சூடாக தேநீர் அருந்தினால் ஆபத்து

cap-of-tea.jpgஅதிக சூட்டுடன் ஆவி பறக்க தேநீர் அருந்துவதால் தொண்டையில் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சுடச்சுட தேநீர் அருந்தும் பழக்கம் உடையவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தான் இது. உங்களின் இந்தப் பழக்கத்தால் தேவையில்லாமல் ஆபத்தை விலைக்கு வாங்குகிறீர்கள்.

சூடாக தேநீர் அருந்துவதால் தொண்டயில் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக, இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டெஹ்ரானைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ரெஸா மலெக்சாதே தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், லண்டனில் மேற்கொண்ட இந்த ஆய்வில், தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300 பேரின் தேநீர் அருந்தும் பழக்கம் ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல் புற்று நோய் பாதிப்பில்லாத 570 பேரின் தேநீர் அருந்தும் பழக்கமும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இதில், கோப்பையில் தேநீர் ஊற்றிய 4 நிமிடங்கள் கழித்து அதைப் பருகுவோரைக் காட்டிலும், 2 நிமிடங்களுக்குள் தேநீரைப் பருகி முடிப்போருக்கு தொண்டைப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

எனினும் தேநீர் குடிப்பதற்கும் புற்று நோயுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • BC
    BC

    எது எல்லாம் சுவையான உணவே அது எல்லாம் ஆரோக்கியத்துக்கு கெடுதல்.இப்போ சுடச்சுட தேத்தண்ணி குடிப்பதை கூட விடமாட்டார்கள் போலிருக்கிறதே!

    Reply
  • பல்லி
    பல்லி

    என்ன கொடுமை இது பி சி. அப்ப இனி காலையில் மாலையில் அருந்துவதை பருக வேண்டியதுதான்.

    Reply