திருகோணமலை சிறுமி வர்ஷா கொலையின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை

varsa.jpg
திருகோணலையில் 6 வயது சிறுமியை கப்பத்திற்காக கடத்திச்சென்று கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று நண்பகல் 12.05 அளவில் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 11 ஆம் திகதி பாலையூற்றை சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார்.
 
பின்னர் இவரை விடுவிக்க 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு பின்னர் அது 10 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டது. இந்தநிலையில் 10 இலட்சம் ரூபாவை கொடுத்து சிறுமியை மீட்க தாய் தயாரான போது சிறுமி கொலை செய்யப்பட்டார்
 
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதில் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படும் 25 வயதான ரினவுட் என்பவரை இன்று பொலிஸார் வைத்திய பரிசோதனைக்குட்படுத்த அழைத்து சென்ற போது அவர் தமது கைவிலங்கினால்,காவலுக்கு வந்த பொலிஸ்காரரின் கழுத்தை நெரித்துள்ளார். இதன் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பிரதான சந்தேக நபர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரால் கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறப்படும் பொலிஸ்காரர் திருகோணமலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சிறுமியின் கொலை தொடர்பான வைத்திய பரிசோதனையின் பின் வர்ஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக  பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். சிறுமியின் உடலத்தை கண்டெடுத்த போது அவரது வாய்க்குள் துணிகள் திணிக்கப்பட்டு பிளாஸ்டரால் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொலை தொடர்பான  முக்கிய சந்தேக நபர், கணனி பயிற்சியாளரும் சிகரம் இணைய வானொலி நடத்துனர் என்பதும் தெரிய வந்த பின்னர் அந்நபரிடமிருந்து சிகரம் பணிப்பாளர் என அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சிகரம் இணைய வானொலி மூலம் சிறுவர்களது நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளதாகவும், திருகோணமலை சிவன் கோவில் அருகாமையிலேயே இவரது இணைய வானொலி சேவை செயற்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது வானொலியை விரிவுபடுத்துவதற்காகவே தாம் குழந்தையைக் கடத்தி கப்பம் கேட்டதாக அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்படவர்களில் மற்றுமொரு இளைஞர் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பெண் பொலிஸ்காரர் ஒருவரின் மகன் எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • palli
    palli

    ……………………………. மற்றவர எதுக்காக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மக்கள் முன் நிறுத்தி …………….இப்படியும் மிருகங்கள் இருக்கதானே செய்கிறது. அந்த குழந்தையின் பெற்றோருக்கு பல்லி குடும்பம் தமது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

    Reply
  • george
    george

    can you see this child dose she make her killing? i cant forgive the man who done this.he is inhuman.dose killer have a child?i dont think he have, he never going to have.

    Reply
  • சிறீரெலோ
    சிறீரெலோ

    மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு எமது வன்மை மிகுந்த கண்டனத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் அதேவேளை அச்சிறுமியின் மறைவுக்கு எமது கண்ணீர் அஞ்சலியும் செலுத்திக் கொள்கிறோம் என சிறீரெலோ அறிக்கை வெளியிட்டுள்ளது

    Reply
  • யந்திரன்
    யந்திரன்

    ஆறு வயது சிறுமி கழ்பழிக்கப்படுகிறாள் என்றால்….விபத்தில் இறப்பது வேறு, செல் அடியில் இறப்பது வேறு… யந்திரன் படம் எடுக்கும் எண்ண, வெளிப்பாடு ஒரு பரிணாம வெளிப்பாடா?.. அவளுக்கு என்ன தெரியும்?… அந்த பிஞ்சு மனம்.. அந்த கணத்தில்.. அதன் விழிகளில்.. பிரபஞ்சத்தை நோக்கி பல கேள்விகள் கேட்டிருக்குமே!. மனிதத்தை நோக்கி, அந்த யந்திரத்தை நோக்கி, பதில் சொல்ல முடியாத அச்சத்தை பிரதிபலித்திருக்குமே!!- மனிதம் மறக்க கூடிய விஷயமா இது- இது இனப்பிரச்சனையா?… “சமுதாயப் பிரச்சனையில்லாமல்” வேறு என்ன???…

    Reply