யாழ்ப்பாணத்தில் கலாநிலையம்: தெற்கு கலைஞர்கள் பங்களிப்பு

jaffna1.jpgவடக்கு தெற்குக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் கலா நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் சகல கலைஞர்களின் பங்களிப்புடன் யாழ்நகரில் இக்கலா நிலையம் அமையவுள்ளது.

இக்கலா நிலையம் திரையரங்கு, சன சமூக நிலையம், கலையரங்கு ஒத்திகை மேடை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் யாழ்ப்பாணத்துக் கட்டிடக் கலை சிறப்பம்சங்களைக் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கலா நிலையத்தை அமைப்பது தொடர்பாகக் கலந்துரையாடும் விசேட நிகழ்வும் பத்திரிகையாளர் மாநாடும் கொழும்பு திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாலினி பொன்சேகா, ரவீந்ர ரந்தெனிய உட்பட தெற்கின் முன்னணிக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இத் தேசியப் பணிக்கு அரசாங்கம் உதவ முன்வந்துள்ளதுடன் சகல கலைஞர்களும் தமது முழுமையான பங்களிப்பினை வழங்க முன்வந்துள்ளனர். அத்துடன் நாடளாவிய சகல சினிமாத் திரையரங்குகளினதும் ஒரு நாள் வருமானம் (மார்ச் 22 ஆம் திகதி) இதற்காக பெறப்பட வுள்ளதுடன் சகல திரையரங்குகளின் உரிமையாளர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி கலாநிலையத்திற்கு பங்களிப்புச் செய்யும் வகையில் தெற்கில் கலை நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகளையும் நடாத்தி நிதி சேகரிக்கவும் கலைஞர்கள் முன்வந்துள்ளனர். கலா நிலையம் அமைப்பதற்கான காணியை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளதுடன் மினி திரையரங்கை அமைப்பதற்கான நிதியை திரைப்படக் கூட்டுத்தாபனம் வழங்கவுள்ளது.

வடக்கு தெற்கிற்கான உறவின் கலைப்பாலமாக அமையும், இந் நடவடிக்கையில் எந்தவொரு அரசியலும் கலக்கப்படமாட்டாது. 30 வருட கால கசப்பான அனுபவங்களை ஒருபுறம் வைத்து விட்டு கலைஞர்களுக்கிடையில் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமென நடிகை மாலினி பொன்சேகா தெரிவித்தார்.

சிங்களத் திரைப்பட வளர்ச்சிக்கு தமிழ்க் கலைஞர்கள் வழங்கிய பாரிய பங்களிப்பும் இந் நிகழ்வில் நினைவு கூரப்பட்டதுடன் மேற்படி பணிக்கு தமிழ் கலைஞர்களின் பங்களிப்புக்களும் பெறப்படுமென அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • muthu
    muthu

    எந்த கலையை யாருடைய கலையை வளர்க்க இந்த கலாமன்றம் என்பதை விளக்குவார்களா? உண்மைப் பின்னணி விளங்க காலம் எடுக்கு முன்பு புலிகள் புதிய அத்தியாயம் எழுதி எல்லாவற்றையும் புரட்டிவிடுவது வழக்கம்.

    Reply
  • george
    george

    its been interesting watching the srilanka playing cricket and celebrant of the game.peple of jaffna will pleased for their contribution.i think its a wright move.
    this senseless war dividing us for sometime and we become enemies.we all wounded and pain and sorrow we all have.

    this lady faced young generation disappearing from our homeland.
    please you most welcome. bring peace for our homeland.

    Reply
  • பகீ
    பகீ

    இந்த திரைப்படக்கூட்டுத்தாபனம் முன்னர் நல்ல லாபத்தில் இயங்கியது. எல்லாம் தமிழ்ப்பட ஓட்டத்தில் வந்த வருமானம் தான். ஆனால் எடுத்த லாபத்தை எல்லாம் சிங்களத் திரைப்படங்களுக்கு மானியமாக கொடுத்தார்கள். தமிழ்ப்படத்துக்கு மானியம் குடுக்க எவ்வளவு தடை போட்டார்கள் என அறிய நீங்கள் ஒன்றும் ஆழ அகல கிளற வேண்டியதில்லை. சிங்களப் படங்களை ஊக்குவித்தல் ஒன்றும்ம் பிழை இல்லை. ஆனால் தொடர் வருமானம் தரும் தமிழ்ப்படங்களை நிறுத்தி வருமானத்தையும் இல்லாமல் செய்து ஏறக்குறைய 100 சிங்களப்படங்களும் எடுத்து ‘போஸ்ற் புரடக்சனுக்கு’ காசில்லாமல் படங்கள் பெட்டியில் தூங்கியது நாடறிந்தது!

    …..30 வருட கால கசப்பான அனுபவங்களை ஒருபுறம் வைத்து விட்டு கலைஞர்களுக்கிடையில் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதே….

    என்ன உவ்வளவு ஈஸியா ’ஒருபுறம் வைத்து விட்டு’ என சொல்லி விட்டியள். சிங்கள நடிகை, பாடகி ஒருவரின் வீட்டுக்கு கைக்குண்டு வீசியபோது எங்கே இருந்தனியள். கொஞ்ச நாளில பத்திரிகையாளரும் அச்சகம் கட்டுறோம் பழசுகளை ஒரு பக்கத்தில வப்பம் எண்டு வருவினம். மற்றவனின் கஸ்டம் உங்களுக்கு எங்கே விளங்கும் உங்களுக்குத்தான் நடிப்பு கைவந்த கலை ஆச்சுதே!

    Reply
  • XTELO
    XTELO

    …..30 வருட கால கசப்பான அனுபவங்களை ஒருபுறம் வைத்து விட்டு கலைஞர்களுக்கிடையில் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதே…./செய்தி

    என்ன உவ்வளவு ஈஸியா ’ஒருபுறம் வைத்து விட்டு’ என சொல்லி விட்டியள். ………//பகீ

    பகீ இப்பத்தான் யதார்த்தத்தை உணர்ந்துள்ளீர்கள். நன்றி.

    Reply
  • george
    george

    well we cant see things negatively.what can we do then what we cant do.be a optimist then only optimism.

    Reply