புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய படகு கண்டுபிடிப்பு

ltte-ship.jpgபுதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து புலிகளின் மிகப்பெரிய படகு மற்றும் சித்திரவதை முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  ராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்புக்கு வடமேற்கே உள்ள தேவபுரம் பிரதேசத்திலிருந்து புலிகளின் மிகப் பெரியபடகையும், புதுக்குடியிருப்புக்கு மேற்கு பகுதியிலிருந்து சித்திரவதை முகாமையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினரால் இதுவரை கைப்பற்றப்பட்ட புலிகளின் படகுகளில் இதுவே மிகப்பெரியதாகும். இந்தப் படகின் இயந்திரமும், ஏனைய உபகரணங்களும் அகற்றப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். 60 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட இந்த படகை புலிகள் இழுத்துச் செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி பயனளிக்காத நிலையில் படையினரின் பிரவேசத்தை அடுத்து கைவிட்ட நிலையில் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதுக்குடியிருப்புக்கு மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் சித்திரவதை முகாம் ஒன்றையும் இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர். இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த பல சித்திரவதை கூடங்களும் இங்கு அமைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சபேந்திர சில்வா தலைமையிலான படையினர் இந்த முகாமைக் கைப்பற்றியுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • puvanam
    puvanam

    புலிகளின் சித்திரவதை முகாம்களில் இருந்த கைதிகளுக்கு என்ன நடந்தது?

    Reply
  • palli
    palli

    இருந்த புலிகளுக்கே என்னாச்சு என பட்டிமன்றம் நடக்குதப்பா??

    Reply
  • yko
    yko

    இது என்ன கேள்வி புவனம்? புலிகள் பாதுகாப்பாக அவர்களை புதைத்து வைத்துள்ளார்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வழக்கமாக எது நடக்குமோ அதுவே நடந்திருக்கும். கடுஊழீய உழைப்பு உதாரணம் பங்கர்வெட்டுதல் தமிழ்ஈழத் துரோகிபட்டம் இறுதியில் மரணிப்பு.

    Reply
  • watch
    watch

    கைதிகளுக்கு என்ன நடந்தது என கரிசனையாக இருக்கு. அனுபவமோ?

    Reply
  • santhanam
    santhanam

    கடைசியாக வன்னியில் இருந்து வந்த தகவலின் படி உணவு கையிருப்பும் முடிவடைவதாகவும் புலிகளின் பெயர் பட்டியலிற்கு மட்டும் வழங்கபடுவதாகவும் மற்றவர்கள் பட்டினியை எதிர்நோக்குவதாகவும். இது எப்படி இருக்கு பல்லி இது தான் அன்று தொடக்கம் இன்று வரை புலிகளின் தாகம் புலிகளிற்கேு

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இராணுவம் கண்டு பிடித்த புலிகளின் நவீன வைத்தியசாலையையும் பார்த்திருப்பீர்கள் தானே. வன்னி மக்களுக்கு கஞ்சி ஊத்துகின்றோமென்று காசு சேர்த்த புனர்வாழ்வுக்கழகம் கூட அதைப் புலிகளுக்குத் தான் தாரை வார்த்துள்ளார்கள் என்பதும் அங்கு ஆதாரத்தடன் பிடிபட்டுள்ளது. வன்னி மக்களுக்கு மருந்தில்லை மருந்தில்லை என்று கோசமெழுப்பி வந்த மருந்துகள் அனைத்தும் அங்கு பண்டல் பண்டலாகக் குவிந்து கிடக்கின்றன. அப்போ புலிகள் யாரின் வாழ்விற்காக போராடினார்கள் என்பதை எனியாவது உந்தப் புலிக்கோசக்காரர்கள் புரிந்து கொள்ளுவினமோ???

    Reply