தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும். : சேனன்

Senan._._._._._.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளுக்கு எதிராக மார்ச் 21ல் லண்டன் கொன்வே ஹோலில் இடம்பெற்ற சந்திப்பில் சேனன் வழங்கிய உரையின் சாரம்சம் இங்கு தொகுக்கப்பட்டு உள்ளது. பெப்ரவரி நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் இடம்பெற்ற இப்போராட்ட முன்னெடுப்புக் கூட்டத்தில் சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க சர்வதேச இணைப்பாளராக சேனன் தெரிவு செய்யப்பட்டு இருந்தார். ஏப்ரல் 8ல் உலகின் பல்வேறு நகரங்களிலும் இலங்கை அரசின் படுகொலைக்கு எதிரான கண்டனப் போராட்டங்களை முன்னெடுக்க இப்போராட்டக் குழு திட்டமிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
._._._._._.

நாம் இங்கு ஒரு மிக முக்கியமான கூட்டத்தில் கூடி இருக்கிறோம். எல்லோருக்கும் தெரியும் இலங்கையில் வட-கிழக்குப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்று. இப்பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் சாய்ந்ததின் பின்னர் அமெரிக்காவும் ஆளும் வர்க்கங்களும்  தாம் எந்த வகையான கொலைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கிலும், அதே போல இதர அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் இப்படியான  யுத்தங்களை செய்து கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியே இலங்கையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஈராக்கில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம். இதற்குப் பிறகு இந்த ஆளும் வர்க்கம் தான் எதையும் செய்யலாம் என்ற போக்கில் இலங்கையில் இந்த யுத்தத்தை திறம்பட நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு பரீட்சார்த்த களமாகவும், இலங்கை அரசக்கு தமிழ் பேசும் மக்கள் மீது தனது விருப்பத்திற்கேற்ப  எதேட்சாதிகாரப் போககை நடாத்துவதற்கும் இடமளித்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான உறவுகள், போர்த் தந்திரங்கள், போர் நடைமுறைகள், சர்வதேச உறவுகள், முதலாளித்துவ அரசுகளின் பொருளாதார உறவுகள், ஆளும்வர்க்கம் தனது வர்க்திற்கான உதவிகள் எல்லாமே இந்த யுத்தத்தில் மிகவும் கெட்டித்தனமாக பாவிக்கப்படுவதை பார்க்க்க கூடியதாக உள்ளது.

வடக்கு – கிழக்கு நிலைமைகள் எப்படி கையாளப்படுகிறது, அங்கே நடக்கும் கொலைகள், அங்குள்ள அரசியல்ப் பிரமுகர்கள் தேசிய மயமாக்கல் என்று அரசு உள்வாங்குதல், தெற்கில் பத்திரகையாளர்கள் கொல்லப்படுவது, வெள்ளைவான் கொலைகள், ஜனாதிபதியின் சகோதரர் பத்திரகைச் சுதந்திரத்துக்கு கொடுக்கும் விளக்கம் போன்ற விடயங்கள்; என்ன விடயத்தை எமக்கு எடுத்துக் காட்டுகிறது என்று நாம் சிந்திக்க வேண்டும்? ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்றும் சிந்திக்க வேண்டும்.

உலக வங்கி இலங்கையை  red list  பண்ணிய பிறகும், தெற்கில் மக்கள் அன்றாட தேவைகளுக்கு அரிசி மா. எண்னைக்கு படும்பாடுகள். ஆனால் அரசு இராணுவத் தேவைக்கு செலவிடும் தொகை மிக மிக அதிகம். ஆனால் இதை சர்வதேச சமூகமும் உலக நிதி நிறுவனங்களும் பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? இதில் தமது நலன்கள் பாதிக்கப்படவில்லை என்பதலேயேதான் இவர்கள் இப்படி பார்த்துக் கொண்டீருக்கிறார்கள்.

சர்வதேச நாணய நிதியம் தனது இலங்கைக்கான அலுவலகத்தை மூடியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன்களை கடன் கேட்டும் உள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழமைபோல தனது கட்டுப்பாடுகளை வைத்தே இந்த உதவியை செய்யும். இதனால் கஸ்டப்படப் போவது ஏழை மக்களும் தொழிலாளிகளுமே. இது 70 சதவிகித இராணுவச் செலவீனத்தை கொண்ட நாட்டில் மேலும் ஏழைகளின் தொழிலாளிகளின் வாழ்க்கையில் பதிப்புக்களையே வளர்க்கும.

மிகக் குறுகிய காலத்தில் 3000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இது அண்ணளவான கணிப்பீடு. சர்வதேச அமைப்புக்களோ ஊடகவியலாளர்களோ இல்லாத இந்தப் பிரதேசத்தில் வேறு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் உள்ளது.

ஜனவரி 2ம்திகதி கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பிறகு தமிழ் மக்கள் 250,000 பேரை ஒரு மூலைக்குள் ஒடுக்கி வைத்து உணவு, நீர் வசதிகள் இல்லாது விட்டுவிட்டு மட்டுமல்ல இவர்கள் மீது குண்டும் போடுகிறது இலங்கை அரசு. அந்தப் பகுதிக்கு எந்த ஊடகவியலாளர்களையோ, சர்வதேச உதவி நிறுவனங்களையோ அனுமதிக்காது எல்லாவித தொடர்புகளையும் துண்டித்துவிட்டு இப்படி செய்வது உலகில் என்றுமே நடக்காத ஒருவிடயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை இந்த சர்வதேச சமூகம், என்றும் மனிதாபிமானம் உள்ள சமூகம் என்பவர்களும், இந்தியாவும் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது.

தப்பி வரும் மக்கள் குறுக்கு விசாரணைகள் என்ற பெயரில் மேலும் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் எப்படியான சூழ்நிலைகளிலிருந்து வருகிறார்கள் என்ற மனித நேயம் அற்று இவர்களிடம் குறுக்கு விசாரணைகள் நடத்தப்படுகிறது. இந்த மக்கள் இராணுவம் மீது பயப் பீதியையே கடந்த 25 வருடங்களாக கொண்டுள்ளனர். இப்படியான மக்கள் மீது குறுக்கு விசாரணைகள் குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்வது போன்றவை மனித உரிமைமீறல்களே!

இந்த மோசமான அரசக்கு எதிராக யார் என்ன செய்ய முடியும்? எதுவுமே செய்ய முடியாது என்று உணர்கின்ற தமிழர்கள் தம்மை தாமே எரியூட்டிக் கொள்கிறார்கள். இது எதுவுமே செய்ய முடியாத நிலையிலிருந்தே வருகிறது. இப்படியான செயல்கள் சரியானத அல்ல. ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மிகக் கொடுமையான அரசு, மிக கொடுமையாக நடாத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள், தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதும் அங்கவீனர்களாவதும், தனது சொந்த உறவுகளுக்கு இப்படி நடப்பதை அவர்கள் என்ன செய்ய முடியும்? எதுவுமே செய்ய முடியாத நிலையிலும் யாரும் இந்த விடயங்களை தட்டிக் கேட்காத நிலையிலும்தான் இந்தக் தீக் குளிப்புக்கள் நடைபெறுகின்றது என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனால்த் தான் நாம் இங்கே கூடியுள்ளோம். அத்துடன் நாம் என்ன செய்ய முடியும் எப்படி செய்ய முடியும் என்ற ஆய்வுகளை செய்து செயற்ப்பட வேண்டும். சிலர் சொல்லக் கூடும் – இந்தியா உதவலாம் சர்வதேசம் உதவலாம் என்று. நாம் இது பற்றியும் யோசிக்க வேண்டும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று.

இந்தியாவின் அண்மைக்கால இலங்கை பற்றிய  நிலைப்பாடுகளைப் பார்ப்போமானால்; 2000 மார்ச்சில் இந்தியா இலங்கையுடன் ஒரு சுதந்திர வர்த்தகத்திற்கான ஒப்பந்தத்தை செய்தது  இதனால் இலங்கையின் இந்தியாவிற்கான வியாபாரத்தில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது, இந்த ஒப்பந்தத்தின் படி இலங்கையில் உற்ப்பத்தி செய்யப்படும் பொருட்களில் 95 சதவிகித பொருட்கள் வரி இல்லாமல் இந்தியாவிற்குள் வருகிறது. இது இந்தியாவின் அடுத்த மாநிலம் போன்றே செயற்ப்படுகிறது. இதே போல பாரிய மாற்றங்களுக்கு இந்திய – இலங்கை வர்த்தக நிலைமைகள் மாற்றமடைந்துள்ளது. 28வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது 13வது இடத்திற்க்கு தனது திறந்த பொருளாதார மாற்றத்தை திறந்ததின் மூலம் பல்வேறு பல்தேசியக் கம்பனிகளை இலங்கை மக்களின் உழைப்பை சுரண்ட திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேற்க்கத்தய இந்திய கம்பனிகள் தற்போது இலங்கையில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது இலங்கையில் 50 சதவிகித்திற்கு அதிகமான வங்கிகள் வெளிநாட்டுக் கம்பனிகளாகும் மேலும் பாரிய 4 இந்திய வங்கிகள் தற்போது வந்துள்ளது.

இலங்கையில் உள்ள பாரிய கம்பனிகளான எண்ணைக் கம்பனி, தேயிலைக் கம்பனி, பஸ் கம்பனி ஆகியன தற்போது இந்தியாவின் கைகளிலேயே உள்ளது இதிலிருந்தே இந்திய அரசியற் கொள்கைகள் இலங்கையுடன் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் இது எதை சொல்கிறது என்றால் இந்தியா இலங்கையுடன் இனிமேல் பகைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்பதேயாகும்.

இலங்கைக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளில் பாக்கிஸ்தான் சீனா இரு நாடுகள். ஆகவே இந்தியா இலங்கையை குழப்பாமல் இருக்க வேண்டிய தேவையும் உள்ளது.

ஐனவரி மாதம் 27ம் திகதி பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விஜயம் செய்கிறார். அன்று 46 தமிழர்கள் வன்னியில் கொல்லப்படுகினறனர். 178 தமிழர்கள் அங்கவீனர்களாகி உள்ளனர். யுத்தம் பற்றி இந்த மக்கள் பற்றி ஒரு வசனம் பேசாமல் போகிறார் என்றால் இந்தியா இலங்கைக்கு என்ன சொல்லுகிறது? இந்தியா இலங்கைக்கு எதுவரை? போய் உதவி செய்கிறது என்பதை பார்க்க வேண்டும் இதேவேளை இலங்கை இந்தியாவிற்கு எதை காட்டடியுள்ளது என்றால் நாம் “தமிழர்களைக் கொல்லுவோம்” என்று தெட்டத் தெளிவாக கூறியுள்ளது என்பதேயாகும். இதை இலங்கை அரசு இந்திய ஆளும் கட்சியுடன் கைகோர்த்த படியேதான் இதை சொல்லியுள்ளது.

65 மில்லியன் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் மக்கள் தீக்குளிக்கிறார்கள் ஆளும் வர்க்கத்தை தமிழ் நாட்டிலும் சரி மத்திய அரசிலும் சரி நம்ப முடியாது மக்கள் கோசமிடுகிறார்கள். இந்த கோசமிடும் மக்களை எப்படியாவது அடக்கிவிடுகிறார்கள். எல்லா கட்சிகளுமே தமது தேர்தல் கூட்டணிக்காகவே இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றிப் பேசுகிறார்கள். சர்வதேச தமிழர் பாதுகாப்பாளர் வை. கோ கூட இதைத்தான் செய்கிறார்.

பிரிட்டன், அமெரிக்கா  எத்தனையோ தரம் யத்தத்தை நிறுத்தும்படி கேட்டும் இலங்கை மறுத்து விட்டது. இவர்கள் ஏற்கனவே ஈராக் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தமது இரத்தம் தோய்ந்த கைகளுடன் இருப்பவர்கள் எப்படி இலங்கைத்தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த முடியும் இவர்களிடமிருந்து நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது.

பிரிட்டனின் அமைச்சரவையில் புலிகளின் அழிப்பின் பின்னர் தான் நிரந்தர சமாதானம் வரும் என்றெல்லாம் சில மாதங்களுக்கு முன்னர் பேசப்பட்டது. இது எல்லாமே தமது அடுத்த வர்த்தக நோக்கங்களை அடிப்டையாக வைத்தே பேசப்பட்டதே அன்றி தமிழர்களை பாதுகாக்கும் நோக்குடன் அல்ல.

இப்படித்தான் தான் இந்தியாவின், சர்வதேசத்தின் அக்கறையும் உள்ளது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 250,000 மக்கள் பட்டினியாலும் குண்டுகளாலும் கொல்லப்படும போது எமக்கு அந்த மக்களில் அக்கறையுண்டு என்று சொல்வதில் மட்டுமே அக்கறை. தமிழ் மக்களில் அல்ல என்பது தெட்டத் தெளிவானதேயாகும். இது மட்டுமல்ல Obama for tamils –  Tamil for Obama ம் எப்படியான பேய்க்காட்டல்கள் என்பதும் எப்படியாக ஒப்பேற்றப்பட்டு தமது தேர்தல் மற்றும் ஆளும் வர்க் நலன்கள் பேணப்படுகிறது என்பதும் எமக்கு தெட்டத் தெளிவாகிவிட்ட தொன்றாகும்.

இந்த யுத்தத்தை யாரும் நிறுத்தப் போவதில்லை. யார் எது என்ன சொன்னாலும் தமிழர்கள் தான்  போராட வேண்டும். இங்கு வெளி நாட்டிலுள்ள தமிழர்கள்தான் போராட வேண்டும் அதைத்தான் அந்த தமிழர்கள் செய்கிறார்கள். பிரிட்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், இந்தியா போன்ற நாடுகளில்  செய்யப்படும் போராட்டத்திற்குத்தான் அரசுகள் பயப்படுகிறது. ஆகவே போராட்டம் தான் ஒரே வழி அதைத்தான் தொடரந்தும் செய்ய வேண்டும். கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களுக்கு இந்திய அரசம் இலங்கை அரசம் எவ்வாறு பயந்து போயிருந்தன என்பதும் அதன் வெளிப்பாடுகளுமே சாட்சியமாக உள்ளது.

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்.

நாங்கள் சென்னையில் முன்னணி இடது சாரிகளையும் எழுத்தாளர்களையும் அரசியல் வாதிகளையும் அழைத்து இந்தப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளோம். United Socialist Party சிறீதுங்க ஜெய சூரிய இந்தப் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் ஒரு சிங்கள மகன் தனது நாட்டின் மற்ற சகோதர தமிழ் மக்களுக்காக இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். அங்கு ஒரு கமிட்டியும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கமிட்டியே மத்திய கமிட்டியாக செயற்ப்படும் என்றும் அன்று ஏப்ரல் 8ம் திகதியை ஒரு சர்வதேச பிரச்சார தினமாகவும் தெரிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கே இன்று ஒரு கமிட்டியை தெரிவு செய்ய உள்ளோம் இது ஜரோப்பிய அமெரிக்க நாடுகளின் பிரச்சாரத்தை முன்னின்று நடாத்தும். அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • visa
    visa

    புலிகள் மீதான தாக்குதலை விட்டுவிட்டு…. தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மற்றும் தமிழ் மக்கள் மீதான் திட்டமிட்ட ஒடுக்கு முறை என்பனவற்றிற்கு எதிராக போராட்டத்தை நடாத்த சிங்கள் இடசாரி முற்போக்கு காரர்களை இனணத்து நடாத்துவது என்பது ஒரு சரியான முன்னெடுப்பாகும்.

    ஆனால் அரசாங்கம் நினைத்தால் புலிகளையும் புலிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களையும் கொன்று குவிப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டும்.

    ஆகவே எதிர்காலத்தில் நாம் சோ்ந்து வாழப்போகும் எம்சமூக சனங்களைப்பற்றி சிந்திப்போம்…..
    எமது சமூகத்திற்குள் உள்ள புலி போன்றவர்களை அவர்கள் துடைக்கட்டும். ஏனெனில் அது அவர்களுக்கும் தாக்கத்தை கொடுக்கிறது. எங்களால் அதை துடைத்தெறிய முடியவில்லை….

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சேனனின் பார்வை வெறுமனே அரசாங்கம் மட்டுமே தவறு செய்வது போல் வந்துள்ளது. புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்கியுள்ளார். காரணம் பயமோ அல்லது ஆதரவு நிலையோ என்பதை அவர் தான் விளக்க வேண்டும். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின் பயங்கரவாத்தினை ஒடுக்க பரவலான தாக்குதல்கள் முன்னெடுக்கப் பட்டதென்பதற்காக, இலங்கையில் தற்போது தொடரும் போருக்கும் அது தான் காரணம் என்பது நொண்டிச் சாட்டு. புலிகள் மாவிலாறில் அணைக்கட்டை தடுத்தமை, பின்பு மூதூரில் வலிந்த தாக்குதலை மேற்கொண்டமை போன்றவற்றினாலேயே,அரசு புலிகள் மீதான போரை தொடர்ந்து முன்னெடுக்கத் தலைப்பட்டது. அப்போது கூட புலிகள் பல வீர வசனங்கள் பேசுவதிலேயே காலத்தைக் கடத்தினார்கள். தங்களுக்கு இந்த நிலை ஏற்படும் என்பதை அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். புலிகளின் வீர வசனங்களை வைத்து புலம் பெயர் தமிழர்கள் சிலரும் புலிகள் இராணுவத்தினரை உள்வாங்கி வெழுத்து வாங்கப் போகின்றார்கள் என்று கனவு காணத் தொடங்கினர். இப்படியான கனவுகள் இன்று இன்றைய நிலையை ஏற்படுத்தும் என்று புலம்பெயர் சில தமிழர்களும் நினைத்திருக்கவில்லை.

    வன்னிக்கு அரசோ அல்லது உலகப் பொது நிறுவனங்களோ அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருட்களோ ஏனைய பொருட்களோ முதலில் புலிகளைத் தான் சென்றடைகின்றன. அவர்கள் தமக்குப் போதியளவு எடுத்த பின் மிஞ்சுபவை மாத்திரமே மக்களைச் சென்றடைகின்றன. (முன்பு யாழில் இந்திய அரசு விமான மூலம் போட்ட உணவுப் பொதிகளை மக்கள் எடுக்க புலிகள் அனுமதிக்காமல் அனைத்தையும் புலிகளே எடுத்தும் பறித்தும் சென்றனர் என்பது அன்று யாழில் இருந்த அனைத்துத் தமிழ் மக்களும் அறிந்த ஒன்றே) சிறார்களுக்கு வந்த அதி ஊட்டச்சத்து நிறைந்த பிஸ்கட்டைக் கூட புலிகள் பறித்துச் சென்றுள்ளனர். இதன் பின் மக்கள் பட்டினியால் வாடுகின்றார்கள் என்று புலிகளோ புலியாதரவாளர்களோ யாருக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்??

    நீண்ட காலமாக புலிகளுக்காக வக்காலத்து வாங்கி என்னுடன் கதைத்து வந்த பெண்மணியொருவர்,நேற்றைய தினம் எனக்குத் தொலைபேசி எடுத்துச் சொன்ன சேதி எனக்கு அவவின் மீது பரிதாபத்தைத் தான் ஏற்படுத்தியது. அவவின் சகோதரியொருவர் புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பிக்க முயன்ற போது புலிகளால் சுடப்பட்டு வயிற்றில் குண்டு பாய்ந்தாகவும் பின்பு செஞ்சிலுவைச் சங்கம் அவவை திருகோணமலைக்கு கப்பல் மூலம் அனுப்பபி வைத்து, தற்போது காப்பாற்றப்பட்டு விட்டாரெனவும் தெரிவித்தார். தனது சகோதரியோடு ஒரு குடும்பமும் இரு பிள்ளைகளுடன் தப்பிச் செல்ல முயற்சித்தாகவும் அவர்கள் மீதும் புலிகள் துப்பாக்கிச்சூடு நடாத்திய போது தகப்பனாரும் ஒரு மகனும் தப்பியோடி விட்டதாகவும் தாயும் ஒரு மகனும் தொடர்ந்து ஓட முடியாது ஒரு பதுங்கு குழிக்குள் பதுங்கிய போது, அவர்களிருவரையும் புலிகள் புதுங்குகுழிக்குள் வைத்தே சுட்டுத் தள்ளி விட்டார்கள் என்றும் கூறினார். இவ்வளவு காலமும் புலிகள் இப்படியொன்றும் செய்வதில்லையே என்று வாதாடுவீர்களே என்று நான் கேட்டபோது, தான் வீம்புக்காகவே இவ்வளவு காலமும் வாதாடினேன். இன்று எமக்கே இழப்பு வரும்போது தான் உண்மைகள் உறுத்துகின்றன என்று என்னிடமே ஒப்புக் கொண்டார். இது தான் இன்றைய நிலைமைகள். எம்மில் சிலர் இன்றும் கூட வன்னி மக்களுக்குக் குரல் கொடுப்பதுபோல் புலிகளை மட்டுமே காப்பாற்ற முன்னிற்கின்றார்களே ஒழிய அங்கு சிக்குண்டிருக்கும் அப்பாவி மக்களையல்ல.

    Reply
  • murugan
    murugan

    சேனனின் பார்வை வெறுமனே அரசாங்கம் மட்டுமே தவறு செய்வது போல் வந்துள்ளது. புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்கியுள்ளார். காரணம் பயமோ அல்லது ஆதரவு நிலையோ என்பதை அவர் தான் விளக்க வேண்டும்”

    பயமோ ஆதரவு நிலையோ அல்ல. தாம் நல்லவர்கள் வித்தியாசமானவர்கள் மென்மையானவர்கள் எனக் காட்டுவதற்கே.

    இன்னமும் அரசு என்பது எல்லாவற்றிற்கும் பொறுப்புக் கூறவேண்டியது என்ற ஒரு எதிர்பார்ப்பும் இவர் மாதிரி ஆட்களிடம் உண்டு.

    Reply
  • தொப்புளில் பிள்ளைப்பூச்சி
    தொப்புளில் பிள்ளைப்பூச்சி

    United Socialist Party சிறீதுங்க ஜெய சூரியாவும் சிங்கள இடதுசாரிகளான “நவசமசமாஜ கட்சி” போல், தன்னுடைய கடைமையை சரியாக செய்கிறர்கள்(எப்போதும் போல்). தமிழக தமிழரும், நீங்கள் காட்டும் அங்கவீன போட்டோக்களை பார்த்து ,தங்கள் அனுதாப உணர்ச்சிகளை சரியாகவே காட்டுவதாக தெரிகிறது. ஆனால் “கிட்டு மாமா” வை பயன்படுத்தி, பிரச்சார பிரிவு என்ற போர்வையில், “நான் கடவுள் படத்தில் வருவதுபோல்(ஆகோரி)” குழந்தைகளை கைகால்களை முறித்து, இரத்தம் சொட்ட சொட்ட “புகைப்படம்” எடுக்கும் “அரசு சார்பற்ற நிறுவன கலாச்சார அணுகுமுறை” சரியானதுதானா? என்று, “இலங்கைத் தமிழர்கள்தான்”, விஷயங்கள் போகிற போக்கை வைத்து முடிவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

    Reply
  • BC
    BC

    பார்த்திபன், சேனன் என்ன சொல்கிறார். யார் எது என்ன சொன்னாலும் தமிழர்கள் தான் போராட வேண்டும். இங்கு வெளி நாட்டிலுள்ள தமிழர்கள்தான் போராட வேண்டும் அதைத்தான் அந்த தமிழர்கள் செய்கிறார்கள். பிரிட்டன் கனடா ஜேர்மனி பிரான்ஸ் சுவிஸ் இந்தியா போன்ற நாடுகளில் செய்யப்படும் போராட்டத்திற்குத்தான் அரசுகள் பயப்படுகிறது. ஆகவே போராட்டம் தான் ஒரே வழி அதைத்தான் தொடரந்தும் செய்ய வேண்டும என்கிறார்.
    செய்யுங்கோ. எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே கடவுளுக்கே அவன் நிகரானவன்.

    Reply
  • MANITHA NEYAN
    MANITHA NEYAN

    WE CAN NOT REDESIGN THE BOAT MIDDLE OF THE STORM BUT WE CAN THINK OF THE FUTURE THIS HAS BEEN SAID BY MR GORDON BROWN.IN FACT I THINK WE WOULD THINK WHATS IS BEST FOR TAMILS AND SINGALESE.

    SRILANKA THINK TANK IS SINGALA MAJORITY WITHOUT THEM WE CANT BRING A PEACE DEAL OR ANY SOLUTION.

    TO FIND A WAY OF UNITY WITHIN COMMUNITIES WE HAVE TO WORK WITH SINGALESE PEOPLE,

    MR SENAN IDEA IS GREAT FOR TAMIL COMMUNITY. WORK WITH SINGALESE PEOPLE.

    STUPIDLY AGGRESSIVE WAY TO DEAL THINGS WILL DAMAGE, UNSSUMING THINKING WILL CREATING WORSE.

    WE NEED PEOPLE THINK OF FUTURE,ONLY FUTURE.

    Reply
  • senan
    senan

    இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக உலகளவிலான எதிர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் அணிதிரட்டல் முயற்சி தமிழர்கள் மட்டும் பங்கெடுக்கும் ஒன்றல்ல. தமிழர்களை மட்டும் மையப்படுத்தி கருத்துக்களை வலியுறுத்தியதாக எனக்கு ஞாபகமில்லை. ஆங்கில ஒலிப்பதிவில் இருந்து தமிழ்படுத்துவது மிகவும் சிரமமான வேலை. அதனால் சில கருத்துக்கள் மருவியுள்ளது. கூட்டத்தில் தேசம்நெற் உட்பட மற்றயவர்கள் வைத்த கருத்துக்களையும் இனைத்திருக்கலாம்.

    பார்த்திபன்
    நாம் இன்று புலிஎதிர்ப்பு மையத்துக்குள் நின்று பேச மறுப்பதன் பின்னால் பல காரனங்கள் உண்டு. புலி எதிர்ப்பை மட்டும் அரசியலாக செய்யும் பலருக்கு –சங்கரி உட்பட- இன்றய நிலமை சங்கடத்தை உண்டுபண்ணியுள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கிறது. அரச அதிகாரத்தின் ஏதாவது ஓரு கன்னைக்குள் விழாமல் பேசுவது உங்களுக்கு சிக்கலே. ‘புலிகளின்’ சார்பில் இன்று எழும் எதிர்ப்புகளின் ஒற்பனும் ‘புலிஎதிர்ப்பு’ கன்னை சார்பில் ஏன் எழவில்லை? இதற்கு பின்னால் இருக்கும் சமூகவியல் என்ன? அது கிடக்க புலிகளையும் அரசையும் ஒரே தளத்தில் வைத்து மொக்குத்தனமான ‘நடுநிலை’ பேச நாம் தயாரில்லை. இதுபற்றி விரிவாக பின்பு பேசுவோம்

    http://www.stoptheslaughteroftamils.org/

    Reply
  • அகமட்
    அகமட்

    புலிகளை அனைவரும் எதிர்த்தே ஆக வேண்டும் காரணம் அவர்கள் ஒரு பயங்கரவாத இயக்கம் என உலகம் ஒதுக்கிவிட்டது நாமும் நம் மக்களும் வாழப்போவது இப் பூமிப் பந்தில்தான் என்பதை மறக்கலாகாது.

    தமிழர்கள் தான் தமிழருக்காக போராட வேண்டும் ஏற்றுக் கொள்றோம் அது எப்படி வெறுமனே அரசை குறை கூறியா? அரசைக் குறை கூறும் நண்பர் அதைவிட மக்களுக்கு துன்பங்களை விதைத்த புலிகளை ஏன் குறை காணவில்லை? வன்னியில் புலிகளிடம் கஞ்சி குடித்து பங்கரில் உயிரை கையில்பிடித்துக் கொண்டிருந்ந மக்களை நிம்மதியாக சோறு கொடுத்து, உடுப்புக் கொடுத்து மருந்து கொடுத்து உயிருக்கு பாதுகாப்புக் கொடுத்து அரசுதான் பார்கிறது என்பதை சேனன் ஏன் மறந்துவிட்டார். புலி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து முதலில் வெளியில் வாருங்கள் உலகம் மிகப் பெரியது.

    அரசுக்கு அப்பகுதியில் இருக்கும் மக்களை மட்டும் காப்பாற்றுவது கடமையல்ல, மாறாக மற்ற பகுதியில் வாழும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை மறக்க வேண்டாம். சேனனின் பார்வை புலிகளை ஆதரித்துச் செல்கிறது இது தவறானது.

    சேனன் புலிகளின் தவறுகளையும் அரசின் தவறுகளையும் ஒரு கண்ணுடன் நோக்க வேண்டும்.

    மட்டக்களப்பில் முஸ்லீம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போது எத்தனை கலந்துரையாடல்களை நடத்தினீர்கள் எத்தனை ஆர்பாட்டங்கள் நடத்தினீர்கள், மூதூரில் முஸ்லீம்களை புலிகள் சுற்றி வளைத்தபோது என்ன செய்தீர்கள்? ஏன் அவர்கள் எல்லாம் எருமை மாடா? தலைவருக்கு பிரச்சினை என்றால் மட்டும் பஞ்சாயத்து தலைவர் வேசம். நன்றாக உள்ளது உங்கள் ஜனநாயகம்.

    நன்றி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பார்த்திபன்
    நாம் இன்று புலிஎதிர்ப்பு மையத்துக்குள் நின்று பேச மறுப்பதன் பின்னால் பல காரனங்கள் உண்டு. புலி எதிர்ப்பை மட்டும் அரசியலாக செய்யும் பலருக்கு –சங்கரி உட்பட- இன்றய நிலமை சங்கடத்தை உண்டுபண்ணியுள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கிறது. அரச அதிகாரத்தின் ஏதாவது ஓரு கன்னைக்குள் விழாமல் பேசுவது உங்களுக்கு சிக்கலே. ‘புலிகளின்’ சார்பில் இன்று எழும் எதிர்ப்புகளின் ஒற்பனும் ‘புலிஎதிர்ப்பு’ கன்னை சார்பில் ஏன் எழவில்லை? இதற்கு பின்னால் இருக்கும் சமூகவியல் என்ன? அது கிடக்க புலிகளையும் அரசையும் ஒரே தளத்தில் வைத்து மொக்குத்தனமான ‘நடுநிலை’ பேச நாம் தயாரில்லை. இதுபற்றி விரிவாக பின்பு பேசுவோம்.//

    சேனன்,நன்றி உங்கள் பதில் கருத்திற்கு. ஆனாலும் உங்கள் கருத்தில் நியாயமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. காரணம் புலியெதிர்ப்பு என்ற வட்டத்திற்குள் மட்டும் நின்று நான் கருத்துக் கூற விரும்பவில்லை. சகலரும் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டவே என் போன்ற பலர் விரும்புகின்றார்கள். நீங்கள் கூறுவது போல் புலிகளையும் அரசையும் ஒரே தளத்தில் வைத்து நோக்குவது மொக்குத் தனமென்றால், புலிகளும் அரசும் பேச்சுவார்த்தை நடத்தவதும் அதை விட மொக்குத் தனமாகவல்லவா போய்விடும். நீங்கள் கூறுவது போல் புலிகளின் தவறுகளை கண்டு கொள்ளாமல் வெறுமனே அரசை மட்டுமே விமர்சிப்பது மட்டும் எவ்வாறு நியாயமாகலாம். இன்று பிரித்தானியாவிலோ ஏனைய பல நாடுகளிலோ எமக்காக குரல் கொடுக்கவரும் வெள்ளைகளில் பலர் கூட எமது வாக்கு வங்கியை மையப்படுத்தியே குரல் கொடுக்க முன் வருகின்றார்கள். இந்த நிலையில் பல போலியான பிரச்சாரங்களை எம்மவர்கள் செய்வதால் உலகத்தின் கவனத்தை நம் பக்கம் திருப்பி விடலாமென்று சிலர் தவறாக நினைக்கின்றார்கள். ஆனால் இவ்வாறான பிரச்சாரங்களால் வெளிநாட்டவர் மத்தியில் எமது நம்பகத் தன்மை தான் கேள்விக் குறியாகிறது. இன்றைய பிபிசி தமிழ்ச்சேவையில் கூட புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி வந்த மக்களில் பலர் முதுகுப்புறமாகவே துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் என்பதும் அவர்கள் தப்பி வரும் போது புலிகளாலேயே சுடப்பட்டவர்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டது. அதனை நீங்களும் செவிமடுத்திருப்பீ்ர்கள். மக்களின் காவலராக தம்மை வரிந்துள்ள புலிகளின் இவ்வாறான செயல்களை என்ன பாராட்டவா சொல்கின்றீர்கள்.

    மொத்தத்தில் நீங்கள் நினைப்பது போல் “புலி எதிர்ப்பை மட்டும் அரசியலாக செய்யும் பலருக்கு –சங்கரி உட்பட- இன்றய நிலமை சங்கடத்தை உண்டுபண்ணியுள்ளதென்பது“ தவறான கருத்து. காரணம் உங்களின் இப்படியான கருத்துகளை மட்டும் உலகம் எடுத்துக் கொளளப் போவதில்லை. பரவலாக எல்லோரினதும் நிலைப்பாட்டை வைத்தே உலகம் ஒரு முடிவிற்கு வருகின்றது. அந்த நிலையில் உங்களினதும் ஒரு பக்கச் சார்பான கருத்துகள் புலி ஆதரவாளர்களின் பத்தோடு பதினொன்றாக அமைந்து புறந்தள்ளப்பட்டு விடப் போகின்றதென்ற ஆதங்கமே எம்முள் எழுகின்றது.

    பொதுவாகவே புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை மாற்றுக்கருத்தாளர்கள் என்று அடையாளப் படுத்தி, உங்களைப் போன்றவர்கள் தங்களை சார்புக் கருத்தாளர்களாக்கி தம்மை நியாயமானவர்கள் போல் காட்டும் நிலைப்பாடுகளே தொடர்கின்றன. இபபடியான செயற்பாடுகளினால் புலிகளுக்கு ஏதாவது சாதகமான நிலைகள் தோன்றுமேயொழிய, அங்கு அவதிக்குள்ளாகும் மக்களுக்கு அதே நிலைதான் தொடரும் என்பதே வருத்தமான உண்மை.

    Reply
  • santhanam
    santhanam

    முன்பு இவர்கள் எத்தனை இராணுவம் செத்தது, எத்தனை ஆயுதங்கள் கைப்பற்றினர் என்றதை வைத்தே, மோட்டு தமிழனுக்கு அவர்களை முட்டாளாக்கும் பிரச்சாரம் செய்தனர். இன்று எத்தனை தமிழன் செத்தான், எத்தனை பேர் காயம் என்று சொல்லிப் பிரச்சாரம். இப்படி இதற்குள்ளாகவே பாதுகாக்கும் அரசியல். இந்த அரசியலில் தமிழனின் மரண எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மக்களை தம்பக்கம் வைத்திருக்க கிடைக்கும் இந்தப் பிரச்சாரத்தால் மகிழ்ச்சி பூரித்துப் போக, தமிழன் தம் பின்னால் அணிதிரளுகின்றான் என்ற பெருமிதம் பொங்க அதிகார வீரநடை போடுகின்றனர்

    Reply
  • sirini
    sirini

    Hello Senan,
    One day (could be tomorrow or many years from now) you will realize or the history will tell you people with uncivilised, selfish, narrow minded view (no diplomacy) have been the first enemy of our freedom struggle(society) ever since it started.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழர்-தொழில்சங்கங்கள் எல்லாவற்றையும் புலிகள் அழித்தொழித்து புலிச்சங்கங்கள் ஆக ஆக்கிவைத்தார்கள் புலிகள். காலம் காலமாக தொழிலாள வர்க்கம் பெற்ற சகலஉரிமைகளையும் தமிழ் மக்களிடமிருந்து பறித்தெடுத்தார்கள். இதை சிங்கள பேரினவாதம் செய்யவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவேண்டும். இதில்லிருந்து புறப்பட்டதே! தமிழ்-முஸ்லீம் மக்களுக்கான பேரழிவு. ஐம்பது வீதமான மக்களின் இடப்பெயர்வுக்கும் காரணமானது. ஒரு இனம் அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டது என்றாலும் மிகையில்லை. இடதுசாரித் தத்துவத்திற்கும் தொழிலாளர் போராட்டத்திற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. வரலாறு உண்டு. தமிழ்மக்களை பாதுகாக்க வேண்டுமென்றால் புலிகளை முற்றுமுழுதாக அழித்தொழிக்க வேண்டியது முன்நிபந்தனை. என்றுமே போராட்டம் ஓய்ந்துபோவதில்லை. அது யாருக்கு? எவருக்கு என்பதில் தான் பிரச்சனை. சாராம்சத்தில் ஒன்றாக இருந்தாலும் இனவிடுதலை வேறு. வர்கப்போராட்டம் வேறு. புலிபோராட்டம் இனவிடுதலைக்கோ வர்க்கப் போராட்டத்திற்கோ எந்தப் பங்களிப்பையும் செய்யாமல் பின்னடைவையே வைத்தது இனியும் வைக்கும்.

    Reply
  • GNANI
    GNANI

    over all democratic system been wipe out.dictatorship put in place.many people were killed.
    tamils in srilanka never seen or had in life before.

    Reply
  • BC
    BC

    Santhanam, மோட்டு தமிழனுக்கு அவர்களை முட்டாளாக்கும் பிரச்சாத்தை புலிகள் செய்தனர் என்று நீங்கள் சொன்னதில் மோட்டு தமிழனுக்கு என்பதை என்னால் ஏற்க்க முடியவில்லை. அப்படியிருந்தால் வணங்கா மண் கப்பல் வன்னிக்கு விட முடியுமா? மோட்டு சிங்களவனுக்கு தலைவர் நல்ல பாடம் படிப்பிக்கிறார் என்றுதான் அறிந்துள்ளேன்.

    Reply
  • vanniyan
    vanniyan

    sirini //One day (could be tomorrow or many years from now) you will realize or the history will tell you people with uncivilised, selfish, narrow minded view (no diplomacy) have been the first enemy of our freedom struggle(society) ever since it starte.// are you saying some how the peoples must die to kill all the tigers : ce?

    Reply
  • iniani
    iniani

    ஆணையிடு தலைவா என்று கத்திய தமிழர்கள் இனி மண்டியிடுதலைவா என்றும் கத்தும் நாள் வரும்

    Reply
  • sirini
    sirini

    Hi Vannian,
    You got it wrong.
    Hitler and his group were used by the allies to destroy Germany in 1940’s.
    Because of Hitlers attitude – uncivilised, selfish, narrow minded view (no diplomacy)
    Sadam and his group were used by the same allies/USA to destroy Iraq
    Because of Sadam’s attitude – uncivilised, selfish, narrow minded view (no diplomacy)

    Prabakaran and LTTE were used by Sri Lanka and it’s allies to destroy a race called Sri Lankan tamil.
    Because Prabakaran and his groups’ attitude – uncivilised, selfish, narrow minded view (no diplomacy). The only way they know is killing people and war.
    In our case majority of Sri Lankan tamil left the country and living in western countries because of the war. That is also called destruction as well because we are the last tamil speaking generation in western world, our next generation is not going to represnt ourselves.
    So at any cost war should be stopped.
    Which is going to help in two ways to stop desstruction of Sri Lankan tamil race:

    (1)Which is going to help to stop actual killing of tamils.
    (2)Which is also going to prevent tamil people from laving Sri Lanka (Which is more important because by killing you can not destroy a race).
    Stopping the war is very important for the survival of our race.
    There was a ceasefire in 2002 LTTE breached the ceasefire agreement more than 4000 times whereas GOVT brached only 300 times (source SLMM).
    Who is in this world trust LTTE and initiate a ceasefire?

    In conclusion Prabakaran and his LTTE’s attitude is being used by the enemy to destroy our race.

    பார்த்திபன் on April 1, 2009 6:31 pm //பார்த்திபன்
    நாம் இன்று புலிஎதிர்ப்பு மையத்துக்குள் நின்று பேச மறுப்பதன் பின்னால் பல…

    Well done Parthipan very good response, I support your view.

    Reply