ரி.எம்.வி.பி. யின் ஆயுதங்களை கைவிடுவது மிகச் சிறந்த செயல் – ஆனந்தசங்கரி பாராட்டு

anada_sangari.jpgபல ஆண்டுகள் தம்வசம் இருந்த ஆயுதங்களை கைவிடுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது என அதன் தலைவர் வீ.ஆனந்தசஙகரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய ஓரு முடிவை எடுக்க வழி வகுத்த கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கே இப்பெருமை உரியதாகும். இம்முடிவு கிழக்கு மாகாண மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை நிச்சயமாகக் கொடுக்கும.; உண்மையில் ரி.எம்.வி.பி. யினருக்கு புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தமையால் அன்று அவர்கள் தம் ஆயுதங்களை கைவிட்டிருக்க முடியாது. எனினும் அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடியது அவர்களுடன் இணைந்து செயற்பட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்பதும் உண்மையே.  இப்போதுதான் கிழக்கிழங்கையில் ஜனநாயகம் உதித்துள்ளது. 

இக்கட்சி தனது பெயரில் உள்ள புலிகள் என்ற சொல்லை கைவிடுவதோடு தம்மிடம் சிறுவர்கள் போராளியாக யாரேனும் இருப்பின் அவர்களையும் உடன் விடுவிக்க வேண்டும்.  அவர்கள் இனி மக்களுடன் கலந்துரையாடி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்கி சகோதரத்துவத்தையும் வளர்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள ; சகல மக்களும் சகல உரிமைகளையும் அனுபவிக்கின்றார்களா என்பதை கவனிப்பதோடு, வேறு எவரேனும் அவர்களின் உரிமைகளில் தலையிடாது பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.  வேறு எந்த குழுக்களும் ஆயுதங்களுடன் இருப்பின் அவர்களை வற்புறுத்தி ஆயுதங்களை கைவிடவைப்பதோடு,  தேவை ஏற்படின் அவர்கள் அரச பாதுகாப்பை நாடவைக்கவும் வேண்டும் என அவர் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    ஒருவிதமான ஆபத்து நீங்கி விட்டது என்னும் மகிழ்ச்சியா.. ? அல்லது இவரை பார்த்து அனைவரும் இரும்புகளை கை விடுவார்கள் என்னும் ஏக்கமா?? இரண்டுமே உங்கள் பகல் கனவுதான். எழுந்து முகந்தை அலம்பி விட்டு பின்பு தூங்குஙகள். கெட்ட கனவு வராது.

    Reply