::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

சிவிலியன்கள் வந்த படகுகள் மீது புலிகள் தாக்குதல்; மூன்று பேர் பலி

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவு பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆறு படகு கள் மூலம் தப்பி வந்த பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படு காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஆறு படகுகள் மூலம் தப்பிவந்த பொதுமக்கள் மீது பின் தொடர்ந்து சென்றே தாக்குதல்களை புலிகள் நடத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து ஆறு படகுகளில் சென்ற போது மக்கள் மிகவும் அச்சத்துடன் தட்டுத்தடுமாறியுள்ளனர்.

ஆறு படகுகளில் இரண்டு படகுகள் கெவில் மற்றும் சுண்டிக்குளம் கரையை சென்றடைந்துள்ளது. இவர்களை படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர்.ஏனைய, நான்கு படகுகளும் கடற்படையினரின் உதவியுடன் முனை பிரதேசத்துக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதென்றார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி நேற்று 200 பொதுமக்கள் தப்பிவந்துள்ளனர். இவர்களை இலக்கு வைத்து புலிகள் எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள படையினரை இலக்கு வைத்து புலிகள் 130 மி. மீ. ரக மற்றும் 120 மி.மீ. ரக பீரங்கிகளை பயன்படுத்தி நேற்றும், நேற்று முன்தினமும் தாக்குதல் நடத்தினர். புலிகள் எந்தப் பகுதியிலிருந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது படையினரின் ராடார் கருவிகளில் தெளிவாக பதிந்துள்ள போதிலும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக படையினர் பதில் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச உதவிகள் இனிமேல் அரசின் வழிகாட்டலிலேயே செலவிடப்படும் – கெஹெலிய ரம்புக்வெல

keheliya_hulugalla_.jpgஇடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உதவிகள் இனிமேல் அரசாங்கத்தின் வழிகாட்டலிலேயே செலவிடப்படவேண்டும். முன்பு போல் அரசசார்பற்ற நிறுவனங்களில் நிகழ்ச்சி நிரலின்படி செலவிடமுடியாதென தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

இலங்கையிலுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான இடைத்தங்கல் முகாம் முழு உலகுக்கும் ஒரு முன்னுதாரணமாகும். சிவிலியன்கள் மிகவும் சிறப்பாகக் கவனிக்கப்படும் இது போன்ற முகாம் உலகில் எங்கும் காணமுடியாதென ஐ நாவின் இரண்டாம் நிலைத் தவைர் ஜோன் ஹோம்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் ஒன்றிணைந்து வாழும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும்  தனித்தனி வீடுகள் இப்போது அமைக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் அங்கு இயங்குகின்றன. இதனையடுத்து இலங்கையில் இடம்பெயர்நதவர்களுக்கு உதவ ஐ.நா நிறுவனமும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வந்துள்ளன. அதற்காக நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

ஆனால் அவ்வாறான உதவிகள் அனைத்தும் இறைமையுள்ள எமது அரசாங்கம் வகுத்துக் கொடுக்கும் திட்டத்தின் அடிப்படையில்தான் பயன்படுத்தப்ட வேண்டும். அவர்கள் வகுத்த திட்டத்தில் செயற்பட எமது அரசாங்கம் இடமளிக்காது. கடந்த காலங்களில் இலங்கையில் செயற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய உதவிகள் வடக்கிலுள்ள தமிழ் மக்களைச் சென்றடையவில்லை. புலிகளுக்காக சுகபோக நீச்சல் தடாகம் அமைக்கவும் அதிநவீன தொலைத் தொடர்பு நிலையங்கள் மற்றும் உலகின் முதல்தர அச்சகங்களை அமைக்கவுமே பயன்பட்டன என்பது இன்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் இலங்கைக்கெனச் செலவிடும் பணத்தில் 70 சதவீதம் அந்த நாடுகளின் ஊழியர்களின் சம்பளம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்கென அந்த நாடுகளுக்கே மீண்டும் சென்றடைகின்றன. ஆனால் அரசாங்கம் வகுக்கும் திட்டங்களில் உள்ளுர்ப் பணியாளர்களின் சேவையே பெற்றுக்கொள்ளப்படும். சகல செலவினங்களுக்கும் அரசாங்கமே வழி காட்டும். இவ்வாறான கருத்துக்களை முன்னர் கூறமுடியாதவொரு அச்ச நிலை இருந்தது. ஆனால் இன்று எமது அரசு எழுப்பிய சந்தேகங்கள் உண்மைப்படுத்தப்ட்டுள்ளதால் இன்று அவற்றை துணிந்து கூறக்கூடியதொரு நிலை ஏற்பட்டுள்ளது  என்றும் அமைச்சர் கூறினார்.

புலிகள் 45 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் முடக்கம் – பிரிகேடியர் உதய நாணாயக்கார

udaya_nanayakkara_.jpgமுல்லைத்தீவில் 45 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் படையினரால் முடக்கப்பட்டுள்ளனர் எனவும் 500 க்கும் குறைவான புலிகளே இப்போது அங்கு எஞ்சியுள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசதம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. எனினும் புலிகள் அங்கு அம்பகாமம் மற்றும் பொக்கனை ஆகிய பிரதேசங்களில் ஊடுருவி அங்கிருந்து ஒட்டிசுட்டானில் உள்ள படையினர்மீது  130 மற்றும் 120 மில்லி மீற்றர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்துகின்றனர். இன்று காலையும் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

புலிகள் எங்கிருந்து தாக்குகினறனர் என்பதை படையினரில் ராடர் கருவி தெளிவாகக் காட்டியபோதும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படையினர் பதில் தாக்குதல் நடத்தவில்லை. ஜனவரி மாதம் முதல் இன்றுவரை புலிகளின் பிடியிலிருந்து 37589 பொது மக்கள்  தப்பிவந்து படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர், நேற்றும் 200 பேர் விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக்கு வந்துள்ளனர். இவர்கள் மீது புலிகள் நடத்திய எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதலில் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் ஆறு போர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை ஆறு படகுகளில் தப்பி வந்த பொது மக்கள்மீது வேறு படகுகளில் பின்தொடந்து வந்த புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். பொது மக்கள் தப்பி வந்த ஆறு படகுகளில் 2 சுண்டிக்குளியில் கரை சேர்க்கப்பட்டன. ஏனைய 4 படகுகளையும் கடற்படையினர் முனைப் பிரதேசத்துக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

கொழும்புத் துறைமுகத்தினூடாக புலிகளுக்கு ஆயுதக் கடத்தல். சூத்திரதாரிகள் யாரென்பது விரைவில் தெரியுமென்கிறார் அமைச்சர்

keheliya_hulugalla_.jpgகடந்த காலங்களில் கொழும்புத் துறைமுகத்தின் சுங்கப் பகுதியினூடாக உலகின் அதி நவீன ஆயுதங்கள், அச்சக நவீன உபகரணங்கள், மற்றும் மிகவும் விலை மதிப்புள்ள தொலைத் தொடர்புச் சாதனங்கள் விசேட கொள்கலன்கள் மூலம் புலிகளுக்குச் சென்றடைத்துள்ள தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

இப்பெரும் மோசடி எவ்வாறு நடைபெற்றது? இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார்? என்பதைக் கண்டறிய துரித விசாரணைகள் நடைபெற்று வருவதாக தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

2002 ஆம் 2004 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில்  நடைபெற்றுள்ள இந்த மாபெரும் மோசடியின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற விபரத்தை இன்னும் சில தினங்களில் அரசாங்கம் வெயிடும்.

நாளை கிழக்கில் ஒரு மங்களகரமான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. அதுதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தம்மிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வாகும். தோற்கடிக்கப்படும் புலிகளால் இனி தமக்கு உயிராபத்து இல்லை என அந்த அமைப்பு கருதுவதாலும் அரசாங்கம் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் என்பதில் நம்பிக்கை கொண்டதாலும் இந்த ஆயுதக் கையளிப்பு நடைபெறுகின்றது. இது மிகவும் பாராட்டுக்குரியது

கிழக்கில் கப்பம் கோரல், ஆட்கடத்தல் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதிருக்கின்றனர் என சில ஊடகங்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பயன்படுத்தப்பட்ட 13 ஏவுகணைகளின் வெற்றுக் கூடுகள் படையினரால் கண்டுபிடிப்பு- பிரிகேடியர் உதய நாணாயக்கார அறிவிப்பு

udaya_nanayakkara_.jpgபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேடுதல் நடத்திய படையினர் பயன்படுத்தப்பட்ட 13 ஏவுகணை களின் வெற்றுக் கூடுகளைக் கண்டுபிடித்துள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறுகையில்

இந்த ஏவுகணைகள்  எப்போது யாரால் எந்த இலக்குக்குப் பயன்படுத்தப்பட்டன போன்ற தகவல்கள் அந்து வெற்றுக் கூடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி முதலாவது ஏவுகணை இராணுவத்துக்கு எதிராகப் பயன்படுத்ப்பட்டுள்ளது. கடைசியாக 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமி 23 ஆம் திகதி பாவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான இரு ஏவுகணைகளை அண்மையில் கிழக்கில் தொப்பிகலைப் பிரதேசத்தில் படையினர்  கண்டுபிடித்தனர் என்றும் பிரிகேடியர் கூறினார்.

திருமலை ஆஸ்பத்திரியில் புதன்கிழமையும் 355 பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதி

red-cr.jpgமுல்லைத் தீவிலிருந்து கப்பலில் கூட்டிவரப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 355 பொதுமக்களின் பெயர்கள், விபரங்கள் வருமாறு:

1. பெயர் தரப்படவில்லை (தீவிரசிகிச்சைப் பிரிவில்),

2. பூமாதேவி, நவாலி (வயது 58),

3. ஹரமாசரி, மாத்தலன் (வயது27),

4. தெனுஷிகா, முள்ளிவாய்க்கால், (வயது 5),

5. ஜே.செல்லக்கிளி, பூநகரி, (வயது 46),

6. கே.விஜயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 24),

7. வி.சுகந்தி, (வயது 32),

8. பி.கிருபாகரன், கிளிநொச்சி, (வயது 28),

9. தேனுஷா, கிளிநொச்சி, (வயது 2.5),

10. உஷாந்தினி, முள்ளியவளை, (வயது 25),

11. தேனுஷி, முள்ளிவாயக்கால், (வயது 2),

12. கே.நாகராசா, சாவகச்சேரி, (வயது 55),

13. வி.ஞானவேல், வட்டக்கச்சி, (வயது 44),

14. ஜி.டினேஷ், வட்டக்கச்சி, (வயது 14),

15. செல்வநாயகி, பூநகரி, (வயது 47),

16. சண்முகலிங்கம், யாழ்ப்பாணம், (வயது 66),

17. சுந்திரகாந்தி, (வயது 38),

18. கே.மகேஸ்வரி, கொடிகாமம், (வயது 60),

19. என்.செல்வராசா, கிளிநொச்சி, (வயது 60),

20. என்.வேலாயுதப்பிள்ளை, பூநகரி, (வயது 59),

21. எஸ்.மனோராசா, மட்டக்களப்பு, (வயது 15),

22. பி.உவின், யாழ்ப்பாணம், (வயது 36),

23. பானு, யாழ்ப்பாணம், (வயது 4),

24. அனிபீபீ, புங்குடுதீவு (வயது 4),

25. மாதம்மா, புங்குடுதீவு, (வயது 30),

26. மரியலாரா, யாழ்ப்பாணம், (வயது 3),

27. திலானி, யாழ்ப்பாணம், (வயது 9),

28. டிலோஜினி, யாழ்ப்பாணம், (வயது 12),

29. எஸ். இரத்தினசிங்கம், பளை, (வயது 69),

30. தனபாலச்சந்திரன், யாழ்ப்பாணம், வேலணை, (வயது 43),

31. என். ராமச்சந்திரன், பரந்தன், (வயது 67),

32. எஸ்.சீதேவி, யாழ்ப்பாணம், (வயது 60),

33. எஸ்.கேமலதா, புதுக்குடியிருப்பு, (வயது 25),

34. யு.ஷபீலா, சுதந்திரபுரம், (வயது 36),

35. யோகராணி, புதுக்குடியிருப்பு, (வயது 45),

36. ஐ.சிற்றம்பலம், யாழ்ப்பாணம், கோண்டாவில், (வயது 70),

37. அல்போன்ஸிரோசலின், கிளிநொச்சி, முள்ளியங்குளம், (வயது 60),

38. கணபதிப்பிள்ளை, முள்ளியவளை, (வயது 53),

39. மனோன்மணி, வற்றாப்பளை, (வயது 69),

40. சிவபாக்கியம், ஆரியவளை, (வயது 57),

41.ஏ.பிரதீபன், கிளிநொச்சி, (வயது 31),

42. ராஜாராம், கிளிநொச்சி, (வயது 72),

43. புஷ்பராசா, கிளிநொச்சி, (வயது 60),

44. எம்.காசிநாதன், முரசுமோட்டை, (வயது 70),

45. கிருதரசன், யாழ்ப்பாணம், (வயது 4),

46.ரி.சோபனா, யாழ்ப்பாணம், அச்சுவேலி, (வயது 28),

47. லக்ஷிகா, யாழ்ப்பாணம், அச்சுவேலி, (வயது 4),

48. வி.குமுதா, யாழ்ப்பாணம், பொலிகண்டி, (வயது 32),

49. எஸ்.புராணம், இரணைமடு, (வயது 60),

50. ஜேசுதாஸ், முல்லைத்தீவு, (வயது 43),

51. இராஜசிங்கம், முல்லைத்தீவு, (வயது 74),

52. ஆர்.கோணேஷ்வரி, முல்லைத்தீவு, (வயது 69)

53. கே.கிருஸ்ணகுமாரி, கோமாரி, அம்பாறை, (வயது 34),

54. ஷர்மின், கோமாரி, அம்பாறை, (வயது 1.5),

55. ஷர்மிலா, கோமாரி, அம்பாறை, (வயது 3),

56. என்.துரைராஜா, வவுனியா, (வயது 24),

57. எஸ்.தனபாலசிங்கம், யாழ்ப்பாணம், (வயது 71),

58. ரி.ராசம்மா, யாழ்ப்பாணம், (வயது 70),

59. ரி.புனிதவதி, அம்பலவாணன், பொக்கணை, (வயது 65),

60. துரைசிங்கம், அம்பலவாணன், பொக்கணை, (வயது 65),

 61. பொன்னம்மா, முள்ளியவளை, (வயது 74),

62. டி. அன்னலெட்சுமி, (வயது 66),

63. ஐ. சரஸ்வதி, பொக்கணை, (வயது 73),

64. கே. யோகேந்திரன், யாழ்ப்பாணம், (வயது 26),

65. கே. திவானிப்பிள்ளை, யாழ்ப்பாணம், (வயது 70),

66. பி. பொன்னம்பலம், முள்ளியவளை, (வயது 73),

67. அல்போன்ஸு, அக்கராயன்குளம், (வயது 58),

68. பி. தங்கத்துரை, குமுழமுனை, (வயது 40),

69. ஏ. ஐயாத்துரை, மீசாலை, (வயது 73),

70. ஆர். தர்மலிங்கம், கிளிநொச்சி, (வயது 64),

71. ரி. கனகம்மா, கிளிநொச்சி, (வயது 67),

72. எஸ். சிசிலியா, அளம்பில், (வயது 80),

73. வை. சுதர்ஷினி, பூநகரி,

74. வை. ஈஸ்வரி, பூநகரி,

75. எஸ். பரமேஸ்வரநாதன், முல்லைத்தீவு, (வயது 58),

76. பி. அன்னலெட்சுமி, கிளிநொச்சி, (வயது 61),

77. பி. அன்னலெட்சுமி, வட்டக்கச்சி, (வயது 61),

78. எஸ். டொமினிக், புதுக்குடியிருப்பு, (வயது 67),

79. கே. வசந்தன், புதுக்குடியிருப்பு, (வயது 52),

80. கே. வீனஸ், புதுக்குடியிருப்பு (வயது 05),

81. ரி. சிங்கராசா, முல்லைத்தீவு, (வயது 67),

82. ஜே. டக்ஷன், முல்லைத்தீவு, (வயது 09),

83. ஜே. ஜோன்சன், முல்லைத்தீவு, (வயது 05),

84. ஜே. உகலிஸ்ரா, முல்லைத்தீவு, (வயது 41),

85. எஸ். பிலாமினி, கிளிநொச்சி (வயது 60),

86. ரி. தர்ஷினி, வவுனியா, (வயது 23),

87. ரி. துஷன், வவுனியா, (வயது 02),

88. எஸ். கனகசிங்கம், கொக்குத்தொடுவாய், (வயது 57),

89. எஸ். வள்ளியம்மா, உடையார் கட்டு, (வயது 68),

90. பெயர் தரப்படவில்லை, உடையார்கட்டு, (வயது 71),

91. தனலட்சுமி, உடையார்கட்டு, (வயது 65),

92. அம்பிகாவதி, புளியங்குளம், (வயது 74),

93. ஆர். சரஸ்வதி, வட்டக்கச்சி, (வயது 24),

94. விவேகானந்தன், முள்ளியவளை, (வயது 60),

95. எஸ். அருள்வாசகம், வலையாறு, (வயது 81),

96. இலங்கைநாதன், யாழ்ப்பாணம் (வயது 65),

97. ஆர். பத்மநாதன், வவுனியா, (வயது 64),

98. வி. நடராசா, குருணிக்கல், (வயது 78),

99. எஸ். வரதாஸ, கிளிநொச்சி, (வயது 75),

100. எம். செபமாலை, அடம்பன், (வயது 73),

101. கே. சாந்தமூர்த்தி, சாவகச்சேரி, (வயது 72),

102. எஸ். சிவஞானதேவி, (வயது 64),

103. எஸ். சியாந்தி, கல்முனை, (வயது 26),

104. கே. பெருமாள், வட்டக்கச்சி, (வயது 77),

105. கே. முனுசாமி, முள்ளியவளை, (வயது 52),

106. தங்கராணி, விஸ்வமடு, (வயது 25),

107. டிலர்ஷன், விஸ்வமடு, (வயது 07),

108. மேரி வசந்தி, இளவாலை, (வயது 32),

109. கே. சிவாஜினி, யாழ்ப்பாணம், (வயது 27),

110. கே. நீலவன், யாழ்ப்பாணம், (வயது 01),

111. வை. ரோஷன், கிளிநொச்சி, (வயது 25),

112. வி. பமிலா, யாழ்ப்பாணம், (வயது 28),

113. மகேஸ்வரி, அடம்பன், (வயது 54),

114. மிது, அடம்பன், (வயது 03),

115. கே. ஸ்ரலின், இளவாலை, (வயது 35),

116. எஸ். அபினயா, இளவாலை, (வயது 04),

117. கே. குணரத்னம், யாழ்ப்பாணம், (வயது 57),

118. யதுஷன், யாழ்ப்பாணம், (வயது 03),

119. யதுஷா, யாழ்ப்பாணம், (வயது 03),

120. ரி. சிவபாக்கியம், (வயது 70),

121. எஸ். முத்துப்பிள்ளை, வவுனியா, (வயது 70),

122. கே.தங்கேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 49),

123. ஆர். சுதர்ஷினி, யாழ்ப்பாணம், (வயது 23),

124. ஆர். தருஹன், யாழ்ப்பாணம், (வயது 3.5),

125. லூர்தம்மா, இரணைப்பாளை, (வயது 75),

126. டி.ராசகுமார், நடுந்துவா, (வயது 29),

127. கனிஸ்டா, நடுந்துவா, (வயது 42),

128. ஏ.அபிஷன், (வயது ஐந்து மாதம்),

129. தமுசூட், (வயது 08),

130. அடையாளம் தெரியாதவர்.

131. எஸ். பூபதி, துணுக்காய், (வயது 59),

132. எஸ். சந்திரவர்மன், யாழ்ப்பாணம், (வயது 36),

133. பி. பாலசிங்கம், துணுக்காய், (வயது 63),

134. கே. நாகேஸ்வரன், வியாலம்குளம், (வயது 67),

135. ஆர். சண்முகநாதன், நெடுங்கேணி, (வயது 67),

136. எஸ். கிறிஸ்டினா, மன்னார், (வயது 37),

137. எஸ். லிவின்ஸா, மன்னார், (வயது 1.5),

138. எஸ். தரோமி, மன்னார், (வயது 10),

139. எஸ். நிரோமி, மன்னார், (வயது 08),

140. எஸ். சிவசுப்பிரமணியம், நெடுங்கேணி, (வயது 70),

141. விநாயகமூர்த்தி, கிளிநொச்சி, (வயது 68),

142. கே.யோகராசா, அனலைதீவு, (வயது 32),

143. வி.லூர்தம்மா, அனலைதீவு, (வயது 61),

144. வி. சிவபாக்கியம், அனலைதீவு, (வயது 80),

145. கே.புவனேஸ்வரி, பளை, (வயது 50),

146. சந்தனம், மாத்தளன், (வயது 79),

147. பெரியவெள்ளையன், உடப்பு, (வயது 57),

148. எஸ். இரத்தினம், மாத்தளன், (வயது 70),

149. எம். ஜெயகுமார், சாவகச்சேரி, (வயது 32),

150. வேலுப்பிள்ளை, முல்லைத்தீவு, (வயது 33),

151.ரி.சுந்தரம், விஸ்வமடு (வயது 55)

152.எஸ்.செல்வராணி, விஸ்வமடு (வயது 52)

153. கே.துரைமணி, துணுக்காய் (வயது 61)

154. வி.மகேஸ்வரி, நேசமடு, (வயது 50)

155. மேரிநெய்சா, மன்னார், (வயது62)

156.ஜோசப், மடு, (வயது 67),

157. ஏ. விமலாதேவி, புதுக்குடியிருப்பு, (வயது 56),

158. என். நிரஜா, புதுக்குடியிருப்பு (வயது 08),

159. பி.புஷ்பா, மன்னார், (வயது 46),

160. அபினயா, மன்னார், (வயது 06),

161. சருயா, மன்னார், (வயது 11),

162. வி. தருஜன், வவுனியா (வயது 04),

163. வி. சாந்தன், வவுனியா, (வயது 06),

164. வி. நாகராணி, வவுனியா, (வயது 32),

165. கிருஷாந்தன், வவுனியா (வயது 08),

166. கீர்த்தனா, வவுனியா, (வயது 08),

167. தீபத்தினி, யாழ்ப்பாணம், (வயது 33),

168. எஸ். மலிஷா, யாழ்ப்பாணம், (வயது 02),

169. கே. திலகராணி, வவுனியா, (வயது 27),

170. கே. சதீஷ், வவுனியா, (வயது 02),

171. எஸ்.தேவமணிதேவி, வட்டக்கச்சி, (வயது 53),

172. அடையாளம் தெரியவில்லை.

173. ஏ.அந்தனிதாஸன், மன்னார், (வயது 61),

174. நித்தியானந்தன், மல்லாவி, (வயது 50),

175. செல்லத்துரை, வட்டக்கச்சி (வயது 60),

176.வளர்மதி, மல்லாவி (வயது 16),

177. சந்திரவதனி, மல்லாவி (வயது 34),

178. டைலக்ஷா, மல்லாவி (வயது 08),

179. எஸ்.துளசி, மல்லாவி (வயது 08),

180. டெரசத், மல்லாவி, (வயது 10),

181. நிதுஷன், மல்லாவி, (வயது 04),

182. எஸ்.கஜேந்திரி, மல்லாவி, (வயது 12),

183. சன்சன், வன்னாராய், (வயது 07),

184. பி.ஜோசப்பின், வன்னாராய், (வயது 43),

185. ரோஷானி, வன்னாராய், (வயது 20),

186. லிங்கேஸ்வரி, வட்டக்கச்சி, (வயது 27),

187. துளசிக்கா, வட்டக்கச்சி (வயது 06),

188. நிலோஜினி, வட்டக்கச்சி (வயது 09),

189. சருஜன், வட்டக்கச்சி (வயது 11),

190. வி.கருணேசன், பூநகரி (வயது 29),

191. ரோஹினி, பூநகரி (வயது 31),

192. கபிலினி, பூநகரி (வயது 03),

193. சிவபாக்கியம், புதுக்குடியிருப்பு (வயது 68),

194. ரி.இராசம்மா, முரசுமோட்டை (வயது 65),

195. என்.மணிக்கம், முல்லைத்தீவு (வயது 75),

196. கே.காசிபதி, புத்தூர் (வயது 67),

197. எல்.இராஜரட்ணம், முறிப்பு (வயது 62),

198. எஸ்.செல்வம், கீரிமலை (வயது 74),

199. ரி.நல்லதம்பி, புதுமுறிப்பு (வயது 84),

200. கே.வேலுப்பிள்ளை, புதுக்குடியிருப்பு (வயது 70),

201. எம்.விஜயலட்சுமி, கிளிநொச்சி (வயது 69),

202. என்.சின்னத்தங்கம், முரசுமோட்டை (வயது 70),

203. வை.நந்தினி, முரசுமோட்டை (வயது 35),

204. வை.கீர்த்திகா, முரசுமோட்டை (வயது 10),

205. வை.திலக்ஷண, முரசுமோட்டை (வயது 08),

206. வை.ஜாழினி, முரசுமோட்டை (வயது 01), 2

07. டபிள்யூ. விஜயதோவி, மடு (வயது 64),

208. எஸ்.பழனி, கிளிநொச்சி (வயது 67),

209. பி.தெய்வானை, கிளிநொச்சி (வயது 60),

210. எஸ்.கணேசன், சாவகச்சேரி (வயது 79),

211. எஸ்.வள்ளியம்மா, புங்குடுதீவு (வயது 65),

212. எஸ்.சவரிமுத்து,மன்னார் (வயது 73),

213. எஸ்.அன்ரனி, அடம்பன் (வயது 70),

214. எஸ்.தொம்மாமரிசன், மன்னார் (வயது 64),

215. கே.பொன்னையா, யாழ்ப்பாணம் (வயது 75),

216. எஸ்.சிவகுமார், முத்தையன் கட்டு (வயது 33),

217. பி.நடேசப்பிள்ளை, யாழ்ப்பாணம் (வயது 75),

218. வை.நமியா, குருநாகல (வயது 45),

219. வி.டிலுக்சி, குருநாகல (வயது 03),

220. சரோஜாதேவி, உடுத்துறை (வயது 44),

221. கே.பொன்னம்மா, உடுத்துறை (வயது 74),

222. யு.அருந்தவம் கொக்கிலாய் (வயது 75),

223. ஜே.கந்தராஜா, யாழ்ப்பாணம் (வயது 65),

224. எஸ்.பென்னம்மா, செம்பியன்பற்று (வயது 70),

225. வள்ளியம்மா, தர்மபுரம் (வயது 48),

226. மீனாட்சி, கட்டைக்காடு (வயது 80),

227. ஏ.தங்கம்மா, பெரியகுளம் (வயது 60),

228. மனோகரன், கட்டைக்காடு (வயது 30),

229. என்.ராஜேஸ்வரி, அம்பலவாணன் பொக்கணை (வயது 57),

230. கே.நஸியம்மா, ஸ்கந்தபுரம் (வயது 66),

231. கே.பரமேஸ்வரி, பூநகரி (வயது 67),

232. வி.கதிரவேலு, பூநகரி (வயது 44),

233. எம்.சிதம்பரப்பிள்ளை, கிளிநொச்சி (வயது 64),

234. கே.இரத்தினசிங்கம், உருத்திரபுரம் (வயது 65),

235. எஸ்.நாகராணி, மானிப்பாய் (வயது 38),

236. விதுஷா, மானிப்பாய் (வயது 10),

237. நிதர்சன், வேலிக்குளம் (வயது 09),

238. யாலன், மானிப்பாய் (வயது 03),

239. கிரிபாமாரிதேவி, முல்லைத்தீவு (வயது 36),

240. யாழினி, புதுக்குடிருப்பு (வயது 04),

241. ஜே.சுவித்திரா, நல்லூர் (வயது 29),

242. சுஜித், யாழ்ப்பாணம் (வயது 11),

243. லக்ஷனா, யாழ்ப்பாணம் (வயது 09),

244. வணயோசப்பினி சொலமன், வலையர்மடம் (வயது 70),

245. மணியம்மா, வட்டக்கச்சி (வயது 33),

246. எஸ்.சிலம்பிசை, வட்டக்கச்சி (வயது 01),

247. எஸ்.வசந்தராசா, மாதலன் (வயது 10), 248. துஷ்யந்தன், மாதவன் (வயது08),

249. தனுஷா, மாதலன் (வயது 12), 250. பகிரதன், மாதலன் (வயது 04),

251. பி.சிதம்பரம், கிளிநொச்சி (வயது 81),

252. பாலசிங்கம், பேசாலை வடக்கு (வயது 81),

253. ரி.சிதம்பரம், பொக்கணை (வயது 64),

254. பி.சிசிலியா, அலம்பில் வடக்கு (வயது 86),

255. ஜே.மரியநாயகி, வவுனியா (வயது 68),

256. லபரூன்,

 257. கனகமணி, துணுக்காய் (வயது 69),

258. திருச்செல்வம், வட்டக்கச்சி (வயது 69),

259. புஷ்பராணி, மல்லாவி (வயது 40),

260. ஜி.கணதர்ஷினி, மல்லாவி (வயது 08),

261. கிருஷ்ணபிள்ளை, வலங்குட்டன் (வயது 72),

262. அப்புத்துரை, யாழப்பாணம் ( வயது 78),

263. எஸ்.தர்மலிங்கம், யாழ்ப்பாணம் (வயது 58),

264. எஸ்.பொன்னம்பலம், கந்தபுரம் (வயது 60),

265. பி.தர்மசெல்வன், கந்தபுரம் (வயது 27),

266. பி.விஜயலட்சுமி, கந்தபுரம் (வயது 54),

267. சோமசுந்தரம், யாழ்ப்பாணம் (வயது 72),

268. வை.கனகயன், கிளிநொச்சி (வயது 79),

269. ஆர்.ஜெகதீஸ்வரி, முத்தையன் கட்டு (வயது 27),

270. எஸ்.கயல்விழி, முத்தையன் கட்டு,

271. பேபிஷாலினி, முத்தையன் கட்டு (வயது 6),

272. எஸ்.சிதம்பரம், முத்தையன் கட்டு (வயது 68),

273. கணேஷ், வட்டக்கச்சி,

274. எஸ்.சுசந்தி, யாழ்ப்பாணம் (வயது 24),

275. சுந்தர், யாழ்ப்பாணம் (வயது 03),

276. கிருஷ்ண மூர்த்தி, கிளிநொச்சி (வயது 32),

277. கறுப்பையா, தேவிபுரம் (வயது 59),

278. ஆர்.தங்கவேல், தர்மபுரம் (வயது 67),

279. ரி.நிதாஜினி, மாங்குளம் (வயது 30),

280. ரி.தரணிகா, மாங்குளம் (வயது 04),

281. ரி.தமிகா, மாங்குளம் (வயது1),

282. கே.கங்கப்பிள்ளை, புதுக்குடியிருப்பு (வயது77).

283. ஐ.யதுகுலேந்திரன், வட்டக்கசி(வயது52).

284. என்.ராசசூரியம், யாழ்ப்பாணம் (வயது68),

285. ஆர்.வசந்ததேவி, துணுக்காய், (வயது61),

286. கே.சரஸ்வதி, கிளிநொச்சி(வயது63),

287. ஐ.குணரத்னம், கிளிநொச்சி, (வயது73),

288. கே.கோபாலரத்னம், யாழ்ப்பாணம், (வயது62),

289. கே.சந்திரதேவி, யாழ்நகர், (வயது48),

290. எஸ்.ராஜேஸ்வரி, கன்னிப்பாடு, (வயது24),

291. எஸ்.இளவரசன், கன்னிப்பாடு, (வயது01),

292. பி.சிவகுரு, வட்டக்கச்சி, (வயது78),

293. வி.காமாட்சி, மாதலன், (வயது70),

 294. எம்.சத்தியவான், மாங்குளம்(வயது64),

295. யு.பாலசிங்கம், கனகராயன்குளம்,(வயது74),

296. கே.ரூபவதி, முரசுமோட்டை (வயது70),

297. வி.பவீஸ்வரி, விஸ்வமடு, (வயது63),

298. வி.தவசேகரி, கிளிநொச்சி, (வயது45),

299.வி.சாமுகவேல், கிளிநொச்சி(வயது01),

300. நிரோஷன், கிளிநொச்சி, (வயது12),

301. நிஷாந்தன், கிளிநொச்சி, (வயது08),

302. ஸ்ரீவாதம், கிளிநொச்சி,(வயது10),

303. ஆர்.முருகையா, தர்மபுரம்,(வயது68),

304. எம்.வெள்ளையம்மா, தர்மபுரம்,(வயது60),

305.கே.கமலதேவி, காரை நகர்,(வயது35),

306. கே.தனுஷா, காரைநகர், (வயது09),

307. ஜே.ஐந்தன், காரைநகர், (வயது10),

308. கே.கிருஷாந்தன், காரைநகர்,(வயது07),

309. எஸ்.அம்பிகை, முல்லைத்தீவு,

310.எஸ்.சிவபாக்கியம், நெடுங்கேணி(வயது60),

311. எஸ்.செல்வரத்தினம், நெடுங்கேணி(வயது60),

312. எஸ்.ராசரத்னம், கிளிநொச்சி,(வயது75),

313. ஏ.சிற்றம்பலம், அச்சுவேலி,(வயது75),

314. செல்வநாயகம், தம்பலகாமம்,(வயது68),

315. சிவலிங்கம், மல்லாவி,(வயது72),

316. என்.கிருஷ்ணபிள்ளை, யாழ்நகர்,(வயது67),

317, எஸ்.முத்துராசா, மல்லாவி,(வயது67),

318. எஸ்.அன்னபூரணம், மல்லாவி(வயது64),

319. எஸ்.சிவகங்கை, தம்பலகமம்,(வயது65),

320. எஸ்.கெகீதரன், யாழ்நகர்,(வயது42),

321. புவனேஸ்வரி, யாழ்நகர்,(வயது60),

322. ஆர்.ஜெகதா, பூநகரி(வயது37),

323. ஆர்.ரேஷ்வரன், பூநகரி,(வயது37),

324. கே.நந்தினி, இரணைப்பா,(வயது39),

325. ரிஸ்விசுனா, இரணைப்பாளை,(வயது02),

326. அன்னமீலன், இரணைப்பாளை,(வயது06),

327. எஸ்.சிந்துஜா, இரணைப்பாளை,(வயது05),

328. எஸ்.திவானை, கிளிநொச்சி,(வயது77),

 329. இ.வெரோனிக்கா, யாழ்நகர்,(வயது64),

330. ரி.அற்புதநாதன், பாலைநகர்(வயது67),

 331. ஆர். மனோன்மணி, கிளிநொச்சி(வயது64),

332. அடையாளம் தெரியாதவர்.

333. கலாவதி, மாதலன்,(வயது23),

334. இந்துஷன், மாதலன்(வயது06),

335. பி.அன்னம்மா, சுண்டிக்குளம்(வயது61),

336. பூராஞ்சனி, சுண்டிக்குளம்(வயது06),

337. கே.வேலாயுதபிள்ளை, திருவையாறு(வயது62),

338. எஸ். திருநாவுக்கரசு, திருவையாறு(வயது61),

339. யு.ராதா, மன்னார்(வயது23),

340. சுந்தர்வண்ணன், மன்னார்(வயது02),

341. தனுசிகா, மன்னார்(வயது5),

342. ரோஸ்மேரி, அளம்பில்(வயது38),

343. டி.சண்முகம், வவுனியா(வயது72),

344. எஸ்.நாகரத
 

வன்னியில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு இரண்டு பாதைகளைத் திறப்பதற்கு முடிவு.

navy_rg.jpgவன்னியில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அரசு இரண்டு பாதைகளைத் திறப்பதற்கு முடிவுசெய்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த திட்டத்திற்கு செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் உதவியை அரசு நாடியிருக்கிறது என பெயர் குறிப்பிட விரும்பாத அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என “ரொய்ட்டர்” செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் சாலைப் பகுதியூடான ஒரு பாதையையும், முல்லைத் தீவு நகரப் பகுதியூடான ஒரு பாதையையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தை ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவே தீர்மானித்தது எனவும், இத்திட்டம் உண்மையென அரச அதிகாரி மற்றும் இரு இராணுவ அதிகாரிகள் ஆகியோர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர் என “ரொய்ட்டர்” தெரிவித்திருக்கிறது. இதேவேளை, இத்திட்டம் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும், எனினும் இது தொடர்பில் அரச தரப்பிலிருந்து எந்தவிதத் தகவலும் வெளிவரவில்லை எனவும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கூறியுள்ளது.அத்துடன், இத்திட்டத்திற்கு இரு தரப்பும் இணங்கினால், மக்கள் தாமாக வெளியேறும் பட்சத்தில் தாங்கள் உதவத் தயார் என்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தெரிவித்தது.

புலிகளுக்கு பெரும் ஆளணிப்பற்றாக்குறை; சூசை, பொட்டு உட்பட சிரேஷ்ட தலைவர்கள் களத்தில்

uthaya_nanayakara_.jpgபுலிகளின் பிடியில் எஞ்சியுள்ள 45 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை முழுமையாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் மூன்று படைப்பிரிவுகளும், அதிரடி படை அணியும் பல முனைகளில் வேகமாக முன்னேறிவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்புப் படையினரின் கடுமையான தாக்குதல்களையும், படை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் கள நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், கடற் புலிகளின் தலைவர் சூசை கடல் வழி நடவடிக்கைகளிலும், லோரன்ஸ், பொட்டு அம்மான் மற்றும் விதுஷன் ஆகியோர் உட்பட சிரேஷ்ட தலைவர்கள் தரைவழி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனரென்று புலனாய்வு தகவல்கள் குறிப்பிடுவதாகவும் அவர்தெரிவித்தார்.

ஏ-35 வீதியின் வடக்கே அதாவது புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்காக இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவும், ஏ-35 வீதியின் தெற்கே அதாவது புதுக்குடியிருப்பு சந்திக்கு தெற்காக இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான படைப் பிரிவும் புலிகளின் இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வேகமாக முன்னேறி வரு கின்றனர்.

இந்த இரு படைப் பிரிவுகளுக்கும் உதவியாக இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சாலையை மற்றும் புதுமாத்தளன் வட பகுதியை கைப்பற்றிய இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படைப்பிரிவின் புதுமாத்தளன் தென்பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

கிழக்கு கடலோரமாக முன்னேறும் படையினரின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு புலிகள் பாதுகாப்பு மதில்களை அமைத்து வருகின்ற போதிலும் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்கள் மூலம் அதனை தகர்த்து வருகின்றனர் என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலய பகுதியிலிருந்து புலிகள் இராணுவத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தம்மிடமிருந்த சகல கோட்டைகளையும் பிரதான நகர்களையும் முற்றாக இழந்து குறுகிய காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிடப்பட்டுள்ள புலிகள் தற்பொழுது ஆளணி பற்றாக்குறையை எதிர் நோக்கியுள்ளமை அவர்களின் சிரேஷ்ட தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளமையை காண்பிப்பதாகவும் மேலும் தெரிவிக்கிறது.

இதேவேளை புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலின் போதும் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து 387 சிவிலியன்கள்கப்பல் மூலம் திருமலைக்கு

vanni-injured.gif முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்ட மற்றும் அநாதரவான நிலையிலிருந்த 387 பேர் நேற்றிரவு கிறீன் ஓஷன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என பாதுகாப்பு அமைச்சசு அறிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட 57 பேரும், காயமடைந்துள்ள 87 பேரும், இரு கர்ப்பிணிகளும் மற்றும் அநாதரவான நிலையிலிருந்த 162 பேருமே இவ்வாறு திருமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 45 ச.கி.மீ. பிரதேசத்தையும் அவதானத்துடன் மீட்க ஆலோசனை – இராணுவத் தளபதி

sarath_fonseka.jpgஇராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர் அதிகாரிகள் நேற்று வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். விசேட ஹெலி மூலம் வவுனியாவைச் சென்றடைந்த இராணுவத் தளபதியை வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடை பெற்ற விசேட கலந்துரையாடலின் போது வன்னியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை இராணுவத் தளபதி கள தளபதிகளிடம் கேட்டறிந்துள்ளார். அதிகூடிய முன்னெச்சரிக்கையுடன் புலிகளிடம் எஞ்சியுள்ள 45 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் மீட்டெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேசமயம், படையினரின் போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக யாழ்-கண்டி ஏ-9 வீதி திறக்கப்பட்டுள்ள போதிலும் புலிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எந்தவித தாக்குதல்களையும் நடத்தாத வகையில் அந்த வீதி ஊடாக செல்லும் படையினரின் வாகன தொடரணிக்குத் தேவையான போதிய பாதுகாப்பை வழங்குமாறு இராணுவத் தளபதி இந்த விஜயத்தின் போது உத்தரவிட்டுள்ளார்.