ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் கொடிகளை வைத்திருந்தமை சட்டத்திற்கு முரணானதல்ல -கனடியப் பொலிஸார் தெரிவிப்பு

ltte_flag.jpg
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கனடா தடைசெய்திருக்கின்ற நிலையில் இந்த வாரம் ரொரொன்ரோவில் தமிழ் சமூகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பொது புலிகளின் கொடிகளை வைத்திருந்தமை சட்டரீதியானதென கனடியப் பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ரொரொன்ரோவில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர் . இலங்கை யுத்தம் தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் வகையிலும் யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு கனடிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுமே இந்த மனிதச்சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புலிகளின் கொடிகளை ஏந்தியிருந்தனர். அவ்வாறு கொடிகளை வைத்திருந்தமை கனடாவின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு முரணானதா என்பது குறித்து கனடாவின் சட்டத்திணைக்களம் ஆராய்ந்து வருவதாக நகரப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர். ஆனால், அது சட்டவிரோதமானதல்ல என்ற கருத்தை பொலிஸ் படை வழக்கறிஞர்கள் கொண்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மார்க்புகாஷ் கூறியுள்ளார்.

“எந்தவொரு சட்டத்திற்கும் முரணானதாக இது இல்லை’ என்ற கருத்தை எமது வழக்கறிஞர்களிடமிருந்து கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசு புலிகளை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டதையடுத்து புலிகள் அமைப்பிற்கு அங்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • Kullan
    Kullan

    இது என்ன விசித்திரம். ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இயக்கத்தின் கொடி; பதாகைகள் பாவிக்கலாம் என்பதன் அர்த்தம் என்ன? இது அரசின் உத்தராவா? அன்றி தமிழர்களின் கற்பனை வாதமா? வேடிக்கையாக இருக்கிறது. கனேடியச் சட்டம் எமக்கு விளங்கவில்லை. அப்படியானால் உசாமா பின்லாடனின் படத்தையும் அல்கைடாவின் கொடியையும் கொண்டு ஊர்வலம் போகலாமே

    Reply
  • jimmy
    jimmy

    எதுக்கும் நீங்கள் உசாமா பின்லாடனின் படத்தையும் அல்கைடாவின் கொடியையும் கொண்டு ஊர்வலம் போய்பாருங்கோ பிறகு வந்து விளைவுகளை எழுதுங்கோ. வித்தியாசமாக நடத்துகினமோ இல்லையோ என்று எல்லாரும் அறிந்து கொள்ளலாம்.

    Reply
  • பகீ
    பகீ

    குலன்,
    மேற்குலகில் அரசியலமைப்புச் சட்டம் என்பது இரண்டு விதமாக பார்க்கப்படும். அதில் உள்ள சரத்துகள் தனிமனித உரிமை, முன்னேற்றம் என்பதை உறுதிப்படுத்தும் போது அச்சட்ட அமைப்பு ஒரு புனிதமான ஆவணமாகவும் உரிமை, முன்னேற்ரத்துக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அது கீழானதாகவும் பார்க்கப்படும். ஆனால் ஸ்ரீலங்கா இந்தியா போன்ற நாடுகளில் தலைகீழ்!

    உதாரணமாக்க அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் முதலாவது சரத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமைக்கு காப்பளிக்கிறது. (Freedom of Expression. அதாவது பேச்சு, எழுத்து, ஒன்றுகூடல் போன்றன).

    அச்சட்டத்தின் கீழேயே (உணர்வுகலை வெளிப்படுத்தல்) புலிக்கொடி கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இங்கே கவனிக்க வேண்டியது இன்னும் ஒன்று. புலிகள் ’தடை செய்யப்பட்ட’ இயக்கம் அல்ல! மாறாக புலிகள் ‘வெளிநாட்டு பயங்கரவாதிகள்’ பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். தடைக்கும் இடற்கும் உள்ள வேறுபாடுகள் பல.

    அத்துடன் அல்-கெய்டா தமக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டதாக எங்கும் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. மாறாக விடுதலைப்புலி ஆதரவாளர்கள் வழக்குத்தாக்கல் செய்து அவ்வுரிமையை வென்றெடுத்தனர். அத்துடன் புலிகளுக்கு பணம் கொடுத்தலும் ‘உணர்வுகளை வெளிப்படுத்தும்’ வகையே எனவும் வாதாடினர். இதற்குப்பதிலளித்த நீதிமன்றம் புலி ஆதரவாளர்கள் பக்கம் நியாயம் இருக்கிறதென்றும் ஆனால் புலிகளை அப்பட்டியலில் இட்டது வெளிநாட்டமைச்சே எனவும் ஆகவே தமது நீதிமன்றத்துக்கு பணம் கொடுத்தலில் தீர்ப்புக்கூற அதிகாரமில்லை எனவும் உச்சநீதிமன்றத்தை நாடும் படியும் கூறி இருந்தனர். புலி ஆதரவாளர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள், ஆனால் எந்த ஒரு அமெரிக்க பிரஜையும் பணம் கொடுத்து சிறை செல்லவில்லை எனவே இவ்வழக்கு தற்போதைக்கு முக்கியமற்றது என விசாரணைக்கு எடுக்கவில்லை. (அமெரிகாவில் பணம் சேகரித்ததாக கைதானவர்களின் மேல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. குற்றம் கானப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை)

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஒன்று. புலிகள் ’தடை செய்யப்பட்ட’ இயக்கம் அல்ல! மாறாக புலிகள் ‘வெளிநாட்டு பயங்கரவாதிகள்’ பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.//

    என்ன பகீ இன்னும் நித்திரையாலை எழும்பவில்லைப் போல புலிகளைத் தடை செய்யவில்லை என்று வடிவேலு கணக்கிலை காமெடி எல்லாம் பண்ணுகின்றீர்கள். வங்கிக் கணக்குகள் முடக்கம், அலுவலகங்கள் சோதனையிட்டமை போன்றனவெல்லாம் அறியவில்லைப் போலும். இவையெல்லாம் “வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்” என்ற அடிப்படையிலா செய்யப்பட்டன.

    கனடா; சிலவேளை புலிக்கொடி சனம் பிடிப்பது இதுதான் கடைசித்தரம் எனிச் சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால் அதனைப் பெரிய மனசுடன் பிரைச்சினைப் படுத்தாமல் விட்டிருக்கலாம். அதை வைச்சு நீங்க காமெடி கீமெடி எல்லாம் பண்ணலாமா??

    Reply
  • padamman
    padamman

    எல்லா தமிழரும் வந்து கொடிபிடியுங்கள் நம்புங்கள் நாளை தமிழ்ஈழம் பிறக்கும் நிச்சயம் தமிழ்ஈழம் பிறக்கும் ஆணால் அங்கு யாரும் அப்போது இருக்கமாட்டர்கள்.

    Reply
  • பகீ
    பகீ

    பார்த்திபன்…
    ‘….வங்கிக் கணக்குகள் முடக்கம், அலுவலகங்கள் சோதனையிட்டமை போன்றனவெல்லாம் அறியவில்லைப் போலும்…..’
    எவ்வாறு அறியவில்லை என்கிறீர்கள். நீங்கள் முன்னர் குறிப்பிட்டதுபோல அமெரிக்காவைப்பற்றி இணையத்தில் வாசித்து எழுதுபவனல்ல நான்..
    ‘….இவையெல்லாம் “வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்” என்ற அடிப்படையிலா செய்யப்பட்டன…..’
    ஆம்! வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு ‘பணம்’ கொடுக்க முடியாது. அதனாற்தான் அக்கணக்குகள் முடக்கம். அவ் அலுவலகங்கள் சோதனை. ஆனால் அலுவலகங்கள் சீல் வைக்கப்படவில்லை!

    பார்த்தீபன்…எங்களை நித்த்திரையால் எழுப்புவதை விட்டுவிட்டு நீங்கள் நானெழுதியதையும் கீழே உள்ளதையும் கண்னைக்கழுவிவிட்டு படியுங்கள்!

    THE LEGAL STATUS OF THE LTTE IN THE US
    FACT SHEET

    QUESTION: Is the LTTE banned in the USA?
    ANSWER: No, the LTTE is not banned in the USA, but has been designated as one of thirty Foreign Terrorist Organizations.

    QUESTION: What is the difference between a legal ban and the designation as a Foreign Terrorist Organization?
    ANSWER: If it is legally banned, the LTTE cannot function in the USA. Designation as a Foreign Terrorist Organization has only limited legal consequences.

    QUESTION: What are the legal consequences of the designation as a Foreign Terrorist Organization?
    ANSWER: There are 3 legal consequences of designation as a Foreign Terrorist Organization, they are:

    1.The Foreign Terrorist Organization’s funds will be frozen.
    2. Members or Representatives of the Foreign Terrorist Organization can be denied entry to the USA
    3.Providing money to the Foreign Terrorist Organization is a criminal offense.

    QUESTION: If LTTE members or representatives are denied entry to the USA how will it affect U.S. citizens?
    ANSWER:U.S. citizens can be a member or representative of the LTTE and they will not be denied entry to the USA.

    QUESTION: If LTTE members or representatives are denied entry to the USA are they eligible for political asylum in the USA?
    ANSWER: LTTE members are eligible for political asylum. LTTE representatives will be granted asylum if they are qualified at the discretion of the Attorney General.

    QUESTION: Who are not eligible for asylum?
    ANSWER: Anyone who has engaged in “terrorist activity” or “persecution of others” is not eligible for asylum.

    QUESTION:Is it legal to give money to the LTTE?
    ANSWER: No.

    QUESTION: Is it legal to send money to our alma maters in the LTTE controlled area?
    ANSWER: Yes.

    QUESTION: Is it legal to send money to our relatives in the LTTE controlled area?
    ANSWER: Yes.

    QUESTION: Is it legal to give money to the Ilankai Thamil sangam or ,World Tamil Coordinating Committee? ,
    ANSWER: Yes.

    QUESTION: What can be sent to the LTTE?
    ANSWER: Medicine and religious materials can be sent directly to the LTTE.

    QUESTION: Is it legal to support the LTTE politically?
    ANSWER:Yes.

    QUESTION: Is it legal to celebrate the LTTE’s ‘Hero’s Day’?
    ANSWER: Yes.

    QUESTION: Is it legal to hoist the LTTE flag?
    ANSWER: Yes.

    QUESTION: Is it legal to support a separate state for Tamils?
    ANSWER: Yes.

    QUESTION: Is it legal to read, discuss and distribute the LTTE’s literature?
    ANSWER: Yes.

    QUESTION: What happened to the LTTE’s legal challenge to the designation as a Foreign Terrorist Organization?
    ANSWER: The Court said that the evidence that the LTTE was involved in terrorist activities cannot be considered as legal evidence in the Court of law. Whether LTTE is a de facto state or foreign organization and whether the LTTE threatens the USA’s national security or not are political matters, on which the Court cannot make a legal judgment.

    QUESTION: Did the Court set aside the designation?
    ANSWER:The Court said in essence that since it is a political decision involving foreign affairs, the Court will not interfere and let the designation stand.

    QUESTION: What happened to the lawsuit brought by six human rights/civic organizations, including the Ilankai Thamil sangam and World Tamil Coordination Committee, challenging the ‘Constitutionality’ of the ‘Anti Terrorism Law’?
    ANSWER: The Appeals Court said that giving money is not protected under the freedom of association guaranteed by the First Amendment of the Bill of Rights, but supporting the LTTE’s political aim is protected under the First Amendment.

    QUESTION: Were either of the cases appealed to the U.S. Supreme Court?
    ANSWER: The LTTE did not appeal to the Supreme Court. The Constitutional challenge mounted by Human Rights and civic organizations was appealed to the Supreme Court.

    QUESTION: Did the Supreme Court take that case?
    ANSWER: No.

    QUESTION: Why did the Supreme Court decline to take the case?
    ANSWER: The Supreme Court has complete discretion in deciding whether to take a case or not. Each year the Supreme Court receives thousands of cases from which it selects only 75 or so due to constraints on its time and resources.

    QUESTION: What does the Supreme Court’s refusal to take the case mean?
    ANSWER: The Supreme Court’s decision not to take the case simply means that the Appeals Court decisions stands unreviewed, until another case comes along. The Supreme Court’s decision does not signify either its approval or disapproval of the merits of the Appeal Court’s decision.

    QUESTION: What is the current status of the law?
    ANSWER: Providing money to the LTTE is prohibited. The U.S. Government cannot take any legal action against the members of the Ilankai Thamil Sangam, World Tamil Coordinating Committee and the other plaintiffs for supporting the LTTE politically.

    QUESTION: What purpose do the lawsuits serve?
    ANSWER: I) The lawsuits have demonstrated that the designation was a political decision.

    II) The lawsuits have cleared the ambiguities in the law.
    III) The lawsuits have clearly established that supporting the LTTE politically is protected under the First Amendment and is legal.

    QUESTION: Is this the final legal conclusion?
    ANSWER: No. If the U.S. Government brings any prosecution under the law for providing money to the designated organizations the constitutionality of the law will again be reviewed by the Courts and many lawyers feel that the Court will declare the law as unconstitutional. Or if the State Department removes the LTTE from the list then providing money to the LTTE will be legal.

    Reply
  • palli
    palli

    ஆக இந்த புலி கொடியை தூக்கதான் இந்த பெரிய போராட்டமா?? மக்களுக்காகவல்லவா?? கனடா அரசு கூட மக்கள் பற்றி கவலைபடவில்லை. புலிகள் மீதுதான் அக்கறை கொள்கிறார்கள் என சொன்னாலும் சொல்லுவார்கள் போல் உள்ளது. பயஙரவாதம் புலிகளிடம் இருந்ததால் அது தடை செய்யபட்டது. (பகீ ஏன் குழப்பம்) புலிகள் கொடிக்கு கொடுக்கும் முன்னுரிமை அவர்களது அரசியல் நோக்கத்துக்கு கொடுப்பதில்லை. (சிலவேளை அது தெரியாமல் இருக்கலாம்) சிவாஜிலிங்கம் கூட்டுஅமைப்பை சேந்தவர். ஆனால் அவர் அந்த அமைப்பின் வேலை திட்டம் பற்றி எங்கும் பேசுவதில்லை. எங்கு போனாலும் புலி புராணம்தான். இதுக்கு இவர் பேசாமல் கருனாபோல் புலியில் இனைந்து விடலாமே.

    தீபம் பேட்டியில் ஒரு கேள்வி இவரிடம் இன்று சம்பந்தர் நிலைபாடு என்ன என்பது. அதுக்கு இவரது பதில் தெரியவில்லை. அப்படியாயின் இவர் தலிவர் சம்பந்தரா? அல்லது பிரபாகரனா? ஒருமுறை இவர் இந்தியாவுக்கு எதிராக அறிக்கை விடும்போது இந்தியா ஒரு பிடி மண்ணை கூட இலங்கயிடம் இருந்து பெற இந்த சிவாஜிலிங்கம் விடமாட்டான் என (புல் மோட்டை பிரச்சனையின் போது) முழங்கியது பலரது செவிடாக போனது தெரியாதா? ஆக கொடி பிடிக்கட்டும் அல்லது அதில் உடுப்பு தைத்து போடட்டும் ஆனால் மக்களை சொல்லி பிழைப்பு நடத்த வேண்டுமா??

    Reply
  • santhanam
    santhanam

    தமிழ் மக்களை ஆபத்தான நரிதந்த்திரத்துக்குள் கொண்டு போய் மாட்ட பொலிஷ் முடிவு செய்துள்ளது.

    Reply
  • பகீ
    பகீ

    பல்லி, புலிக்கொடி வைத்திருப்பது சட்டமுரணானதல்ல என்ற கனேடிய பொலிசின் கருத்தே தேசத்தில் விவாத தலைப்பு.

    அதற்கு சிலர் கனேடிய அரசுகள் புலிக்கும் மற்றைய முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே பாரபட்சம் காட்டுகின்றன என கோபம் கொண்டனர். புலிக்கொடி, பிரச்சார இதழ்கள், சி.டி, டி.வி.டி, கொடியேற்றுதல், மாவீரர்நாள் போன்றவை அமெரிக்காவில் எந்த தடையும் இன்றி நடப்பதனாலும் புலம்பெயர் நாடுகளில் அமெரிக்காவிலேயே இதை ஒரு அரசியலமைப்பு சார் உரிமை மீறலாக எடுத்து சட்டவழிகளில் அணுகியதாலும் அமெரிக்காவில் நிலைப்பாடு என்ன எழுதினேன். எனது கருத்துகளை சட்ட நிலைப்பாடு, வழக்கு, தீர்ப்புகள் சார்ந்து எடுத்துரைத்தேன். ஆனால் பார்த்திபன் சொன்னது நான் நித்திரைகொள்கிறேன், ‘பாவங்கள் இந்த முறை ஓகே’ என்ப்து போன்ற எள்லல்கள் பின்னூட்டம். இதையும் விளங்காதோருக்காக இவ்வழக்கில் வழக்கு தொடர்ந்தோரில் ஒரு குழுவான இலங்கைத் தமிழ்ச் சங்கம் தமது அங்கத்தினருக்காக வெளியிட்ட கேள்வி பதிலில் அமைந்த விளக்கத்தையும் வெளியிட்டேன். இதனாலேயே அமெரிகாவில் புலிக்கொடி, ஆவீரர் நாள் போன்றவற்றில் யாரும் ‘குழப்பம்’ விளைவிக்க முடியாதிருக்கிறது. சில நாடுகளில் பொலிஸ் க்வநிக்குது, பாஸ்போட் நோட்பண்ணுது போன்ற சின்னத்தனமான பிரச்சாரம் செய்வோர் அமெரிகாவில் விளையாட முடியாது. அண்மையில் வெள்ளை மாளிகை முன்னராக நடந்த ஊர்வலத்தில் பல..பல் புலிக்கொடிகளும் அதன் தலைவர் பிரபாகரனின் படங்களும் இடம்பெற்றது கண்டிருப்பீர்கள். இன்னும் நீங்கள் குழம்பினால் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.
    மேலும் இங்கு கேள்வி புலிகளின் கொடியும் அதை வைத்திருக்கும் உரிமையுமே, இங்கு சம்பந்தரும் சிவாஜியரும் எங்கே வந்தனர்?

    …பயஙரவாதம் புலிகளிடம் இருந்ததால் அது தடை செய்யபட்டது. (பகீ ஏன் குழப்பம்)…

    இத் ‘தடை’ யின் போது அமெரிக்க அரசு இரண்டு பட்டியல்கள் வைத்திருந்தது. பின்னர் முஸ்லிம் நாடுகளை ஏன் இரண்டுபட்டியல் ? பயங்கரவாதி ஒன்றுதான் இதில் நல்ல பயங்கரவாதி கெட்ட பயங்கரவாதி என உண்டா என கதிர்காமர் தூண்டிவிட இந்திய யஷ்வந் சிங்கா ஒத்தூத இரண்டு பட்டியல்களும் ஒன்றாக்கப்பட்டன தெரியுமா?

    Reply
  • palli
    palli

    மன்னிக்கவும் பகீ என்னுடைய கருத்து இன்றயநிலை பற்றிதான் மற்றபடி தலைப்புக்கு எகிர் வினையாய் பட்டிமன்றம் போல் எழுதுபதல்ல. சட்டம் தேவைதான் அது பற்றி பேசும் போது மிக விபரமா பேசலாம். உதாரனத்துக்கு அமெரிக்கா பிரான்ஸ் போன்றநாடுகள் (வல்லரசுகள்) புலிக்கு ஆயுதம் விற்றார்கள் ஆனால் அவர்கள் தடையும் விதித்தார்கள். இதில் இரண்டுமே வல்லரசுகளுக்கு தேவையானதும் பாதுகாப்பும். ஆக அவர்கள் நிலைபாட்டை சொல்லி எம்மை நாமே முட்டாள் ஆக்க வேண்டுமா?? பயங்கரவாதம் என வந்தபின் கெட்டது நல்லது கிடையாதுதானே. சிவாஜி ஏன் வந்தார். பல்லி பகீக்கு மட்டும் பின்னோட்டம் விடவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போது யார் யாரை சுட்டி காட்ட வேண்டுமோ சுட்டி காட்டுகிறேன். பல்லியின் கருத்தை மட்டும் பார்க்கவும். எழுவாய் பயநிலை செயபடுபொருள் பார்க்க வேண்டாம். அது பல்லிக்கு வராது. பகீ தங்கள் கருத்துக்கள் எதுவையும் பல்லி தவற விடுவதில்லை. காரனம் பல தகவல் தருபவர்கள் தாங்கள். தொடருங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //‘….வங்கிக் கணக்குகள் முடக்கம், அலுவலகங்கள் சோதனையிட்டமை போன்றனவெல்லாம் அறியவில்லைப் போலும்…..’
    எவ்வாறு அறியவில்லை என்கிறீர்கள். நீங்கள் முன்னர் குறிப்பிட்டதுபோல அமெரிக்காவைப்பற்றி இணையத்தில் வாசித்து எழுதுபவனல்ல நான்..//
    பகீ
    அடடா நீங்கள் கிலாரீயின் உதவியாளராக இருப்பது தெரியாமல் போய்விட்டது. நீங்கள் இணையங்களைப் பார்த்து விடயங்களை அறிந்து கொளள்ளாமல் கருத்து எழுதுகின்றீர்கள் என்றால், உங்கள் தீர்க்கதரிசனத்தைப் என்னவென்பது. கனடாச் செய்தி பற்றி விவாதித்தால் அமெரிக்க உதாரணத்தைப் புகுத்துவீர்கள். மொத்தத்தில் உங்களுக்குச் சாதகமான செய்திகள் வந்தால் அது உண்மையோ பொய்யோ என்பது பற்றிய தெளிவுகளைப் புறந்தள்ளி அவற்றைத் உயர பிடிப்பீர்ககள். ஆனால் புலிகளைக் கண்டித்து பல சர்வதேச நிறுவனங்களோ அல்லது நாடுகளோ கருத்துச் சொன்னால் அவை உங்கள் கண்ணிற்குப் படுவதுமில்லை. உப்படித் தான் சில வாரங்கள் முன்பு ஆனந்தவிகடன் பத்திரிகை கிலாரிக்கும் அடல் பாலசிங்கத்திற்கும் ஒரு சந்திப்பு நடைபெற்றதாகவும் அதனால் அதிநவீன ஆயுதங்களை கிலாரி புலிகளுக்கு வழங்க முடிவெடுத்ததாகவும் ரீல் விட்டது. அதைப் பார்த்துவிட்டு உங்களைப் போன்றவர்கள் தலைகால் புரியாமல் துள்ளிக் குதித்தீர்கள். பின்பு புலிகளே அப்படி ஒரு சந்திப்பே நடைபெறவில்லையென அறிக்கை விட்ட பின்னரே தலையைச் சொறிந்தீர்கள். அதனால்த் தான் கனவுலகில் வாழும் உங்களைப் போன்றவர்களை நித்திரையிலிருந்து எழுப்ப எங்களைப் போன்றவர்கள் முயற்சிக்கினறோம். ஆனால் உங்களால்த் தான் நித்திரையால் எழும்ப முடியவில்லை. காரணம் நீங்கள் நித்திரை கொள்வதுபோல் நடிப்பதால்.

    Reply
  • பகீ
    பகீ

    ….அடடா நீங்கள் கிலாரீயின் உதவியாளராக இருப்பது தெரியாமல் போய்விட்டது. நீங்கள் இணையங்களைப் பார்த்து விடயங்களை அறிந்து கொளள்ளாமல் கருத்து எழுதுகின்றீர்கள் என்றால், உங்கள் தீர்க்கதரிசனத்தைப் என்னவென்பது…..
    நான் இணையத்தளங்களைப்பார்து கருத்து எழுதுகிறேன் என்பது மிகத்தவறு. முக்கியமாக அமெரிக்க விடயங்கள் பற்றி!
    ’…கனடாச் செய்தி பற்றி விவாதித்தால் அமெரிக்க உதாரணத்தைப் புகுத்துவீர்கள். …..
    ஆம், அமெரிகாவை புகுத்தியதற்கு காரணம் முன்னரே சொல்லி இருந்தேனே. அமெரிக்க அரசியலமைப்பையும் குற்றவியல் சட்டங்களையும் ஒப்புரீதியில் கொண்டதே கனடா. எனவே அமெரிக்க சட்ட நிலைப்பாடுகள் கனடாவிலும் பிரதிபலிப்பதை காணலாம். எனக்குத் தெரிந்ததை அடிப்படையாக கொண்டு அவ்வடிப்படையில் விவாதிப்பதே சரியானது என்பதே என் கருத்து. ……………………………….

    Reply