முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால்

“கனடா பிரதமர் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்தால் நாம் கனடா படுகொலையை நினைவுகூருவோம்.” – விமல் வீரவன்ச

“கனடாவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் 1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள். ஆகவே  எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதியை ‘கனடா படுகொலை தினம்’ என நாம்   அனுஷ்டிக்க வேண்டும்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மே 18 இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டு கனடா நாட்டு பிரதமர் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி  நாட்டை அவமதித்துள்ளார். இலங்கை தொடர்பில் கருத்துரைக்கும் கடனாவின் வரலாற்று பக்கத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம்  21 ஆம் திகதி  கனடா  நாட்டில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கனடாவில் தான் உண்மையில் இனப்படுகொலை இடம்பெற்றது. எதிர்ரும் மாதம் 21 ஆம் திகதி அந்த தினத்தை நாம் ‘கனடா இனப்படுகொலை தினம்’ என பாராளுமன்றத்தின் ஊடாக அனுஷ்டிக்க வேண்டும்.

இலங்கையில் இடம் பெறாத இனப்படுகொலையை கனடா அனுஷ்டிக்கும் போது கனடாவில் இடம்பெற்ற இனப்படுகொலையை நாம் அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

ஊடகவியலாளரை மூர்கக்த்தனமாக தாக்கிய இராணுவத்தினர் – முல்லைத்தீவில் சம்பவம் !

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது சிறிலங்கா இராணுவம் மூர்க்கத்தனமான  தாக்குதல்! - ஐபிசி தமிழ்

லங்காசிறி ஊடக நிறுவனத்தின் முல்லைத்தீவு பிராநித்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளரை ஏன் எடுக்கின்றாய் என கேட்டே நான்கு இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.