தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைச் சந்திக்காது! கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் அறிவிப்பு

sampandar-pr-con.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பில் தமது கட்சி கலந்து கொள்ளாது என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்துள்ளார்.
 
தமிழ்க் கட்சிகளின் பிரதிநதிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும் வடக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியுடன் தமது கட்சி எந்தச் சந்திப்பையும் மேற்கொள்ளாது எனவும் ஆர். சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு ஜானகி ஹொட்டலில் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டத்தில் 300,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். மோதல் இடம்பெறும் பகுதிகளில் ஷெல் தாக்குதல்களினாலும், விமானத் தாக்குதல்களினாலும் தினமும் பல பொது மக்கள் உயிரிழக்கின்றனர்.காயமடைகின்றனர். முல்லைத்தீவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு போதுமான உணவு இல்லை, குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லை, மருந்துகள் இல்லை. இதன் காரணமாக இறப்புக்கள் கூட சம்பவிக்கின்றது.

மக்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடுவது அர்த்தமற்றது. எனவே முல்லைத்தீவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறான சூழ் நிலையில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையடுவது அர்த்தமுள்ளதாகும்” என தெரிவித்தார்.

அரசியல் தீர்வு மூலம் தமிழர்களின் பிரச்சினைகளிற்கு சாதகமான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் சம்பந்தன் எம்.பி தெரிவித்தார். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் ,அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் மோதல்கள் இடம்பெறுவதாக இராணுவம் தெரிவிக்கின்றது.

எனினும் இவ்வலயத்தின் மீது விமானத்தாக்குதல்களும், எறிகணைத் தாக்குதல்களிம் மேற்கொள்ளப்படுவதால் சாராசரியாக தினமும் 40 முதல் 50 வரையான பொதுமக்கள் உயிரிழப்பதுடன்,காயமடைகின்றனர். அப்பகுதிகளில் இருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் வெளியேற்றியுள்ளதுடன் உணவு, மருந்து, தற்காலிக குடில்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.உண்மை நிலையை அறிவதற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை

மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளமையால் செயற்பட முடியாதுள்ளனர்.மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அரசாங்கம் அப்பகுதிகளுக்கு போதுமான மருந்துப் பொருட்களை அனுப்பவில்லை.தற்காலிக குடில்கள் கூட மோசமான காலநிலையால் பாதிக்கபடுகின்றது.

இப்பகுதிகளில் 300,000 பொதுமக்கள் இருக்கின்றனர்.ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கணிப்பின் படி 200,000 மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர்.அரசாங்கம் 70,000 பொதுமக்கள் இருப்பதாக தெரிவிக்கின்றது .எனவே அரசாங்கத்தால் அனுப்பப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் பட்டினிச் சாவு ஏற்பட்டு பல் சிறுவர்கள் கூட உயிரிழந்துள்ளனர்.

இவ்வருடம் ஏற்கொள்ளப்பட்ட விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக 3000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 8000 பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளனர்.எனவே பொதுமக்கள் வெளிப்படையாக தாகுதல்களுக்கு இலக்காகின்றமை தெரியவருகின்றது.இம்மக்களுக்கு போதிய உணவு மற்றும் மருந்து அனுப்பாமல் அவற்றை தமிழ் மக்களிற்கு எதிரான போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

எனவே இவ் மனிதாபிமான அவலங்களை கருத்திற் கொண்டு இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த வேண்டும், போதுமான உணவு, மருந்துப்பொருட்கள் போதுமானளவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும், ஐ.நா மற்றும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களை அப்பகுதிகளில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்” என ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற விடாது தடுக்கின்றனரா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அம்மக்கள் ஏன் வன்னியை விட்டு வெளியேற வேண்டும், அம்மக்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

அங்கே மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் காரணமாகவே மக்கள் வெளியேறுகின்றனர்.சர்வதேச சட்ட விதிகளிற்கு அமைவாக மோதல்களின் போது பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என சம்பந்தன் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • murugan
    murugan

    பிரபாகரனின் நலனுக்கு உகந்தது. தமிழ்மக்களின் நலனுக்கு பாதகமானது. பிரபாகரனைக் காப்பாற்ற வேண்டின் இப்படித்தான் முடிவெடுக்கலாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற விடாது தடுக்கின்றனரா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அம்மக்கள் ஏன் வன்னியை விட்டு வெளியேற வேண்டும், அம்மக்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.//

    பாவமம் சம்பந்தர் அவராக எதையும் சொல்லவில்லை. சொல்ல வைக்கப்பட்டுள்ளார். வன்னியில் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களனைவரும் எந்தெந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் என்ற உண்மைகள் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குத் தெரியவில்லை. அவர்கள் எல்லோரும் வன்னியைச் சேர்ந்தவர்கள் என்று உதார் விடுகின்றார். ஒவ்வொரு தொகுதியிலும் (தனது தொகுதி உட்பட) எவ்வளவு தொகை மக்கள் வாழ்ந்தார்கள் என்பது எந்தக் கூத்தமைப்பு உறுப்பினருக்கு தெரியுமோ தெரியாது. இந்த நிலையில் இவர்கள் எல்லாம் மக்களின் பிரதிநிதிகளாம். எங்கே போய் முட்டுவதோ தெரியவில்லை. அரசு இவர்களை சந்திப்பிற்கு அழைக்காவிட்டால், தம்மை அழைக்கவில்லை என ஊர் ஊராக அழுது புலம்புவார்கள். அழைத்தால் தாம் கலந்து கொள்ள மாட்டோமென்று அறிக்கை விடுவார்கள். அரசு அழைத்துவிட்டால் சுற்றுலாவில் நிற்கும் 90வீதமான கூத்தமைப்பினர் சுற்றுலாவை கைவிட்டு நாடு திரும்பி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியுமா என்ன?? கூத்தமைப்பினருக்கு மக்களாவது மண்ணாங்கட்டிகளாவது, எவர் எக்கேடு கெட்டால் யாருக்கென்ன??

    Reply
  • BC
    BC

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல.
    புலிகளின் நலன் காப்பதே அதனுடைய கடமை.

    Reply
  • பல்லி
    பல்லி

    கூத்தாடிகளை திருத்தவே முடியாது. தமிழர் பிரநிதியென முழங்கி கொண்டு தமிழர் பற்றி பேச அழைக்கும் போது மாட்டேன் என அடம்பிடிப்பதும் தமிழர்க்கு செய்யும் துரோகம்தானே. இவர்கள் இனி சாப்பாட்டுக்கு மட்டுமே வாய் திறக்கட்டும்.

    Reply
  • ramanathan
    ramanathan

    சர்வதேசநாணயநிதிய காசை பெறுவதற்கு ஆலாய்பறந்து திரியும் அரசாங்கம்
    1.புலம்பெயர்ந்த தமிழர்களை சந்திக்க ஒரு ஒன்று கூடல் என உலகத்தை பேய்க்காட்டி தாம் தமிழர் தரப்பின் சர்வதேச சக்திகளையும் சந்தித்து கொளவதான ஒரு முகம்
    2.தமிழ் தேசிய கூட்டமைப்பை திடீன ஒரு அஜன்டா வைத்து கூப்பிட்டது. இதன் மூலம் மகிந்த தான் தமிழர் தரப்பினருடன் அரசியல் பேசுவதாக போக்கு காட்டவே இந்த அழைப்பு

    இங்கு முதலாவது தொகுதியில் கொஞ்ச பேர் மகிந்தவின் கட்டைசம்பலும் பால் சோறும் ஈரப்பிலாக்காயும் சாப்பிட வெளிக்கிட்டினம் …………… ……………………… இப்படி போற கூட்டத்தை தான் மகிந்த பிரச்சாரப்படுத்தி வெளிநாட்டு உதவியை பெற முயற்சிக்கு வழி தேடியுள்ளார்.

    இன்னும் ஒரு மாதத்துக்கு தேவையான திறைசேரி இருப்பும் ஆயுதமும் முடிந்தவுடன் சிராந்தி ராஜபக்சவின் நகையை அடைவு வைக்கவேண்டிய கட்டாயத்துக்கு வட்டுக்கு போட்டுது சிறிலங்காவின் பொருளாதாரம்.

    இவற்றை மூடிமறைத்து மகிந்த உலகத்துக்கு சித்தரிக்கும் அரசியல் சித்துவிளையாட்டு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்க கோரியது.

    Reply
  • மாயா
    மாயா

    இவங்க ஆயுதம் ஏந்தாத புலிகள்.
    சமாதன பேச்சு நடத்திய புலிகள் மாதிரி மற்றொரு கூட்டம் இது. இவர்களும் புலிகள் மாதிரி அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

    Reply
  • BC
    BC

    அப்போ நிபந்தனை அற்ற பேச்சுக்கு தயார் என்று நடேசன் கெஞ்சுவதும் மகிந்தாவிற்க்கு உதவுவதற்கான சித்துவிளையாட்டா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இராமநாதன் பேசாமல் நீங்கள் கூத்தமைப்பினருக்கு அறிக்கைகள் எழுதிக் கொடுக்கும் வேலையைச் செய்திருக்கலாம் என எனக்குத் தோன்றுகின்றது. ஏனெனில் இப்படிச் சிந்தனை கூத்தமைப்பிலுள்ள (வெளிநாட்டில் சுற்றுலாவில் நிற்பவர்கள் உட்பட) எவருக்கும் தோன்றவில்லை. இதற்கு முன்பும் பலதடவை அரசு கூத்தமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதெல்லாம், கூத்தமைப்பினர் வன்னி உத்தரவிற்கமைய அவற்றை ஏதாவது ஒரு சாட்டுச் சொல்லி புறக்கணித்தே வந்தன. பின்பு இப்படியான கூத்தமைப்பினரின் நிலைப்பாட்டினால் அரசு அவர்களை அழைக்காமல் விடும் போதெல்லாம், ஐயகோ எம்மை அரசு புறக்கணிக்கின்றது என்று ஒப்பாரி வைப்பதும் தானே தொடர்கின்றது. இதனால் இப்படியான விடயங்களை சர்வதேச நாணய நிதியம் கணக்கிலெடுப்பது குறைவு. மாறாக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமெனக் கூறி அரசிற்கு அள்ளிக் கொடுப்பவர்கள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.

    Reply
  • s.s.ganendran
    s.s.ganendran

    அறிக்கை நண்றாகத்தான் இருக்கு, ஆனால் அறிக்கை விட்ட மறு நிமிடமே சம்பந்த்தனார் மகிந்த்தவுக்கு தொலைபேசியில் சொல்லியிருப்பார் குறைநினைக்கவேண்டாம் உங்களுக்குத்தெரியும்தானே என்னுடன் இருப்பவர்களின் நடவடிக்கைகள் அதனால் உங்களின் அழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில் நான் வந்த்து உங்களை சந்த்திக்கிண்றேன் ஆனால் பத்திரிகைகளுக்கு மட்டும் சொல்லிப்போடாதேங்கோ சார் என சூசகமாக சொல்லியிருப்பார். அவருடன் இருந்த்தவர்களுக்கும் இப்போ இருப்போருக்கும் சம்பந்த்தனின் இவ்வகையான நடவடிக்கைகள் நண்றாகவே தெரியும்

    Reply
  • Kusumpan
    Kusumpan

    கூத்தமைப்பின் நிலையில் அவர்கள் செய்தது சரியே. காரணம் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போல் சாகவிரும்புகிறீர்களா? பிடரியில் புலியின் துப்பாக்கியிருக்கும் போது இவர்களால் எப்படி தனியாக ஒரு முடிவை எடுக்க முடியும். அவர்களைப் பாராளுமன்றம் அனுப்பியதே புலிகள் தானே. இவர்கள் பேசப்போகமாட்டார்கள் என்பதை எமக்கு முன்கூட்டியே தெரியுமே. என்ன புதிதாகச் செய்யப்போகிறார்கள்.

    Reply
  • padamman
    padamman

    தமிழ் தேசியக் கூத்தமைப்பு தான் இன்று முதலாவது தேசதுரோகிகள் புலிகளின் அழிவின் பின் அவர்களின் நிலமை? வன்னிமக்கள் அவர்களை இல்லாதுதொளித்து விடுவார்கள் அது அவர்களுக்கும் நன்றக தெரியும்

    Reply