சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் – முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம் : முரளிதரனுக்கு காயம்

cricket20-20.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிறது. இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணியில் முன்னாள் வீரர் முகம்மது யூசுப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த அணி தற்போது பலம் வாய்ந்த அணியாகக் காணப்பட்டாலும் இலங்கையில் நடைபெறும் ஆட்டம் என்பதால் இலங்கை அணிக்கு சாதகமாக இருக்கும் என்றே விளையாட்டு விமர்சகர்களின் கருத்தாகும்.

இதேவேளை பிந்திக் கிடைத்த தகவலின்படி இலங்கை அணியின் சுழல் மன்னன் முத்தையா முரளிதரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இப்போட்டியில் ஆடமாட்டாரென்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.

முரளிதரனின் இடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இறுதி நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததுடன் சுராஜ் முகமட் அல்லது ரங்கன ஹேரத் ஆகியோர் நியமிக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி – இலங்கை கிரிக்கெட் நிறுவன 11 பேர் அணியுடனான போட்டி வெற்றி தோல்வியின் முடிவுற்றது. இதேவேளை இலங்கை அணியின் புதுமுக வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது மட்டுமல்லாமல் சிறப்பாக பந்து வீசி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ், சுரங்க லக்மல், கெளசல் சில்வா ஆகிய 3 புதுமுகங்கள் இடம்பெற்று உள்ளனர். மெத்திவ்ஸ் 20 ஓவர் போட்டியில் ஆடி உள்ளார். வேகப்பந்து வீரர் பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தம்மிக இடம்பெற்றுள்ளார்.

இலங்கை அணி வருமாறு:

சங்கக்கார (கப்டன்), வர்ணபுர, தரங்க, ஜயவர்த்தன, சமரவீர, டில்சான், மெத்திவ்ஸ், கபுகெதர, மெண்டீஸ், துஷார, தம்மிக பிரசாத், கெளசல் சில்வா, சுரங்க லக்மல்.

பாகிஸ்தான் அணி வருமாறு:-

யூனுஸ்கான் (கப்டன்), மிஸ்பா உல்ஹக், சல்மான் பட், குர்ராம் மன்சூர், முகம்மது யூசுப், சுஐப் மலிக், கமரன் அக்மல், உமர் குல், சஹீட் அக்மல், முகம்மட் ஆமீர், டினேஷ் கனேரியா, அப்துல் ரசாக், அப்துல் ரவுப், பைசால் இக்பால், பவாட் அலாம்.

முஸ்லிம்களின் தமிழியல், பண்பாடு பற்றிய உலக ஆய்வு மாநாடு அக்டோபர் 3 முதல் 6 வரை

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை ஒழுங்கு செய்துள்ள முதலாவது உலக ஆய்வு மாநாடு பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளது.

தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம் எனும் கருப்பொருளில் நடைபெறவிருக்கும் இந்த மாநாடு இலங்கையிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள அறிஞர்கள், ஆய்வாளர்களை ஒன்றுபடுத்துவதுடன் மனிதப் பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தாம் கொண்டுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் இது தொடர்பான அறிவினை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 03ம் திகதி தொடக்கம் 06ம் திகதி வரை இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்த உலக ஆய்வு மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டினை பல்கலைக்கழக மொழித்துறை செய்து வருகின்றது.

இந்த மாநாட்டில் ‘தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம்” எனும் கருப்பொருளுக்கு உட்பட்டு இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமுகவியல், நாட்டார் வழக்காற்றியல், நாடகம், நுண்கலை, கல்வி அரசியல், பொருளியல், தமிழ் பேசும் முஸ்லிம்களின் மறு மலர்ச்சி எனும் தலைப்புக்களில் ஏதாவதொன்றின் ஆய்வுச் சுருக்கத்தினையும் கட்டுரையினையும் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்களைப் பெற விரும்புபவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்திணைக்கள சர்வதேச ஆலோசனைக் குழு செயலாளர்களான கே. ரகுபரன் (0718218177), திருமதி எம். ஏ. எஸ். எப். சாதியா (0718035182) ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

யாழ்நகரில் கலைஞர்களை கௌரவிக்க ஏற்பாடு

jaffna.jpgயாழ்ப் பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாடகத் தயாரிப்பாளர்கள் , அண்ணாவிமார்கள் மற்றும் பல்துறை சார்ந்த கலைஞர்கள் அனைவரும் யாழ்.பிரதேச செயலகத்தால் நடத்தப்படவிருக்கும் கலாசார விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதனால், இந்தப் பிரதேச செயலர் பிரிவிற்குள் இருக்கின்ற மேற்படி கலைஞர்கள் தங்கள் விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மூத்த கலைஞர்கள் எவராவது இதுபற்றி அறியாதிருப்பார்களாயின் அவர்கள் தொடர்பான விபரங்களை அறிந்தோர் அந்த விபரங்களைக் கலாசாரப் பேரவைக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முதலாவது ஆசிய இளைஞர்கள் விளையாடுப் போட்டிகள் சிங்கப்பூரில் தொடங்கின

asiangames.gifஆசிய அளவில் நடத்தப்படும் முதலாவது இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் திங்கட்கிழமை தொடங்கின.

இரு வார காலம் நடைபெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளில் 42 நாடுகளில் இருந்து சுமார் 1400 பேர் கலந்து கொள்கிறார்கள்.

14 முதல் 17 வயது உட்பட்டோருக்கான இந்த விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், நீச்சல், கால்பந்து, துப்பாக்கிச் சுடுதல், படகுப் போட்டி உட்பட பத்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டிகள் சிங்கப்பூரில் இளைஞர்களை விளையாட்டின்பால் கவர்திழுத்து அவர்களின் மேம்பாட்டுக்கு உதவும் என்று தாங்கள் நம்புவதாக இந்தப் போட்டிகளை நடத்தும் குழுவின் இணைத் தலைவரும் சிங்கப்பூர் விளையாட்டு ஆணையத்தின் தலைவரான உன் ஜின் டியக் தெரிவித்தார்.

குறைந்த அளவிலான செலவிலேயே இந்தப் போட்டிகள் நடைபெறுவதால் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளும் இவற்றை நடத்த முடியும் என்பதே இதன் சிறப்பு என்றும் அவர் கூறுகிறார். ஜூலை மாதம் 7 ஆம் தேதி வரை இந்த முதலாவது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் இடம் பெறவுள்ளன.

பெட்ரிகா உலக சாதனை

petrica.jpgபெண் களுக்கான 400 மீற்றர் பிறீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் இத்தாலியின் பெட்ரிகா பெலிகிரினி புதிய உலக சாதனை பøடத்தார்.  இத்தாலியில் நடைபெற்றுவரும் மெடிடெரனின் போட்டியில் பெட்ரிகா 400 மீற்றர் பிறீ ஸ்டைல் போட்டியை 4 நிமிடம் 0.41 வினாடிகளில் முடித்தே இந்த உலக சாதனையை படைத்தார்.

இதன்போது அவர் பிரித்தானியாவின் ஜொவான் ஜக்ஸன் படைத்திருந்த சாதனையையே முறியடித்தார். ஜக்ஸன் 400 மீற்றர் பிறீ ஸ்டைல் போட்டியை 4 நிமிடம் 0.66 வினாடிகளில் முடித்து உலக சாதனை படைத்திருந்தார்.

பிரிட்டனின் ஷரியா நீதிமன்றங்கள்

பிரிட்டனில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் 85 நீதிமன்றங்கள் இயங்குவதாகவும், அவை பிரிட்டிஷ் நீதித்துறைக்கு சவாலாக உருவெடுத்துள்ளதாகவும் சிவிட்டாஸ் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் 1996 இல் கொண்டுவந்த சட்டம் ஒன்றைப் பயன்படுத்தி இந்த நீதிமன்றங்கள் செயற்படுகின்றன.

ஒரு பிரச்சினை தொடர்பில் தீர்வுகாண விளையும் இரு தரப்பினரும் விரும்பும் பட்சத்தில், அவர்களுடைய பிரச்சினையில் முடிவு சொல்ல தீர்ப்பாயங்களை அந்த சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், சில முஸ்லிம் விசாரணை மன்றங்கள் அதற்கும் மேலாக அதிக தூரம் போய்விடுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

முஸ்லிம் பள்ளிவாசல்களில் இயங்கும் இத்தகைய ஷரியா நீதிமன்றங்கள், பிரிட்டிஷ் நீதி முறைமைகளுக்கு முரணாக, தனிப்பட்ட நபரின் வாழ்க்கைக்குள்ளும் தமது அதிகாரத்தை செலுத்த விளைவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

பலதார மணம், மனைவியிடம் பலவந்தமாக பாலியல் உறவு கோருவதற்கான கணவனின் உரிமை மற்றும் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களை திருமணம் செய்யக் கூடாது என்பன போன்ற விடயங்களை வலியுறுத்தும், பிரிட்டிஷ் சட்டங்களுக்கு பொருந்தாத தீர்ப்புக்களை இந்த நீதிமன்றங்கள் வழங்குவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கைச் சுற்றுலா ஆரம்பம்

cricket20-20.jpgகிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி இன்று முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பங்குபற்றுகிறது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அணியுடனான இப்பயிற்சி ஆட்டம் கொழும்பு,  கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. திலிண கன்டம்பி தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிறுவன அணி இன்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி இன்று முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பங்குபற்றுகிறது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அணியுடனான இப்பயிற்சி ஆட்டம் கொழும்பு,  கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. திலிண கன்டம்பி தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிறுவன அணி இன்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

அண்மையில் நடந்து முடிந்த ருவன்டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியனான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று முன்தினம் இலங்கை வந்துசேர்ந்தனர். ருவன்டி-20 சம்பியன் கிண்ணத்தை பாகிஸ்தான் வெல்வதற்குக் காரணமாகவிருந்த சகலதுறை ஆட்டக்காரர் ஷஹீத் அப்ரிடி இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை.  

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள்  போட்டிகளும் ஒரு  ருவன்டி-20 போட்டியும் இடம்பெறவுள்ளன. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

7 வது ஆசிய பெண்கள் வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சம்பியன்

netball.jpgஏழாவது ஆசிய பெண்கள் வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சம்பியனாக தெரிவாகியுள்ளது. இலங்கை பெண்கள் வலைப்பந்தாட்ட அணிக்கும் நடப்புச் சம்பியனான சிங்கப்பூர் அணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற மேற்படி போட்டியில் இலங்கை அணி 77-48 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்தது.

ஆசிய வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 9 நாடுகள் பங்கேற்றன. இலங்கை அணி தான் பங்கேற்ற 6 போட்டிகளிலும் வெற்றியீட்டி 4 ஆவது தடவையாகவும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இலங்கை அணி முதல் சுற்றை 19-11 என்ற செட் கணக்கிலும் இரண்டாம் சுற்றை 20-14 என்ற செட் கணக்கிலும் முன்றாம் நான்காம் செட்களை 18-9, 20-14 என்ற செட் கணக்கிலும் வென்றது.

‘ருவன்டி-20’ உலக லெவன் அணியில் டில்சான், மென்டிஸ் – ஐ.சி.சி. அறிவிப்பு

_dilshan_.jpgஇருபது ஓவர்களைக்கொண்ட ‘ருவன்டி-20’ கிரிக்கெட் போட்டிகளுக்கான ‘உலக லெவன்’ அணியில் இலங்கை வீரர்களான திலகரத்ன டில்ஷான் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த ‘ருவன்டி-20’ உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சிறந்த வீரர்களைத் தெரிவு செய்து ‘உலக லெவன்’ கனவு அணியை அறிவித்துள்ளது.

இரண்டாவது தடவையாக நடைபெற்ற இத்தொடரில் சம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்,  2ஆவது இடம்பெற்ற இலங்கை,  அரை இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவான தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகளின் வீரர்கள் இந்த ‘உலக லெவன்’அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை,  கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ‘ருவன்டி-20’ தொடரில் சம்பியனான இந்திய அணி வீரர்கள் எவரும் இம்முறை ‘உலக லெவன்’ அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஐ.சி.சி. ~ருவன்டி-20’ உலக லெவன் அணி வீரர்கள் விபரம் வருமாறு:-
யூனிஸ்கான் (கப்டன்),  கம்ரன் அக்மல்,  ஷஹீத் அப்ரிடி,  உமர்குல் (பாகிஸ்தான்),  ஜெக் கலீஸ்,  டிவிலியர்ஸ்,  வெய்ன்ர்லொஸ், (தென்னாபிரிக்கா) திலகரத்ன டில்ஷான்,  அஜந்த மெண்டிஸ் (இலங்கை), கிறிஸ் கெயில், பிராவோ (மே.இ.தீவுகள்). 
 

20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது பாகிஸ்தான்

second-world-cup-of-twenty20.jpgஇருபது ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாக்ஸ்தான் அணி இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக இந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

முதலில் ஆடிய இலங்கை அணி தனது இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இலங்கை அணி முதல் சில ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்தியது.

இலங்கை அணியின் சார்பில் அதன் தலைவர் குமார் சங்கக்கார மட்டுமே உறுதியாக ஆடி 64 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அப்துல் ரசாக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி பெற தேவைப்பட்ட 139 ஓட்டங்களை எடுத்து கோப்பையை கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷாகித் அஃப்ரிடி சிறப்பாக ஆடி 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக கம்ரன் அக்மல் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இந்தப் போட்டியில் முந்தைய சாம்பியனான இந்திய அணி காலிறுதி நிலையிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.