தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்கிறார் சம்பந்தன்


R-Sampanthan-640x400மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று மாலை நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர்,

“உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ள போதிலும் இவை பொய்கள் மூலமாக பெறப்பட்ட வாக்குகளாகும். இது 2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த வாக்குகளை விடக் குறைவு தான். எனவே இந்த தேர்தலிலும் வெற்றிபெறவில்லை.

தேர்தல் பரப்புரையின் போது, தமிழீழ கதைகளை கூறியே சிங்கள மக்களை ஏமாற்றி இந்த வாக்குகளை பெற்றுள்ளனர். ஐதேகவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழீழம் உருவாக வழியை உருவாக்கும் என்று சிங்கள மக்களை ஏமாற்றி நம்ப வைத்திருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரான நாங்கள் தமிழீழத்தை கேட்கவில்லை. ஒன்றுபட்டு ஒரே நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு தான் நாங்கள் கேட்கிறோம்.

ஆனால், நீங்கள் இதுபோன்று தொடர்ந்து நடந்து கொள்வீர்களேயானால், ஈழம் மலர்ந்து விடும். தாமரை மொட்டில் இருந்து தான் அந்த ஈழம் மலரும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து
 1. BC on February 20, 2018 2:00 pm

  //தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.//

  தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்திரங்களை தானும் பின்பற்றினால் தான் தமிழ்மக்களிடம் வெற்றி அடைய முடியும் என்ற முடிவுக்கு சம்பத்தன் அய்யா வந்து இருக்கிறார் போல.
  விக்கினேஸ்வரனை எதற்காகவாம் சம்பத்தன் அய்யா அரசியலுக்கு கொண்டுவந்தவர்


 2. valli-puram on February 22, 2018 6:49 pm

  தோழர் பீஸீ அவர்களே, சம்பந்தன் ஐயா அவர்கள் சொன்னதில் என்ன தவறு காண்கிறீர்கள். தாமரை மொட்டு சின்னத்தில் மகிந்த ஒரு புதிய கட்சியை தொடக்கி அவரின் முழு பிரச்சாரமும் இந்த அரசு எடுக்கும் முயற்சியான புதிய அரசியல் யாப்பு மூலம் தமிழ் ஈழம் வந்துவிடும் என்பதாக மட்டுமே இருந்தது. அரசியல் யாப்பு விடயத்தில் எமது தோழர் டக்லஸ் அவர்களும் பங்கு கொண்டு இருந்தார் என்பது யாம் அறிந்ததே. நீங்களும் புதிய அரசியல் யாப்பு முயற்சிக்கு எதிரானவர் தானா?


 3. BC on February 27, 2018 12:59 pm

  புதிய அரசியல் யாப்பு முயற்சிக்கு நான் எதிர் இல்லை மொட்டில் இருந்து தமிழீழம் மலரும் கனவு நினைவேறும் என்று இங்கேயும் பேய்காட்டி அவர்களையும் உசுப்பு ஏற்றிவிடுவதற்கு தான் எதிர்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு