பொலனறுவை லங்காபுர

Monday, October 18, 2021

பொலனறுவை லங்காபுர

கொரோனா அச்சம் – பொலனறுவை லங்காபுரவில் 1000 பேருக்கு PCR பரிசோதனை.

பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டது . இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வெளியிட்டிருந்தார் . குறிப்பாக லங்காபுர பிரதேச செயலக பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட P.C.R பிரசோதனைகளில் குறித்த நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து லங்காபுர பிரதேச செயலகம் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததும் நோக்கத்தக்கது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பொலநறுவை , லங்காபுர பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் நெருங்கி செயற்பட்ட ஆயிரம் பேரிடம் PCR பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது . அதற்கமைய அவற்றின் முடிவுகள் கிடைத்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது . நேற்று இரவு மாத்திரம் குறித்த கொரோனா நோயாளிக்கு அருகில் செயற்பட்ட 325 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . பலருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகினால் பயணத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது