‘மியா கணக்கில் வீக்’ முத்தின் ஆய்வு! : சேனன்

MIAMuttukrishna Sarvananthanமுத்துகிருஸ்ணா சர்வானந்தன் என்ற ‘பொருளாதார நிபுணர்’ சென்ற வருடம் லண்டன் வந்திருந்த பொழுது வித்துவான் அவதாரத்தில் உலக – இலங்கை பொருளாதாரம் பற்றி எமக்கெல்லாம் மிருதங்கம் வாசித்துபோன கதை பலருக்கும் தெரியும். உலக பொருளாதாரம் சரியாது. மேற்குலக அதிகாரம் எல்லாத்தையும் சிம்பிளா வெண்டு போடும். இதனால் இலங்கைக்கு பாதிப்புவராது என்று அவர் பினாத்திக் கொண்டிருந்த பொழுது தடுத்தாண்ட கேள்விகளை நோக்கி நெற்றிக்கண் திறக்கப்பட்டு சுட்டெரிக்கப்பட்டதும் எமக்கு தெரியும்.

இந்த முட்டாள்தனத்தை சுட்டிக்காட்ட வெளிக்கிட்ட த.ஜெயபாலனுக்கு படிப்பறிவு கிடையாது என்ற கண்டு பிடிப்பை செய்து இவர்கள் யாழ்ப்பான -வெள்ளாள மத்தியதர வர்க்க மேலாண்மையை நிலைநாட்ட முயன்றதும் எமக்குத் தெரியும். ‘பொருளாதார சரிவு தொடர்ந்தும் நீடிக்காது’ என்ற அடிப்படையிலேயே வித்துவான் விளாசினார் என்று எமக்கு விளக்கங்கள் தரப்பட்டது. இதுகளை பொருளாதார விரிவுரையாளர் புதியவன் ‘மென்மையாக’ கண்டித்திருந்ததும் அறிவோம். அவரது பழைய கதைகள் கிடக்க. மீண்டும்  வித்துவான் மிருதங்கம் எடுத்துள்ள கதைக்கு வருவோம்.

தெற்கில் சனம் செக்பொயின்றுகளுக்குள் சிக்கி விழுந்தெழம்பிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு ஜனநாயக சூரியன் மக்களின் முள்ளந்தண்டுகளை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வடக்கு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது. இதுகிடக்க, எங்கள் அன்பு வித்துவான் – பொருளாதார புலிக்கு பொங்கிக்கொண்டு வருகிறது பாருங்கள் கோபம்! கோபம்! இலங்கை ராணுவம், கருணா, பிள்ளையான், சங்கரி முதலானவர்கள் மேல் என்று அவசரப்பட்டு கதறிப்போய்  விடாதீர்கள். “பிள்ளையின்” கோபம் மியா என்ற இசை கலைஞர் மேல். மியா கணக்கு வழக்குகளில் பிழைவிட்டு கதைத்து விட்டதாகக் கோபம்.

முதல் அடி என்னவாக இருக்கும் என்பது நீங்கள் ஊகிக்கக்கூடியது. ஜெனொசைட் என்ற சொல்லை பாவிக்கக் கூடிய அளவுக்கு மியாவுக்கு படிப்பறிவு இல்லை என்பதே அந்த அடி. எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? என்று சந்தேகித்து கிழே படிக்க அடுத்த அடி விழுகிறது எங்கே எப்படி 3,00,000 தமிழர்கள் யுத்த பிரதேசத்துக்குள் மாட்டியுள்ளார்கள் என்று மியா கவனமாக எண்ணினார்? என்ற கெட்டிக்காரத்தனமான கேள்வி. 30,000 அல்ல 3,00,000 என்ற எண்ணிக்கையை எப்படி செய்தார் என்ற தொனியுடன் கேட்கப்படுகிறது கேள்வி. பின்பு தன் படிப்பறிவாள் வந்த கெட்டிக்காரத்தனத்தை கொட்டி பின்வருமாறு அவர் விளக்குகிறார்.

“2003 சுனாமிக்கு பின்பம் 2005 ஐ.நா.வுக்காக புலிகளின் கட்டுப்பாடு பகுதிகளில் வேலை செய்தவன் என்ற முறையிலும் யுத்தப் பிரதேசத்தில் 1,00,000 இருந்து 1,50,000 வரையிலான மக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதே என்னால் அடித்துக்கூற முடியும்.” அற்புதம் என்று கூரை அதிர நாம் சிலாகித்தோம். உலகம் முழுக்க ‘அகதி’யாக திரிவதால் மீயாதான் கற்பனை செய்த தாயகத்தில் நடப்பது பற்றி தெரியாதவர் என்றொரு அடிவேறு.

ஐயோ பாவம் மியா, அந்த பாடகி செய்த தவறென்ன? சனத்தொகை மற்றும் ராணுவத்தின் எண்ணிக்கை முதலான எண்களை அதிகப்படுத்தி கூறியதுதான் அவர்செய்த தவறு.

அந்த தவறை திருத்த நமது பொருளாதார புலிக்கு உரிமை உண்டு. உண்டே உண்டு ஐயா! 1,00,000ல் இருந்து 1,50,000 என்ற கணிப்பீட்டை கரெக்டா எப்படி மேதை கணிப்பிட்டார் என்ற விபரம் எமது மூளைக்கு எட்டவில்லை. தவிர இந்த நம்பர் விளையாட்டு உங்களுக்குத்தான் தேவை. நமக்கல்ல. உணர்ச்சிவசப்படும் கலைஞர்களுக்கு தேவையில்லை. பாதிக்கப்படும் மக்கள் மூன்று லட்சமாக இருந்தால் என்ன முப்பதினாயிரமாக இருந்தால் என்ன? உரத்து குரல் கொடுக்க ஒருத்தி முன்வருவது பிழையா? 70,000 மக்கள்தான் அகப்பட்டுள்ளனர் என்று இலங்கை அரசு கத்துகிறதே அது பற்றி ஏன் கோபம் வரவில்லை? மீயா செவ்வி வழங்கிய அதே காலப்பகுதியில் வெளியான இங்கிலாந்து கார்டியன் பத்திரிக்கையில் 4 1/2 லட்சம் மக்கள் அகப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை? இதுகள் பற்றி உங்கள் மண்ணாங்கட்டி கோபம் ஏன் மௌனம் கொண்டிருக்கிறது?

‘மியா கணக்கில் வீக்’ என்று கண்டுபிடித்து காட்ட இக்கட்டுரை எழுதியாதாக நம்ப முடியவில்லை? உங்கள் பிரச்சினை மியா புலி ஆதரவு தொனியில் பேசியதுதான். அதை நேரடியாக சொல்லி வெளிப்படையாக பேசாமல் குத்தி முறிகிறீர்கள்.

பின்பு ‘புலி புள்ள புடிக்குது’ என்ற பழைய பல்லவியை பாடி நெத்தியில் அடிக்கிறமாதிரி ஒரு கேள்வி கேட்கிறார் அவர். தமிழ் பிள்ளைகளை புலிகள் காவு கொள்வது ஜெனோசைட் இல்லையா என்ற அக்கேள்வி சபாஸ் சரியான கேள்வி என்று நிர்மலா குதிக்கலாம். ஆனால் எமது கழுத்துக்கு மேல் இருக்கும் மூளை சொந்தமாக சிந்திப்பதால் கோபம் கிளறுகிறது. இலங்கை ராணுவம் செய்வது ஜெனோசைட் கிடையாது என்று வாதிடும் நீர் புலி செய்வது ஜெனோசைட் இல்லையா என்று கிண்டல் அடிப்பது உமது உயர்வர்க்க மொக்கத்தனத்தை படம் போட்டு காட்டுகிறது. இன்றிருக்கும் சூழலில் இதைவிட கோரமான அயோக்கியத்தனத்தை கோத்தபாய ராஜபக்சேவிடம் தான் நாங்கள் பார்க்க முடியும். அடுத்த “சிங்கள ரத்தினா”  உங்களுக்கு தான் முத்து!

இந்த போக்கிரி பார்வையுடன் அவர் சொல்கிறார் இரண்டு பக்கமும் மக்களை கொன்று கொண்டிருப்பது தமக்கு ‘concern’ ஆக இருக்கிறதாம். ஐயா உங்களைப் போல் மீயாவுக்கு ‘concern’ வரவில்லை. ஒரு கலைஞராக அவருக்கு கொதிப்பு வந்திருக்கிறது. நான் ஒரு அகதி என்று நெஞ்சை நிமிர்த்தி கூறும் ஒரு கலைஞரை ஒரு அகதியான நான் பெருமையுடன் பார்க்கிறேன்.

புலிகள் முஸ்லீம்களை கொல்வது தெரியாதா? சிங்கள கிராமங்களில் வேட்டையாடியது தெரியாதா? மூஸ்லீம்கள் வேட்டையாடப்பட்டது தெரியாதா? என்று வரிசை படுத்திய உமது கேள்விகள் பலமானவை. கேட்கப்பட வேண்டிய கேள்விகளே. ஆனால் இந்த கேள்விகளை நாம் கேட்பதற்கும் நீர் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நீர் அதிகாரம் சார்ந்து கேட்கிறீர் நாம் மக்கள் சார்ந்து கேட்கிறோம்.

மக்கள் பிரதிநிதித்துவம் செய்ய உமக்கு யார் அதிகாரம் வழங்கியது என்று மீயாவை கேட்டு பீற்றும் உமக்கு மக்களை பற்றிப் பேச யார் அதிகாரம் வழங்கினார்கள்? லாபத்துக்கு மக்களை விற்கும் நீர் உயர் மட்டங்களில் குசுகுசுப்பதோடு நிறுத்திக்கொள்ளும். 84ல் அகதியாக போனவர் 25 வருடமாக இலங்கை வராதவர் மற்றும் அவர் இலங்கை தமிழரா என்பதே சந்தேகம் போன்ற அம்புகளை மியா நோக்கி எறியும் நீர் ஒரு கணம் சிந்தித்து பாரும்.

உமக்கு வெளி நாடுகளில் இருக்கும் நட்பு வட்டாரங்கள் எப்போது அகதியாகின? லண்டனில் உம்மை அழைத்துக் கூட்டம் போட்ட கோஸ்டிகள் எல்லாம் இப்ப தான் வன்னியில் இருந்து வந்தவை என்று நினைப்பா? குண்டு சத்தமென்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியுமா? யுத்தத்தில் வாழ்தல் தெரியுமா?

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் தமிழரை நோக்கி ஒரு அகதியான மியா நீட்டும் கரங்களை தட்டிவிட்டு உனக்கு தகுதி இல்லை என்று ராஜபக்ச கூரையில் நின்று கூவும் நீர் கொழும்பில் நிம்மதியாக வாழலாம். உம்மை அதிகாரம் காப்பாற்றும் உமது பணி அவர்களுக்கு தேவை. “நான் உயிர்தப்பியிருப்பது அதிர்ஷ்டவசமானது” போன்ற ஜோக்குகளை அடிக்காதயும்.

போக்குவரத்து விதிகள் ஒரு சொட்டுமற்ற சென்னை தெருக்களை அடிக்கடி கடக்கும் நான் உயிர் பிழைத்துக் கொண்டிருப்பது ஒரு அதிர்ஷ்டம் தான். அப்படியானதே உமதும்!

பாவம் மியா, நீர் ஒரு பொருளாதார புலி அல்லவா. மீயாவை விட்டுவிட்டு உம்மிட எடியுகேசனுக்கு ஏத்த மாதிரி ஒரு ஆள பிடிச்சி மோதும்.

Show More
Leave a Reply to பகீ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • பகீ
    பகீ

    இவருக்கு அடிப்படையாக இருப்பது வயித்தெரிச்சல். தனது மேல்மட்ட விலாசங்களைக்காட்ட தமிழன் இல்லையே. சிங்களவனுக்கு காட்ட வேண்டுமென்றால் தமிழனை நக்கல் அடித்தால் மட்டுமே முடியும் என்ற நிலை! இவ்வாறுதான் சமாதான காலத்தில் சிங்கள பத்திரிகயாளர்கள் வன்னியில் திருட்டு இல்லை, பிச்சைக்காரர்கள் இல்லை, வீதிக்கட்டுப்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன என எழுதிய போது அங்கு களவெடுக்க ஏதும் இல்லை அதுதான் திருட்டு இல்லை என ‘சோ’த்தனமாக சொன்னார்.

    இவர் ஜேர்மனி அரசு ஸ்ரீலங்காவுக்கான பொருளாதார உதவிகளைக் கட்டுப்படுத்தியபோது பி.பி.சி தமிழோசையில் ‘ஜேர்மனியின் உதவி நிறுத்தம் ஸ்ரீலங்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இன்று ஸ்ரீலங்காவுக்கு பெரும் உதவி சீனா, ஜப்பான் இல் இருந்து வருகிறது என்றார். பின்னர் ஓரிரு வாரங்களில் கொழும்பில் நடந்த ஆய்வரங்கொன்றில் இதே உதவி நிறுத்தம் ஸ்ரீலங்காவுக்கு சிக்கலைக்கொடுக்கும் என்று குத்துக்கரணம் அடித்தார். இதை அவர் தெரியாமல் செய்யவில்லை. தெரிந்தே செய்தார். அதாவது தமிழரே புலம்பெயர் நாடுகளில் உங்கள் அரசியல் வேலைப்பாடுகள் விழலுக்கிறைத்த நீர் , முயற்சி செய்யாதீர்கள் என முட்டுக்கட்டை போடுவது ஆகும்.

    அதேபோன்ற்தே இந்த ‘ஜெனசைட்’ விடயமும். சேனன் குறிப்பிட்டது போலவே நிர்மலாவும், அகிலன் கதிர்காமரும் இரு வாரங்களுக்கு முன்னர் நியூ நோர்க்கில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் ‘ஜெனசைட்’ சொற்பதம் ஸ்ரீலங்கா பிரச்சினையை தீர்க்க ‘அயராது உழைக்கும்’ தமக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக சொன்னார்கள். அப்போது பார்வையாளர் ஒருவர் யூதர்களின் அல்லது ருவண்டாவின் படுகொலைகளை முன்னரே சரியான பார்வையோடணுகியிருந்தால் ஹொலோகோஸ்ற் , ஜெனசைட் நடந்திருக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கும் என சொல்லியபோது பதில் ஏதுமில்ல்லை. அத்துடன் ஜெனசைட் வோச் அமைப்பு 2009 இல ஜெனசைட் நடைபெறும் அல்லது நடைபெற சாத்தியமுள்ள நாடுகளில் ஸ்ரீலங்காவையும் சேர்த்துள்ளது உலக மனித உரிமை அமைப்புகள் புலிகளைப்பற்றி கூறும் குற்ரச்சாட்டுகளை ‘பல்லவி’ பாடும் நிர்மலாவுக்கோ, அகிலனுக்கோ தெரியாமலிருக்க வாய்ப்பில்ல்லை. அகிலனும் நிர்மலாவும் நியூயோர்க் கருத்தரங்கில் நடந்து கொண்ட விதம் யாரோ ஒருவரின் பிளனோடு தான்வந்திருந்தார்கள்என எண்ண வைத்தது !

    Reply
  • BC
    BC

    புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை மாதிரி புலிகளின் ஆஸ்தான பாடகி மீயாவா?

    Reply
  • accu
    accu

    //பின்பு ‘புலி புள்ள புடிக்குது’ என்ற பழைய பல்லவியை பாடி//
    சேனன் புலி பிள்ளை பிடிப்பது கண்டுகொள்ளத் தேவை இல்லாத பழைய பல்லவியா? வன்னியில் புதிதாக எத்தனை குழந்தைகள் பிடிக்கப்பட்டு முறையான பயிற்சி இல்லாமல் போர் முனையில் தினமும் காவு கொடுக்கப்படுகிறார்கள் தெரியாதா? மாயாவை முத்து விமர்சித்து அரசுக்கு முண்டு கொடுக்க முத்தை நீங்கள் விமர்சிப்பதாய் எண்ணி புலிக்கு முண்டு கொடுத்து விடாதீர்கள்.நன்றி.

    Reply
  • puthiyavan
    puthiyavan

    மாயா ஈவினிங் ஸ்ராண்டாற் என்ற பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் பொத என்னை அப்பன் கவுன்சில் பிளாற்றில் வளர்த்துப் போட்டான் என்று புலம்பினவ.பிறகு புலி போய் வழி வழி என்று வழிஞ்சு ஒரு மாதிரி அரசியல் பாடம் சொல்லிக் கொடுத்த பின் அப்பா ஒரு தியாகி என்று பேசத் தொடங்கியதில் வந்ததுதான் இந்த தமிழ் மக்கள் மீதான அனுதாபம். ஒரு பிரபல பாடகி என்ற முறையில் அவருக்கு ஊடக பலம் இருப்பதால் வன்னியில் இன்று இனவெறி அரசு மேற்கொள்ளும் அப்பட்டமான அன அழிப்பு நடவடிக்கையை துணிந்து கண்டித்திருக்கும் மாயாவின் செயல் பாராட்டத் தக்கது. இதிலை சர்வானந்த சுவாமிகளுக்கு ஏன் கோபம் பொத்திக்கொண்டு வந்தது என்பது தான் தெரியவில்லை. புலியிலை இருந்தவை மகிந்தவின் மகிமை பற்றி புகழ் பாடும் போது பாடகி தன் மனக் குமுறலை வெளிப்படுத்தியது எப்படித் தாங்கமுடியாது போனது ஜயாவுக்கு.

    யாழ்ப்பாண மக்கள் மூளை வன்னியிலை இருக்கிறவை அல்குல் என்று உடல்கூற்று பாடம் எடுக்கும் சுவாமிகள் சுப்பிமணிய சுவாமிக்கும் மன்மோகள் சிங்கனுக்கும் மகிந்த சசோதரர்களுக்கும் ஜநநாயயகப் போறத்தாருக்கும் வேணும் என்றால் உமது பொருளியல் வித்தையைக் காட்டும். எங்களிடம் வேண்டாம்.

    மாயா சென்னது பொய் என்றே வைத்துக் கொள்வோம். அங்கு மக்கள் தவிக்க வில்லையா? தினம் தினம் கொல்லப் படவில்லையா? ஒரு இன அழிப்பு நடக்கவில்லையா? சர்வானந்தா நீர் போய் வெள்ளாள யாழ் மேட்டுக்குடி தழில் கதைக்கும் கூட்டத்தோடு சேர்ந்து உமது பாடத்தை நடாத்தும்.

    உம்ட கணக்கு எமக்கு புரியவும் மாட்டுது. உன்றும் புடுங்கவும் மாட்டுது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகளை தவிர இன்று நாடு பிரிவதை இலங்கையில் யாரும் விரும்பவில்லை. ஏன் இந்தியாவும் அடியோடை மறுக்கிறது. இலங்கை இரண்டாக பிரிவதை இந்திய தேசிய முதாலாளித்துவம் என்ன விலைகொடுத்தாவது தடுத்து நிறுத்தும்.
    அது அப்படியே இருக்க… சேனன் போன்றவர்கள் சர்வதேசியவாதிகள் என்ன நினைக்கிறார்கள். சுயநிர்ணயஉரிமையை ஒருஇனம் பெறுமானால் இல்லை போராடிப் பெறுமானால் வர்கப்போராட்டத்திற்கு ஆரோக்கியமான வழியையை விட்டுகொடுக்கும் என்பதே இவர்களது கோட்பாடுடாகும். இது 1910-1917 காலப்பகுதிகளுக்கு சரியானதாக இருக்கலாம் ஆனால் இன்று? இரண்டாவது இன்னும் சர்வதேசியரீதியாக அல்லது ஆசிய உபகண்டத்திலேயோ முழுமையான வர்க்கப் போராட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு காலம் வந்துவிட்டதா? புலிகளை பாதுகாப்பதற்கோ ஆதரவு கொடுப்பதற்கோ அதற்காக மூச்சியா? புலிகள். எல்லா முற்போக்காளர்களையும் கடிச்சு தின்று ஏப்பம் விட்டவர்கள் அல்லவா புலிகளுடையது. கிறிமினல் குற்றவாளிகள் அல்லவா இவர்கள்.

    Reply
  • Lanka Expat
    Lanka Expat

    Wow M.I.A forgot to mention all the ransoms that LTTE has gotten from tamil civilians through blackmailing and threats..
    It was the LTTE who started this bloody war to begin with.It’s really sad to see what this country had come to as a result of it.Now she is going around promoting the terrorist group.

    Tracy Chapman was a featured performer on the worldwide Amnesty International Human Rights(Tracy Chapman’s liberal politics proved enormously influential on America and rest of the world),but M.I.A could not even convince all Tamils.

    I am quite sure that you would not go to Israel and defend hamas, or be in the US and defend Al Qaida. MIA would like us believe that she fled the country all by her self and swam all the way to Britain, she says she wants to feel the pain, why is she doing this in the relative comfort of the developed world? She has clearly not suffered the way every citizen in Sri Lanka is suffering right now. The war is torture on EVERYONE.

    Reply
  • maalu
    maalu

    முத்துக் கிருஷ்ணன் ஏன் இப்பிடி சொல்லுறார் என்று மண்டையைப் போட்டு உடைக்காதீங்க அண்ணைமாரே. இலங்கையில ‘ஜெனோசைட்’ நடக்குது எண்டு சொல்லுற சர்வதேசப் புகழ் பெற்றவர் நம்ம மியா தானுங்கோ. முத்துக் கிருஷ்ணனும் ஜனநாயகப் பெருமக்களும் ‘ஜெனோசைட்’ என்ற சொல்லையே வெறுக்கினமாம்.

    ஏன் எண்டு தெரியுமோ?

    இன்னும் கொஞ்ச நாளில அண்ணன் மகிந்த சிங்கப்பூரிலயோ மலேசியாவிலயோ புலம்பெயர் ஜன்நாயக போராட்ட சக்திகளை எல்லாம் திரட்டி பெரீயதொரு கூட்டம் போடப்போறாராம். அதுக்கு நம்ம ஜனநாயக அக்கா தலமை தாங்கப் போறா. அதில தமிழருக்கு தீர்வு கொடுக்க போறம் எண்டு மகிந்த அண்ணன் புருடா விடப் போறாரு. அதைக் கேக்கிறதுக்கு ஆக்கள் செட் பண்ணிட்டிருக்காரு. அதுல முத்து அண்ணனும் ஒருத்தர். ஒற்றையாட்சிக்குள்ளை தம்ழ் மக்களுக்கு எல்லாம் கிடைக்க பண்ணலாம் எண்டு புருடாக்காக இப்பவே ‘மியா’ வை வசைபாடத் தொடங்கிட்டார்.

    ஆரார் பங்குபற்ற போகினம் எண்ட லிஸ்ட் வெகுவிரைவில தேசத்தில வெளிவரும் அண்ணைமாரே.. வெளிவரும்..

    அதிகாரத்தைக் கைப்பற்றுவது நம் கனவல்லாவா தோழர்களே..! எத்தனையாண்டுக் கனவு இது.

    Reply
  • Tamil
    Tamil

    இன்னுமொரு பக்கம்சார்ந்த ஆக்கம். இப்படியான ஆக்கங்களால் சாதிக்ககூடியது முற்போக்கு எண்ணங்கள் சிறிதளவேனும் உள்ளவர்களுக்கிடையே காழ்புணர்வு வளர்ப்பது என்பது தவிர வேறு ஒன்றுமே அல்ல. இப்படியான கருத்து சுதந்திரங்கள் தேவைதானா? இவை சிறிதளவேனும் நடுநிலமை வகிக்கும் பொதுமக்களை முற்றுமுளுதாக பிற்போக்கு சக்திகளுக்குப் பின்னால் மீண்டும் தள்ளுவதாகாதா?

    சிந்தியுங்கள்…

    Reply
  • barri edward
    barri edward

    …………MIA speaks the things what she feels and she is not the person working for others agenda. She has willing, power, boldness and she is the fighter for freedom and she against the human rights violation.

    Some people who are working for …. Mhinda Rajapacksa agenda, they can’t criticize the others who are working against the genocide of Tamils by the terror government. This is the list of people who are working with …. Mahinda.
    ………………, ……………, ……………., …………..,. ………., ………….., ……….
    Earlier days I did not support tigers but now I am supporting tigers, the reason is any Srilankan political parties they don’t have the willing to put forward the acceptable political solution to Tamils yet. There for nothing wrong with tigers and their fight against the terror government.

    Reply
  • BC
    BC

    //Earlier days I did not support tigers but now I am supporting tigers,…- barri edward//
    நீங்கள் பலரில் இருந்து மாறுபடுகிறீர்கள்.முன்பு ஆதரவாளர்களாக இருந்தவர்கள் இப்போ எதிர்க்க தொடங்கியிருக்கிறார்கள்.

    Reply
  • accu
    accu

    //Earlier days I did not support tigers but now I am supporting tigers,…- barri edward//
    You right Barri. Because earlier days the money you collect only a small percentage goes to your pocket but now you can swallow the full amount. enjoy.

    Reply
  • manithan
    manithan

    …………………. we cant accept in sri lanka doimg genecide,becous how many tamil peaple out side the sri lanka they all are living very pease fully, that why international didnt accept sri lankan goverment doing geneside, mia really intreted tamil peaple in sri lanka go to vanni and go to fight aginst goverment military,
    …………………..

    Reply
  • Anand Sathasivam
    Anand Sathasivam

    Mia supporters
    I infact totally dis agree with you. I am not working for a Mahinda or Sinhalese agenda, how e ver the steps taken by LTTE has destroyed the credibility for the tamils to self determination. I dnt think the LTTE tactics helped the tamil cause. We all know SL government will do it in thier own way. But simply using terror as a mehtod of winning a political solution will not happen There are facts we have to admit.

    Fact One
    50% of Tamils lived in south, and had no problem what so ever. Tamils who educated in Sri Lankan univesities is 42% year by year. Tamils are in respectable positions in Sri lanka, and non of the givernments has not banned any tamil achiving and flying high.(take Muralidharan or Kithesh loganathan) Some politicians and un educated sinhalese have ill treated tamils, but that is no means an agenda to take weapons for rights. Ghandi or Nelson Mandela had fought , not with suicide missions, child soldiers or hitting soft targets in the south

    Fact Two
    LTTE never let another organisation to represent tamils. Moderate Tamils like my self had never allowed to express my self due to the force of the guns Its for sure ,SL army action may end up we loosing annocent , tamil people.Things could have been better, if the LTTE stand for every tamil, they listen to every pain of tamil and not shoot them for fleeing

    Genocide claim
    I dont think a classified terror group shouting genocide will do any favour to tamil voice. UN and HRW clearly said the situation. Sri lanka was the only country tamils would have cliamed as home , after all Tamilnadu nor west or us or canada will give us a home land LTTE clearly destroyed our opportunity to achive something through bargain

    I would say, think about the few tamil generations to come, and use the head

    Reply
  • பகீ
    பகீ

    Dear Anand Sathasivam,
    ………………………………. let’s come to your argument. Your opinion is ‘YOUR OPINION’ is your opinion I have no problem with that. But I have issues with your stated ‘FACTS’. So lets see..

    “…Fact One
    50% of Tamils lived in south, ….”
    Where do you get these numbers. Is it exactly 50%? What is ‘south’? Why these people went to South? Can you explain?

    “..and had no problem what so ever…
    What? Are you kidding? Then why are the Tamils being abducted in numbers. Can you tell this to any Tamil family whose members are abducted? Or can you explain why then ‘what so ever’ Tamil is being asked to register with the GoSL?

    “… Tamils who educated in Sri Lankan univesities is 42% year by year…
    WOW!!! Are you …………………………………..?

    ‘…Tamils are in respectable positions in Sri lanka, and non of the givernments has not banned any tamil achiving and flying high.(take Muralidharan or Kithesh loganathan)….
    Why did you leave Kadirgamar and Sangaree out of this list?
    my friend no one can ban any one ‘flying’ high. But they can put roadblocks. Have you ever heard a system called ‘Standardization’ in SL university admissions? In fact you don’t! That’s how you got this 42% year by year!!!

    ….Some politicians and un educated sinhalese have ill treated tamils, but that is no means an agenda to take weapons for rights…..
    What a thoughtful answer!
    It is always ‘Some’ people. Take Hitler, he is only one politician. Take Mussolini, he is only one ‘un educated’. So what did the world do? It took arms my friend. By the way why in SL people always put the blame only on politicians and continue to elect them year after year!

    …. Ghandi or Nelson Mandela had fought , not with suicide missions, child soldiers or hitting soft targets in the south…
    Hmm….Mandela’s party has and armed wing and it was headed by none other than Mandela himself. The armed wing is called Umkhonto we Sizwe (or MK “Spear of the Nation,”). In fact Mandela was convicted for his actions in bombings civilian targets! After he was sent to jail this wing was headed by Chris harney and it was also accused for child soldier issue as well as killer squads.

    Read the books related to ANC and Umkhonto we Sizwe for issues related their torture camps etc.
    So the “Fact One” of yours is Fiction One !

    “Fact Two
    …LTTE never let another organisation to represent tamils….
    The people have to decide that. Even today these organizations who oppose the LTTE cannt garner support of more than 40 people! (not your 40%)

    ….Moderate Tamils like my self had never allowed to express my self due to the force of the guns Its for sure ,SL army action may end up we loosing annocent , tamil people.Things could have been better, if the LTTE stand for every tamil, they listen to every pain of tamil and not shoot them for fleeing…
    Don’t preach! take a stand for your self. Did you stand for every Tamil? Just an example, what did these anti-LTTE groups did during the IPKF time? Just answer me!

    ‘Genocide claim
    I dont think a classified terror group shouting genocide will do any favour to tamil voice….”
    There is no such RULE! So you say that anyone accused of some crimes cannot accuse their government of human rights violations? Did you hear something called ‘Geneva Conversion ‘? Naturaly you DIDNOT!

    According to your theory Ghandi or Mandela cannot ask for justice. This genocide claim is not done by just LTTE alone. It was even stated by the ‘Genocide Watch’, Sri Lanka as one of the countries in a ‘Red Alert’ list.

    …. UN and HRW clearly said the situation….
    Said What?

    …..Sri lanka was the only country tamils would have cliamed as home , after all Tamilnadu nor west or us or canada will give us a home land LTTE clearly destroyed our opportunity to achive something through bargain….
    If your 50% live happily in no discrimination what so ever South why do you want to bargain? What is there to bargain a 40% of university admissions are Tamils (they are only 13% of the population) Why bargain if Tamils are not blocked from ‘flying high’. Are you ……….. man?

    “…I would say, think about the few tamil generations to come, and use the head…
    You should! Your facts are very good examples for you to do so!

    Reply
  • பகீ
    பகீ

    மனிதன்…
    ‘….we cant accept in sri lanka doimg genecide,becous how many tamil peaple out side the sri lanka they all are living very pease fully,….

    ஸ்ரீலங்காவில் ‘ஜெனசைட்’ (இன அழிப்பு) நடக்கிறது என சொன்னால். ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் ஸ்ரீலங்காவுக்கு வெளியில் எத்தனையோ தமிழர் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்கிறீர்கள். நல்ல லொஜிக்!

    Reply