mahinda rajapaksa

mahinda rajapaksa

புதிய பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ !

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 28வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் இன்று முற்பகல் இடம்பெற்றது. அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்காவது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடு முழுவதும் 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றிப்பெற்றது. அதற்கமைவாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்ப வாக்குகளை பெற்றிருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சத்தியப்பிரமாணத்தின்போது உறுதிமொழி வழங்கிய பிரதமர் இலங்கை தேசத்திற்குள் இன்னொரு இராச்சியத்தை உருவாக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இலங்கைக்குள்ளோ அல்லது அதற்கு வெளியிலோ ஒத்துழைப்பு வழங்குதல், உதவிகளை வழங்குதல், அனுசரணை வழங்குதல், நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட எந்த விடயத்தையும் மேற்கொள்ள மாட்டேன் என தான் உறுதிமொழி வழங்குவதாக குறிப்பிட்டார். இலங்கை ஜனநாய சோசலிய குடியரசின் பிரதமராக அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கும் உட்பட்டு இலங்கை நாட்டுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் செயற்பட்டு தாய்நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் பிரதமர் உறுதி வழங்கினார்.