டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இந்திய அணி துவக்கத்தில் சற்று தடுமாறியது. விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் நிதானமாக ஆடினர். ரிஷப் பண்ட் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 57 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை சேர்த்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம், மொகமது ரிஸ்வான் இறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இருவரும் அரை சதமடித்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.