மண்ணெண்ணை தர மறுத்து விட்டார்கள் – தனக்கு தேவையான எரிபொருளை தானே உருவாக்கிய யாழ்.விவசாயி !

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுள் விவசாயம் அதிமுக்கியமானது. உழவு இயந்திரங்கள் தொடங்கி நீர்ப்பம்பிகள் என எதனை இயக்கவும் எரிபொருளும் இல்லை. மின்சாரமும் இல்லை. இந்த நிலையில் யாழ்ப்பாணத்து விவசாயிகள் சிலர்  தங்களுக்கு தேவையான எரிவாயுவை தாங்களே உற்பத்தி செய்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக சாண எரிவாயு (Bio gas) மூலம் நீர் இறைக்கும் (Water Pump) இயந்திரத்தை இயக்கும் முயற்சி வெற்றியளித்துள்ளது.
அல்லைப்பிட்டி மகேஸ்வரநாதன் கிரிசன்  என்பவர் சாணித்தண்ணியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சாண எரிவாயு மூலம் நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இது அவருடைய கண்டுபிடிப்பு அல்ல முன்னைய நெருக்கடி காலங்களில் பலரும் பயன்படுத்திய முறைமையே இதுவாகும்.
சாண எரிவாயு மூலம் 3 மணித்தியாலம் இவ் நீர் இறைக்கும் இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் இயந்திரத்தை இயக்க 3நிமிடம் மண்ணெண்ணெய் தேவைப்பட்டதாகவும் பின்னர் இயந்திரம் ஹீட் ஆகிய பின்னர் 3 மணித்தியாலம் எரிவாயு மூலம் முயற்சியாளர்கள் எப்போதும் நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்கியுள்ளார்.
இது குறித்த பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மகேஸ்வரநாதன் கிரிசன் குறித்த பதிவில் தெரிவித்துள்ள போது,
சாணித்தண்ணியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சாணஎரிவாயு மூலம் நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்கும் முயற்சி வெற்றியளித்துள்ளது. இது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. முன்னைய நெருக்கடி காலங்களில் பலரும் பயன்படுத்தியது. கடைசியாக 5 லீற்றர் மண்ணெண்ணெய் விவசாயிகளுக்கு வழங்கியபோது பெரிய படிப்பு படித்த அந்த உத்தியோகத்தர் தோட்டத்தில் தற்போது பயிர் தற்போது இல்லை என்பதை காரணம் காட்டி எங்களை நிராகரித்து விட்டார். அன்றைய தினம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். அப்போதைய நிராகரிப்பு என் முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தது. 3 மணித்தியாலங்கள் வெற்றிகரமாக இயக்கியுள்ளேன். முயற்சியாளர்கள் எப்போதும் தோல்வியாளர்கள் அல்ல. நெருக்கடிகளில் அவர்கள் புதிய சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *