பிரியந்த குமாரவின் கொலையை நியாயப்படுத்தியவருக்கு தண்டனையை அறிவித்தது பாக்.நீதிமன்றம் !

பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் கொலையை நியாயப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவேற்றம் செய்த நபருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றில் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலேயே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, 10000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் THE NATION இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அன்டான் என்ற குற்றவாளிக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட மேலும் 34 பேரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *