Monday, October 18, 2021

இலங்கையில் குறைவடைய ஆரம்பித்துள்ள கொரோனாத்தொற்று !

நாட்டில் மேலும் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய இன்று இதுவரை 1,146 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 512,154 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 453,689 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி மேலும் 12,609 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *