1,33,000 அட்டைகள் சட்ட விரோதமானவை ‘அரசாங்கம் தேர்தலில் வெற்றிகொள்வதற்கு காலத்துக்குக் காலம் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்ற நிலையில், மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் “சட்ட விரோத வாக்காளர் அட்டை’யெனும் புதிய முறையொன்றை அரசு கையாண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையாளரின் அனுமதியின்றி இவ்வட்டைகளை அச்சிட்டு விநியோகிக்க முடியாதென்ற வகையில் இதற்கு பதிலளிக்க அவர் கடப்பாடுடையவர் என்று ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக வியலாளர் மகாநாட்டில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.