பலாலி விமான நிலையம்

பலாலி விமான நிலையம்

பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்த 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு !

யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பலாலி விமான நிலையத்தில் புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பில் ஆராயும் வகையில் கடந்த வாரம் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

 

இந்த நிலையிலேயே தற்போது பலாலியில் காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,  தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபா நிதியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் ! – பிரசன்ன ரணதுங்க

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்தாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 02 வாரங்களுக்குள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிற்கும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் நேற்று (25.08.2020)  அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் இரு தரப்பினர்களுக்கு இடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என்பதோடு, அதனைத் தொடர்ந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையம் இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது, நிர்மாணிக்கப்பட்டது.

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு இணங்கியுள்ளது.