Sunday, September 26, 2021

பிரதமருடனான சந்திப்பு தோல்வி – போராட்டம் தொடரும் !

சம்பள உயர்வு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. மேலும் மாணவர்களுக்கான இணைய வழி கற்பித்தலில் இருந்தும் ஆசிரியர்கள் விலகியுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆசிரியர் சங்கத்தினர் பிரதமர் மகிந்தராயபக்ஷவை சந்தித்தனர். மாணவர்களின் கல்வியை மையமாக கொண்டு  தீர்மானமிக்க முடிவு எட்டப்படும் என இன்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ”பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்ததாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுமார் 2 மணிநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *