தேசியப்பட்டியல் வேட்பாளர்

தேசியப்பட்டியல் வேட்பாளர்

வெளியானது தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தேசியப்பட்டியல் வேட்பாளர் பெயர்கள்!

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்தேர்தலின் முடிவுகளுடைய அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி என்பவற்றுக்கு தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒன்று வீதம் கிடைத்திருந்தது. இந்நிலையில் தேசியப்பட்டியல் சார்பாக இரண்டு கட்சிகளும் யாரை பாராளுமன்றம் அனுப்ப உள்ளனர் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இண்டு கட்சிகளுடைய தேசியப்பட்டியல் வேட்பாளர் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செல்வராசா கஜேந்திரன் தேசிய பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றையதினம்  அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அம்பாறை – நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.