திருமலைச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியளிக்கிறது : ரி. எம். வி. பி.

tmvp.jpgகடந்த 11ம் திகதி திருமலையில் இடம் பெற்ற வர்ஸா என்கின்ற சிறுமியின் கொலையானது எம்மை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மனித நாகரிகமற்ற இச்செயற்பாட்டினை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இது குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இக்கொலையில் சம்பந்தப்பட்ட கும்பல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளது என்பதோடு கைது செய்யப்பட்ட 6 பேர் கொண்ட குழுவில் ஒருவர் எமது அமைப்பின் ஆதரவாளர் என்பது எமக்கு பெரும் வேதனையளிக்கும் செய்தியாகும்.

இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதக் கும்பலுடன் எமது ஆதரவாளரான ஜனா என்பவர் கொண்டிருந்த தொடர்புகள் அவரது தனிப்பட்ட நடவடிக்கையாகும். இதற்கும் எமது கட்சிக்கும் எந்தவித சம்பந்தமோ, தொடர்புகளோ கிடையாது என்பதை மக்களுக்கு தெளிவுறுத்த விரும்புகிறோம்.

கிழக்கு மாகாணமெங்கும் பரந்துபட்ட ஆதரவாளர்களைக் கொண்டுள்ள எமது கட்சி எனும் வகையில் இது போன்ற சமூக விரோதிகளின் ஆதரவுகளை பெறுவது குறித்து எதிர்காலத்தில் எமது கட்சி மிக அவதானமாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்படி சந்தேக நபர்கள் எதுவித பாரபட்சமுமின்றி விசாரிக்கபட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவும் இருப்பதோடு அதற்கு பூரண ஒத்தாசை வழங்கவும் எமது கட்சி சார்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் அச்சநிலையை தவிர்த்து பொது மக்களுக்கான ஜனநாயக சூழலை மேம்படுத்த எமது கட்சி உளசுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்ற இவ்வேளையில் இது போன்ற சம்பவங்கள் எம்மை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்றன. எனவே குறித்த கொலைச் சம்பவத்தை பயன்படுத்தி எமது கட்சிமீது சேறு பூசுவதையும் அவதூறு பொழிவதையும் நோக்காகக் கொண்டு திரிபுபடுத்தப்பட்டு வெளிவருகின்ற செய்திகளையிட்டு மக்கள் அவதானமாக இருக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். அத்தோடு சிறுமி வர்ஸாவின் குடும்பத்தினருக்கும் பொது மக்களுக்கும் எமது கட்சி சார்பில் ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
(ஒப்பம்)
எ. கைலேஸ்வரராஜா
பொதுச் செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
16/03/2009

tmvp.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • hg
    hg

    Police said five suspects were earlier arrested in connection with the killing of the little girl.

    The BBC quoted police officials as saying that three of the suspects were members of the Tamil Makkal Viduthalai Puligal (TMVP) headed by Eastern Province Chief Minister Sivanesathurai Chandrakanthan alias Pillayan.

    “The slain suspect has tried to secure a licence for an FM radio station. The ransom was sought to pay political authorities to obtain the licence,” the BBC quoted the police as saying.

    Varsha Jude Regi was abducted while waiting for the trishaw to take her home after school. The abductors had demanded a ransom from the mother who had said she had no cash to give them. On Friday evening, the girl’s body was found in a fertilizer bag which was seen floating in a canal. The child was blindfolded, her hands and feet tied and with burnt marks.

    Daily mirraer

    Reply
  • palli
    palli

    அது சரி அவர்தான் இப்போது தனிகுடிதனம் மாமனார் வீட்டுக்கு போட்டாரே. அதன் பலாபலஙளை அவரும் மாமனும் பாத்துக்கட்டும். நீங்க தூங்குங்க.

    Reply
  • santhanam
    santhanam

    30 வருடமாக விருமான்டியின் பின்னால் நின்ற குழுதானே.
    1985 ம் ஆண்டு புத்தூரில் ஒரு களவுநடைபெற்றது அந்த களவைமாற்று இயக்கமீது கிட்டு போட்டுவிட்டு தப்பி விட்டார் பின்பு பொபி தாஷ் பிளவுக்கு பின்பு இரண்டு பிரிவு தங்கள் களவு அறிக்கை வெளியிட்டபோது அதில் புத்தூர் சம்பவம் வெளிவரவில்லை இதை ஏன் எழுதுகிறேன் என்றால் அந்தவீட்டின் நபர் மிக கொடுரமான சித்திரவதைக்கு உட்படுத்தபட்டு கொலை செய்யபட்டு கிணற்றுக்குள் போட்டவர்கள்……

    Reply
  • RTS
    RTS

    The Puttur robbery was not done by LTTE. It was done by 2 LTTE members (Ranjth & Thurai) and some local people for there own purpose. Later on Kittu came to know about this and asked both of them to leave the organization. He did not take any action because during that period LTTE was collecting gold from each family and Kittu thought people won’t donate if they come to know about this.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    என்ன தான் அறிக்கைகள் வந்தாலும் தீபம் போன்ற புலி ஆதரவு ஊடகங்கள் குறிப்பிட்ட சிறுமியின் சம்பவத்தை பிள்ளையான் குழுவினர் செய்ததாகவே தமது செய்திகளில் வாசித்து தமது விசுவாசத்தை புலிகளுக்கு காட்டத் தவறுவதேயில்லை.

    Reply
  • palli
    palli

    பார்த்திபன் திருத்தி கொள்ளவும் பிள்ளையான் அணி அல்ல கருனா அணி எனதான் செய்திகள். அதை விட அமைச்சர் முரளிதரன்தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு சம்பந்தபட்டவர்கள் மீது நடவெடிக்கை எடுக்க வேண்டாமென சொன்னதாக தீபம் செய்தி. இதுக்கு பல்லி பொறுப்பல்ல.

    Reply