துமிந்த சில்வா

துமிந்த சில்வா

நாட்டின் நலனுக்காகவே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கினேன் – முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ

நாட்டின் நலனைகருத்தில்கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியில் தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார்.

எனக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் துமிந்த சில்வாவை சிறையில் வைத்திருப்பது அவரது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வேறு பல காரணங்களை முன்வைத்து அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எனக்கு விடுக்கப்பட்டமை நினைவில் உள்ளது என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

துமிந்தசில்வாவிற்கு நான் பொதுமன்னிப்பை வழங்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் ஆவணங்கள் காணப்பட்டன எனவும் சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ள கோட்டாபய நான் தேசிய நலனை கருத்தில் கொண்டே பொதுமன்னிப்பை வழங்கினேன் எனவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ளார்.

துமிந்தசில்வாவிற்கு வழங்கிய பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என தெரிவித்து நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் இந்த சத்தியக்கடதாசியும் இடம்பெற்றுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு கோட்டாபாய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியது தவறு – உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read More …

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவின் ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடை நிறுத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

2012 இல் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலின்போது கொழும்பு, முல்லேரியா பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. பாரதலக்‌ஷ்மன் பிரேமசந்திர மற்றும் துமிந்த சில்வாவின் சகாக்களுக்கிடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதில் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உட்பட மேலும் சிலர் கொல்லப்பட்டனர். துமிந்த சில்வா உள்ளிட்டவர்கள் காயமடைந்தனர்.

குறித்த கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் பொது மன்னிப்பின்கீழ் கடந்த வருடம் விடுவிக்கப்ட்டிருந்தார்.

இந்தநிலையில் , துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஹிருணிகா மற்றும் அவரது தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தோடு துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்துள்ளது.

“துமிந்த சில்வாவுக்கு அநீதி நடந்துள்ளது. ஜனாதிபதி அவருக்கு நியாயத்தை வழங்கினால், எவரும் அதனை தவறு எனக் கூற முடியாது” – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

“துமிந்த சில்வாவுக்கு அநீதி நடந்துள்ளது. ஜனாதிபதி அவருக்கு நியாயத்தை வழங்கினால், எவரும் அதனை தவறு எனக் கூற முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் கல்வி அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை தொடர்பான விடயங்கள் அண்மையில் இலங்கை அரசியலில் பெரிய பேசுபொருளாகியுள்ள நிலையில் அது தொடர்பான விடுதலை மனு ஒன்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரும் கையெழுத்திட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் முன்னர் வழக்கை விசாரித்த நீதிபதியிடம் அறிக்கை ஒன்றை கோருவார். சட்டமா அதிபரிடம் கருத்துக்களை கேட்டறிவார்.

அதன்பின்னர் குற்றப்பத்திரிகை தொடர்பில் வாதாடிய சட்டத்தரணிகளிடம் கருத்துக்களை கேட்பார். இந்த அறிக்கைகளை ஜனாதிபதி நீதியமைச்சருக்கு வழங்க வேண்டும். இந்த அறிக்கைகளை ஆராந்த பின்னர் ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைக்கப்பட வேண்டும். இதுதான் நடைமுறை. ஜனாதிபதி தனியாக தீர்மானிக்க முடியாது. இது சம்பந்தமாக தீர்மானிக்க மூன்று தரப்பினர் உள்ளனர். நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சர் அகியோரே அந்த மூன்று தரப்பினர்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் எப்படி சட்ட நடவடிக்கைகள் கையாளப்பட்டன. நீதிமன்றத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதா, நீதிபதிகள் எப்படி வழக்கை விசாரித்தனர்.அரசியல்வாதிகள் நேரடியாக தலையிட்டனரா என்பன தொடர்பான சாட்சியங்கள் இருந்தால் அனைத்தும் அறிக்கையில் வெளியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.