ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றைய பிரச்னைக்குக் காரணம்: திருமா

thirumavalavan-1601.jpgஇலங் கைக்கும் இந்திய அரசுக்கும் இடையில் செய்யப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றுள்ள ஒட்டுமொத்த சிக்கலுக்கு அடிப்படைக் காரணம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

இலங்கையில் போராடும் தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியவர் இந்திரா. ஆனால், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் பிரணாபோ, வெளிநாட்டுப் பிரச்னையில் தலையிடமுடியாது என்கிறார்.  ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றுள்ள ஒட்டுமொத்த சிக்கலுக்கும் அடிப்படைக் காரணம். இந்த ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, சிங்களவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பந்தத்தை சிங்களவன் ஏற்றுக்கொள்ளாததன் வெளிப்பாடுதான், ராஜீவ் மீதான துப்பாக்கிக் கட்டை தாக்குதல்.

இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களை, நீதிமன்றத்தின் மூலம் சிங்கள அரசு பிரித்துவிட்டது. இதைக்கூட இந்திய அரசு தட்டிக்கேட்கவில்லை. தமிழினத்துக்கு எதிராக இந்தியா பச்சைத்துரோகம் செய்கிறது. இதை வைத்துக்கொண்டு ராஜபக்ச அரசு, தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் சிங்கள அரசுதான் போரில் ஈடுபட்டுவருகிறது. மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்திவருகிறார்கள். போரை நிறுத்தத் தயார் என விடுதலைப்புலிகள் பல முறை கூறிவிட்டனர். ஆனால் சிங்களத் தரப்பு போரை நிறுத்தத் தயாராக இல்லை.

இந்த நிலையில், இரு தரப்பும் போரை நிறுத்தவேண்டும் எனக் கூறுவது, அங்கு நடப்பதைப் பற்றி தெரியாமல் பேசுவதாகும் அல்லது மழுப்பலாகப் பேசுவதாகும். இலங்கையில் தமிழர்களை அழிக்கும் போரை நிறுத்தவேண்டும் என்று இதுவரையில் கேட்காத ஒரே கட்சி அதிமுகதான். தமிழர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது.

ஈழத் தமிழருக்காக தியாகச் சாவடைந்த கடலூர் தமிழ்வேந்தனின் இறுதி ஊவலத்தில் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் சமூகவிரோதிகள் புகுந்து திமுக பதாகைகளை சேதப்படுத்தினர். ஆனால் போலீசார், நான் சொல்லியும் கேட்காமல், தடியடி கொண்டு தாக்கினர். இதில் 20 பேருக்கு தலைக்காயமும் 40 பேருக்கு காயமும் அடைந்தனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயர்நீதிமன்ற வளாகத்திலும் அத்துமீறிய போலீசார், வழக்கறிஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆட்சிக்கு எதிராக போலீசில் சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். இத்தகையை கருப்பு ஆடுகளை முதலமைச்சர் அடையாளம் காணவேண்டும். ரவுடிகளை அழைத்துவந்த சுப்ரமணியசுவாமி வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார். போராடும் வழ்க்கறிஞர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தியுள்ளார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார். 
 
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • விடுதலை ஆடு
    விடுதலை ஆடு

    /ஆட்சிக்கு எதிராக போலீசில் சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். இத்தகையை கருப்பு ஆடுகளை முதலமைச்சர் அடையாளம் காணவேண்டும்.-தொல்.திருமாவளவன்/—இதிலிருந்து இவருடைய “மையப் புள்ளி” எது என்று தெரிந்துவிடும்.

    Reply
  • palli
    palli

    இந்திரா அம்மையாருக்கு தெரியுமா தனது குழந்தையை(ரஜீவ்) தான் பால் வைத்த பாம்பே தீண்டும்என. பால் வைத்தது அவரது குற்றமா? பாலை குடித்து விட்டு குழந்தயை தீண்டியது பாம்பின் குற்றமா??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்று தமிழகத்தின் குழப்பங்களுக்கு திருமா, வைகோ, நெடுமாறன், இராமதாஸ் போன்ற புலிகளிடம் பணம் பெறுபவர்களின் கைங்கரியம் தான் என்பதும் உலகிற்குத் தெரியும்!!

    Reply