Sunday, September 26, 2021

1600க்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் – 48 புதிய கொரோனா மரணங்கள் !

இந்த மாத ஆரம்பத்தில் ஓரளவுக்கு கொரோனா பரவும் வீதம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதும் கூட நாடு படிப்படியாக  திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தொற்று வீதம் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.

நாட்டில் மேலும் 48 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,99,869 ஆக அதிகரித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *