பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda-rajapaksha.jpgஎவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களை அலரிமாளிகையில் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு, அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களை சீர்குலைப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்வைத்த காலை எக்காரணத்திற்காகவும் பின்வைக்க மாட்டேன்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உலகமே எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாட்டு மக்கள் எனக்கு பின்னால் நிற்கின்றனர். மக்களின் ஆணையின் பிரகாரம் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.

Show More
Leave a Reply to MANITHA NEYAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

3 Comments

 • பல்லி
  பல்லி

  அது இனி உங்களாலோ அல்லது கடவுளாலோ கூட முடியாது. அப்படியே கணணையும் காதையும் மூடிக்கொண்டு சாதாம் உஸையின் போல் போய் கொண்டே இருங்கள். தடங்கல் ஏற்படும்வரை. (இதே தலைகனத்தை நாம் தேசியத்தலிவரிடம் முன்பு பார்த்துள்ளோம்)

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  வெறுமனே பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதிலேயே தீவிரமாகச்செயற்படுவதை விட, அப்பயங்கரவாதம் ஏன் தோன்றியது என்ற அடிப்படையை உணர்ந்து அதற்கான தீர்வையும் ஏற்படுத்த முன் வரவேண்டும். நாட்டில் சகல இனமக்களும் சம அதிகாரங்களுடன் வாழ வழியேற்பட்டால் பின் பயங்கரவாதத்திற்கு அங்கு வேலை ஏது??

  Reply
 • MANITHA NEYAN
  MANITHA NEYAN

  BITTER SWEET DRAMA BY RAJAPAKSA AND GOTHAPAYA.

  Reply