அமெரிக்க மீட்சி 2010ல் தான்

us-flag.jpg‘இன்னும் ஒரிரு ஆண்டுகளுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் இதே தடுமாற்றத்துடன்தான் இருக்கும். வருகிற 2010 முதல் மீட்சி நிலை ஆரம்பமாகும்’ என அமெரிக்க நிதித் துறைத் தலைவர் பென் பெர்னான்க் கூறியுள்ளார். அமெரிக்க டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கிட்டத்தட்ட உடைந்து போயுள்ளது அமெரிக்கப் பொருளாதாரம். மூன்றாண்டுகள் வரை இந்த நிலை நீடிக்கும். இதைத் தூக்கி நிறுத்த பெரிய மனோவலிமை கொண்ட, எப்படிப்பட்ட இடர்பாட்டையும் சமாளிக்கக் கூடிய அரசியல் தலைமை அவசியம். ஒருவிதத்தில் நம்மை நாமே சுயமாக சரிசெய்து கொள்ள இப்போதைய வீழ்ச்சி உதவியிருப்பதாகவே நம்புகிறேன்.

ஆனால் எல்லோரும் சொல்வதுபோல இந்த ஆண்டே பொருளாதார வீழ்ச்சி சரியாகிவிடாது. இந்த ஆண்டுதான் உச்சத்திலிருக்கும். அடுத்த ஆண்டு முதல் மீட்சி நிலை தொடங்கலாம்.

முன்பு போல மீண்டும் முழு வேலை நிலை என்ற சூழலுக்கு நாடு திரும்புவதும் கஷ்டம்தான். ஆனால் வலுவான ஒரு பொருளாதாரத்தைக் கட்டியமைக்க இந்த வீழ்ச்சி உதவும். கிடைக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் கீழை நாட்டு மனோபாவம் அமெரிக்கர்களுக்கும் வரும். அதற்கு இந்த வீழ்ச்சியும் மீட்சியும் காரணமாக அமையும்.

இந்த சூழலில் என் கவலையெல்லாம், வங்கி அமைப்பு மீது அமெரிக்க மக்களும் அரசியல் தலைவர்களும் நம்பிக்கை இழந்து போயிருப்பதுதான். வங்கித் துறை விரைவில் சீரடைவதுதான், நாட்டின் பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்தும், என்றார் பெர்னான்க்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

5 Comments

 • chandran.raja
  chandran.raja

  இப்படியான கதைகள் மூலம் உலகமக்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியாது. இந்த பொருளாதாரச்சரிவு சதாரணமாக ஏற்படுகிற சின்னத்தனமான சரிவல்ல. செல்வத்தையும் உழைப்பையும் கேள்விக்குள்ளாக்க படுவதற்கான சரிவு. 1929-ம் தையும் அதற்கு பின் வந்த காலங்களையும் அறிவுறுத்துவதான பயங்கர ஒலியுடன் கூடிய அபாயச்சங்கு!
  இதை உரியகாலத்தில் உரியமுறையில் புரியமறுத்தமேயானால் கூடியவிலையை செலுத்துவதுமல்லாமல் மனிதநாகரீகத்தையே குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானது இந்த விதியானது எவற்றை வேண்டிநிற்கிறது! ஒவ்வொரு நாட்டு தொழியாளரையும் அணிதிரள கோருகிறது. ஒவ்வொரு நாட்டு தொழியாளவர்கத்துடனும் வர்கரீதியில் அணிதிரளும்படி அறிவுத்துகிறது. தேசியரீதியில் கணக்கு தீர்த்து ஏகாதிபத்தியத்திற் கெதிரான யுத்தத்தை வலுப்படுத்த அறிவுறுத்துகிறது.( இது முதலாளித்துவ அர்த்ததில் அல்ல )

  Reply
 • palli
  palli

  அப்போது கூட முடியாது. காரனம் ரஸியா நவீன ஆயுதங்களையும் சிறப்பு பயிற்ச்சியையும் கொடுத்து ராணுவத்தை போருக்கு தயார் நிலைபடுத்த போவதாக (2010ல்) ரஸிய அதிபர் அறிவித்துள்ளார். இது அமெரிக்காவுக்கு பல வழியில் தலையிடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாமா??

  Reply
 • பகீ
  பகீ

  பென் பெனாக்கி சொன்னது மிக மிக குழப்பமாகவே இருக்கிறது. ஆனாலும் எமது தலைவர்கள் சொல்வதுபோல் ‘அடிபணிய மாட்டோம்’ ‘மண்டியிட மாட்டோம்’ என்பதுபோல் அல்லாமல் இருந்ததென்னவோ உண்மைதான். என்னைப்பொறுத்தவரை 2010 இல பொருளாதாரநிலை தளம்பல் நிலையில் இருந்து மீழும் எனவே நினைக்கிறேன். தற்போதைய சிக்கல்களை விளங்கிக்கொள்ளவே இவ்வருடம் செலவாகும்.
  மற்றையபடி மனிதநாகரீகம், குழிதோண்டல், பெரும் ஒலி போன்ற கதைவிடுதல்கள் எல்லாம் …….
  ரஷ்ய போர் என்பதெல்லாம் நான் நம்பவில்லை. ரஷ்யா அமெரிக்காவிலும் முதலாளித்துவ கொள்கைகளை அரவணைக்கும் நாடாக மாறிவிட்டது என்பதே உண்மை. சீனா தனது கடன்பத்திர வாங்கல்களால் அமெரிக்காவை ‘தட்டிவைக்கும்’ நிலையில் இருக்கிறது. ஆனால் அதைக்கூட ஒரு அளவுக்கு மேல் செய்ய முடியாது. உதாரணம் அமெரிக்க பொருளாதார தளர்ச்சியால் கடந்த வருட கிறிஸ்மஸ் பொம்மை/விளையாட்டுப்பொருட்கள் விற்பனை குறைவால் சீனாவில் மட்டும் 2.5 மில்லியன் பேர் வேலை இழந்தது.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  ரஸ்சியா சீனா கம்யூனிஸத்தைப்பற்றி யாரும் கேள்வி எழுப்புவர்களேயானால் அவனே கடைசி முட்டாளாக இருக்க முடியும். இனி வரபோகிற காலம் தமது சந்தைக்காக உலகை மறுபங்கீடு செய்கிற காலம். மனிதகுலத்தின் அடிமைத்தனமான கூலிஉழைப்பை முடிவுக்கு கொண்டுவந்து புவியில் மனிதநாகரீகத்தை ஏற்படுத்துவார்களா? இல்லை முதலாளித்துவத்துக்கு கையளித்து தொழிலாளிவர்க்கம் வேடிக்கை பார்த்து கைகட்டிநிற்குமா? இதற்கு சர்வதேசிய தொழிலாளர்வர்கம் தான் முடிவு சொல்லவேண்டும். ஆதாயத்துக்கான உற்பத்தியா? தேவைக்கான உற்பத்தியா? மனிதகுலத்திற்கு தேவை என்பதை……. முடிவெடுக்க நிர்ப்பந்திக்கும்.

  Reply
 • பகீ
  பகீ

  …ரஸ்சியா சீனா கம்யூனிஸத்தைப்பற்றி யாரும் கேள்வி எழுப்புவர்களேயானால் அவனே கடைசி முட்டாளாக இருக்க முடியும்……

  ….மனிதகுலத்தின் அடிமைத்தனமான கூலிஉழைப்பை முடிவுக்கு கொண்டுவந்து புவியில் மனிதநாகரீகத்தை ஏற்படுத்துவார்களா? இல்லை முதலாளித்துவத்துக்கு கையளித்து தொழிலாளிவர்க்கம் வேடிக்கை பார்த்து கைகட்டிநிற்குமா?…..
  ……………………………………………………..

  Reply