வணங்கா மண் 27ம் திகதி தாயகம் நோக்கிய பயணம்

Vanni_Missionவணங்கா மண் கப்பல் எதிர்வரும் 27ஆம் திகதி இலண்டனில் இருந்து தாயகம் நோக்கிப் புறப்படுமென்று வணங்கா மண் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம்திகதி  அளவில் இக்கப்பல் முல்லைத்தீவிற்கு கிழக்கான கடல் எல்லையை அடையுமென எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி மக்களுக்கான பொருள் சேகரிப்பு பெரும் எழுச்சியாக இலண்டனில் நடைபெற்று வருகின்றது. பெருமளவு மக்கள் பொருட்களை வழங்கி வருகின்றார்கள். வணங்கா மண் கப்பலில் மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் வருகைதரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    காகிதத்தில் கப்பல் செய்து கானல் நீரில் ஓட விட்டேன்
    ஓட விட்ட கப்பல் வன்னிக் கரை ஒதுங்கக் கண்டேன்
    ஒதுங்கிய கப்பலை மக்கள் ஓடிவந்து பார்க்கக் கணடேன்
    பார்க்க வந்த மக்களுக்கு பழவகை கொடுத்து மகிழக் கண்டேன்
    புலிகள் வந்து சந்தோசத்தில் வான் நோக்கி வேட்டுக்கள் முழங்கக் கண்டேன்
    பாழாய்ப் போன அலாரம் அடிக்க துடித்தெழுந்து கண்டது கனவென புரிந்து கொண்டேன்

    Reply
  • padamman
    padamman

    27ஆம் திகதி இலண்டனில் புறப்படுகின்ற கப்பல் 14ஆம்திகதி முல்லலைத்திவுக்கு போகும் என்றல் எப்போ மலேசியா போகும் யாராவது வைத்தியர் முர்த்தியை கேட்டடு சொல்லுங்கோ

    Reply
  • karaan
    karaan

    27ந் திகதி கப்பல் விடேல்லையம் ஏன் என்றால் மழை பெய்யவில்லை என்று டாக்ரர் மூர்த்தி மிகவும் கவலையுடன் கண்ணீர் துளிகள் நிகழ்ச்சியில் தெருவித்தார். மழை பெய்தவுடன் உடன் கப்பல் விடுவார்களாம். அது வரை மக்கள் பணம் உதவிகளை செய்யும் படி திரு மூர்த்தி வேண்டி இருக்கிறார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கரன், இப்படித் தான் நடக்கும் என்பதை நான் எப்போதே சொல்லி விட்டேனே. கப்பல் போகப் போவதுமில்லை. இவர்கள் அதை வைத்துச் சுருட்டுவதை நிறுத்தப் போவதுமில்லை. மக்களாக உணர்ந்து கொண்டால் தான் உண்டு.

    Reply