யாழ்.எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் சுமாா் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் மீட்கப்பட்டிருக்கின்றது.
கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் மோட்டாா் சைக்கிள் ஒன்றை சோதனையிட்டனா்.
குறித்த கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில்,அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை சுழிபுரம் காட்டு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த50 கிலோ கேரள கஞ்சாவை இராணுவத்தினா் மீட்டுள்ளனா். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் மேற்படி கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது.