில்லை, தீக்குளிப்புத் தடுக்கப்பட்டது, பிரித்தானியா – 14 பெப்ரவரி 2009
கோசல்ராம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்தியா – 10 பெப்ரவரி 2009
ராஜசேகரன், பொலிசாரால் கைது செய்யப்பட்டார், இந்தியா – 01 பெப்ரவரி 2009
தீனதயாளன், இந்தியா – 01 பெப்ரவரி 2009

வன்னி மக்கள் எதிர்நோக்குகின்ற அவலத்தை நிறுத்துவதற்கு எந்த வகையிலும் பயனளிக்காத வெறும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு செயலாகவே இந்த தீக்குளிப்புகள் அமைந்து உள்ளது. தீக்குளித்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் வன்னி மக்கள் மீதான தங்கள் உணர்வுகளை எழுதி வைத்து அம்மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் தங்களை அழித்து உள்ளனர். அவர்களுடைய ஆழமான சமூகப்பற்று மதிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு ஆழ்ந்த சமூகப்பற்று உடையவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதன் மூலம் அவர்களால் எதனையும் சாதித்து விடமுடிவதில்லை என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. அவர்களது அழிவில் குறுகிய அரசியல் லாபம் தேடுபவர்களும் அந்த உண்மையைச் சொல்ல முன்வருவதில்லை.

வன்னி மக்களின் படுகொலையைக் கண்டித்து தங்களது இன்னுயிரைக் கருக்கியவர்களின் தன்னலமற்ற பிறர் நலன் சிந்திக்கும் எண்ணம் மகத்தானது.  அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க  வார்த்தைகள் இல்லை.

ஆனால் இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. இவ்வாறான உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் தீக்குளிப்புச் செய்ல்கள் தடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் மகத்தானது. இவ்வாறான அநியாய இழப்புகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும். அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்படவும் வேண்டும். ஆனால் அதற்காக தங்களைத் தாங்களே அழிப்பது இப்பிரச்சினைக்கு தீர்வாகாது.

இந்த நல்ல உள்ளங்கள் நீண்டகாலம் உயிர்வாழ்ந்திருந்தால் தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கு நல்ல பல காரியங்களைச் செய்திருக்கலாம். அவர்கள் இவ்வாறு தங்களை அழித்துக் கொள்வதை எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்க முடியாது.

1983க்களில் இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு கொந்தளித்து இவ்வாறான பல தீக்குளிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றது. அதனால் தமிழ் சமூகம் எவ்வித நன்மையும் அடையவில்லை. இறுதியில் தமிழர்களை இந்திய அரசு தனது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டது.  நல்லுள்ளங்களின் இந்த செயல்கள்  குறுகிய அரசியல் நோக்கங்களுக்கே பயன்படும்.

இன்று ஈழத்தமிழர்கள் அவலத்திற்கு உள்ளாகின்றனர் என்பதன் அடிப்படையில் வெறும் இனவாதம் கக்கப்படுகிறது. இதனால்  இந்த இளைஞர்கள் அப்பாவி உணர்வாளர்கள் தூண்டப்பட்டு குற்ற உணர்வுக்கு உள்ளாகி தீக்குளிப்பு என்ற விபரீத முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். குறுகிய நோக்கங்களுடன் இவ்வாறான தீக்குளிப்புச் சம்பவங்களை ஊக்கப்படுத்துவதும் அதனை போற்றுவதும் மிகப்பெரும் தவறு. ஒரு மனித அவலத்தை கண்டிக்க இன்னொரு மனித அவலத்தை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

மாறி மாறிப் பதவிக்கு வந்த பேரினவாத அரசியல் தலைமைகள் தங்கள் வாக்கு வங்கிகளை மட்டுமே கருத்திற் கொண்டு இனவாதத்தை ஊட்டி வளர்த்தனர். சிறுபான்மையினங்களை எதிரிகளாக்கி அந்த இனவாதத் தீயில் தங்கள் அரசியலை செயற்படுத்தினர். இதற்கு பதிலாக எழுந்த தமிழ் அரசியல் தலைமைகளும் தங்களது வாக்கு வங்கியை நிரப்புவதற்காக தாங்களும் இனவாதத்தைக் கக்கினர். ஆயினும் காலத்திற்குக் காலம் சிங்கள இனவாதத் தலைமைகளுடன் – சிங்கள அதிகார வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டு தங்களது சந்தர்ப்பவாத அரசியலை நடாத்தினர். ஆயினும் இரு பக்கத்து மக்களும் இனவாதத்தினால் தூண்டப்பட்டு பரம எதிரிகளாகி உள்ளனர்.

இரு பங்கங்களிலுமுள்ள குறும் தேசிய இனவாதத் தலைமைகளின் செயற்பாடுகளுக்கு இலங்கையின் ஒட்டு மொத்த மக்களும் இன்று மிகுந்த விலையைச் செலுத்துகின்றனர். விடுதலைப் புலிகள் மீதான இராணுவ வெற்றியானது தமிழினத்தின் மீதான வெற்றியாக மகிந்த ராஜபக்ச குடும்ப அரசியலால் கற்பிதப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ் மகனுக்கும் சிங்கள மகனுக்கும் முஸ்லிம் மகனுக்கும் மலையக மகனுக்கும் உள்ள பொதுப் பிரச்சினைகளை எல்லாம் புறம்தள்ளி இனவாதத்தினால் அவர்களைக் கூறுபோட்டு சகல இன மக்களையும் ஆளும் அதிகார வர்க்கங்கள் பலவீனப்படுத்தி உள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டவர்களும் தங்களது சுயநல அரசியலுக்கு அப்பால் அதிகார வேட்கையுடன் செயற்பட்டனரே அல்லாமல் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இயலவில்லை. அன்றைய தமிழ் மிதவாதிகளை சந்தர்ப்ப வாதிகள் என்று கூறி ஒதுக்கி அவர்களது உண்ணாவிரதப் போராட்டங்களில் உணவூட்டி குழப்பம் விளைவித்ததும் பின்னர் எண்பதுக்களில் இத்தலைமைகள் கொன்றொழிக்கப்பட்டதும் வரலாறு.

போராட்டத்தை தமது கைகளில் எடுத்த இளைஞர்களிடமும் வேகம் இருந்த அளவுக்கு விவேகம் இருக்கவில்லை. அதிகாரத்துக்கான வேட்கையில் தங்களுக்கு உள்ளேயே மோதி அழிந்து கொண்டனர். எஞ்சிய ஏனைய இயக்கங்களையும் உறுப்பினர்களையும் அழித்து விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அதிகாரத்தலைமை ஆயினர். தமிழர் விடுதலைக் கூட்டணி துப்பாக்கி ஏந்தாத புலிகள் என்றால் புலிகள் துப்பாக்கி ஏந்திய கூட்டணியினர். இவ்விரு அமைப்புகளினதும் அரசியலில் எவ்வித மாற்றமும் இல்லை. மூன்று தசாப்தங்களுக்கு முன்பாக அன்று கூட்டணித் தலைமைகள் மேடை போட்டு இனவாதத்தை முழங்கினர். இன்று புலத்தில் உள்ள பெருமக்கள் ஐபிசி போன்ற வானொலிகளிலும் இணையங்களிலும் இனவாதத்தை கக்குகின்றனர்.

அன்று உணர்வலைகளால் தூண்டப்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்கள் கைகளை பிளேட்டினால் கீறி அந்தத் தலைவர்களுக்கு இரத்தத் திலகம் இட்டனர். இன்று இளைஞர்கள் பல படிகள் தாண்டிச் சென்று தங்களையே தீப்பந்தங்களாக்கி உள்ளனர்.

போராட்டம் மனித வாழ்வை மேம்படுத்துவதற்காகவே அமைய வேண்டும். தமிழ் மக்களின் போராட்டத் தலைமைகளின் குறுகிய அரசியல் நோக்கங்களால் தமிழ் மக்களின் வாழ்க்கையே போராட்டமாகி தமிழ் மக்களின் வாழ்நிலை மிக மோசமாகி உள்ளது. இன்று உணர்ச்சி வசப்பட்டு தங்களைத் தீப்பந்தங்களாக்கியவர்கள் மீண்டும் உயிருடன் வந்து கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் மக்கள் நிதானமாக சிந்திக்கும் போது கேள்விகள் எழும். அப்போது குறும்தேசிய கூட்டணித் தலைமைகளை மக்கள் எவ்வாறு ஓரம்கட்டினரோ அவ்வாறே இன்றைய தலைமைகளும் ஓரம்கட்டப்படுவது தவிர்க்க முடியாது.

தமிழ் சமூகத்தின் மத்தியில் தற்கொலைக் கலாச்சாரம் பற்றிய ஆய்வுகள் மிகவும் அவசியமாகி உள்ளது. பொதுவாகவே கல்வி, காதல், மணவாழ்வு நெருக்கடிகள் ஏற்படும் போது தற்கொலை செய்து கொள்கின்ற நிகழ்வுகள் விடுதலைப் போராட்டத்திற்கு முன்னரேயே இருந்துள்ளது. அதன் பின்னரும் தங்களது நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்கான ஒரு வழிகோலாகவும் இந்தத் தற்கொலைகள் அமைந்து இருந்தது. 2004 சுனாமி நிகழ்வின் பின்னர் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியதும் அவர்கள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவங்களும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் பெருமளவில் இடம்பெற்றது.

இவற்றுக்கு அப்பால் விடுதலைப் புலிகள் தற்கொலைக் கலாச்சாரம் ஒன்றைக் கட்டமைத்து உள்ளனர். இவற்றின் சரி பிழைகளை விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் விடுதலைப் புலிகளின் இந்தத் தற்கொலைக் கலாச்சாரம் சமூகத்தில் ஏற்படுத்தகின்ற தாக்கம் பற்றிய ஆய்வுகள் கல்வியியலாளர்களால் மேற்கொள்ளப்படுவது மிகவும் அவசியம்.

ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளிலும் தற்கொலைகள் பொதுவான விடயமாகவே உள்ளது. குறிப்பாக நடுத்தர வயது இளைஞர்களே கூடுதலாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கான காரணங்கள் பல்வகைப்பட்டாலும் தனிமை, அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு கேள்விக்குறியான எதிர்காலம், குடும்பப் பிணக்குகள் என்பன முக்கிய காரணமாகின்றது. இப்பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவதற்கு தற்கொலையை ஒரு வழியாகக் கொள்கின்றனர்.

தற்போதைய ஆய்வாளர்கள் தற்கொலையைத் தூண்டுகின்ற பரம்பரையியல் கூறுகள் சிலரில் சில சமூகத்தவரில் செயலூக்கம் பெற்றிருப்பதான முடிவுகளுக்கும் வந்துள்ளனர்.

குறிப்பாக இலங்கையும் தற்கொலை வீதம் அதிகமுள்ள ஒரு நாடக உள்ளது. தமிழ் சமூகத்தில் தற்கொலை வீதம் பற்றிய சரியான ஆய்வுகள் பதிவுள் இல்லை. இவை பற்றிய ஆய்வுகள் மிகவும் அவசியமானது.

தற்போதைய தீக்குளிப்புகள் ஒரு அரசியல் நோக்கமுடையவை. ஆயினும் இவை ஒரு கொப்பிகற் முறையில் பிரதி செய்யப்பட்டு அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. இந்த தீக்குளிப்புகளை பெருமிதப்படுத்துவதும் கௌரவிப்பதும் இவ்வகையான செயற்பாடுகளைத் தூண்டுவதாகவே அமைகின்றது. அதனாலேயே இந்த கொப்பிக்கற் தீக்குளிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. மறத் தமிழன், வீரத்தமிழன் போன்ற பதங்களைச் சூட்டி மாயையான ஒரு கௌரவத்தை ஏற்படுத்துவதன் மூலம் இலகுவான மனநிலையுடையவர்களை ஆபத்திற்குள் தள்ளுகின்றது. ஏற்கனவே மனஅழுத்தங்களுக்கு உள்ளான ஒருவர் இவ்வாறான இன உணர்வுத் தூண்டுதல்களாலும் தற்கொலை என்பது கௌரவமான விடயமாகப் பார்க்கப்படுவதாலும் அந்த வழியை நோக்கித் தூண்டப்படுகிறார். ஒரு தெளிவான மனநிலையில் உள்ள ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக எந்த மருத்துவ ஆய்வும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறான தீக்குளிப்பு போன்ற தற்கொலைகள் தமிழ் மக்களது அரசியல் போக்கில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது. இவ்வாறான உயிரிழப்புகள் அர்த்தமற்றவை. பயனற்றவை. வீணாணது. இது தமிழ் சமூகம் எதிர்கொள்ள வேண்டிய சமூகநோய். தமிழ் சமூகத்தின் ஆழ்மனதில் உள்ள ஆரவாரமற்ற அழுகை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

33 Comments

 • chandran.raja
  chandran.raja

  மனசிதைவு எதிர்காலத்தில் எந்தவித நம்பிக்கையின்மை எதிர்காலத்தில் மக்களை வழி நடத்திச்செல்ல வழிவகை தெரியாமல் இருப்பதே தற்கொலை செய்கிறார்கள். தற்கொலை செய்யத்தூண்டி விடுகிறார்கள். தீ குளித்தவர்கள் தமிழ்மக்களின் விமோசனத்திற்காகத்தான் தீ குளிக்கிறோம் என்று பல பக்கக்கடிதத்தையும் எழுதி வைத்திருக்கிறார்கள் அரசியல் காரணமும் ஆக்குகிறார்கள்

  ஈழத்தமிழ்மக்களின் அரசியல்வாழ்வு சிதையில் ஏற்றி தீ வைக்கப்படடது 1986 ம்ஆண்டும் அதற்கு பின் வந்தகாலங்களும் தான். வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை மொத்தகுத்தகைக்கு எடுத்ததும் மக்களின் மனத்தை சிதைத்ததும் ஒரு சமூகத்தை சீர்ரழித்து பரிதாபநிலைக்கு கொண்டு வந்தும் விட்டிருக்கிறார்கள் இதற்கு பெரும்பாலான எமதுபுலம்பெயர் உறவுகள் பெரும் துணையாக இருந்திருகிறார்கள். இனியாவது இவர்கள் உணர்ந்தாக வேண்டும்.

  Reply
 • haran
  haran

  தற்கொலை என்பது மனித இனவிரோதச் செயலே என்பதை இவர்கள் அறியமாட்டாத அறிவிலிகள் மனிதன் வாழவேண்டும் என்பதை இவர்கள் அறியமாட்டார்கள் – புலிகள் போராட்டத்தை பேசி தீர்க்கும் நிலையை அடைந்தும் அதை செய்யத் தெரியாத அறிவிலிகளே இவர்களை உலகம் ஆயுதத்தை நம்பும் ஆயுதத்தாதல் எதையும் செய்லாம் என நம்பும் பயங்கரவாதிகள் என்றுதானே கூறுவர்.

  Reply
 • sura
  sura

  இவர்களது தற்கொலை பிரி எப்- ஜபிசி போன்ற நிறுவனங்களக்கு ஆபத்தை உண்டுபண்ணும் என்று விளங்குகிறது.

  Reply
 • indiani
  indiani

  இப்படியான தற்கொலைகளக்கு தற்பொழுது லண்டனில் இயங்கும் ஜ பி சி ரேடியோ முக்கிய காரணமாக உள்ளது இவர்களில் சிலர் தமது சுய பண உதவி தேவைகளை நிறைவேற்ற ரேடியோவில் கூடக் குறைய கதைத்துக் கொடுப்பததான் இவர்கள் செய்யும் கைங்கரியம், இப்படி செய்வதால் வரும் விழைவுகளை இவர்கள் விளங்கமாட்டார்கள். தமது பணம் பெறும் நோக்கமே இவர்களுக்கு பெரிதாக உள்ளது இதைவிட இவர்களில் சிலர் புலிகள் அல்லாத இயக்கத்திலிருந்து பின்னர் புலிகளின் ஆதரவாளர்களாக மாறியதே தமது பணவருவாய்க்காக இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்

  லண்டன் தற்கொலைதாரியின் விசாரணை பலரை வெளிப்படுத்தும்.

  Reply
 • palli
  palli

  தீ குளிப்பதும் ஒரு விதமான நோய்தான். பல்லி என்றுமே உயிருக்கு முதலிடம் கொடுக்க தவறுவதில்லை. உமது உயிரைவிட்டு ஒரு தீர்வை மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும். தீக்குளித்த பலர் தாம் உயிருடன் இருந்து நாட்டையோ அல்லது தமிழரையோ காப்பாற முடியாவிட்டாலும். கண்டிப்பாக ஒரு நாலு பாதிக்கபட்டவர்களையாவது காப்பாற முடியும் என்னும் உன்மையை ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். நண்பர்களே ஒரு செய்தி என் நினைவில் வருகிறது ஈழபோராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் கூட்டணி மேடைகளில் வண்ணை ஆனந்தன்; காசி ஆனந்தன்; சேனாதிராஜா; திசை வீரசிங்கம்; ஊசி யோகராசா; தீப்பொறி இப்படி கண்ணால் ரத்தம்வர உனச்சி பொங்க பேசியே எம்மினத்தை அழித்ததை நாம் எப்படி மறக்கமுடியும், இவர்கள் உசுப்பேத்தி விட்டு இவர்கள் இன்று வேறுநாட்டு குடியுருமை பெற்று வாழ்வது பலருக்கு தெரியாது. ஒருமுறை பல்லியை காபோ ரத்தினத்துக்கு ரத்தபொட்டு வைக்கும்படி வண்ண சொன்னார். அதுக்கு பல்லி ஏன் அதை நீங்களே வையுங்கள் என சொல்ல. வண்ணை சொன்னார் எம்மால் உனர்ச்சியை தொட்டுவிட மட்டுமே முடியும். அதை செயல்வடிவம் ஆக்குவது மக்களால் தான் முடியுமென. அதேபோல் தான் எதோ சில விஸமிகள் தீக்குளிப்பென்னும் வியாபாரத்தை இன்று தொடங்கி உள்ளனர். அதில் சமூக அக்கறை கொண்டவர்கள். பலியாக வேண்டாமென தாழ்மையுடன் வேண்டுகிறேன். புலம்பெயர் நாடுகளில் தற்கொலையும் ஒரு பயஙரவாதமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
  பல்லி.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  சில இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கு மன அழுத்தங்களை ஏற்படுத்தி, இப்படியான தீக்குளிப்புகளை குறிப்பிட்ட சிலரே செய்விக்கின்றனர். இந்த இளைஞனைப் பற்றிய விபரத்தை சுவிஸ் பொலிசார் கூட அறிந்து கொள்வதற்கு முதல், குறிப்பிட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் இவர் பற்றிய படங்கள் விபரங்களை சில ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தி உடனடியாக ஐ.நா முன்பாக ஒன்று கூடும்படி அறிவிப்பும் செய்திருந்தார்கள். இதிலிருந்தே இப்படியான தீக்குளிப்புகளின் பின்னணிகளை சிலர் தம்மை அறியாமலேயே வெளிப்படுத்தி விடுகின்றனர். மகன் இறந்த செய்தி தாய் தந்தைக்குக் கூட வெள்ளிக்கிழமை மதியத்திற்குப் பின்னரே தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இளைஞனின் இறப்பை வெள்ளிக்கிழமை காலையே விளம்பரமாக்கி விட்டார்கள். இந்த விடயத்தில் இன்று ஐரோப்பாவில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியமாகின்றது. இன்று வன்னியில் தோல்வியின் விளிம்பில் நிற்பதால், தம்மை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற நப்பாசையில் உலகில் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் (குறிப்பாக தமிழகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில்) தமிழர்களின் நிம்மதியைக் கெடுத்து தமது நிலையிலேயே அவர்களையும் வைவத்திருக்க வேண்டுமென்றே செயற்படுகின்றார்கள். இப்படியான செயற்பாடுகளினால் ஐரோப்பாவில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற பெயரையே ஏற்படுத்தப் போகின்றார்கள்.

  Reply
 • T.Kumaran
  T.Kumaran

  ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும். அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்படவும் வேண்டும். ஆனால் அதற்காக தங்களைத் தாங்களே அழிப்பது இப்பிரச்சினைக்கு தீர்வாகாது.

  —- அப்ப தீர்வு தான் என்ன? பான் கீ மூனுக்கு தகவல் வாரதில்லையாம். அவருக்கு உங்கடை போராட்டம் மூலம் பின்னூட்டம் பான் கீ மூனுக்கு விட முடியுமோ? இப்படி இதில் ஒரு கட்டுரை வரைந்து நாலு பேர் பின்னூட்டம் விட்டு புலி எதிர்ப்பை காட்டி மக்களை அழியவிடுகிற போராட்டமா சொல்லவாறியள். பான் கீ மூனுக்கு முந்தி இருந்த கோபி அனான் இலங்கை தமிழரின்ரை பிரச்சனையை சொல்லி வைக்காமல் போய்விட்டரோ? அப்ப நீங்கள் மக்கள் போராட்டம் மக்கள் நலன் எண்டு நீங்கள் என்ன சொன்னீர்கள்? இந்த சர்வ தேசத்துக்கு சொல்லி வைத்திருக்கிறியள். இது புலி செய்யுமெண்டு இருந்துவிட்டம் எண்டு புலியில பழியை போடப்போறீங்களோ? தெனாவெட்டான கதையளைவிட்டு விட்டு உங்கடை போராட்டத்தை ஒருக்கா தொடங்குங்கோ. சும்மா போராட்டம் எண்ட சொல்ல வைத்து பிஸினஸ் செய்யாதேங்கோ. போராட்டம் எண்டு எழுதுவதால் உங்கடை கையில் தாம்பளத்தட்டில் ஒருதரும் தந்துவிட்டு போகப்போவதில்லை. இரத்தம், வேர்வை, பட்டினி ,ஊன் உறக்கமின்றி , தீயில் கருக்காமல், உங்கடை புதுவித போராட்டத்தை இதில் முன்வைத்து செய்து தமிழ் மக்களை காப்பாற்றி காட்டுங்கோ, நாலு பேர் தீக்குளித்ததுக்கு உயிரை பற்றி கவலைப்படும், நீங்கள் தினமும் 40 பேர் கொல்வதை உங்கடை போராட்டத்தின் மூலம் நிற்பாட்டி காட்டுங்கோ? எப்ப தொடங்குறியள் போராட்ட வழிகாட்டிகளே? சொல்லநிறைய ஆளூகள் இருக்கினம் செய்யதான் ஆளூகளை காணமுடியாது. ஜெயபாலன் சத்தியமூர்த்தி எண்டு ஒரு பத்திரிகையாளர் செத்து இருக்கிறார். அவருக்கு உங்கள் சைற்றில் ஒரு அனுதாபத்தை காணவில்லை ஏன் அவர் ஜ.பி.சி க்கு செய்தி கொடுப்பதாலோ?

  Reply
 • Kullan
  Kullan

  உலகில் பல பல போராட்டங்கள் நடந்தன வெற்றியும் பெற்றன. இவர்கள் யாரும் சயனைட்டு எனும் உயிர்கொல்லியுடன் திரியவில்லை. வெல்வோம் எழுவோம் என்றே எழுந்தார்கள் வென்றார்கள். நெஞ்சில் உரமும் வீரத்திறனுமற்றவனே தற்கொலை செய்கிறான். என்கணிப்பில் இவர்கள் வாழத்தகுதி இல்லாதவர்கள். உலகிலுள்ள எல்லா உயிர்களும் போராடுகின்றன ஆனால் தற்கொலை செய்வதில்லை. ஏன்? வாழக்கைப் போராட்டத்தை எதிர்த்து வெல்வோம் என்ற நம்பிக்கைதான். நம்பிக்கை இல்லாத மனிதனோ சமூகமோ உலகில் வாழத் தகுதியற்றவர்கள். வாழத்தகுதியும் நம்பிக்கையும் இல்லாத மனிதனுக்கும் சமூகத்திற்கும் ஏன் போராட்டம் விடுதலை?

  தமிழ் தலைவர்களோ வழிகாட்டிகளோ எம்மக்களை தன்னம்பிக்கையுடன் வளர்க்கவில்லை என்பது தான் உண்மை. கசப்பான சில உண்மைகளை சிந்திதிக்கும் மக்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும். கழுத்தில் சயனைட்டுக் குப்பியுடன் திரியும் குழந்தை அல்லது மனிதனின் மனதில் நிதம் என்ன தோன்றும்? எப்போ எதிரியை அடிப்போன் என்பது தோன்றாது எப்ப குப்பியைக் கடிப்பேன் என்றே தோன்றும். கழுத்தில் குப்பி கட்டி விடுபவர்களின் உண்மை நோக்கம் என்ன? சிந்தியுங்கள்? சித்திரவதைகளுக்கு உள்ளாகக் கூடாது என்தா? அல்லது தம்மைக்காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதா?
  புலிகளின் வரலாற்றைத் திருப்பிப்பாருங்கள். தமக்கு எதிரானவர்களையும் இயக்கங்களையும் துரோகிகள் என்று பட்டம்கட்டி சுட்டுப்போட்டார்கள். தம்மைக் காட்டிக்கொடுக்கக் கூடாது என்பதற்காக சயனைட்டு கட்டிவிட்டார்கள். மக்கள் என்று உங்களுக்கு போராடும் அனுமதி தந்தார்கள். கூட்டணிக்கு மக்கள் போட்ட வாக்குக்கள் உங்களுக்கு அல்ல. ஒரு இராணுவத்தைக் கட்டி எழுப்புவதால் விடுதலை அடையலாம் என்று எண்ணும் புலியையும் புலித்தலைமையும் வெறும் மாவியாக்களே.மாபியா தலைவன் வாழ்வதற்காக கைக்கூலிகள் உயிர் இழக்கும் இப்படித்தானே புலியிலும் நடக்கிறது. மாவியாகள் பணத்துக்காகவும் சொத்துக்காகவும் தன்சுகபோக வாழ்வுக்காகவும் எந்தக் கொலைகளையும் செய்வார்கள். இதேபோல்தான் புலிகளும் தம்மைக்காக்கவும் மண் எனும் சொத்துக்காகவும் என்கொலையும் செய்வார்கள். புலிகள் எந்தவிதத்திலும் மாபியாக்களைவிடச் சிறந்தவர்கள் இல்லை. பிரபாகரன் எனும் ஒரு தனிமனிதனுக்காகவும் புலிக் கூட்டத்துக்காகவும் எவ்வளவு அப்பாவிமக்கள் இறந்தார்கள்.
  அரசியல் தொலை நோக்கோ வெல்வோம் என்ற நம்பிக்கையோ மனவுறுகியோ இல்லாத புலிகள் தற்கொலைச் தமிழ் சமூகத்துக்கு வித்திட்டு வளர்த்தார்கள். எதிரி என்றும் எதிரிதான் போரடவலுவுள்ளவன்தான் பேராடலாம்.வாணவேடிக்கைகளிலும் தற்கொலை நினைவுகளுடனும் வாழும் புலிக்கூட்டத்திற்கு தன்னம்பிக்கை எப்படி வரும் வளரும். தன்னம்பியையற்ற ஒரு சமூகத்தை வளர்த்து வைத்திருக்கிறார்கள். இது தீக்குளிப்பதை விட என்ன செய்யும். தீக்கிரையாகிய உன்னுறவுகளைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. கசப்பானாலும் இது மருந்துதான். அரசியல் ஆழ்நோக்கும் இராயதந்திரமும் இல்லாத புலிகளால் ஒரு தற்கொலைச் சமூகத்தை மட்டுமே உருவாக் முடியும். புரட்சி என்பது புலிகள் நினைப்பதைப்போல் துப்பாக்கியில் அல்லது படைக்கலங்களில் வெடிப்பதல்ல. மனிதமனங்களில் உண்மை உணர்வுகளில் புரழ்வதுவே புரட்சி. மக்கள் மனங்களையும் விடுதலை உணர்வுகளையும் மக்களிடையே வளர்த்திருந்தால் புலிக்கு ஆள்பிடிக்க வேண்டிய நிலையோ அன்றி கழுத்தில் கயனைட்டுக் கட்டி அனுப்பம் சந்தர்ப்பமோ ஏற்பட்டிருக்காது.

  தமிழ் மக்களே சிந்தியுங்கள் புலிகளுக்கு மக்களாகிய நீங்கள் பாதுகாப்புக் கொடுத்தீர்களே தவிர புலிகள் என்று உங்களுக்குப் பாதுகாப்புத் தந்தார்கள். ஆமிக்கு அடித்துவிட்டு உங்களுக்குள் வந்து ஒழித்தார்கள். நீங்கள் கொல்லப்பட்டீர்கள் புலி அழததா? உங்களிடம் வரி அறவிட்டு தாம் சுகபோகங்களை அனுபவித்தார்கள். புலிகளின் வீடுவாசல்களைப் பார்த்தீர்கள் தானே. ஒவ்வொரு புலியெதிர்ப்புவாதியையும் உருவாகியத அரசு அல்ல புலிகளே தான். தமிழனத்தின் படுகொலைக்கும் தற்கொலைகளுக்கும் முழுப்பொறுப்பு புலிகளே.இனியாவது சிந்தியுங்கள். மனநோ தத்துவவியல்படி ஒவ்வொரு மனிதனது எண்ணமும்தான் அந்தச் சமூகம்

  மாற்றுவழிதான் என்ன என்ற கேள்வி பிறக்கிறது. ஒரேயொரு வழிமட்டும்தான் அது உடனடியாகப் புலிகள் முற்றாக அழிவதுடன் தற்கொலை கலாச்சாரமும் அழிக்கப்படவேண்டும். மக்களால் மக்கள் மயமாக்கப்பட்ட புதுத்தலைமை தானாக உருவாகும். அதைச்சமூகம் உருவாக்கும். இதுவே இயங்கியல் உண்மை. சயனைட்டுக் குப்பியுடன் திரியும் ஒவ்வொரு மனிதமனங்களிலும் நான் என்மக்களுக்காக சாகப்போகிறேன் என்ற எண்ணத்தைத்தவிர என்சமூகத்துக்காக போராடி வாழ்ப்போகிறேன் என்ற உணர்வு எப்படி வரும். போராடுவோம் வாழ்வோம் மீள்வோம்

  Reply
 • பகீ
  பகீ

  சந்திரன், ஹரன், சுரா, இந்தியனி,
  இவர்களின் கருத்துகளை அப்படியே ‘கொப்பி’ எடுத்து தற்கொலை என்ற சொல்லுக்கு பதிலாக ‘புரட்சி’, ‘கொமினிசம்’ என்கின்ற வர்த்தையை மாற்றீடு செய்தீர்களாயின்ிவை எல்லாம் கடந்த 40 வருடங்களாக கேட்ட ”பிரசங்கங்கள்” போல இருக்கும் அதிசயத்தை காண்பீர்கள்.
  அதிசயம் அல்ல நண்பர்களே கியூப புரட்சி, சீனப்புரட்சி, ரஷ்யப்புரட்சி, ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தலயீடு போன்றவற்றிற்கு எதிராக அமெரிகா செய்த பிரச்சாரம், இன்றைய செச்னிய புரட்சி,சீன எதிர்க்குழுக்கள், ஹமாஸ் போன்றன பற்றி ரஷ்யா, சீன அரசு, இஸ்ரேல் சொல்வது போல் இருக்கும்.
  மறந்துவிட்டேன் காந்தியின் உண்ணாவிரதம் பற்றி இங்கிலாந்தில் எவ்வாறு பேசிக்கொண்டனர் என்பதையும் அறியவும். மற்றும் வியட்நாம் புரட்சியின் போதும் இன்றைய மயன்மார் புரட்சிகளின் போதும் புத்த பிக்குகள் “இனவிரோத மனச்சிதைவடைந்து பணவருவாய்க்காக” தம்மைத்தீயிலிட்டு இறந்ததையும் அறிந்து கொள்ளுங்கள்!

  Reply
 • danu
  danu

  குமரன் தேசம்நெற் போராட்ட இயக்கமமில்லை. இது ஒருஊடகம். உங்களுக்கு இது விளங்குவது கஸ்டம்.

  Reply
 • puvanan
  puvanan

  ரி.குமரன்–“உங்கடை புதுவித போராட்டத்தை இதில் முன்வைத்து செய்து தமிழ் மக்களை காப்பாற்றி காட்டுங்கோஇ நாலு பேர் தீக்குளித்ததுக்கு உயிரை பற்றி கவலைப்படும்இ நீங்கள் தினமும் 40 பேர் கொல்வதை உங்கடை போராட்டத்தின் மூலம் நிற்பாட்டி காட்டுங்கோ? எப்ப தொடங்குறியள் போராட்ட வழிகாட்டிகளே”

  புலித் தலைமையை போராட்டத்தில் இருந்து உடனடியாக வாபஸ் பெறச் சொல்லுங்கள். சுந்தரத்தில் இருந்து வரலாற்றை மீள் நினைவூட்டிப் பாருங்கள். பாதைகள் தானே பிறக்கும்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  /அப்ப தீர்வு தான் என்ன? பான் கீ மூனுக்கு தகவல் வாரதில்லையாம். அவருக்கு உங்கடை போராட்டம் மூலம் பின்னூட்டம் பான் கீ மூனுக்கு விட முடியுமோ? இப்படி இதில் ஒரு கட்டுரை வரைந்து நாலு பேர் பின்னூட்டம் விட்டு புலி எதிர்ப்பை காட்டி மக்களை அழியவிடுகிற போராட்டமா சொல்லவாறியள். பான் கீ மூனுக்கு முந்தி இருந்த கோபி அனான் இலங்கை தமிழரின்ரை பிரச்சனையை சொல்லி வைக்காமல் போய்விட்டரோ? அப்ப நீங்கள் மக்கள் போராட்டம் மக்கள் நலன் எண்டு நீங்கள் என்ன சொன்னீர்கள்? இந்த சர்வ தேசத்துக்கு சொல்லி வைத்திருக்கிறியள். இது புலி செய்யுமெண்டு இருந்துவிட்டம் எண்டு புலியில பழியை போடப்போறீங்களோ? தெனாவெட்டான கதையளைவிட்டு விட்டு உங்கடை போராட்டத்தை ஒருக்கா தொடங்குங்கோ. சும்மா போராட்டம் எண்ட சொல்ல வைத்து பிஸினஸ் செய்யாதேங்கோ. போராட்டம் எண்டு எழுதுவதால் உங்கடை கையில் தாம்பளத்தட்டில் ஒருதரும் தந்துவிட்டு போகப்போவதில்லை./-T.Kumaran

  குமரன் அவர்களே நீங்கள் எந்த லோகத்தில் இருந்து கொண்டு கருத்து எழுதுகின்றீர்கள். நாட்டிலும் சரி புலத்திலும் சரி புலிகளோ அல்லது புலிகளின் பினாமிகளோ தனிப்பட்ட மக்களையோ அல்லது தனிப்பட்ட அமைப்புகளையோ போராட்டங்கள் நடத்த அனுமதித்திருக்கின்றார்களா?? எப்போதும் எதைச் செய்தாலும் தாம் மட்டுமே செய்ய வேண்டும் என்ற அகங்காரம். அதையும் மீறி யாராவது எதையாவது செய்தால் அவர்களை துரோகிகளாக்கி இணையத்தளங்களில் கேவலமாக எழுதுவது. இதன் மூலம் அவர்களை இவ்விடயங்களிலிருந்து ஒதுங்கச் செய்வது. இதுதானே இன்றும் நடைபெறுகின்றது. இளையோர் அமைப்புகள் நடாத்தும் ஆர்பாட்டங்கள் கூட பேருக்குத் தான் இளையோர் ஆனால் முழுக்க முழுக்க இயககுவது யாரென்று எல்லோருக்கும் தெரியும். புலிக்கொடிகளோ, புலிச்சின்னங்களோ, புலிப் பதாதைகளோ இல்லாமல் வன்னியில் அவதிப்படும் மக்களுக்காக புலத்திலுள்ள மக்கள் என்று போராட்டம் நடாத்த முடியுமோ அன்று தான் உலகம் எம்மை திரும்பிப் பார்க்கும். அதுவரை புலத்தில் நடக்கும் போராட்டங்களெல்லாம் புலிப் போராட்டமாகவே உலகால் பார்க்கப்படும்.

  Reply
 • indiani
  indiani

  //அப்ப நீங்கள் மக்கள் போராட்டம் மக்கள் நலன் எண்டு நீங்கள் என்ன சொன்னீர்கள்? இந்த சர்வதேசத்துக்கு சொல்லி வைத்திருக்கிறியள் //குமரன்

  வெகுஜனப் போராட்டம் என்ன என்பது உங்களக்கும் உங்கள் பங்கர்த்தலைவனுக்கும் தெரியாது. வெகுஜனப்போராட்டம் நடைபெற்றால் வெகு ஜனங்கள் இதர வெகு ஜனங்களை தமது போராட்டத்தின் மீதுள்ள தார்மீகத்தை விளங்கப்படத்தி அவர்களின் அதரவைப் பெற்றே இருக்கும் (மேலும் வாசிக்கவும்- புதிய பாதை இதழ் 2 -எழுதியவர் சுந்தரம். விவசாயிகள் தொழிலாளர்க்கான பத்திரிகை இவர் பங்கர் தலைவராலேயே கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட இடம் சித்திரா அச்சகம் மணிக் கூட்டு வீதி யாழ்ப்பாணம். இந்த கொலையை சரி என வாதிட்டவர் பேராசிரியர் ………… லண்டனில் உள்ளார் அன்றய புலிகளின் இரண்டாம் தலைவன் ……… லண்டனில் உள்ளார்)

  //இது புலி செய்யுமெண்டு இருந்துவிட்டம் எண்டு புலியில பழியை போடப்போறீங்களோ? தெனாவெட்டான கதையளைவிட்டு விட்டு உங்கடை போராட்டத்தை ஒருக்கா தொடங்குங்கோ.// குமரன்

  நாம் என்றமே புலிகளால் மக்களின் போராட்டம் வென்றெடுக்க முடியாது என்பதை உறுதியாக கூறினோம் இன்றும் நம்புகிறோம். புலிகளின் தலைவனால் புலிகளின் போராட்டத்தால் பிரபாகரனால் இந்த போராட்டம் வெற்றி பெற முடியாது. பிரபாகரன் பேச்சுவார்த்ததையில் நம்பிக்கை யில்லாதவர். என்றுமே எப்படி இந்த தமிழர் போராட்டத்தை வென்றெடுப்பது என்றே சிந்திக்காதவர் என்றும் சரி இத பற்றி எப்பவாவது கதைத்தாரா? இருந்தால் உதாரணம் கூறுங்கள் யு ரியூப்பில் பிரபாபகரனின் பேச்சு உண்டு அதில் ஏன் பெண்கள் அணி உருவாக்கப்பட்டது என்பதை கேட்டதுமே வாந்தி எடுக்கிறது முடிந்தால் பாருங்கள் குமரன்.

  //சும்மா போராட்டம் எண்ட சொல்ல வைத்து பிஸினஸ் செய்யாதேங்கோ//குமரன்
  புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களும் அவர்களுகட்கு கொடுத்த போனஸ் பற்றியும் கேள்விப்பட்டடீரா குமரன்!! எத்தனை புலிகளின் நிதி சேகரிப்பாளர்கள் தாம் வாழும் ஜரோப்பிய நாட்டில் என்றுமே வேலைக்கு போகாதவர்கள் எப்படி வீடு வாங்கியிருக்கிறார்கள் என்பதன் சூத்திரம் அறிந்தீரா குமரன்!

  ஜரோப்பிய நாடுகளில் உள்ள எத்தனை வியாபாரங்கள் நகைக் கடைகள் யாருக்கு சொந்தம் என்று அறிவீரோ? கடலில் மிதக்கும் கப்பல்கள் யாருக்கு சொந்தம் என்று அறிவீரோ? இந்த சொத்துக்களை வைத்திருப்பவர்கள் தினமும் கோயிலக்குப் பொய் கடவளைக் கும்பிட்டு வீடுதிரும்புவதை பார்த்துள்ளீரா? ஏன் இந்த புலிகள் இல்லாமல் போனால் இந்த சொத்துகளை திருடிவிடலாம் என்ற வேண்டுகோள்?? இவர்கள் எல்லாம் முன்னாள் புலிகள் அல்லது புலிகளின் காசை பாதுகாக்கும் நடிகர்கள் பெhறுத்திரும் குமரன் சிலமாதங்களில் எல்லாம் விளங்கும்.

  போராட்டம் எண்டு எழுதுவதால் உங்கடை கையில் தாம்பளத்தட்டில் ஒருதரும் தந்துவிட்டு போகப்போவதில்லை. இரத்தம் – வேர்வை – பட்டினி – ஊன் உறக்கமின்றி தீயில் கருகினாலும் உங்களுக்கு மகிந்தாவோ இந்தியாவோ தமிழீழம் தாம்பாளத்தில் வைத்து தராது என்றுமே கிடைக்காது ஈழம் தமிழீழம் என்னபது என்ன என்று எப்ப சரி கலந்தாலோசித்தீர்களா சொல்லுங்கள்? உங்களக்கும் உங்கள் தலைவருக்கும் கையில் விலங்கு மாட்டப்படுவது உறுதி தாம்பாளத்தில் பிடியாணை வரும் காலம் கிட்டி விட்டதை உணர மறுக்காதேங்கோ திரு குமரன் அவர்களே!

  தீக்குளிப்பில் தமிழர்களை வெளிநாட்டிலம் நிம்மதியாக இருக்க விடாமல் செய்கிறார் உங்கள்தலவர் என்பதை மறக்க வேண்டாம் இனிமேல் தமிழர் என்றால் பெற்றோல் கானுடன் திரியும் விசர் மந்திக் கூட்டம் அல்லது மண்டைப் பிழையான சமூகம் என்ற பெயரை கொடுத்து விட்டீர்கள் குமரன். தமிழரை சீரழித்து கந்தை துணியும் இல்லாமல் இந்த உலகம் முழுவதும் பிச்சை எடுக்க வைத்தது பங்கர் தலைவர் பிரபாகரனும் அவரது புலி இயக்கமும் புலி இயக்கத்தை வைத்து பிசினஸ் செய்யும் புலிப் பினாமிகளுமே!

  //உங்கடை புதுவித போராட்டத்தை இதில் முன்வைத்து செய்து தமிழ் மக்களை காப்பாற்றி காட்டுங்கோ நாலு பேர் தீக்குளித்ததுக்கு உயிரை பற்றி கவலைப்படும் நீங்கள் தினமும் 40 பேர் கொல்வதை உங்கடை போராட்டத்தின் மூலம் நிற்பாட்டி காட்டுங்கோ? எப்ப தொடங்குறியள் போராட்ட வழிகாட்டிகளே? சொல்லநிறைய ஆளூகள் இருக்கினம் செய்யதான் ஆளூகளை காணமுடியாது//குமரன்

  குமரன் எங்களடைய போராட்டம் இந்த கொலை வெறிப்புலிகளை இல்லாத ஒளித்து ஜனநாயக நாட்டில ஜனநாகவாதிகளை உருவாக்கி மற்ற ஜனநாயக வாதிகளுடன் சேர்ந்து தமிழர்கள் உரிமையுடன் வாழவைக்கும் போராட்டம்தான் அதில் பாரிய வெற்றிகளை கண்டுள்ளோம் கிழக்கு மாகாணம் கொலைகாரப் புலிகளின் கைகளில் இல்லை (வெருகல் அம்பாறை காடுகளில் இருக்கும் புலிகளை முடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை) யாழ் தீவகம் உமக்கு தெரியும் அங்கும் ஒளித்திருக்கும் கொலைகாரப் புலிகளுக்கு முடிவு கட்ட முடியும் வன்னியில் உள்ள பிரதேசம் இருவாரங்களில் முடித்து விடக் கூடிய போராட்டம் இது ஆனால் அங்குள்ள தமிழ் மக்களின் இறப்பை தவிர்து கொலைகாரப் புலிகளை களையவே திட்டங்கள் நடைபெறவதை நீங்கள் இன்னும் புரியவில்லையா?

  இனிமேல் புலிகளுக்கு சாப்பாடு எக்காரணம் கொண்டும் கொடுக்கப்படாது போதுமா? இந்தப்புலிகளை சரிப்பண்ண இது ஒன்றே போதும் சிங்களவன் என்று பல்லு தெறிக்க கூறும் புலிகளும் புலிகளும் பினாமிகளும் இங்கிருந்து புலிகளுக்கு சாப்பாடு அனுப்பி பாதுகாத்துக் கொள்ளுங்கள்!!

  இன்று கொலைகாரப்புலிகளே தமிழரின் விரோதிகள்!!

  Reply
 • palli
  palli

  என்றுமே புலிகள் மக்களை மதித்ததுமில்லை அவர்களை பற்றி சிந்தித்ததுமில்லை. ஆனால் அன்றும் சரி இன்றும் சரி மக்கள் புலிகளை பாதுகாக்க தவறியதில்லை.அவர்களுக்காக தமது உயிரை தியாகம் செய்ய தயங்கியதும் இல்லை.இதனை இப்போதாவது புரிந்து கொண்டு மக்களுக்கு ஒரு விடிவை புலிகளும் மேற்கொள்ள வேண்டுமென பல்லி எதிர்பார்பதில் தவறில்லையே??

  Reply
 • பகீ
  பகீ

  “…புதிய பாதை இதழ் 2 -எழுதியவர் சுந்தரம்…”
  இந்த சுந்தரம் படைப்பிரிவு சுழிபுரத்தில என்ன 6 பெடியளை செய்தது எண்டும் சொல்லுங்கோ. அதோட சொந்த இயக்ககாரரை என்ன செய்தனியள் எண்டும் சொல்லுங்கோ..சந்ததியார் ஞாபகம் இருக்கோ? இல்லாட்டி சுந்தரத்தை கொன்றதாலதான் எங்கட இயக்கமே நாசமாப்போனது எண்டு சொல்லி அந்தப்பழியையும் அவங்களின்ர தலையில போடுங்கோ!!!!

  Reply
 • indiani
  indiani

  தமிழர் போராட்டத்தை குலைத்தது பிரபாகரன். சித்திரா அச்சகத்தில் அதிலிரந்து தான் கொலைக் கலாச்சாரத்தை ஆரம்பித்தவர் இன்று வன்னி கொலைக்களத்தில் தப்பி ஓடும் பொது மக்கள் மீதும் தனது கொலைக்கலாச்சாரத்தை தொடர்கிறார் பிரபாகரன். அநத மக்கள் தப்பி ஓடாமல் மிதி வெடிகளும் இட்டுள்ளார். பார்க்க யூ ரியூப் தப்பி ஓடிவந்த மக்களின் அவலக்குரல்களை. ஒட்டுமொத்தமாக போராட்டத்தை பிரபாகரனே காட்டிக் கொடுத்தவர் மறக்க வேண்டாம்.

  சுந்தரம் படைப்பிரிவும் பிரபாகரன் படைப்பிரிவும் ஒன்றைத்தான் செய்தது!!

  Reply
 • puvanan
  puvanan

  பகீ!
  உட்படு கொலைகளை நிறுத்தி அதற்காக மனந்திருந்தியவர்களையும் தம்மை விமர்சனம் செய்து கொண்டவர்களையும் எட்டி காலால் உதைத்து விட்டு இன்றைக்கும் மக்களின் இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கிற புலித்தலைமையை உமது பங்கிற்கு பின்னோட்டம் விட்டு காப்பாற்றிக் கொள்ளும். பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் பேசக் கூடாத இடத்தில் என்ன பேசக் கூடாது என்பதை தெரிந்து கொள்ள முடியாத உம்மைப் போன்றவர்களாலும் தான் இன்று எல்லாம் குழம்பி குருதியில் மூழ்கிக் கிடக்கிறது. புளட் படுகொலை புரிந்தால் புலியின் கொலைகளும் நியாயமாகிவிடுமா? சுந்தரத்தின் படுகொலையை நியாயப்படுதுவதன் மூலம் முந்திரிக் கொட்டை மாதிரி உம்மை வெளிப்படுத்தியுள்ளீர்!

  Reply
 • uma
  uma

  7/7 முஸ்லீம் பயங்கரவாத தாக்குதல் லண்டனில் நடந்த பின்பு, நான் எனது பிள்ளைகளின் பாடசாலையில் சந்திக்கும், நட்பாக பழகும் ஒரு முஸ்லீம் பெண், நான் இக்குண்டு வெடிப்பு பற்றி எதுவுமே கதைக்காமல் இருக்க, தானாகவே சொன்னா ” உங்களுக்கு தெரியுமோ நான் முஸ்லீம்தான். ஆனால் பாக்கிஸ்தானி முஸ்லீம் இல்லை. நான் கென்யாவிலிருந்து வந்தனான்” என்றார்.

  இப்ப ஜரோப்பாவில் இலங்கைத் தமிழரின் தீக்குளிப்புகளைப் பார்க்கும்போது இது தான் எனக்கு ஞாபகம் வந்தது. இனிமேல் வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களும் இதே போல ” நாங்கள் தமிழர்தான். ஆனால் இலங்கைத் தமிழர் இல்லை” என்று சொல்லும் நிலையையே இது உருவாக்கியுள்ளது. மேலும் முஸ்லீம் பயங்கரவாதத்தின் தாக்கம் வெளிநாட்டில் வாழும் அனைத்து முஸ்லீம்களின் வாழ்க்கையை, அவர்களின் முன்னேற்றங்களை தடுத்துவிட்டது போல, இலங்கைத் தமிழர்களுக்கும் இதே கதியைதான் இப்பயங்கரவாத நிகழ்வுகள் எதிர்காலங்களில் ஏற்ப்படுத்தும் என்பது தெளிவு.

  Reply
 • thurai
  thurai

  ஈழத்தமிழற்கான தீக்குளிப்பாக வெளிப்படையாகத் தெரிந்தாலும் இவை ஓர் திட்டமிடப்பட்ட கொலைகள். இதன் பின்னணிகளில் உள்ளவர்களைக் கண்டுபிடித்து விசாரணை செய்து தண்டணை வழங்கப்படவேண்டும்.

  உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் ஈழத்தமிழரின் பெயரால் பிழைப்புநடத்திவரும் துரோகக் கும்பலை அடையாளம் காணவேண்டும். தவறின் உலகம் முழுவதும் ஓர் காலத்தில் தமிழன் தலைநிமிர்ந்து வாழமுடியாத நிலையே ஏற்படும்.
  துரை

  Reply
 • பகீ
  பகீ

  பலருக்கு ஏன் தம்மை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பது விளங்காவிட்டால் தீக்குளிப்பு நிகழ்வுகளில் கருத்தெழுதியோரின் கருத்துகளை மீழ் படித்துப் பார்ப்பது நல்லது.

  ஈழத்தமிழராயினும் சரி இந்தியத்தமிழராயினும் சரி இறந்தால் அது புலிகளின் தூண்டுதல் அல்லது பணம் சார்ந்த நிகழ்வு அல்லது விரக்தி, மண்டைகழண்ட கேசுகள் என கருத்து எழுதுவோர் மக்களின் வேதனையை புரியாதோராகவே இருக்கின்றனர். இவர்களை மக்கள் அறிவுஜேவிகள், கல்விமான்கள், என என்ன போர்வையில் வந்தாலும் ஏற்கப்போவதில்லை!

  Reply
 • damilan
  damilan

  அதீத எதிர்பார்ப்பு ஆசை நிறைவேறாத போது மனம் விரக்தி ஏற்படுகிறது விரக்தியின் விளைவு உயிரை மாய்த்தல். தற்கொலை செய்தவர்கள் அனைவரும் மக்கள் துன்பப்படுவதற்காகவா தற்கொலை செய்கிறார்கள் என்றால் அது அதிகமாக தற்கொலை செய்ய வேண்டிய இடம் இலங்கையாகவும் அதுவும் வடக்காகவும் இருக்க வேண்டும்.

  ஆனால் அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை. உயிர் வாழ வேண்டிய வேட்கையிலேயே மக்கள் தமது உயிரைப் பணயம் வைத்து வெளியேறுகிறார்கள். ஆக குறித்த பிரதேச மக்களே தாம் அனுபவிக்கும் துன்ப துயரங்களை சுமந்து தமது உயிரைக் காக்கும் போது இவர்களை விட வேறு யாரும் உலகில் குறித்த துன்பத்தை அனுபவிக்க முடியுமா ?

  இவ்வாறு துன்பப்படுபவர்களே தமது உயிரை மாய்க்காதபோது எட்டத்தில் இருப்பவர்கள் தமது உயிரைவிடுவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
  இவர்கள் விட்ட உயிர் குறித்த கொள்கை நிறைவேறாத நிலையிலும் தாம் நம்பி இருந்த கொள்ளை(கை)யர்கள் தகரும் போதுமே தமது உயிரை மாய்க்கின்றனர்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பகீ, பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விட்டதென்று நினைக்குமாம். அதுபோலத் தான் இருக்கிறது உங்கள் கதையும். தீக்குளித்த இளைஞன் ஒரு கிழமையாக சுவிசில் தங்கியுள்ளார். அவர் தங்கியிருந்த வீடு யாருடையது என்பது தங்களுக்குத் தெரியுமா?? வெகுவிரைவில் பொலிசார் எல்லா உண்மைகளையும் வெளியிடுவார்கள். அப்போது உங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உண்மை தெரியத் தானே போகின்றது.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  டமிழன்! இதை இப்படியும் சொல்லலாம். இலங்கை வாழ்தமிழ் மக்கள் 30-40 லட்சம்வரை வாழ்கிறார்கள். யாழ்பாணமும் கிழக்கும் பேரவலத்திற்கு உள்ளாக்கப்படவில்லை 2 1/2 லட்சம் பேர் பிரபாகரன் பிடியில். தீ குளிப்பவர்கள் இதில் யாருக்காக? அவலப்படும் 2 1/2 லட்சம் மக்களுக்காகவா கழுதையாக இருந்த பிரபாகரன் அதிகாரம் கட்டெறும்பாய் போன வடிவத்திற்காகவா ?

  தீ குளித்த ஒவ்வொருவரும் மறைமுகமாக தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அவர்கள் புலிகளுக்காகவும் தலைவர் பிரபாகரனுக்காகவும் தான் தமது தியாகம்; அவலப்படும் மக்களைப்பற்றி எந்த கருத்தையும் வைக்கவில்லை. அதுபற்றி பிரபாகரனுக்கு ஓர் வேண்டுகோளையும் விடுவிக்கவில்லை. ஐயாயிரம் வருட பழைய அரசருக்குரிய சம்பிரதாயம் போல வன்னிமக்களின் உயிர்கள் பிரபாகரனுக்கு காணிக்கை. இதுவே தீ குளிப்பாளர்களின் கடைசி விருப்பம்.

  Reply
 • பகீ
  பகீ

  “.. அவர் தங்கியிருந்த வீடு யாருடையது என்பது தங்களுக்குத் தெரியுமா?? ..”
  தெரியாது நீங்கள் தெரிந்தால் சொல்லுங்கள். யாராவது தமிழன் வீடாய் இருக்கும். அவர் ஈழ ஆதரவாளனாய் இருப்பார். உடனே புலிக்கிலி புடிக்கும் பலருக்கு.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பகீ அவர்களே நான் சொல்லி நீங்கள் எதையும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. ஆனால் முருகதாசன் இறந்த இடத்தில் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்ட Bag இல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அறிவித்திருக்கிறார். அது எப்படி தமிழில் 7 பக்க அறிக்கையானது. அத்தோடு அக்கடிதம் பார்க்கும் எவருக்குமே தெரியும் அது சம்பந்தப்பட்ட இளைஞனால் எழுதப்படவில்லையென்று.எவராவது தனது விலாசத்தை சரியாகத் தெரியாமலும் தனது பெயரை ஒழுங்காக எழுத முடியாமலும் இருப்பார்களா?? எல்லாவற்றிக்கும் விரைவில் விடை கிடைக்கும். அப்போது தெளிவு பெறுவீர்கள்.

  Reply
 • Thaksan
  Thaksan

  சுந்தரத்தை பிரபாகரன் கொலை செய்தது கொள்கை முரணால் அல்ல. சாதியால்> சமூகத்தால் தான் நம்பியிருந்த சுந்தரம் புதியபாதையை தொடங்கி உமாவுடன் சேர்ந்தியங்கதை தாங்கமுடியாமல் மனம்வெதும்பி செய்ததுதான் அந்தக் கொலை. சுந்தரத்தின் கொள்கைப் பற்று(பொதுவுடமை)> மனவுறுதி துணிச்சல் போராட்ட தெளிவு தொலைதூர பார்வை எதனையும் புரிந்து கொள்ளும் அறிவு அன்றல்ல இன்றும்கூட பிரபாகரனுக்கு இல்லை. மரண நாளை எண்ணிக்கொண்டிருக்கும் இந்த நிலையிலாவது பிரபாகரனால் சுந்தரத்தை புரிந்துகொள்ள முடியுமென எதிர்பார்ப்பது பிரபாகரனுக்கு சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது என்ற தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும்.

  Reply
 • பகீ
  பகீ

  பார்தீபன்,
  ஒருவருக்கு ஆங்கிலம் எழுதத்தெரியாமல் இருந்தால் அவர் இன்னொருவரிடன் கேட்பதில்லையா? அவ்வாறு கேட்டு இன்னொருவர் எழுதிக் கொடுத்தால் என்ன தவறு. அக்கடிதம் கண்டெடுக்கப்பட்டதென்று பொலிசார் சொவதில் தவறோ அன்றி சதியோ எங்கிருக்கிறது என சொல்ல முடியுமா. அக்கடிதம் இணையத்தில் வந்ததுதானே. இதிலென்ன சதி இருக்கிறது.

  கீழே இறந்தவரின் குடும்பத்தினர் கொடுத்த பேட்டி ..படித்துப்பாருங்கள்……
  http://www.harrowtimes.co.uk/news/4135332.Protester_burns_to_death_to_free_his_people/

  Reply
 • palli
  palli

  சுந்தரத்தை கொலை செய்தவர்கள் இறைகுமாரன்; உமைகுமாரன் இவர்கள் புலிகள்தான். பிரபாவின் கட்டளைபடிதான் இந்த கொலை நடந்தது. இந்த இருவரையும் பின்பு புளொட்டை சார்ந்த பாலமோட்டை சிவம்(பெரியமெண்டிஸ்) மூர்த்தி; கிளினொச்சி சுதா; நடேசர் என்பவர்கள் கொலை செய்ததாக கடந்தகால செய்தி. இதில் ஒரு உன்மை உறங்கி கிடக்கிறது. சுந்தரத்தை கொலை செய்ய சொன்னது ஈழத்தின் (அன்று) மிக பெரிய தமிழ் அரசியல்வாதி. காரனம் சுந்தரம் மிகவும் அரசியல் வேகத்துடன் செயல்பட்டது தங்களுக்கு இடையூறாக போய் விடுமோ என்னும் பயம்தான். இந்த விடயத்தை அந்த தலைவர் பிரபாவுடன் பேசும்போது அவரது மனைவி அருகில் இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடதக்கது. ஆனால் அந்த தலைக்கே பிரபா வைதார் பாருங்கோ ஆப்பு. அப்போதாவது அந்த பெண்மணி கடந்த கால சதி திட்டங்களை வெளியிட்டிருக்கலாம். சுந்தரத்தை கொலை செய்யும் அளவுக்கு ஒரு அறிவுஜீவியல்ல பிரபாகரன். சுந்தரத்தின் கொலையை பொறுதமட்டில் பிரபாகரன் கூலி கொலையாளிகளின் தலைவன் அம்முட்டுதான்.

  Reply
 • பகீ`
  பகீ`

  பல்லி,
  சுந்தரம் கொலையில் நீங்கள் சொன்ன சம்பவங்கள் நடந்தன என்பதை எனது அந்நாள் கழகத்தோழர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது அந்நாளில் வெளியிடப்பட்ட (றோனியோ செய்யப்பட்டு) துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நீங்கள் சொன்ன விடயம் யாழ் கச்சேரியில் வேலை செய்த பலரால் அறியப்பட்டும் இருந்தது. நீங்கள் சொன்னதுபோல் தலைவி இதையெல்லாம் சொல்லாமல் மறைப்பதுடன் மேடையில் இன்னும் விக்கி விக்கி அழுவதும் எனக்கு மிகுந்த எரிச்சலையும் பலகாலமாக தந்துகொண்டிருக்கிறது என்பதையும் கூறவிரும்புகிறேன்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  /பார்தீபன், ஒருவருக்கு ஆங்கிலம் எழுதத்தெரியாமல் இருந்தால் அவர் இன்னொருவரிடன் கேட்பதில்லையா? அவ்வாறு கேட்டு இன்னொருவர் எழுதிக் கொடுத்தால் என்ன தவறு. அக்கடிதம் கண்டெடுக்கப்பட்டதென்று பொலிசார் சொவதில் தவறோ அன்றி சதியோ எங்கிருக்கிறது என சொல்ல முடியுமா. அக்கடிதம் இணையத்தில் வந்ததுதானே. இதிலென்ன சதி இருக்கிறது./ – பகீ

  நான் எழுதியது என்ன அதற்கு உங்கள் பதில் என்ன?? நான் எழுதியது “முருகதாசன் இறந்த இடத்தில் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்ட Bag இல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அறிவித்திருக்கிறார். அது எப்படி தமிழில் 7 பக்க அறிக்கையானது”??

  ஆனாலும் ஒரு விடயத்தை நீங்கள் உங்களையும் அறியாமல் ஒத்துக் கொண்டு விட்டீர்கள். அதாவது ஒருவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதிய ஒரு ஆங்கிலக் கடிதத்தை தமிழில் மொழி பெயர்த்துத் தா எனக் கேட்டால் தாராளமாக அதை மொழி பெயர்த்துக் கொடுத்து தற்கொலையை ஊக்கப்படுத்துவீர்களே தவிர அவரைத் தற்கொலை செய்யாது தடுக்க முன்வர மாட்டீர்கள். காரணம் உங்களுக்குத் தேவை ஒருவரின் மரணத்தின் மூலம் கிடைக்கும் விளம்பரம் மட்டுமே!!

  Reply
 • santhanam
  santhanam

  சுந்தரத்தை கொலை செய்தவர்கள்? நீங்கள் பிரபாகரன் பால்குடி மாதிரிதிபுபடுத்துகிறீர் இதில் அந்த அரசியல் தலைவருக்கு பங்கு இருக்கலாம் நான் மறுக்கவில்லை ஆனால் பாலவும் பிரபாவும் போரட்டத்தை உயிருடன் இருக்கும் போதே நன்றாக திரீபு படுத்தி புத்தகமே எழுதிவிட்டார்கள் இது வாய் சொல் தானே ஒரு விடயத்தை மட்டும் உண்மை உமாவை தவிர அனைவரும் இந்தியாவின் கையர்ட்கள் இதற்கு பல்லி வங்கம் தந்த பாடம் என்ற புத்தகத்தை வாசிக்கவும்.

  Reply
 • sun
  sun

  முருகதாஸ் தற்கொலைக்கு முதல் 6 பக்கத்திலான கடிதத்தை தமிழில் எழுதி வைத்து விட்டே இறந்தார்.அவர் இறந்த பிறகு சுவிஸ் பொலிசார் விசாரனைக்காக அந்த கடிதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். சுவிஸீல் உள்ள படித்த ஆங்கிலம் தெரிந்த தமிழ் பெரியோரே மொழி பெயர்த்தனர்.

  தேசத்தில் வந்து எழுதுபோரை பார்க்க வேதனையாக உள்ளது.நல்ல காலம் வன்னி மக்களீடையே இனைய சேவை இல்லை.புலி புலி என குற்றம் சாட்டுவதை விட வேறு உருப்படியாய் நீங்கள் என்ன செய்தீர்கள்? கேட்டால் புலி விடவில்லை என சொல்வீர்கள் உப்ப தான் உங்களை பொறுத்த வரை புலி பலம் இழந்து விட்டதே உப்பவாயினும் அவ் மக்களுக்கு ஏதாவது செய்யலாமே குறைந்த பட்சம் அரசு மேற் கொள்ளும் கொலைகளையாவது தடுத்து நிறுத்தலாமே.புலி தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்றால் புலியை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி உண்டு? மக்கள் இன்னும் புலியை நம்ப காரணம் புலி மக்களுக்கு ஏதாவது செய்யுது நீங்கள் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் புலியை விமர்சித்தே காலத்தை கடத்துங்கள்.

  Reply
 • palli
  palli

  // பல்லி வங்கம் தந்த பாடம் என்ற புத்தகத்தை வாசிக்கவும்//
  சந்தானத்தின் வேண்டுதலுக்காக மீண்டும் ஒரு முறை அதை வாசிக்கிறேன். அதில் என்ன இருக்குதென பல்லிக்கு புரியவில்லை. அந்த புத்தகத்தை வாங்கள தேச கல்விமான் (வழக்கறிஙர்) வங்காள போராட்டத்தையும் அதனால் வந்த அவதிகளையும் மக்கள் பட்ட துன்பங்களையும் எழுதினார். அதை சந்ததியார் தமக்கும் அது உதவும் என்பதால் மொழிபெயர்த்தார்கள் அம்முட்டுதான். ஆனால் பலர் அதை சந்ததியார் தான் எழுதியதாக கற்பனை செய்கின்றனர்.

  உமா இந்தியாவின் செல்ல பிள்ளை இல்லை என்பது தவறு. 1984ம் ஆண்டு இந்திய அரசு ஈழம்கோரி இந்தியாவில் ராணுவ பயிற்ச்சி எடுத்த இயக்க அங்கதவர் விபரம் சேகரித்தார்கள். இதுக்கு அன்று இந்திய நீர்மூழ்கி கப்பலுக்கு இரண்டாவது பொறுப்பில் இருந்த சேகர் (றோ) என்பவர் தலமை வகித்தாராம். (அவர் பின்னாளில் புளொட்டில் இருந்ததாக கேள்வி பல்லிக்கு உன்மை தெரியாது) அப்போது புளொட் அமைப்பின் அங்கத்தவர் தொகை 3900 .மற்றய அனைத்து இயக்கமும் சேர்ந்து (புலி டெலோ உட்பட) 1000 தாண்டவில்லை. அப்படியாயின் உமா எப்படி இத்தனை பேரையும் இந்தியாவில் வைத்திருந்தார். வேண்டுமெனில் இப்படி சொல்லலாம் தமிழகத்து செல்ல பிள்ளையல்ல மத்திய அரசின்(இந்திராகாந்தி) தத்து பிள்ளையென. இதெல்லாம் எப்படி பல்லிக்கு தெரியும் என கேட்டால் பதில் பல்லியிடம் இல்லை.

  Reply