ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி நவீன் ஜின்டால் மீது ஷூ வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் ஷூ விசியவரை கைது செய்தனர்.
சமிபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஜர்னைல் சிங் ஷூவை விசி இந்திய அரசியலை பரபரப்பாக்கினார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜின்டால் இம்முறை தான் மீண்டும் போட்டியிடும் குருஷேத்ரா தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த ராம் குமார் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஜின்டால் மீது ஷூ வீசினார். ஆனால், ஷூ அவர் மீது படாமல் சென்றது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து, கூட்டத்தில் இருந்து தூக்கி சென்றனர்.
அப்போது ராம் குமார் கூறுகையி்ல, காங்கிரசின் கொள்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் ஷூ வீசினேன் என்றார்.