முத்துக்குமார் மரணம் உள்ளத்தை வலிக்க செய்தது!: கருணாநிதி அறிக்கை

karunanithi.jpgமருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது என் உடல் வலியையும் மீறி, உள்ளத்தை வலிக்கச் செய்யும் அளவுக்கு முத்துக்குமார் தீக்குளித்து மரணமடைந்த செய்தி வந்தது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய உடல் வலியையும் மீறி – உள்ளத்தை வலிக்கச் செய்கின்ற அளவிற்கு சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர், முத்துக்குமார் என்பவர் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து மாண்டுவிட்டார் என்ற செய்தி மருத்துவமனையிலே உள்ள என்னை அடைந்து மனதை பெரிதும் பாதித்தது. கழகப் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, அத்தகைய தற்கொலைகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்ற வகையில் அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்தேன். பொருளாளர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, பேரவையில் அவர் உரையாற்றும்போது – தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன். ஆனால் அவரது மறைவுக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் செலுத்தச் சென்ற வடசென்னை மாவட்ட செயலாளர் மீது அரசியல் கண்ணோட்டத்தோடு அ.தி.மு.க., ம.தி.மு.க.வினர் கற்களை வீசி தாக்க முயன்றதாகவும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியினைக் கூட வாங்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வந்து, ஒரு இளைஞரின் தியாகச் செயலைக் கூட அரசியல் ஆக்குகிறார்களே என்றெண்ணி வேதனையடைந்தேன். இவ்வாறு கூறியுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பகீ
    பகீ

    ….அ.தி.மு.க., ம.தி.மு.க.வினர் கற்களை வீசி தாக்க முயன்றதாகவும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியினைக் கூட வாங்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வந்து, ஒரு இளைஞரின் தியாகச் செயலைக் கூட அரசியல் ஆக்குகிறார்களே என்றெண்ணி வேதனையடைந்தேன்….

    மரணத்தை அரசியலாக்குகிறார்கள் என்கிறார் அதற்குமுன் வரியில் ‘அதிமுக..ம.தி.மு.க’ என்கிறார்? ஏன் பா.ம.க வை விட்டுவிட்டார் ? ஒரு வேளை கூட்டணிக்குள் வந்தாலும் வரலாம் என்கின்ற அரசியலா?

    அப்ப ‘தீக்குளித்தல் தீவிரவாதம்’ என மகன் ஸ்ராலினை விட்டு அறிக்கை விடப்பண்ணியதை என்ன கணக்கில் சேர்க்கலாம்? பாவம் ‘கலைஞர்’ அவரின் ஆய ‘கலைகள்’ 64 இனையும் தமிழர்கள் ’ஏய உணர்ந்து’ விட்டனர் !

    Reply
  • palli
    palli

    கற்று கொடுத்த கல்விமானே ..
    கலங்காதே கவி சொல்லு..
    இலக்கியத்தில் இரு வரிகள்.
    தொல் காப்பியத்தில் சுவைக்காக..
    நகைசுவை யதை கலந்து..
    நாணமாய் சொல்லிவிடு
    ஏற்று கொள்ளும் தமிழினம்..
    தங்களது மந்திரத்தை..

    Reply
  • Anonymous
    Anonymous

    இவ்வளவு வலியை உணருகின்றவர், புலம் பெயர்ந்த தமிழர் நலனை விட்டு விட்டு, “இலங்கையிலுள்ள இலங்கைத் தமிழர்” நலனுக்கு குரல் கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்! -எல்லோரும் இதை, யார் மீதாவது பழிப் போட்டு, கைக்கழுவி விடும் படலமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நாங்கள் குரல் கொடுத்தால் புலி அடிப்பான் என்பது நொண்டிச் சாக்கு, அவர்கள் ஒழுங்கான முறையில், பிரச்சனையிலிருந்து வெளிவர முடியாமல் அழுத்தம் கொடுப்பது நீங்கள்தான். இலங்கைத் தமிழரது பெரிய பலவீனம் தங்களுக்குகென்று கலாச்சார நிகழ்ச்சிகள் இல்லாது, இந்திய படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது. கலைஞார் குடும்பத்தின் ஆர்வமும், பெரிய பலமும் இதுதான். தமிழகத்தில் பல தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதால், சன் குழுமம், கலைஞர் தொலைக்காட்சி போன்றவைகள், புலம்பெயர் தமிழரிடையே போட்டியில்லாமல் கோலோச்சுகிறது. அதை தக்க வைத்துக் கொள்ளும் கோஷங்களுடன் அவர் நிறுத்திகொள்வார். ஏன், “விவான்ட் தமிழீழம்”, ராஜபக்சே டவுன், டவுன், போன்ற கோஷங்களையும், பல புரியாத டென்மார்க், நார்வே போன்ற பாசைகளின் கோஷங்களையும், இவரும் கனிமொழியும் கற்றுக் கொண்டிருப்பதாக கேள்வி. உங்களுக்கு…………………………….”,அதில் “குளிர் காயக் கூடாது”.

    Reply