புலிகளின் 2100 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரு விமானக் குண்டுகள் படையினரால் மீட்பு

bobobo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட 2100 கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரு விமானக் குண்டுகளை இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த இரு குண்டுகளையும் விமானம் மூலம் கொண்டு வந்து புறக்கோட்டைப் பிரதேசத்தில் போட்டிருந்தால் அந்தப் பிரதேசம் முற்றாக அழிந்திருக்குமெனவும் அந்தளவுக்கு இந்தக் குண்டுகள் சக்திமிக்கவையாகக் காணப்பட்டதாகவும் இராணுவத் தரப்புத் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

7 Comments

 • Kullan
  Kullan

  இது உண்மையிலேயே மிக மிக வேடிக்கையான விடயம். இந்தக்குண்டுகளை எந்த விமானத்தில் புலிகள் போட இருந்தார்களாம்? அக்குண்டுகளின் உயரத்தையும் பருமனையும் பாருங்கள். ஏற்கனவே விழுந்த விமானத்தில் வைப்பதற்கே இடம்போதாது. அப்படி வைத்தாலும் மோட்டரைக் களட்டி வைத்துவிட்டு புஸ்பகவிமானத்திலா கொண்டு போய் போடுவது குண்டின் அடியைப்பார்த்தால் இது ஏவப்படுவதே தவிர போடப்படுவதில்லை. இதன் உயரம் குறைந்தது ஒன்றரை மனித உயரம் பருமனும் அப்படியே. புலிகள் பலமானவர்கள் ஆபத்தானவர்கள் இவர்களை நாம் வெல்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்தவே இது காட்டப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் புலிகளிடம் இதைவிடப்பெரிய விமானம் உள்ளது என்பது தெளிவு. இதை முக்கியமாக ஆய்வுகளுக்கு உட்படுத்தாது காட்சிக்கு வைத்தது வேடிக்கையானது. இதைக் கொண்டுபோக சிறிய கர்க்குலஸ் போன்ற கரியர் அல்லவோ தேவை.

  Reply
 • palli
  palli

  குலன் புலிகள் விமானம் 100 கிலோவுக்கு மேல் பாரம் ஏற்றமுடியாததாம். இறுதியாக போன புலியின் விமானத்தில் 122 கிலோ கொண்டு போனார்களாம். அதனால்தான் அந்த விமானங்கள் விழுந்ததாக வரலாறு சொல்லுகிறது (தெரியாவிட்டால் வரலாறு சேர்க்கவேண்டும்).
  இது அரசு விமானத்தில் இருந்து தமிழர் தலைமீது போடும் கொண்டை. வாகனத்தில் ஏற்றிவந்து சர்வதேசத்துக்கு வேப்பிலை அடிக்கிறார்கள். இதுக்குதான் A9வீதி பாவனைக்கு வந்ததோ.

  Reply
 • செல்லாச்சி
  செல்லாச்சி

  பிடிபட்ட குண்டுகள் ஏவுவதற்கோ அல்லது போடுவதற்கோ எண்டு ஆமிக்கும் தெரியாமலிருக்கலாம்தானே? அவர்கள் என்ன வேறு நாடுகளோடை போருக்குப் போன ஆட்களோ அன்றி எங்காலும் எல்லைச் சண்டைக்குப் போன ஆட்களோ? வகைகளை விளங்கிக் கொள்ள.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பல்லி நீங்கள் சொன்னதில் ஒரு திருத்தம். நீங்கள் சொல்லியவாறு 100 கிலோவிற்குப் பதிலாக 122 கிலோ சுமந்து வந்ததால்த் தான் விமானம் விழுந்தது என்றால் பறக்க ஆரம்பித்த இடத்திலேயே அல்லவா விழுந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட 260 கிலோமீற்றர் பறந்து வந்தா விழும். அவ்விமானம் 122 கிலோ வரை சுமக்கக் கூடியதாம். ஆனால் தானியங்கி பீரங்கிகளிலிருந்து பறந்த குண்டுகள் விமானத்தை துழைத்து உட்சென்றதால் மேலதிக நிறை கூடியே விமானம் விழுந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத விமானப்படை அதிகாரியொருவர் எனக்குத் தெரிவித்தார்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  சூரியதேவன் சிட்டுகுருவி விமானத்தை நம்பியா ஏழுவிமான ஓடுபாதைகளை திறந்து வைத்திருந்தார்? தென்ஆபிரிக்கா போன்ற நாட்டில் வேறுயாரும் பேரில் பதிவு செய்து காலநேரம் சரியாக இருந்திருந்தால் வேலையை குடுத்திருப்பார். இந்த கிறிமினல் மூளையை யாரும் சொல்லிக்குடுக்கத் தேவையில்லை வேலுப்பிள்ளைக்கு.

  சுனாமிநிதி எழுவது கோடி அரசாங்கத்திற்கு. அதே பெறுமதியில் இரண்டு பீரங்கி அதுவும் அரசாங்கத்திற்கு ஒருகொலைக்கு அறுபத்திமூன்று லட்சம் பேரம் பேசப்பட்டதாக செய்தி இவ்வளவும் குறைந்தநாட்களுக்குள் வந்த நம்பககூடிய செய்திகள்.
  இருபத்தியாறு வருடங்களிலும் எவ்வளவு பணம் தமிழ்மக்களுக்கு உதவாமல் தாண்டி போயிருக்கும். இந்த நேரத்தில் தான் பசியால் நச்சு இலைகுழை திண்டு மாண்ட செய்தியும் வந்திருக்கிறது. வராத செய்தி எத்தனையோ? பெரும்பான்மையான புலம்பெயர் தமிழரை நினைத்து மார்பில் அடித்து புலம்புவதை விட வேறு வழி எமக்கு என்ன இருக்கிறது ?

  Reply
 • lio
  lio

  லண்டனில் கிட்டத்தட்ட 3 அல்லது 4 வருடங்கள் முன்பாக காதர் மாஸ்டரின் புத்தக வெளியீடொன்று நடைபெற்றது. இதில் செல்வம் அடைக்கலநாதனும் பேசினார். அவர் சொன்னார் தவைரின் கையில் ஒரு பட்டன் உண்டு அதை அமத்தினாரெண்டால் போதும் கொழும்பில் குண்டு வந்து விழுமென்று. நானும் இந்தக் கூட்டத்திற்குப் போயிருந்தேன். இந்த குண்டைப் பார்த்ததும் நான் நினைக்கிறேன் செல்வம் இதனை மனதில் வைத்துத்தான் சொல்லியிருக்கிறார் போலும். இப்படியொரு தயாரிப்பு நடைபெறுகிறது அல்லது நடைபெறவுள்ளது என்பதை செல்வத்துக்குத் தெரியும். இது முற்றுப்பெறாத நிலையில் முடிவுக்கு வந்துவிட்டதென நினைக்கிறேன். புலிகளின் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் உலோக வேலைகள் செய்யும் இடங்களைப் பார்க்கையில் இது அவர்களின் தயாரிப்பாக இருத்தலுக்குரிய சாத்தியமுண்டு என்பது எனது கருத்து

  Reply
 • palli
  palli

  //இதில் செல்வம் அடைக்கலநாதனும் பேசினார். அவர் சொன்னார் தவைரின் கையில் ஒரு பட்டன் உண்டு அதை அமத்தினாரெண்டால் போதும் கொழும்பில் குண்டு வந்து விழுமென்று. நானும் இந்தக் கூட்டத்திற்குப் போயிருந்தேன்//

  தம்பி லியோ எல்லம் உன்மயானால் கூட அதை அமத்துவதுக்கு அவரின் தலை பட்டனுக்கு வெகு தூரத்தில் நிறப்பதாக அதே அடைக்கலநாதன் இப்போது ஏதாவது ஒரு எழுச்சி கூட்டத்தில் பேசிக்கொண்டு திரிவார்.

  Reply