அமைச்சர் நாமல்

அமைச்சர் நாமல்

“இடைக்கால அரசு அமைந்தால் எனது அமைச்சுக்களை தியாகம் செய்ய தயாராகவுள்ளேன்.”- அமைச்சர் நாமல்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், அடுத்த சில நாட்களில் காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதித்தால் அரசியல் ஒற்றுமைக்காக தனது அமைச்சுக்களை தியாகம் செய்ய தயாராக உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், இது தேர்தலுக்குச் செல்வதற்கான நேரம் அல்ல, மாறாக காபந்து அரசாங்கம் நியமிக்கப்பட்டால், பதவி விலகி அரசியல் ஒற்றுமைக்கு வழி வகுக்கும். தற்போதைய உடனடி தேவை என்பது பொருளாதாரமும் ஐக்கியமும் ஆகும்.

இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு, மின் நெருக்கடி மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற விடயங்கள் அவசரமாக தீர்க்கப்பட வேண்டியதுடன், நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு அரசியல் ஒற்றுமையும் தேவையாகும்.

ஆகவே இதை மனதில் வைத்துக்கொண்டு அரசியல் ஒற்றுமைக்காக காபந்து அரசாங்கம் அமைந்தால் எனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவேன் என தெரிவித்துள்ளார்.

“நாட்டில் பணம் இல்லாததே பெரும் பிரச்சினை.” – அமைச்சர் நாமல்

கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பண்டோரா பேப்பரில் உலக செல்வந்தர்கள் கறுப்புப் பணத்தை வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது அதன்படி விளையாட்டுத் துறையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் உள்ள சில விளையாட்டுகளில் முறைகேடான இலாபத்தை முதலீடு செய்வதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

சமிந்த விஜேசிறி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார்.

கறுப்பு பணம் வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுகிறது என்றும் அனைத்து விளையாட்டு சங்கங்களும் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினை நிதிப் பற்றாக்குறையாகும் என நாமல் பதில் வழங்கியுள்ளார்.

அனைத்து விளையாட்டு சங்கங்களையும் அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடுமாறு நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.