“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளில் அரசியல் தலையீடு எதுவுமில்லை.” – நீதி அமைச்சர் அலி சப்ரி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள், எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

தாக்குதல் நடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்களை கவனத்தில் எடுத்திருந்தால், இந்தத் தாக்குதலை தடுத்திருக்கலாம். தற்போது இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதேநேரம் தாக்குதல் தொடர்பாக ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்வது விடுதலை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானிக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Suresh
    Suresh

    ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால இருக்குற அரசியல் போல ஈனமான அரசியல் வேற எதுவுமில்லை.

    Reply
  • Vaaman
    Vaaman

    ஈஸ்ரர் குண்டுவெடிப்புப் பற்றி வெளிவந்த எப்ஐஆர் என்ற படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    Reply
  • Vaaman
    Vaaman

    சுரேஸ் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தாக்குதல் நடந்த பின் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ரணிலை சர்வதேச ஊடகம் ஒன்று கேள்வி கேட்ட போது அவர் ஒரு நக்கல் சிரிப்புடன் எந்தவிதமான கவலையும் இன்றி பொறுப்பில்லாமல் பதிலளிக்கின்றார். அதிகாரிகள் கூட பொறுப்புடன் பதிலளிக்கவில்லை.

    Reply
  • Tharan
    Tharan