இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி கண்டனம்

obama.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் முக்கிய நிலையமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • palli
    palli

    ஆண்டவா வன்னி மக்களும் ஏதும் விளையாட்டு வீரர்களாக இருந்திருக்க கூடாதா?? சர்வதேசம் திரும்பி பார்க்க.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    பல்லி- வன்னிலையும் கிரிக்கட்தானே நடக்குது. இராணுவம் எறிய மக்கள் பிடிக்கினம். விக்கட்டுக்கு பின்னாலை புலியள். புலியளுக்கு பவுன்றியோ சிக்சரோ பிரச்சனை இல்லை. தாங்கள் பாதுகாப்பாக இருக்க விளையாட்டு நடந்தால் போதும். ஒவ்வோரு மச்சுக்கும் காசுதானே. நல்ல உழைப்பும் தானே

    Reply
  • palli
    palli

    உன்மைதான். ஆனால் நடுவர்(மக்கள்)மீது அல்லவா பந்துகளை வீசுகிறார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி பந்தென்னவோ பிளேயரை நோக்கித் தான் வீசப்படுகின்றது. பந்து தன்னை நோக்கி வருவதைப் பார்த்த பிளேயர் குனிந்து கொள்ள அது பிளேயருக்கு பின்னால் நின்ற நடுவரைத் தாக்குகின்றது. இதில் யாரைக் குற்றம் சொல்வது ???

    Reply
  • accu
    accu

    பல்லி இது இலங்கை அணியினர் மேல் நடந்த தாக்குதல் என்பதால் முக்கியத்துவம் பெறவில்லை. பாக்கிஸ்தானில் நடைபெற்ற தாக்குதல் என்பதாலேயே இந்தக் கவனம் அமெரிக்காவுக்கு.

    Reply
  • palli
    palli

    பார்த்திபன் நடுவர் நிக்க வேண்டிய இடத்தில்தானே நிற்க்கிறார். இவர் பந்தை தவறாக தன் மீது எறிவாரென நினைத்து நிற்கும் இடத்தை மாறலாமா?? ஆனாலும் பந்து வீச்சாளர் ரெம்பதான் மோசம்.
    இதையும் கவனிக்கவும். என்னும் ஓட்டம் தான் எடுக்கவில்லை ஆனால் விக்கட்டுகள் என்னும் இழக்கவில்லைதானே. மிக திறைமையான வீச்சாளர் பந்துகள் கூட நடுவர் மீதுதானே விழுகிறது.

    Reply