சிவனொளிபாதமலை யாத்திரையின் போது ஹட்டன் வீதியூடாக போதைப் பொருள் கடத்திய 18 இளைஞர்களை ஹட்டன் பொலிஸார் கடந்த 08 ஆம் திகதி கைது செய்தனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 18 இளைஞர்கள், கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கு ஹட்டன் பொலிஸ் நாய் பிரிவின் அதிகாரிகள் ஸ்டூவர்ட் நாயின் உதவியையும் நாடியுள்ளனர்.
சந்தேக நபர்கள் 20 மற்றும் 30 வயதுடைய அனுராதபுரம், பாணந்துறை, கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.