சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம்: ரூபனின் இறுதிக்கடிதம் – தற்கொலை தாக்குதல் முயற்சியென இராணுவம் தெரிவிப்பு.

Ruban_Colவிடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்” : வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்!  தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

 “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு :

15.02.2009
தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே! மாவீரர்கள், மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம். நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள். ‘மாவீரன்’ முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது. எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும். மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!

neelp-pulikal.jpg“நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை. மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது. வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது. விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.

அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!

உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள். எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.

அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு :

15.02.2009
தமிழீழம்.

அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,

நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார். அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?

உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.

அன்புக்குரிய மக்களே!

எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.

அன்புக்குரிய மக்களே!

எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா? யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.

அன்புக்குரிய மக்களே!

எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.

அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது. 

சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.

அன்புக்குரிய மக்களே!

நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான்  போராட வேண்டும்.

நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.

அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!

போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள். உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது. ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது. சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?

அன்புக்குரிய மக்களே!

எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் ‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது. ”கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.
அன்புக்குரிய மக்களே!

எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.

அன்புக்குரிய மக்களே!

தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.

எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!

எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.

வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.

பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?

நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.

அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!

உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.

இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.

அன்புக்குரிய மக்களே!

சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.

எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.

நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.

அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!

நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

திலீபன் அண்ணை கூறியது போல்

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்”

இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்.

தற்கொலை தாக்குதல் முயற்சியென இராணுவம் தெரிவிப்பு

kattunayaka.jpgகட்டுநாயக்கவில் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட புலிகளின் இலகு ரக விமானத்திலிருந்து 215 கிலோ வெடி மருந்து மீட்கப்பட்டதாக விமானப் படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். சதுப்பு நிலப் பகுதியில் வீழ்ந்து நொருங்கிய விமானத்தின் பாகங்களை மீட்டுள்ளதாகக் கூறிய விங் கமாண்டர் நாணயக்கார கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலிகளின் இரு விமானங்களும் செக் குடியரசின் தயாரிப்பாகுமெனத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிக பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கொழும்பு நகருக்குள் புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டு ஊடுருவியதை அறிந்த விமானப் படையினர், புலிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டனர். கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகர் இருளில் மூழ்கியது.

புலிகளின் விமானங்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து கொழும்பு நகரை அண்டிய நேரம் வரையில் விமானப்படை தலைமையகத்துக்கு தகவல்கள் வந்த வண்ணமே இருந்தன.

இதனாலேயே புலிகளின் விமானங்கள் சுட்டு வீழ்த்துவதற்கும் விமான எதிர்ப்பு ஏவுகணை பொறிமுறையைச் செயற்படுத்துவதற்கும் ஏதுவாக அமைந்தது எனவும் விமானப்படையின் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் விமானப்படை தலைமையகத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதலை நடத்த வந்த புலிகளின் விமானம் ஒன்று சூட்டுக்கு இலக்காகி இறைவரித் திணைக்களத்தில் மோதி விழுந்தது.

இப்பகுதியை பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடன் படையதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். விமானத்தின் பாகங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த அடையாளங்கள் காணப்பட்டன. விமானியின் உடல் பாகங்களும் விமானச் சிதைவுக்குள்ளிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று சுமார் 215 கிலோ எடைகொண்ட சீ. 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளுடன் பறந்த மற்றுமொரு விமானம் கொழும்பில் தாக்குதல் நடத்திய பின்னர் கட்டு நாயக்க விமானப்படைத் தளத்தை இலக்குவைத்து சென்ற போது விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானியின் சடலம் மற்றும் சயினைட் வில்லை, டிஜிடல் கமரா, புலிகளின் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்றவையும் நொருங்கிய விமான பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டன.

நேற்றுமுன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில் புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்கள் தாக்குதல் நடத்த வந்துள்ளன என்ற தகவல் அறிந்த மறுகணமே கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வீதிகளில் செல்லும் வாகனங்கள் அதே இடத்தில் நிறுத்தப்பட்டு மின்விளக்குகள் அணைக்கச் செய்யப்பட்டன.

விமான எதிர்ப்பு ஏவுகணைப் பொறிமுறை இயங்க ஆரம்பித்தன. கொழும்பு லேக் ஹவுஸ¤க்கு முன்பாகவுள்ள சிற்றம்பலம் ஏ. கார்டின் மாவத்தையிலுள்ள இறைவரித் திணைக்களத்தின் முன்னால் புலிகள் வீசிய குண்டு விழுந்து வெடித்துள்ளது.

விமான எதிர்ப்பு ஏவுகணையின் தாக்குதலுக்குள்ளான விமானம் இறைவரித் திணைக்களத்தின் 12வது மாடியில் மோதி வெடித்துச் சிதறியது.

விமானத்தின் தாக்குதல் காரணமாக ஒரு விமானப்படை வீரர் உட்பட ஏழுபேர் காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நேற்று முன்தினம் இரவு விமான எதிர்ப்பு பொறிமுறை இயங்கிய போது வானத்தை நோக்கி ஒளிபாய்ச்சியவாறு விமானங்களை தேட ஆரம்பித்தனர். வானமெங்கும் வானவேடிக்கை போல காட்சியளித்தது.

தலைநகரிலும் அதனை அண்டிய பகுதிகள் இருளில் மூழ்கியதுடன் மக்கள் பீதியுடன் காணப்பட்டனர். குண்டு வெடிப்புகள் காரணமாக இறைவரித் திணைக்களத்துக்கு அருகேயுள்ள கட்டடங்கள் அதிர்ந்தன.

பொலிஸ் மற்றும் இராணுவ படைப்பிரிவினர் கூட்டாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இரசாயன பகுப்பாய்வாளர்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜோன் ஹோம்ஸின் மறக்கமுடியாத அனுபவம்

இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் வெள்ளியன்றிரவு பலமணி நேரத்தை “மெழுகுதிரி’ வெளிச்சத்தில் கழித்த அனுபவத்தை நேற்று ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கொழும்பு கோட்டைப் பகுதியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஜோன் ஹோம்ஸ் தங்கியிருந்தார். வெள்ளிக்கிழமை இரவு விடுதலைப்புலிகள் கொழும்பில் மேற்கொண்ட விமானத்தாக்குதலின்போது தலைநகரில் மின்சாரம் சுமார் ஒருமணி நேரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எதுவும் செய்யமுடியாத நிலையில் தங்கியிருக்க நேர்ந்ததாக அவர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இது தனக்கு இலங்கையில் கிட்டிய ஒரு புது அனுபவம் எனவும் இதனை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேசமயம், விடுதலைப்புலிகளின் இந்த விமானத்தாக்குதலை கடுமையாகக் கண்டித்த ஜோன் ஹோம்ஸ், இது போன்ற நடவடிக்கைகள் அனுமதிக்க முடியாதவை எனக் கூறினார்.

இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட காயமடைந்தவர்களுக்கும் பலியானவர்களின் குடும்பத்தவருக்கும் தனது கவலையையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் வெளியிட்டார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

31 Comments

 • துறைப்பொறுப்பாளர்
  துறைப்பொறுப்பாளர்

  புலியின் விமானம் கொழும்பில் நடாத்திய தாக்குதலில், வன்னியில் அப்பாவி 50 பொதுமக்கள் பலி. புலியின் விமானம் தமிழரைத்தான் பலி எடுத்திருக்கு

  இந்த விமானத்தின் தாக்குதல் 300 வருட உக்கல் இறைவரி தினைக்களத்தில் வீழுந்ததை விடவும் பாராளுமன்ற கட்டிடத்தை பதம் பாத்திருந்தால் உலகம் பேசுவம் புலியோட என்டுஆதல் சிந்திச்சிருக்கும்.

  தாக்குதல் நடாத்தபட்டபோது 100 மீட்டர் தூரத்திலை ஜ.நா அதிகாரி தனது தங்குமிட விடுதியில் இரவு உறக்கத்துக்கு தயாராகும்போது மின்சாரம் நிறுத்தபட்டதாகுவும் விடயத்தை அறிந்தபோது புலி விமானம் தாக்கியதாகவும் தகவல் வந்ததாம். ஆத்திரம் தலைக்கேறி 10 மில்லியன் டாலர்களை புலியை அளியுங்கள் என்று கொடுத்தவிட்டு போயுள்ளாராம்.

  Reply
 • palli
  palli

  மேலே உள்ள பின்னோட்டம் வேடிக்கையாக இருந்தாலும். அது நடந்தாலும் தமிழராக நாம் வெக்கபட வேண்டியதுதான். வேறு என்ன செய்ய முடியும். சீப்புள்ள போது மொட்டை போட்டு விட்டு மொட்டை விழுந்த பின் சீப்பு தேடிய கதையாய் போச்சு எமது போராட்டமல்ல பேயாட்டம்.

  Reply
 • VADIVELU
  VADIVELU

  //நாம் யார்? தமிழன் யார் எனக்காட்டுவோம். ரூபனின் இறுதிக் கடிதம்??//
  இப்பவெல்லாம் தமிழனென்டா கடிதத்த எழுதி வைச்சுட்டு செத்துடுவாங்களோ? சொல்லவேயில்ல….அடடா. …!! தலை கெட்ட ஜென்மங்களா எப்ப இருந்து உங்க போராட்டம் இப்பிடி மாறிச்சி?

  Reply
 • muthu
  muthu

  போராட்டம் இறுதியாக காகிதப் போராட்டமாகியுள்ளது. தரைப்படை கடற்படை வான்படை என்பதோட காகிதப்படை எண்டும் ஒரு செக்க்ஷன் பங்கர்தலைவர் வச்சிருந்திருக்கிறார். அதை 2009ல் உலகுக்கு வெளிக்காட்டியிருக்கிறார். (தவிகூ ஆரம்பித்த தமிழீழம் என்பதை தமதாக சுவீகரித்தார்கள். இப்ப கடிதவிடயத்தில் இவர்கள் ஆனந்தசங்கரியை விஞ்சிவிடுவார்கள் போலுள்ளது.)

  Reply
 • palli
  palli

  ரூபனிடம் இதை எழுதுவதுக்கு மன்னிப்பு கோரி தொடரும் பல்லி.

  இந்த கடிதம் தலைவரின் மாவீரர் உரை எழுதி கொடுத்தநபர் எழுதியது என்பது போல் உள்ளது. மேலே உள்ள சொற்றொடருகளை கவனிக்கவும். உதாரனம் அன்பார்ந்த மக்களே; சிங்கள தேசம் நீங்களே தொடருங்கள்

  Reply
 • Kullan
  Kullan

  புலிகளின் விமானம் செக்குடியரசில் தயாரிக்கப்பட்டது என்றால் அரசுக்கு ஆயுதத்தளபாடங்களையும் இஸ்ரயில்> இரஸ்யா> நோர்வே> அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கொத்துக் குண்டுகளை அரசுக்கு வழங்கியதும் செக்குடியரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
  இப்படியாகத் தாழ்வுப்பறப்புகளை மேற்கொள்ளும் விமானங்கள் கொழும்பை அடைவதற்கு அதிகநேரம் எடுக்கும்………………….

  ………….இறந்து போன விமான ஓட்டிகள் தமது அடையாள அட்டையுடன் தமது சகவிமான ஓட்டிகளின் படங்களுடன் பறந்ததற்கான காரணம் என்ன? இனி சகவிமானஒட்டிகள் இனி தம்பி பிரபாகரனை விட்டு போனால் பிடிபடுவார்கள். ஆகவே கூட இருந்து சாகுங்கள் என்பதா? அப்படங்களில் இருந்தவர்கள் எல்லோரும் இறந்தவர்கள் அல்லர். இது புலிக்குட்டிகளுக்கு பிரபாகரனின் எச்சரிக்கை மட்டுமல்ல படு துரோகமும் கூட. இப்போ எல்லா விமான ஒட்டிகளினது படங்களும் இராணுவத்திடம் உள்ளது. சிலவேளை முகங்கள் மறைக்கப்பட்டிருந்தால் எம்மிடன் இவ்வளவு விமானிகள் உள்ளனர் என்று பறைசாற்ற (சோ காட்ட) பிரபாகரன் செய்த வேலையாக இருக்கலாம். எதுவானாலும் இதுவும் ஒரு சோதான். காரணம் வெளிநாட்டில் தமிழர்கள் உள்ளார்களே கைதட்ட.

  விமானம் முல்லைத்தீவில் இருந்து வரும்வரை தொடர்ச்சியான தகவல்களை கொடுத்தும் உடன் சுட்டுவீழ்த்தாது கொழும்பு வரும் வரை காத்திருந்ததன் நோக்கம் என்ன? …………………………………………… மேலும் புலிகள் சிலதடவை போக்குக்காட்டி அதாவது புலிவருகிறது புலிவருகிறது என்று எதிரியையும் அரசையும் கலங்கு நிலையில் வைத்திருப்பதனூடு எதிரியின் மனோபலத்தை இழக்கச் செய்வதும் ஒரு கெரில்லா தந்திரம் என்பதை அறிக. படித்த இத்தத்துவங்களைப் புலிகளே! எங்கே கொட்டினீர்கள்

  Reply
 • ஏகாந்தி
  ஏகாந்தி

  தலைநகர் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை வான்புலிகள் நடத்திய தாக்குதலில் போது அவர்களின் இலக்குகளில் ஒன்று அரச தலைவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் என ‘லக்பிம’ வார ஏடு தெரிவித்துள்ளது.

  Reply
 • Kullan
  Kullan

  விமானி ரூபன் எழுதிய கடிதத்தைப்பார்த்தால் பிரபாகரனின் மரணபயம் தெரிகிறது. இது ரூபன் எழுதிய கடிதமாகத் தெரியவில்லை ஏனெனில் இக்கடிதம் காலம் கடந்த வந்தது என்பதுடன் பிரபாவின் மாவீரர் உரையையும் ஒப்பிட்டுப் பாருங்கள் உண்மை புரியும்.

  Reply
 • SUDA
  SUDA

  தெரியாமத்தான் கேட்கிறன்….. புலியின் தகவல்படி வெற்றிகரமான தற்கொலைத் தாக்குதல் என்டால்… தற்கொலைத் தாக்குதல் நடத்தினவன் எதுக்கு கட்டுநாயக்கா தென்னந்தோப்புக்குள்ள நடாத்த வேண்டும்? விமானப்படையினர் இனிமேல் இளநீரே அருந்தக் கூடாது என்றா…? சரி அப்படியே வைத்துக் கொண்டாலும் புலி விமானியின் சடலத்தை நெற்றியில் ஒரு சிறு காயத்தை தவிர எப்படி படையினரால் கைப்பற்ற முடிந்தது? (புதுவித தற்கொலைத் தாக்குதலோ???) சரி அடுத்த விமானம் எதுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டிடத்தில் மோதனும்? அரசாங்கத்துக்கு இனி வரியே கிடைக்கக் கூடாது என்றா…? சரி அப்படித்தான் என்றாலும்.. சாதாரணமாக ஒவ்வொரு புலி உறுப்பினரும் வைத்திருக்கின்ற கைக்குண்டினால் பெரும் கட்டிடத்தையே தகர்த்து விடலாம் என்று எந்த வெடிமருந்து நிபுணண்(?) இந்தப் புலிகளுக்கு சொல்லிக் கொடுத்தான்?

  ஆக இது ஒரு தற்கொலைத் தாக்குதல் அல்ல. முதலாவது விமானம் தரையிலிருந்து நடாத்தப்பட்ட சராமரியான தாக்குதலால் கட்டுப்பாட்டை இழந்து இறைவரித் திணைக்களத்தின் பின்பகுதியல் மோதியிருக்கின்றது. இரண்டாவது விமானம் தாக்குதல் நடவடிக்கையை கைவிட்டு தப்பிப்போகும் வழியில் கட்டுநாயக்கா பகுதியில் வைத்து விமாப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. தமது தோல்வியை மறைப்பதற்காக புலித்தலைமை தனது வழமையான பாணியில் தீக்குளிப்பவர்களுக்காக கடிதம் எழுதிப் பிரசுரிப்பது போன்று இதற்கும் ஒரு கடிதம் எழுதி புலம்பெயர் மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.

  இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என புலி கூறும் அதேவேளை இராணுவத்தரப்பும் இதனை ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றே கூறுகிறது. இதன்மூலம் இரு தரப்புமே இச்சம்பவத்தினை ஒரு பிரசார யுக்தியாக பயன்படுத்த முயற்சிக்கின்றன.
  1. புலி தொடர்ந்து அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர் மக்களிடமிருந்து தமக்கு வேண்டிய நிதியை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. ஆகவேதான் அவர்கள் புலம்பெயர் தளத்தில் சரிந்து போய்க்கிடக்கின்ற தமது செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணமாக இத்தாக்குதலை மேற்கொண்டனர். இந்நிலையில் இத்தாக்குதல் தோல்வியில் முடிந்ததோடு மாத்திரமல்லாது புலம்பெயர் மக்கள் உறைய வைக்கும் குளிரில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் வாங்கிய இரு விமானங்களும் இழக்கப்பட்டன என்ற யதார்த்தம் அம்மக்களுக்கு விளங்கினால் தமது செல்வாக்கும் நிதி வருமானமும் இன்னும் மோசமாக பாதிக்கப்படும். எனவேதான் புலிகள் இதனை ஒரு தற்கொலைத் தாக்குதலாக பிரசாரம் செய்கின்றனர்.

  2.இராணுவத்தைப் பொறுத்தவரை இதனை ஒரு தற்கொலைத் தாக்குதலாக பிரசாரம் செய்வதன் மூலம் இவ்வாறான ஒரு தாக்குதல் யுக்தியை உலகின் ஏனைய கெரில்லா அமைப்புக்கள் கைக்கொள்வதற்கான ஆபத்து நிலைமையை வெளியுலகுக்கு விளக்குவதோடு தாம் புலிக்கெதிராக செய்யும் யுத்தத்திற்கான ஆதரவையும் பெற முயற்சிக்கின்றது. குறிப்பாக 9/11 தாக்குதலில் பட்டுத்தேறிய அமெரிக்கா மற்றும் பிராந்திய வல்லரசான இந்தியா போன்றவற்றுக்கு இதன் பயங்கர விளைவுகளை விளக்கி அதன்மூலம் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கை செய்யும் நாடுகளுள் தன்னையும் ஒன்றாக காட்ட முனைகிறது.

  Reply
 • tamilspeek
  tamilspeek

  /புலியின் விமானம் கொழும்பில் நடாத்திய தாக்குதலில், வன்னியில் அப்பாவி 50 பொதுமக்கள் பலி. புலியின் விமானம் தமிழரைத்தான் பலி எடுத்திருக்கு/துறைப்பொறுப்பாளர்

  அரசாங்க துறைப்பொறுப்பாளர், கடந்த இரண்டு மாதத்தில் புலி எங்கையாவது குண்டுவைச்சதா? சிங்களவரை கொன்றதா?
  2. அப்ப முந்தாநாள் புலி விமானத்தில் போய் தாக்காமல் விட்டிருந்தா உங்கடை சிங்கள துரைமார் வன்னியில் தமிழரை கொலை செய்திருக்க மாட்டினமோ? அப்ப முந்தாநாளுக்கு முன்னர் ஆயிரக்கணக்கில் கொலை செய்தது என்னத்துக்கு?
  3.புலி பயங்கரவாதிகள் உண்மையாக சிங்களவருக்கு எதிராக பயங்கரவாதிகளாக நடக்க வெளிக்கிட்டால் தேசத்தில் அதிகம் பேர் அசலம் கேட்ட சிங்களவர்கள் தான் சிங்களத்தில் பின்னூட்டமிடுவார்கள் தமிழ்துரையே!!

  அத்தோடு உங்கள் துரைமார் வானத்தில் கொழுத்திய வெடியில் சிங்கள குழந்தைபோராளியையும் சாககொண்டு போட்டினம். என்னே சிங்கள வீரர்களின் வீரம். இதையே புலி செய்திருந்தால் துள்ளிக்குதித்திருப்பீரே!!

  Reply
 • thurai
  thurai

  //எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.//

  தலைவனும், தலைவியும் அவர்களின் குடும்பத்தினரும், பாதுகாப்பாகவும், செல்வச் செழிப்புடனும் தலைமுறை அழியாமல் வாழ்க.
  மற்றும் தமிழரெல்லாம் போராடி அழியவும்.

  துரை

  Reply
 • santhanam
  santhanam

  ஒன்று மட்டும் உண்மை ஆயுதபோரட்டத்தின் முடிவில் தமிழர் அகிம்சையின் ஆரம்பம் புலத்தில்தமிழர் போரளிகளின் தொடர்புகள் துண்டிக்கபட்ட நிலையில் பல போரளிகள் விரக்திநிலையில் யாழில்.

  Reply
 • satkunam
  satkunam

  நீங்கள் என்ன போராட்டம் எங்கே செய்தாலும் ஒன்றும் பலன் அளிக்காது சயனைட்டை கடிக்க வேண்டியது தான். உங்கட பங்கர் தலைவனுக்கு என்ன செய்கிற தெண்டும் தெரியாது யாரம் சொன்னாலும் புரியாதவர் என்பதே இதன் விளக்கம். நாம் புலிக்கு கொடுத்த காசுகள் போதும் முழு இலங்கையையும் காசுக்கு வாங்கியிருக்கலாம் தமிழர் விமோசனத்திற்கு புலிகளும் பிரபாகரனுமே எதிரி – அன்புடன் முன்னைய புலி ஆரவாளன் சற்குணம்

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  குலன் குறிப்பிடும் சந்தேகம் எனக்கும் உள்ளது. தற்போது புலிகள் காகிதப் புலிகளாகவே மாறி விட்டார்கள். சமீபகாலமாக இடம்பெறும் மரணங்களின் பின் திடீரென அறிக்கைகள் போல் கடிதங்கள் முளைத்து விடுகின்றன. அது போலவே இங்கே ரூபனின் கடிதமும் அமைந்துள்ளது. ஆனால் அடுத்த போராளிக்கு ஏன் கடிமொன்றும் எழுதத் தெரியாதா?? சமீபகாலமாக புலித்தலைவரின் சிந்தனைகளில் தமிழ்நாட்டு மக்களை எப்படி உருவேற்றி விடலாம் வெளிநாடு வாழ் தமிழரை எப்படிக் குசிப்படுத்தி காசு பறிக்கலாம் என்பதாகவே அமைந்துள்ளது. வன்னி மக்கள் தான் பாவம். புலித்தலைவரின் ஒவ்வொரு செயலும் வன்னீமக்களின் தலையில் குண்டுகளாகத் தான் வந்து விழுகின்றது. அதிலும் தப்பிய மக்களுக்கு புலித்தலைவரே குண்டுகளை பரிசாக கொடுத்து விடுகின்றார்.

  Reply
 • kalyanee
  kalyanee

  times vol:173 No 9 2009 march 02 2009 on page 22 all explain ow the tamils eelam strugle ends- peoples can read them- please

  Reply
 • tamilspeek
  tamilspeek

  குலன், அந்தபுகைப்படம், அனுராதபுரத்தில் எல்லாளன் நடவடிக்கையில் பிரபாகரன் சகாக்களுடன் எடுத்தபுகைபடம், சும்மா பின்னூட்டம் விட்டு புலியைப்பற்றி அக்குவேற அணிவேர் தெரிந்தமாதிரி? இதை வைத்து எவ்வளவு சோடினை .. புலிகளில் உள்ளவர்களுக்கே புலிகளின் விமானப்படை கட்டமைப்பு தெரியாது……….

  Reply
 • Suresh-MM.A
  Suresh-MM.A

  புலிகளில் உள்ளவர்களுக்கே புலிகளின் விமானப்படை கட்டமைப்பு தெரியாதது மட்டுமல்ல தலைக்கே தெரியாது என்பதுதான் உண்மை பாருங்கோ.

  Reply
 • Global
  Global

  பெப்ரவரி 20 ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் தலைநகருக்கு மிக அண்மையாகவுள்ள கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தையும், கொழும்பில் விமானப்படையின் தலைமையகத்தையும் தாக்குவதற்கு புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்களின் மூலம் மீண்டும் ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட திறமை மிக்க முயற்சி அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.

  ஆனால் முன்பு ஆறு முறை விமானத் தாக்குதல் நடத்தியது போலல்லாமல் இம்முறை இந்த இரண்டு விமானங்களும்; வந்த இடத்திற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் போய்விட்டன. இரண்டு விமானங்களையும் பாதுகாப்புத் தரப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது. இலங்கையின் ஆகாய பாதுகாப்புப் பொறிமுறை உடனடியாக இயங்கி அந்த விமானங்களைக் குறி வைத்து விட்டன.

  தமது கரும் புலிகளால் தாக்குதல் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப் புறப்படுவதற்கு முன்னர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் தற்கொலை விமானிகளான கேர்ணல் ரூபன், லெப்டினன்ட் கேர்ணல் சிரித்திரன் ஆகியோர் புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளனர். இருவரையும் தனது கைகளால் அணைத்தபடி நடுவில் நிற்கும் பிரபாகரன் புன்னகையை வெளிப்படுத்தவில்லை. ஆனால், தற்கொலைத்தாக்குதல் நடத்தப் போகிறவர்கள் சிரித்தபடியே காணப்படுகிறார்கள்.

  தாக்குதல் நடாத்த வந்த விமானங்களில் ஒன்று விமானப்படைத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் அருகில் குண்டொன்றைப் போட்டதுடன், அதன் மூன்றாவது மற்றும் 12வது மாடிகளுக்கிடையில் மோதி சிதறி விட்டது. விமானியின் உடற் பாகங்களையும், விமானத்தின் உதிரிப் பாகங்களையும் படையினர் மீட்டுள்ளனர்.

  அரசாங்கத் தினசரியான டெய்லிநியூஸின் தகவலின்படி காயமடைந்த 50 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பின்னர் மரணமாயினர்.

  மற்றைய விமானம் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்திற்கு அருகில் குண்டொன்றை வீசியதுடன் தாக்குதலுக்குள்ளாகி விழுந்துள்ளது. கடுமையாகச் சேதமடைந்த நிலையில் பின்னர் இது கண்டெடுக்கப்பட்டது. அதனுள் விமானியின் சடலமும் காணப்பட்டது. வெடிக்காத குண்டுகளும் வெடிமருந்துகளும் விமானத்தினுள் காணப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  புலிகளின் மீதான இறுதிக்கட்ட உக்கிர மோதல் ஒன்றை இராணுவம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் புலிகளின் இந்த விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் பாதுகாப்பு இணையத்தளம் கூறுவது போல 100 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் நெருக்குப்பட்டிருக்கிறார்கள் புலிகள். புலிகளின் தாக்குதல் முயற்சி தோற்றுப்போனதாகத் தோன்றினாலும் இந்தச் சூழ்நிலையில் பயனுள்ள சில அம்சங்களை சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

  ஏழு விமான ஓடுபாதைகளை இழந்த பின்னரும் திட்டமிட்டு விமானத் தாக்குதல் ஒன்றை நடத்தியதன் மூலம் புலிகள் தமது பலத்தை இன்னும் இழக்கவில்லை என்பது புலனாகிறது.

  எனவே சரணடையக் கோருவதும், போராட்டத்தை நிறுத்தக் கோருவதும், ஆயுதங்களை கீழே போடுமாறு கேட்பதும் எதுவித பயனையும் தரப்போவதில்லை. யுத்தப் பிராந்தியத்தில் சிக்கியுள்ள மக்கள் மீட்சி பெறாத நிலையில் யுத்தம் தொடரும் என்பது தான் இதன் அர்த்தமாகும். இது ஒவ்வொருவருக்கும் பயங்கரச் செய்தியாகும். அத்தோடு இது படையினரின் நடவடிக்கைகளில் மேலும் தொய்வைக் கொண்டு வரும்.

  முக்கியமாக விடை காண வேண்டிய கேள்வி என்னவெனில் இந்த இரு விமானங்களும் எங்கிருந்து வெளியில் கிளம்பின என்பதுதான். பாதுகாப்பாக இவைகளை எடுத்துச் சென்று தாக்குதல் ஒன்று நடத்தக் கூடிய அளவிற்கு அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

  கடைசியாக வன்னிப்பகுதியின் ஏ9 பெருந்தெருவின் கிழக்குப் பகுதி முற்றிலும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஏ35 பரந்தன் முல்லைத்தீவு வீதி, ஏ32 மாங்குளம் முல்லைத்தீவு வீதி ஆகியவற்றிற்கு இடையில் விமானம் காட்டிலிருந்து எந்த ஒரு இரகசிய ஓடுபாதை மூலமாகவேனும் புறப்பட்டிருந்தால், அது தளத்திலேயே படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். இது குறித்த எச்சரிக்கை அவர்களுக்கு கிடைக்கவில்லையாயின் வன்னிக்கு அப்பால் இரகசிய ஓடுபாதை உண்டு என்று ஊகிக்கலாம். உதாரணமாக வன்னி பிராந்தியத்தில் மன்னாரின் தென்பகுதி. மேலும், இந்த யுத்தம் அவ்வளவு இலகுவில் முடியப் போவதில்லை. அநேகமாக கருணாவின் கணிப்பின்படி ஒரு வருடமோ அல்லது அதற்கும் மேலோ இழுத்துக் கொண்டே போகும்.

  கேணல் ஹரிஹரன்
  1987முதல் 1990 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். தெற்காசியா தொடர்பான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நிபுணத்துவம்மிக்க ஒருவரான அவர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

  நன்றி : குளோபல் ரமிழ் நியூஸ்

  Reply
 • Suresh-MM.A
  Suresh-MM.A

  //இருவரையும் தனது கைகளால் அணைத்தபடி நடுவில் நிற்கும் பிரபாகரன் புன்னகையை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் நடத்தப் போகிறவர்கள் சிரித்தபடியே காணப்படுகிறார்கள்.//
  உவரோட கிடந்து ஒவ்வொரு நாளும் உத்தரிக்கிறதவிட ஒரேயடியாச் செத்துடலாம் என்ட ஒரு நிம்மதிதான் அந்தச் சிரிப்பு.

  Reply
 • damilan
  damilan

  மக்கள் போராட்டம் மக்கள் போராட்டம் என்று கடைசி நேரத்தில் கூக்குரல் இடுவதால் இது மக்கள் போராட்டமாக மாறாது. ஆரம்பத்திலிருந்தே மககள் போராட்டமாக இயக்கத்தை வளர்த்திருக்க வேண்டும்.

  ஆயுதம் அதிகாரம் பலம் இருக்கும் மட்டும் மக்களைப்பற்றி சிந்திக்காது சொந்த மக்களை அடக்கியும் மாற்று மக்களை கொன்றும் மாற்று இயக்கம் அரசியல் தலைவர்கள் (தமிழ்) மாற்றுக்கருத்தாளர்கள் கல்விமான்கள் மற்றும் சொந்த மொழி பேசிய மக்களை துரத்தியும் வரி கப்பம் பாஸ் அரச உழியரிடம் வரி என்று இன்னும் பல அக்கிரமங்களைச் செய்தது சொந்த மக்கள் மீதே அவ்வளவும் செய்யப்பட்டது தற்போதுள்ள வடகிழக்கு மக்கள் மீதே மக்கள் தம்மீது இழைக்கப்பட்ட அநீதிகளை மறந்தவர்கள் மாதிரி நடிப்பார்கள் மறக்கமாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.

  மக்கள் போராட்டத்தை வெறும் காகிதத்தால் உருவாக்க முடியாது. நல்ல செயலாள் தான் அது மக்களிடம் ஏற்படவேண்டும் உருவாகும் அந்த நல்ல செயலின் வடிவமாக நல்ல ஒழுக்கமான தூய்மையான தலைவர் ஒருவரால்தான் முடியும். இது பிரபாகரனால் சாத்தியமா? சாகப்போகும் போது பாவ மன்னிப்புக் வேண்டினால் அது கிடைக்கக் கூடும். ஆனால் கடவுளாக ஏற்கச்சொன்னால் அது எப்படி முடியம்.

  Reply
 • Kullan
  Kullan

  அன்பரே tamilspeek
  புலிகளின் கட்டமைப்பு மட்டுமல்ல புலியின் புத்தியே எமக்குத் தெரியும் தமிழ்ஸ்பீக். உமக்குப் புலிகளைப் பற்றி எவ்வளவு தெரியும்? புலியாய் இருந்தீரா அன்றிச் சருகு புலியா? ஒரு கெரில்லா ஒரே இடத்தில் தங்கக்கூடாது எப்படி அசைவுகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றி உமது புலித்தலைவன் தொட்டுப்படித்த அதே புத்தகத்தைப் படித்தவன் தான் நான். இப்படிப்பட்ட புத்தகங்களை வாசித்த பிரபா கருணாவை அதுவும் அவருடைய பிரதேசத்தில் பொறுப்பாகப் பலவருடங்கள் போட்டு பணங்களையும் கொட்டிக் கொடுத்திருந்தார் என்றால் உமது தலைவனின் தரத்தை தரமிட்டுப்பாரும். கடசியாய் நடந்தது என்ன? முட்டாள்தனமான ஒரு விமானத்தாக்கதலைச் செய்திருக்கிறீர்கள். தற்கொலைத் தாக்குதலாம் 2 கிருனைட்டு தான் கிடக்கிறது படத்தில். விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.

  தமிழ்ஸ்பீக்! என்ன அனுராதபுரத்து எல்லாளன் நடவடிக்கையில் எடுத்த படமோ. இத்தனை விமானிகளை அனுராதபுரத்தில் புலிகள் எப்படிப் பாவித்தார்கள்; எங்கு பாவித்தார்கள். படத்தில் வான்புலிகளின் உடையில்தானே எல்லாரும் இருக்கிறார்கள். சும்மா கதை விடாதையும். உங்களது அனுராதபுர தாக்குதலின் விறுத்தத்தை சொல்லவா? இவ்வளவு வான்புலிகளை அனுராதபுரத் தாக்குதலுக்குப் பாவித்திருந்தால் ஒரு விமானியால் கூட அங்கிருந்த ஒரு சிறிய செசினா போன்ற சிறு விமானத்தைக் கூட எடுத்து வர முடியலில்லை? ஏன்? ஓரு விமானியைக் கூட விமானத்துடன் கடத்தி அனியாயமாகத் தற்கொலை செய்து கொண்ட கரும்புலிகளை காப்பாற்றியிருக்கலாம். …..புலிகளுக்கு போதிய நேரம் அங்கு இருந்தது. தலைவர் சொன்னது போல்தான் செய்வார்கள். சிந்தித்தால் செத்தார்கள். இதுதானே புலி வாழ்வும் புலிப்பயணமும். கட்டுப்பாட்டுக் கோபுரமும் கட்டுப்பாட்டறையும் செயலிழந்தபின் கட்டுப்பாடு புலிகளின் கைகளில் வந்திருக்க வேண்டும். எத்தனை விமானங்கள் விமானத்தளத்தில் இருந்தன. ஒருவிமானத்தைக் கூட அரக்க உங்களால் முடியவில்லை.

  உங்கள் தலைவன் வாசித்த அதே புத்தகத்தில் உள்ளதை இங்கே கூறுகிறேன் “எதிரியின் படைக்கலங்களை முறுமையாகவோ பகுதியாகவோ சுவீகரிப்பதில்தால் கெரில்லாவின் வெற்றிதங்கியுள்ளது” காரணம் எதிரி எந்தவிதமான ஆயுதங்களைப் பாவிக்கிறான்; எந்த யுத்திப் பொறிமுறை பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிவதற்கு எதிரியின் படைக்கலன்கள் எமக்கு உதவும். இப்போ நடப்பதைப் பார்த்தால் கெரில்லாக்கள் தமது படைக்கலன்களை எதிரியிடம் கொடுத்து விட்டல்லவா ஓடுகிறார்கள்

  அன்பரே! நாம் எதையும் அக்குவேறை ஆணி வேறையாகப் பார்த்துத்தான் பழக்கப்பட்டனாங்கள்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  தாக்குதல் நடத்தப் புறப்படுவதற்கு முன் தலைவருடன் இருவரும் எடுத்த படம் என்று படம் ஒன்றை (வழைமையான தலையின் உடையை ஒத்த) புலிகளும், புலிகளின் ஆதரவாளர்களும் வெளியிட்டிருக்கின்றார்கள். ஆனால் புலிகளின் விமானம் சுடப்பட்டு வீழ்ந்த பின் கைப்பற்றப்பட்ட போராளியின் உடையோ வழமையான வான் புலிகளின் கருமைநிற உடை. என்றோ முன்பே எடுக்கப்பட்ட படமொன்றை வைத்து புலிகள் எதைச் சொன்னாலும் தலையாட்டும் சில கூட்டங்கள் இருக்கும் வரை கேணல் ஹரிஹரன் போன்றவர்களும் அதை நம்பி கட்டுரைகள் வரைய வேண்டியது தான்.

  Reply
 • Kullan
  Kullan

  நன்றி சுதா!!
  சுதாவின் ஆய்வு மிகச்சிறப்பு. இத்துடன் வெடிகுண்டுடன் வந்த விமானத்தை தாம் வெற்றிகரமாக முறியடித்தோம் என்று கூறுவதில் அரசாங்கம் உலகநாடுகளின் முன்னால் பெருமை கொள்ளும். சிங்கள மக்களிடம் இருந்து வோட்டுப் பெருகும். புலிகளின் இருவிமானங்களை வீழ்த்திய வீராதி வீர ராஜமார்த்தாண்ட இரா..இரா இராசபக்ச என்ற பெயரும் சேருமல்லவா.

  Reply
 • uma
  uma

  கொழும்புவரை விமானங்களை வரவிட்டு, குண்டுகளை போடவும்விட்டு, அதன்பின் அவற்றை சுட்டுவீழ்த்தி, அதை தற்கொலைத் தாக்குதலாக்கு வந்தவர்கள் எண்டு அதை தனக்குச் சார்பான அரசியலாக்கி, அழகாக சர்வதேசத்திற்கு சமர்ப்பித்துவிட்டு இருக்கின்றது இலங்கை அரசாங்கம். ஆனால் தான் வெற்றிகொண்ட எந்தவொரு தாக்குதலையும் அன்றிலிருந்து இன்றுவரை அரசியலாக்க தெரியாது அல்லது அரசியலாக்க விரும்பாது ஆனால் பணமாக்கியுள்ளது, இன்னும் பணமாக்கிக் கொண்டிருக்கிறது புலிகள். விளைவு ஆயுத முனையில் தொடங்கிய போராட்டம் பேனா முனையில் வந்துநிற்கின்றது.

  சம்பவத்தில் மரணித்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  Reply
 • palli
  palli

  //தலைநகருக்கு மிக அண்மையாகவுள்ள கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தையும், கொழும்பில் விமானப்படையின் தலைமையகத்தையும் தாக்குவதற்கு புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்களின் மூலம் மீண்டும் ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட திறமை மிக்க முயற்சி //கேணல் ஹரிஹரன்

  அப்படி சொல்ல முடியாது. காரனம் இது ஒரு திட்டமிடாத அவசரதனமான முட்டாள்தனமான தாக்குதல்தான். தற்கொலையாளி மிகபெரிய பலம் வாய்ந்த ஆயுதம். அதை மிககவும் பயனுள்ளதாக பிரயோசனபடுத்தினால் தான் அந்த வீரனுக்கும் பெருமை தலமைக்கும் திறமை. ஒரு கொரிலா தாக்குதல் என்பது எதிரி எதிர்பாராத நேரத்தில் எதிர்பாரா விதமாக தாக்குதல் (தவறாயின் மன்னிக்கவும் தெரிந்தவர்கள்) ஆனால் இன்று ராணுவம் மட்டுமல்ல அரசின் முப்படை; பொது மக்கள் வன்னியில் இருந்து கொழும்பு வரை; சர்வதேசம்; குறிப்பாக இந்திய புலனாய்வு இத்தனையும் அண்னாந்து பார்த்த வண்ணமே இருக்கிறார்கள் எப்படா புலியின் விமானம் வருவதேன. இது அனைவர்க்கும் தெரியும் ஆக புலிக்கு இந்த சின்ன விடயம்கூட புரியாமல் ஒரு மதிப்பீடில்லாத வீரனை அழித்தது சரியானதா?

  Reply
 • tamilspeek
  tamilspeek

  குலன் கெகலிய ரம்புக்வெலவின் இறுதி அறிக்கையை வாசியுங்கோ, தாக்குதல் சரியாக நடந்திருந்தால் என்னவாயிருக்கும் என்பதை மெல்ல கசியவிட்டிருக்கிறார்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  /குலன் கெகலிய ரம்புக்வெலவின் இறுதி அறிக்கையை வாசியுங்கோஇ தாக்குதல் சரியாக நடந்திருந்தால் என்னவாயிருக்கும் என்பதை மெல்ல கசியவிட்டிருக்கிறார்./- tamilspeek

  அவரின் அறிக்கையின் முக்கிய காரணத்தை நீங்கள் இன்னும் முற்றாக உணரவில்லை என்று தெரிகின்றது. இப்படியான அறிக்கைகளினால் வெளிநாடுகளின் அனுதாபத்தைப் பெற்று மேலும் மேலும் அவர்களின் ஆதரவோடு எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் யுத்தத்தை தொடர்ந்து நடத்தலாம் என்பது அவருக்குத் தெரியுது. ஆனால் உங்களுக்கு??

  Reply
 • palli
  palli

  பல்லி முன்பே சொல்லிவிட்டது. சீப்பு கையில் இருக்கும் போது மொட்டை வழித்து விட்டு. மொட்டை விழுந்த பின் சீப்பை தேடுவது போல்தான். தமிழ்ஸ்பீக் தனது பின்னோட்டததை கசிய விட்டுளார்.

  Reply
 • அருட்செல்வன் வி
  அருட்செல்வன் வி

  இலங்கைக்கு மாத்திரமின்றி இந்த பிராந்தியத்திற்கே பாரிய அச்சுறுத்தலாக விளங்கிய புலிகளின் விமான பலத்தை எமது பாதுகாப்புப் படையினர் தற்பொழுது முழுமையாக இல்லாதொழித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

  எமது படை நடவடிக்கைகள் மூலம் படுதோல்வியடைந்த பிரபாகரன் கடைசிப் பிரயத்தனமாகப் பயன்படுத்திய இலகுரக இரு விமானங்களையும் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியமை விமானப் படையினருக்கு கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

  கொழும்பில் தாக்குதல் நடத்தும் பொருட்டு வந்த புலிகளின் இரு இலகுரக விமானங்களும் சுட்டு வீழ்த்தப் பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பில் நடைபெற்றது. கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் எமது நாட்டிற்கும்: தேசிய பாதுகாப்புக்கும் இந்த பிராந்தியத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக புலிகளின் வான் நடவடிக்கைகள் விளங்கியது.

  பல்வேறு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த புலிகளை இராணுவ நடவ டிக்கைகள் மூலம் குறுகிய பிரதேசத்திற்குள் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முடக்கினர். நீர்மூழ்கிகள், பாரிய குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், நீருக்கடியில் ஓடக்கூடிய ஸ்கூட்டர்கள் உட்பட பாரிய முகாம்களையும் நாளுக்கு நாள் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் புலிகளின் முக்கிய வளங்களை நிர்மூலமாக்கிய அதேசமயம் அவர்களின் சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் இல்லாதொழித்துள்ளன.

  புலிகளின் இலகு ரக விமானங்கள் தொடர்பாக பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட போதிலும் அதனை இல்லாதொழிப்பது என்பது எமக்கு பாரிய சவாலாக இருக்கவில்லை. ஏனெனில் புலிகளின் எந்தவொரு சவால்களையும் எதிர் கொள்ள தயாரான நிலையில் எமது பாதுகாப்புப்படையினரும், படைத் தளபதிகளும் இருந்த அதேசமயம் அதற்குத் தேவையான ஆலோசனைகளை ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் வழங்கி வந்தனர்.

  பாதுகாப்புப் படையினரின் தரைவழி நடவடிக்கைகளை திசை திருப்பும் வகையிலும், பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் நோக்குடனுமே புலிகள் தமது இலகு ரக விமானங்களை அனுப்பிவைத்தனர். இதுவரை எட்டுத் தடவைகள் புலிகளின் இலகு ரக விமானங்கள் வந்து சென்றுள்ளன. இதனை உதாரணம் காட்டி பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இன்று அவையனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன் உரிய பதிலடி வழங்கப்பட்டுள்ளது.

  எமது முக்கிய வளங்களும், கிபீர், மிக் போன்ற பல்வேறு தாக்குதல் விமானங்கள், முப்படைகளின் தலைமையகங்கள் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருப்பதால் கொழும்பே அவர்களின் பிரதான இலக்காக விளங்கியது.

  சகல வழிகளையும் பயன்படுத்திய புலிகள் தற்பொழுது படுதோல்வியடைந்த நிலையில் இந்த இலகுரக விமானங்களை பயன்படுத்தி இறுதியாக தற்கொலைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளமை புலிகளின் கடைசி கட்டத்தை புலப்படுத்துவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். உலகத்திலேயே இலகுரக விமான பலத்தைக் கொண்ட ஒரேயொரு அமைப்பாக புலிகள் விளங்குகின்றனர்.

  இது போன்ற ஒரு அமைப்பை இன்று எமது பாதுகாப்புப் படையினர் தோற்கடித்துள்ளனர். உலகத்திலுள்ள ஏனைய போராட்ட அமைப்புகளுக்கும் புலிகளின் விமான செயற்பாடுகள் முன்மாதிரியாக அமையலாம் இன்று கூறப்பட்டவர்களுக்கு உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது.

  தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார மற்றும் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Reply
 • Rumesh
  Rumesh

  Really, it was a desperate attempt. If they could hide those flight, It would be a puzzle to SLA marching in Wanni. They could save life of two pilots.

  Reply
 • Kullan
  Kullan

  தமிழ்ஸ்பீக்! ரம்புக்கல சொல்வதை உலகில் யாரும் நம்புவதில்லை. சுருக்கமாக நான் இதை விளங்கப்படுத்துகிறேன். 110 கிலோ வெடிபொருளால் ஒரு பாரிய முகாமை தாக்கி முற்றாக அழிக்க இயலாது. அப்படி இருக்குமானால் அது ஒரு பெரிய முகாமாக இருக்காது. புலி இணையத்தளங்களினது கூற்றுப்படி முன்னைய விமானத்தள தாக்குதலில் 800கிலோ குண்டு போடப்பட்டது. சேதம் எங்வளவு இருந்தது? ஒருகட்டிடத்தின் ஒரு பகுதிமட்டுமே. சரி 110கிலோ வெடிமருந்துடன் விழுந்த விமானம் ஏன் வெடித்துச் சிதறவில்லை? எங்கே வெடிமருநதுகள்? படத்தில் 3 கிரனைட்டுகள்தான் காட்டப்படுகிறது. எங்கே வெடிக்காத 110கிலோ மருந்து?

  இதை அரசியலாக்கும் சிங்களவன் திறமையானவன். இரட்டைக் கோபுரம் போன்ற பெரும் தாக்குதலையே முறியடித்து விட்டோம் என்பது மட்டுமல்ல. புலிகள் மிக ஆபத்தானவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். இன்னும் தாறதுகளைக் கெதியாத்தாங்கோ என்பதின் சமிச்ஞையே இது. தலை இந்த இரண்டு பொடியளையும் போடுகிறது என்று தீர்மானித்து விட்டார். அத்தோடை றடார் அது இது என்று வந்தும் சேர்ந்து விட்டது. இனி இந்த விமானத்தை வைத்துப் பிரயோசனம் இல்லை ஆமியும் பங்கரை நெருங்கிட்டான். எதோ செய்ய வேணும், என்னவோ செய்ய வேணும் என்பதற்காக தலை இதைச் செய்திருக்கிறர். போனது இரண்டும் தலையின் பிள்ளைகள் இல்லைத்தானே. என்கருத்துப்படி இந்த இரண்டு தாக்குதலின் குறிகள் சரியாக இருந்தாலும் பயன்படுத்திய விதமும் செயற்பாடுகளும் பிளையானவை. காரணம் ……………………………. இந்த மாதிரியான விமானம் ஐரோப்பிய நாடுகளில் நாம் பொழுதுபோக்குக்காக கழகங்களில் பறப்போம். இதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு 70-100 ஈரோவாகும்.

  Reply