Multiple Page/Post

வடக்கு, கிழக்கு மக்கள் அமைதியான முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவேந்தினார்கள். – பாதுகாப்பு அமைச்சு !

வடக்கு, கிழக்கில், உயிரிழந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளை முன்னெடுத்தமையால் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.துய்யகொந்த  தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தினை முன்னிலைப்படுத்தி, ஆதரிக்கும் வகையில் செயற்பட்டவர்கள், இனவாத அடிப்படையில் அந்த நிகழ்வினை வெளிப்படுத்த விளைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உரிய சட்டங்களின் அடிப்படையில் கைதுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் போரின்போதும், அசாதரண சூழல்களின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியும். அதற்கு நாங்கள் தடைகளை ஏற்படுத்தப்போவதில்லை என்பதை முற்கூட்டியே அறிவித்திருந்தோம்.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்கள் அமைதியான முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவேந்தினார்கள்.

ஆனால், தென்னிலங்கையில் அந்த விடயங்களை அரசியல் சுய இலாபத்துக்காக சிலர் பயன்படுத்த முனைகின்றனர் என்பதை அதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

உண்மையில் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். தமது அரசியல் மீள்பிரவேசத்துக்காக வழக்கம்போலவே இனவாத்தினை திணிக்கப் பார்க்கின்றார்கள்.

அனால் அவர்களின் நோக்கங்களை மக்கள் அறிவார்கள்.

அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்கள் மாற்றத்தினை எதிர்பார்கின்றார்கள். அதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கும்.

வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் இனவாதம், மதவாதம் தோல்வி கண்டுவிட்டது. மீண்டும் அதற்கு இடமளிப்பதன் ஊடாக நாட்டுக்கு எதிர்மறையான நிலைமைகளே ஏற்படும்.

ஆகவே மக்கள் அத்தகையவர்களுக்கு இடமளிக்காது என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

தற்போதைய நிலையில் தேசிய பாதுகாப்பு உயர்ந்த நிலையில் உள்ளது. அதற்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவிதமான நடவக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அதேபோன்று வடக்கிலும் கிழக்கிலும் பயங்கரவாதத்தினை ஆதரித்து அதனை முன்னிலைப்படுத்துபவர்கள் சம்பந்தமாகவும் நாம் தீவிரமான கவனம் செலுத்தியிருந்தோம்.

அதுதொடர்பில் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.- என்றார்.

குடை பிடிப்பதற்காக அஸிஸ்டென்ட்களை வைத்திருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

குடை பிடிக்கும் அரசியல்: யார் யாருக்குக் குடை பிடிப்பதென்பதே பெரும் அரசியலாகியுள்ளது. தமிழ் தேசியவாத அரசியல் வாதிகள் இன்னமும் தங்களை எஜமான்களாகவும் பண்ணையார்களாகவும் ஏனையவர்களை அடிமைகளாகவும் தாழ்ந்தவர்களாகவும் தான் எண்ணுகிறார்கள் என்பது இந்தக் குடை அரசியலில் வெளிப்பட்டு நிற்கின்றது. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு ஒருவர் குடை பிடிக்க அவர் வெள்ள அனர்த்த நிலைமையைப் பார்வையிடுகிறார். அதே போல் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் ஒருவர் குடை பிடிக்க அவர் நிலைமையைப் பார்வையிடுகின்ற நிலை தொடர்பில் கடந்த காலங்களில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏன் இவர்களுக்கு தங்களுடைய குடையைத் தாங்கள் பிடிக்க முடியாமற் போனது. வல்வெட்டித்துறை மக்கள் தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களை கிட்டக்கூட எடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தங்களைத் தள்ளி நிற்கச் சொல்வார்கள் என்கின்றனர்.

மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை தேசிய மக்கள் சக்தி குறைக்கின்றது. அவர்கள் மக்களோடு களத்தில் நிற்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் மோசடியற்ற நிர்வாகத்தை அமைக்கிறோம் என்று சொன்னதோடு அதனைச் செயலிலும் காட்டுகிறார்கள். ஆடம்பரம் இல்லாமல் மக்களோடு மக்களாகக் கலக்கின்றனர். இதனைச் செயற்கையாகச் செய்ய முடியாது. தன்னியல்பாக வரவேண்டும். அதனால் தான் கடற்தொழில் அமைச்சர் தன்னுடைய குடையைத் தானே பிடிக்கிறார். தமிழ் தலைவர்களுக்கு குடை பிடிக்க ஒரு கூலி தேவைப்படுகின்றது.

பயங்கரவாத அமைப்பிற்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த நபர் கைது !

பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணதடையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை கொண்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து 2009 இல் வெளியேறி பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை பெற்றிருந்த இந்த நபர் பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்காக நிதி சேகரித்தார்,அவற்றை கொழும்பு வன்னியில் உள்ள தனிநபர்களிற்கு வழங்கினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2009 இல் சந்தேகநபரின் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் பயண தடையை பெற்றிருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இவர் சனிக்கிழமை பிரிட்டனில் இருந்து கொழும்பு விமானநிலையம் வந்தவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொழும்பு வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நான் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன் – பிரதியமைச்சர் முனீர் முளப்பர்

தனது அரசியல் செயற்பாடுகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று பிரதியமைச்சர் முனீர் முளப்பர் உறுதியளித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரதியமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபளகம ஆகியோர் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்திக்கும் தமக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கம்பஹா, கஹட்டோவிட்ட பிரதேசத்தில் நேற்று (30.11.2024) மாலை மக்கள் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இதன்போதே முளப்பர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பிக்களாக தெரிவு செய்யப்படுவோர் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கோடு தம் பிரதேசம் சார்ந்து அல்லது இனம் சார்ந்து ஒருதலைப்பட்சமாக செயற்படும் போக்கு தான் கடந்த 75 வருட கால இலங்கை அரசியலின் வழமையாக இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற அரசியலின் வாடை படாத புதிய அங்கத்தினர்கள் 146 பேர் பாராளுமன்றத்தில்  முதன்முதலாக அமர்கிறார்கள். தமக்கு வாக்களித்த தம்மின மக்கள் என்ற கருத்தில் இருந்து விலகி இன – மத பேதமின்றி நாட்டு முன்னேற்றம் என்ற தொனியில் அவர்கள் இயங்க ஆரம்பித்துள்ளமையானது மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை முழுமையாக கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

 

அண்மையில் பிரதியமைச்சராக பதவியேற்ற முனீர் முளப்பர் நான் இனவாதியாக இருக்க மாட்டேன் என கூறியுள்ளமையானது பலருடைய வரவேற்பையும் பெற்றுள்ளது. கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், தேசிய மக்கள் சக்தியின் நல்லிணக்க அரசியல் போக்கின் காரணமாக பெரும்பான்மை மக்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று நாம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோம். இதன் மூலம் பெரும்பான்மை மக்கள் எந்தளவுக்கு இனவேறுபாடுகளுக்கப்பால் கம்பஹாவில் முஸ்லிம் ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தமது வாக்குகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். எனவே, என்னை ரவுப் ஹக்கீம் போலவோ, ரிசாத் பதியூத்தீன் போலவோ, முன்னால் அமைச்சர் ஹலீம் போலவோ பார்க்காது கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவே பாருங்கள். நான் அவர்களைப் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு பேசிய அவர்,

இன நல்லுறவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது நாடாளுமன்ற உறுப்புரிமை மூலம் நீதமான முறையில் நேர்மையுடன் நடந்து கொள்வதன் ஊடாகவே இனிவரும் காலங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து என்னைப் போன்று முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை பெற்று கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எனது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள மாட்டேன் எனவும் பிரதியமைச்சர் முனீர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.

இலங்கையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பிக்களாக தெரிவு செய்யப்படுவோர் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கோடு தம் பிரதேசம் சார்ந்து அல்லது இனம் சார்ந்து ஒருதலைப்பட்சமாக செயற்படும் போக்கு தான் கடந்த 75 வருட கால இலங்கை அரசியலின் வழமையாக இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற அரசியலின் வாடை படாத புதிய அங்கத்தினர்கள் 146 பேர் பாராளுமன்றத்தில்  முதன்முதலாக அமர்கிறார்கள். தமக்கு வாக்களித்த தம்மின மக்கள் என்ற கருத்தில் இருந்து விலகி இன – மத பேதமின்றி நாட்டு முன்னேற்றம் என்ற தொனியில் அவர்கள் இயங்க ஆரம்பித்துள்ளமையானது மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை முழுமையாக கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அண்மையில் பிரதியமைச்சராக பதவியேற்ற முனீர் முளப்பர் நான் இனவாதியாக இருக்க மாட்டேன் என கூறியுள்ளமையானது பலருடைய வரவேற்பையும் பெற்றுள்ளது. கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், தேசிய மக்கள் சக்தியின் நல்லிணக்க அரசியல் போக்கின் காரணமாக பெரும்பான்மை மக்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று நாம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோம். இதன் மூலம் பெரும்பான்மை மக்கள் எந்தளவுக்கு இனவேறுபாடுகளுக்கப்பால் கம்பஹாவில் முஸ்லிம் ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தமது வாக்குகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். எனவே, என்னை ரவுப் ஹக்கீம் போலவோ, ரிசாத் பதியூத்தீன் போலவோ, முன்னால் அமைச்சர் ஹலீம் போலவோ பார்க்காது கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவே பாருங்கள். நான் அவர்களைப் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

வலுவடையும் இலங்கை – சீன உறவு:

வலுவடையும் இலங்கை – சீன உறவு:

சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட பாரிய திட்டங்களை வெள்ளை யானைகள் என சிலர் குற்றம் சுமத்திய போதிலும், அந்த திட்டங்கள் அனைத்தும் முன்னாள் அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாகவே நிர்மாணிக்கப்பட்டவை எனவும் அவை சீனாவின் முதலீடுகள் எனவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். ஊடக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நவம்பர் 28 இடம்பெற்ற சந்திப்பிலேயே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அன்றைய இலங்கை அரசுகள் மோசமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சில திட்டங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என சீனத் தூதுவர் குற்றம்சாட்டியிருந்தார்.

 

தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள தாமரை கோபுரத் திட்டம் தற்போது இலாபம் ஈட்ட ஆரம்பித்துள்ளதுடன், அது இலங்கையின் அடையாளமாக மாறியுள்ளதாகவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். சீனா முதலீடு செய்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகம் இலங்கை அரசாங்கத்திற்கு பெருமளவு வருமானத்தை கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முழுக்க முழுக்க சீனாவின் முதலீடு என்று சுட்டிக்காட்டிய தூதுவர், இதற்காக இலங்கையினால் எந்தப் பணமும் செலவிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

 

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனக் கடன்கள் மற்றும் முதலீடுகளை, கடன் பொறி என்று நிறுவ முயற்சிக்கின்றன. ஆனால் அது பலநாடுகளிலும் குறிப்பாக ஆபிரிக்க நாடுகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சீன – இந்திய உறவுகள் பற்றி குறிப்பிட்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இலங்கை இந்தியாவினதும் சீனாவினதும் கடன் பொறியில் சிக்கியிருப்பதாகக் குறிப்பிட்டது இங்கு கவனிக்கத்தக்கது.

 

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுதந்திர நாடாக எழுந்து நிற்க இலங்கைக்கு சீனா நிதியுதவி வழங்கியதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் சீன-இலங்கை உறவுகள் புதிய அத்தியாயத்தில் பிரவேசிக்கும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுரா இன்னும் சில வாரங்களில் ஜனவரியில் சீனாவுக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தலுக்கு முன்னதாக அனுரகுமார திஸ்ஸநாயக்கா சீனாவுக்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததும் தெரிந்ததே.

 

சீனா – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 7 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் இதுவரையில்கைச்சாத்திடப்படவில்லை. சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ஊடாக இலங்கை சந்தையை சீனா ஆக்கிரமிக்கும் என்ற தவறான அச்சம் காரணமாகவே அது நடைபெறவில்லை எனத் தெரிவித்தார் சீனத் தூதர். இதனை சாத்தியமாக்குவதற்கு சீன பெரும் விட்டுக்கொடுப்பைச் செய்யத் தயாராக உள்ளது. அதன்படி சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட ஒரு வருடத்திற்குள் இலங்கைக்குப் பாதகமான விடயங்கள் இருப்பின் அதனைத் திருத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் சீனத் தூதுவர் சி ஜான்ஹொங் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், கொவிட் தொற்றுநோய் மற்றும் இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது எவ்வாறு இலங்கைக்கு ஆதரவளித்ததோ அதேபோன்று எதிர்காலத்திலும் சீனா இலங்கையை உண்மையான நண்பனாக ஆதரிக்கும் என தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனத் தூதுவரின் வடக்கு விஜயத்தால் வெகுண்டெழுந்த யாழ் பல்கலைக் கலைப்பிரிவும் சைக்கிள் கஜாவும்:

மாவீரர்நாள் எதிரொலிப்புகள் – மாவீரர் நாளை வைத்து இனவாதத்தீயை வளரத்துவிட வடக்கிலும் தெற்கிலும் பாரி முயற்சி:

 

 

 

 

 

சீனத் தூதுவரின் வடக்கு விஜயத்தால் வெகுண்டெழுந்த யாழ் பல்கலைக் கலைப்பிரிவும் சைக்கிள் கஜாவும்:

 

 

 

 

1. பாதைகள் திறக்கப்படும் காணிகள் விடுவிக்கப்படும் பாதுகாப்புச் செயலாளர் யாழில் அறிவித்தார்: “நாம் ஏற்கனவே சில வீதிகளை விடுவித்துள்ளோம். காணிகளையும் விடுவிப்போம்” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ் வந்திருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசபடைகளும் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, நிலைமைகளை விரைவில் வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

மரணித்துப்போன பயங்கரவாதிகளுக்கு அநுர அரசு புத்துயிர் கொடுக்கக்கூடாது. – சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில

வடக்கு, கிழக்கில் நவம்பர் 26, 27 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை தற்போதைய அரசு உடன் கைது செய்ய வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக்  குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில், “மரணித்துப்போன பயங்கரவாதிகளுக்கு அநுர அரசு புத்துயிர் கொடுக்கக்கூடாது.

நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தமைக்காகப் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினத்தையும், மாவீரர் தினத்தையும் பகிரங்கமாக அனுஷ்டிக்கத் தமிழ் மக்களுக்கு அநுர அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தெற்கில் உள்ள மக்கள் அநுர அரசின் தான்தோன்றித்தனமான இந்தத் தீர்மானத்துக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும்.’’ என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடக்கு – கிழக்கில் பெரும் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்துப் முகப்புத்தகத்தில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களைக் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். அஞ்சலி நிகழ்வுகளுக்காக வழங்கப்பட்ட அனுமதியினை சாதாரண மக்கள் வரம்புமீறி பயன்படுத்தும்படிக்கு அதனை தங்களின் அரசியலுக்காக மக்களின் உணர்வுகளை தூண்டி வழமை போல் சிறீதரன் எம்.பி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் குளிர்காய்ந்துள்ளனர். கடந்த காலங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது சமூக வலைத்தளங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் உள்ளிட்டோரின் படங்களை பகிர்ந்தவர்கள் கைதாகியிருந்ததுடன் இன்றுவரை பலர் விடுதலையானார் சூழ்நிலை காணப்படுகிறது. அடிப்படை உரிமை என்ற வகையில் கருதப்படும் நினைவேந்தல் நிகழ்வுகள் கூட அரசியல்வாதிகளின் தவறான நடைமுறைகளால் இனிவரும் காலங்களில் இறுக்கமான சூழலுக்குள் தள்ளப்படலாம் என்ற அச்சத்தை பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவரது நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்னவினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் மரணம் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே இந்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோடிகளில் புரளும் யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிறுவனங்கள் – சீரழியும் இலவசக் கல்வி!

யாழில் ஒரு மாணவன் ஏஎல் வரை கற்கத் தனியார் கல்வி நிலையங்களுக்கு எட்டுக்கோடி செலவிடப்படுகிறது! – பெயரளவில் இலவசக் கல்வி!

கல்வி ஆர்வலர் சமூக செயற்பாட்டாளர் என் சச்சிதானந்தன்