யாழ். பிராந்தியத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் மாத முதல்வாரத்தில் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான பதினொரு பேர் கொண்ட உயர் குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.
இவர்கள், கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர் டிப்போக்களுக்கு விஜயம் செய்வதுடன், அமைச்சரின் விஜயத்தின் நல்லெண்ண சமிக்ஞையாக, கோண்டாவில் டிப்போ முதல்தர டிப்போவாக தரமுயர்த்தப்பட்டு பத்து புதிய பஸ்கள் டிப்போவுக்கு வழங்கப்படவுள்ளன.