ஈழமாறன்

ஈழமாறன்

“அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” கழுதை சுமந்த கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் ராஜா நித்தியானந்தன்

“அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” என கழுதை சுமந்த கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் நிகழ்விற்குத் தலைமை தாங்கிய ராஜா நித்தியானந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். நூலாசிரியர் க பிரேம்சங்கர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் போராளி. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைவிட்டு வெளியேறிய போதும் அவர் கழக விசுவாசத்தை விட்டுக்கொடுக்காதவர். அந்த வகையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்லூரியை T3S (Tamileelam School of Social Science) ஆரம்பித்த ராஜ நித்தியானந்தன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் இக்கல்லூரியில் கற்ற நூலாசிரியர் க பிரேம்சங்கர் முன்னணியில் திகழ்ந்ததையும் அவரை ஏனைய மாணவர்களுக்கு விளக்கும் ரியுரராக நியமித்ததையும் ராஜ நித்தியானந்தன் நினைவு கூர்ந்தார்.

உலகின் முன்னணி பொருளியல் கற்கைக்கான பல்கலைக்கழகமான லண்டன் ஸ்கூல் ஓப் எக்கொனொமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் கோடைவிடுமுறைப் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னையில் உருவாக்கப்பட்ட தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரி – T3S உருவாக்கப்பட்டதாக ராஜ நித்தியானந்தன் அதன் வரலாற்றை சுருக்கமாகக் குறிப்பிட்டார். இக்கல்லூரியில் முதலாளித்துவக் கொள்கையின் தத்துவாசிரியரான அடம் சிமித், கொம்யுனிசக் கொள்கையின் தத்துவாசிரியரான கார்ள் மார்க்ஸ் ஆகியோர்களின் தத்துவார்த்த கோட்பாடுகள் பற்றிய அரசியல் பொருளாதாரம் மாணவர்களுக்கு புகட்டப்பட்டதாகத் தெரிவித்தார். கலை இலக்கியங்களைக் கொண்ட மேற்கட்டுமானம், பொருளாதார உற்பத்தி முறை பற்றிய கீழ்கட்டுமானம் என்று ஆழமான புரிதலை ஏற்படுத்தும் பாடத்திட்டங்கள் அங்கு கற்பிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இவற்றைக் கற்பிப்பதற்கு தமிழக பல்கலைக்கழகங்களில் இருந்து இந்த கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே “அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” என்பதைக் குறிப்பிட்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய தனது கருத்தை முன்வைத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்திய அமைப்புகளிடையே அரசியல் அறிவின்மையையும் அவ்வாறானவர்களிடம் ஆயதங்கள் ஒப்படைக்கப்பட்டதன் இன்றைய நிலையையும் அவர் நாசுக்காகச் சுட்டிக்காட்டினார். தனது குறுகிய நேர உரையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமா மகேஸ்வரனை குறைந்தது மூன்று தடவைகளாவது விதந்துரைத்திருந்தார். ஆனால் சமூக விஞ்ஞானக் கல்லூரியை உருவாக்கிய உமா மகேஸ்வரனும் கூட அற்ப அறிவுடையவர்களிடமே ஆயதங்களை ஒப்படைத்திருந்ததும் அவர்கள் படுகொலையாளர்களாக மாறியதும் வரலாறு.

மேலும் தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரி கடவுள் கொள்கையை மறுத்திருந்தபோதும் அதனை உருவாக்கிய ராஜா நித்தியானந்தன் அங்கு கற்ற மாணவர்கள் சிலரும் இன்று ஆன்மீகத்தில் தடம் பதித்திருப்பது இன்னுமொரு முரண்நகை. ஐயப்பன் ஆலயத்தின் குரசாமி கிரிசாமியின் ஆசிஉரையுடள் நூல்வெயீட்டு நிகழ்வு ஆரம்பமானது.

இந்தக் கழுதை சுமந்த கவிதை அம்புலிமாமா கதைப்புத்தகம் போன்று அழகாக வடிவமைக்ப்பட்டு இருந்ததை மெச்சினார் வெளியீட்டுரையை வழங்கிய மாதவி சிவலீலன். காதலில் திளைத்தும் விடுதலைப் போராட்டம் என்று சென்று வந்து மார்க்ஸிஸக் கருத்துக்களை உதிர்த்தும் கவிதைகளை பல்வேறு தளங்களில் வடித்திருப்பதாக குறிப்பிட்ட மாதவி சிவலீலன், இக்கவிதைத் தொகுப்பு நவீன ஜனரஞ்சக இலக்கிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்தார். யதாரத்தவாதி வெகுஜன விரோதியாகி விடுவது போல் சில கவிதைகள் அவருக்கு விரோதத்தை சம்பாதிக்கலாம் என்பதையும் மாதவி சிவலீலன் சுட்டிக்காட்டிச் சென்றார்.

நூலின் தலைப்பையும் அதில் சொல்லப்படும் பிராணியையும் வரலாற்று ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தி ஆய்வாளர் மு நித்தியானந்தன் சகல சமூகங்களிலுமே கழுதை ஒரு கேவலமான பிராணியாகவே கடந்த 2000 ஆண்டுகளாக அதே கழுதை என்ற பெயருடன் சித்தரிக்கப்பட்டு வருவதாகக் கூறி தமிழில் கழுதையை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த பழமொழிகள் பலவற்றைச் சுட்டிக்காட்டினார். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசணை. கழுதை கட்டெறும்பானது, … என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார். கழுதை அவ்வளவு கேவலமான பிராணி அல்ல என்று குறிப்பிட்ட மு நித்தியானந்தன் கழுதை சுமந்த கவிதையின் அர்த்தத்தை வினவினார்? கழுதையை நூலாசிரியர் கேவலமாகக் கருதுகிறாhரா என்ற கேள்வி மு நித்தியானந்தனின் ஆய்வில் தொக்கி நின்றது. மன்னாரில் கழுதைக் காப்பகம் அமைக்கப்படுவதையும் அண்மையில் இந்தியாவில் காணாமல் போன கழுதைகளைத் தேடும் சர்ச்சையையும் சுட்டிக்காட்டி அந்தக் கழுதைகள் போல் நாங்கள் எல்லோரும் எதையோ சுமக்கின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த சுமைகளை அறிவுகளை இல்லாமல் வாழ்க்கையை நாளாந்தம் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். நாங்கள் வெற்றுப் பாத்திரத்தில் எதையும் ஊற்றிக் குடிக்க வேண்டுமே ஒழிய ஏற்கனவே அதற்குள் உள்ள ஏதோ ஒன்றுக்குள் ஊற்றி அருந்துவது போல் வாழ்க்கை அமையக் கூடாது எனத் தெரிவித்தார்.

க பிரேம்சங்கரின் கவிதைத் தொகுப்பில் 25 வீதமான கவிதைகள் காதலைச் சொல்வதைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர் மு நித்தியானந்தன் தனக்கு அவருடைய சங்ககாலக் காதலில் உடன்பாடில்லை என்றார். புலியை வேட்டையாடி அதன் பல்லைக் கொண்டுவந்து காதலிக்கு அணிவித்து தான் காதலை வெளிப்படுத்த வேண்டுமானால் நாங்கள் யாருமே காதலிக்க முடியாது என நகைச்சுவையாகத் தெரிவித்தார். இக்கவிதைத் தொகுப்பில் மாட்டுப் பொங்கலுக்கூடாக மிருகவதை பற்றி படைப்பாளியின் சிந்தனையைச் சுட்டிக்காட்டிய மு நித்தியானந்தன் மலையக மக்கள் பற்றிய கவிதையையும் விதந்துரைத்தார்.

போராடுவதற்காக தம்மை அர்ப்பணித்த அப்போராட்டம் சறுக்கிய போது வெளிநாட்டுக்கு வந்து வீழ்ந்த இந்தப் படைப்பாளியைப் போன்றவர்களால் இந்த மண்ணில் ஒட்ட முடியவில்லை. வேற்றுலக மனிதர்களாகவே வாழ்கின்றனர். சகோதரப்படுகொலைகளைக் கடந்து வந்த இவர்களின் காலத்திலேயே போடுதல், போட்டுத் தள்ளுதல், தகடு வைத்தல் போன்ற சொற்பதங்கள் எமது சமூகத்தில் உருவாகிறது. தந்தையொருவர் தனது மகனைத் தேடிச்சென்று முகாமில் விசாரிக்கின்ற போது, அவரைத் போட்டுட்டாங்கள் என்று சொல்லப்பட்ட போது அந்த தந்தைக்கு அது விளங்கவேயில்லை என்பதை மு நித்தியானந்தன் அங்கு சுட்டிக்காட்டினார்.

இத்தொகுப்பில் கவிதைகள் ஒழுங்குமறையில் தொகுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நித்தியானந்தன் நூல் பற்றிய விபரங்கள் ஆங்கிலத்தில் வருவதன் அவசியத்தையும் விளக்கினார். அவ்வாறு நூல்விபரம் ஆங்கிலத்திலும் இருந்தாலேயே இலங்கையிலோ இலங்கைக்கு வெளியிலோ நூலகங்களில் இந்நூல் பதிவுக்கு உட்படுத்தப்படக் கூடியதாக இருக்கும் என்றார். மேலும் நூலில் ஓவியங்கள் காத்திரமானவையாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர் அவ்வோவியங்களை வரைந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேற்கு லண்டன் தமிழ் பள்ளியின் அதிபர் செல்வராஜா உரையாற்றுகையில் மனிதவதை பற்றி மிக இறுக்கமாகக் குறிப்பிடும் படைப்பாளர் திபாவளியைக் கொண்டாடுங்கள் ஆனால் கொன்று கொண்டாடாதீர்கள் என்று வேண்டிக்கொள்வதைச் சுட்டிக்காட்டினார். இலக்கியச்சுவை காதல்சுவை காமச்சுவை நகைச்சுவை நிறையவே இருக்கின்றது ஆனால் ஆங்கிலப் பதங்களை சொற்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

நாடகக் கலைஞர் சரத் சந்திரன் கவிநயத்தோடு பேசுகையில் வாசித்து வாசித்து கவிதை கொண்டு தன் தேடலுக்கு அணை கட்டியதாகத் தெரிவித்தார். வாழ்வின் பல பக்கங்களையும் படைப்பாளர் தட்டியதைச் சுட்டிக்காட்டிய சரத் சந்திரன் வடிவமைப்பின் கவர்ச்சியும் அதற்கான ஓவியங்களும் சொற்களின் வீரியத்தைக் குறைத்து விடுமோ என்று எண்ணத் தோண்றியதாகக் குறிப்பிட்டார்.

கிங்ஸ்ரன் கொன்சவேடிவ் கட்சி கவுன்சிலர் நந்தா பரம் கவிதை; தொகுப்பு பேசுகின்ற அரசியலுக்குள் சற்று ஆழமாகவே ஊடுருவிச் சென்றார். கொன்சவேடிவ் கட்சியின் கவுன்சிலராக இருந்த போதும் அவருடைய அரசியல் பார்வை முற்றிலும் அதன் கருத்தியல் நிலைப்பாட்டுக்கு முரணாணதாக இருந்தது. “கருத்தை கருத்தால் எடுத்தியம்ப வேண்டும் கசையடியாலல்ல…” என்ற கவிதையை மேற்கோள் காட்டிய நந்தா பரம் பிரேம்சங்கர் ஏன் உண்மையை மறைக்கிறார். அங்கு கசையடியா நடந்தது. உண்மையில் என்ன நடந்தது. ஆனந்தராஜா, ராஜினி ஆகியோரை இழந்திருக்க தேவையில்லை என்றார். தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கல்விமான்களான அதிபர் ஆனந்தராஜா, யாழ் பல்கலைக்கழக மருத்துவ உடற்கூற்றியல் சிரேஸ்ட்ட விரிவுரையாளர் ராஜினி திரணகம ஆகியோரையே கவுன்சிலர் நத்தா பரம் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

படைப்பாளியின் மாட்டுப்பொங்கல் பற்றிய கவிதையை இன்றைய முதலாளித்துவ சமூகத்தோடு ஒப்பிட்டு நந்தா பரம் வழங்கிய மதிப்பீடு அசத்தலாக அமைந்தது. வருடம் முழுவதும் மாட்டை சுரண்டி உழைக்கும் மனிதன் மாடு கன்று ஈன்றபின்னும் கன்றை மாட்டுக்கருகில் கட்டி வைத்து பால்சுரக்க வைத்து அதனையும் கறந்துவிடுகின்றான். அதற்காக வருடத்தில் ஒருநாள் மாட்டுக்கு பொங்கல் வைத்து மாட்டையும் ஏமாற்றி விடுகின்றான். இதே போல் தான் முதலாளி வர்க்கமும் தொழிலாளியைச் சுரண்டி அவன் உழைப்பை கறந்துவிட்டு போனஸ் கொடுத்து ஏமாற்றி விடுகின்றான் என்று நந்தா பரம் சுட்டிக்காட்டி கவிதைத் தொகுப்பை விதந்துரைத்தார். படைப்பாளியின் ஜீவராசிகள் மீதான காருண்யத்தையும் கவுன்சிலர் நந்தா பரம் தன்னுரையில் கோடிட்டுக் காட்டினார்.

ஆழகானவை எல்லாம் மனதுக்கு பிடிப்பதில்லை ஆனால் மனதுக்கு பிடித்தமானவை எல்லாம் அழகாகத் தோன்றும் என கழுதை சுமந்த கவிதைத் தொகுப்புப் பற்றி குறிப்பிட்டவர், மாற்றுக் கருத்துக்கு மரணமோ தீர்வு! என்ற படைப்பாளியின் ஆதங்கத்தை பொறுப்புடன் குறிப்பிட்டார். இவ்வாறான போர்க்கால வீரியம் மிகு கவிதைகள் ஈழத்திலேயே சாத்தியம் எனவும் குறிப்பிட்டார்.

வாசிப்பவர்களை பழைய நினைவுகளுக்கே கொண்டு செல்லும் இக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு ஒரு உள்ளடக்கம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி தன்னுரையை நிறைவு செய்தார் நிவஜோதி யோகரட்ணம்.

“இந்தக் கழுதையை அது சுமந்த கவிதையை அதன் கனவுகளை எல்லாம் எனக்கு நன்கு தெரியும்” என்று கவிநயத்தோடு தன்னுரையை ஆரம்பித்தார் படைபாளனின் பள்ளித் தோழன் ஜெகத் லக்ஷன். 1979இல் யாழ் இந்துக் கல்லூரியில் உருவான நட்பு நாற்பது ஆண்டுகளக் கடந்தும் பயணிக்கின்ற கதையை “கழுதை சுமந்த கவிதை” விமர்சனத்தினூடாக இன்னொரு கழுதையாக பயணித்த கதையை லக்ஸ்மன் தன்னுரையினூடாகக் கொண்டு வந்தார். தம்பையா மாஸ்ரரின் பின் வரிசைப் பிரமுகர்களில் ஒருவரான இந்தப் படைப்பாளிக்கு கம்பராமாயணம் மிகத் தெளிவாகத் தெரிந்தாலும் ‘கொங்கை’ க்கு விளக்கம் தெரியாமல் தவித்து, பிறகு பார்த்தால் மட்ராஸில் சமூக விஞ்ஞான கல்வி படித்ததாகக் கேள்விப்பட்டேன் என அன்றைய வாழ்க்கை போராட்டமானதைச் சுட்டிக்காட்டினார். அங்கு போராட்ட இலங்கியங்கள் படித்து சிவப்புப் புத்தகங்கள் படித்தது தான் மிச்சம் கப்பல் கடைசிவரை வரவில்லை என்றவர் எந்தக் கப்பல் வரவில்லை என்று கடைசிவரை குறிப்பிடவில்லை.

மீண்டும் 1991 இல் லண்டனில் தன் நண்பரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த லக்ஷன் 1995இல் கவிதைத்தொகுப்பை வெளியிட எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. வாடகை வீடுகள் மாறியதில் கவிதைகளும் தொலைத்த சோகக் கதையைக் கூறினார். அதன் பின்னும் ஒரு கட்டுக்கவிதைகளோடு வந்து நின்றபோது வெளியிட தன்னால் முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியவர் ஏன் என்பதை தொக்கில் விட்டுவிட்டார். தற்போது வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பில் தன்னிடம் தந்த கவிதைக்கட்டில்லிருந்த ஒரேயொரு கவிதையே இதில் உள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாக லக்ஷன் குறிப்பிட்டார்.

பிக்பொஸ் பார்க்க நிறைய நேரம் செலவழிக்கும் நாம் பிக்பொஸ்ஸாக யோசிக்க மாட்டோம் என்கிறோம் என மனவருத்தப்பட்டுக்கொண்ட லக்ஷன், மேலும் மேலும் படைப்புகள் எம்மத்தியில் இருந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு தன்னுரையை நிறைவு செய்தார்.

பேனா நண்பராக ஏற்பட்ட நட்பு சமூக விஞ்ஞானக் கல்லூரியில் சந்தித்து லண்டனில் இன்று வரை தொடர்வதை தயாமயூரன் நினைவு கூர்ந்தார். சமகாலத்தில் விடுதலைக்காகப் புறப்பட்ட தாங்கள்; மனிதநேயம் உயிர் நேயம் கொண்டு துன்பங்கள் துயரங்கள் கடந்து பயணத்தைத் தொடர்வதை தயாமயூரன் நினைவுகூர்ந்தார். தயாமயூரனும் சிறந்த முறையில் கவிதை புனைபவர் என்று குறிப்பிட்ட ராஜா நித்தியானந்தன் அவரும் தனது கவிதை நூலைக் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்போது எம்மோடு இல்லாத எனது சகோதரன் வசந், பிரேம்சங்கர், தயாமயூரன் ஆகியோர் சமகாலத்தில் தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரியில் பயின்றவர்கள். இந்த நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்தபோதும் எனது சகோதரனின் சார்பாக என்னை வரும்படியே பிரேம்சங்கர் அழைத்து இருந்தார். நட்பு இரத்த உறவுகளுக்கும் மேலானதாக அமைந்துவிடுகின்றது. அதுவும் போராட்ட அமைப்புகளில் கருக்கொள்ளும் நட்புகள் இரத்தமும் சதையுமாகிவிடுகின்றது. இக்கவிதைத் தொகுப்பு நிகழ்விலும் அதனைக் காணமுடிந்தது.

இறுதியாக உரையாற்றிய வேணுகோபால் இந்நட்பை விதந்துரைத்திருந்தார். நல்ல நண்பர்கள் அமைவதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். “கவிக்கூத்தன் பிரேம் ஒரு கம்பன் கவிதை எழுதுவதில் அவன் ஒரு வம்பன்” என்று குறிப்பிட்ட வேணுகோபால், “அடைந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரணதேவி அல்ல அடுத்த தேவி” என்ற கவிதையைச் சுட்டிக்காட்டி கவிஞ்ஞனுக்கு பொய்யும் அழகு என்று குறிப்பிட்டு தன்னுரையை முடித்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜெஸ்ரீ என்பவர் “கழுதை சுமந்த கவிதை” க்கு ஒரு கவிதை தந்தார்.

இறுதியாக ஏற்புரை வழங்கிய கவிக்கூத்தன் பிரேம்சங்கர் இலங்கையின் இலக்கிய வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆவால் இப்போது தனக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் இனிமேல் இன்னும் தரமாக கவிதைகளை தர வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நாம் மட்டும் அல்ல எமது பிள்ளைகளையும் அவர்களுக்கு பரீட்சயமான மொழியிலேயே எழுதத் தூண்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு நிகழ்வை நிறைவுக்கு கொண்டுவந்தார்.

150 பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மண்டபம் நிறைந்த கவிக்கூத்தன் க பிரேம்சங்கரின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு ஹரோ ஐயப்பன் ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கலை, இலக்கிய, அரசியல் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்ட நிகழ்வு கோவிட் கால முடக்கத்திற்குப் பின் இடம்பெற்ற மிகச்சிறப்பான கலை, இலக்கிய, அரசியல் நிகழ்வாக அமைந்தது. முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட பல்தரப்பினரும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். மேலும் புதிய பேச்சாளர்கள் பலரும் கலந்துகொண்டு கவிதைத்தொகுப்பு வெளியீட்டை கவித்துவத்தோடு நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கேபி உடன் virtual interview : ஈழமாறன்

Kumaran_Pathmanathanஅண்மைக்காலமாக கேபி யும் அவரைச் சந்திக்கச் சென்ற குழுவினதும் இலங்கைப் பயணம் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இதன் அரசியல் ஆழ அகலங்களை அறிய ஈழமாறன் கேபி உடன் ஒரு வேட்ச்சுவல் இன்ரவியூ – virtual interview ஒன்றை எடுக்கின்றார். தேசம்நெற் வாசகர்களுக்காக கேபி உடன்  அந்த virtual interview…..

ஈழமாறன்: வணக்கம் திரு கேபி…..

கேபி: வணக்கம் மாறன்.

ஈழமாறன்: நல்ல வசதியான வீடுதான் தந்திருக்கிறாங்கள் போல….

கேபி: ஓமோம்.. நாங்கள் கொழும்புக்கு வாறதுக்கு முதல் சில நிபந்தனைகளை விதித்திருந்தோம். அதிலே முக்கியமானது இதுதான். மாறன் நான் வன்னியிலை இருந்த சனம்மாதிரி அல்லது சாதாரண போராளிகள் மாதிரி கேடு கெட்டுத் திரியேல்லை. தாய்லாந்திலை கப்பல் மாதிரி வீடு. மலேசியாவிலை நான் இருந்த வீட்டை வந்து பாத்தியள் எண்டா.. வாயடைச்சுப் போடுவியள்.. இதெல்லாம் ஒரு ஜூஜூபி.

பெரிய வீடு தனிய நான் தங்கிறதுக்கு இல்லை. வெளிநாடுகளிலை இருந்து குழுக்கள் எண்டு சொல்லி நிறையப் பேர் வருவினம் எல்லோ. அவையள் எல்லாம் வசதியா இருந்து பானம் அருந்திட்டு போறதுக்கு, கொஞ்சம் பெரிய வீடு வசதியா இருக்கும் எண்டு, கோத்தபாய நாங்கள் மலேசியாவிலை இருக்கும் போதே எல்லா வசதிகளும் நீங்கள் எதிர்பாக்கிற மாதிரி இருக்கும் என்று வாக்குறுதி வேறை தந்தவர்.

ஈழமாறன்: உங்கட பதிலில் இருந்து மூண்டு கேள்விகள் கேட்கவேணும். ஒன்று நாங்கள் எண்டா யார் யார்? இரண்டு இலங்கைக்கு வருவதற்கு முன் என்று சொன்னீர்கள். அப்பிடியெண்டா.. இலங்கை அரசாங்கம் உங்களைக் கெட்டித்தனமா புடிச்சுக் கொண்டு வந்திட்டம் எண்டு சொன்னது?மூண்டாவது வேலை வெட்டியில்லாமல் பொண்டாட்டி புள்ளையளோட சுத்தித் திரிஞ்ச உங்களுக்கு நாட்டுக் கொரு வீடு வாங்க காசு எங்காலை?

கேபி: முதலாவது கேள்விக்கு என்னால சிரிக்கிறதைத் தவிர வேறை பதில் சொல்ல முடியேல்லை.

இரண்டாவது கேள்விக்கு பதில் 30 வருசம் புடிக்க முடியாமப் போன ஸ்ரீலங்கா அரசு முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு புடிச்சிட்டம் எண்டு கதை விடேக்குள்ள விளங்கேல்லையோ… கதை எங்கை, எப்பிடிப் போகுதெண்டு.…கட்டுநாயக்கா எயாப் போட்டில வந்திறங்கினபோது வந்து பாத்திருக்க வேணும் எங்களுக்கு கிடைச்ச வரவேற்பை. மகிந்தவுக்கு கூட அப்பிடிக் கிடைச்சதில்லை. 

மூண்டாவது கேள்வவிக்கு பதில் புலன்பெயர் மக்கள்தான். ரெலோவைச் சுட்டு தள்ளேக்கை நல்லூர் கோயிலுக்கு முன்னுக்கு போட்டு உயிரோடை எரிக்கேக்கை…பூரிச்சுப் போய் தாலிக்கொடி தொட்டு டொலராய், பவுண்டாய், பிராங்காய் குடுத்த நன்கொடையிலைதான் தாய்லாந்திலை வீடு வாங்கினனான்.

பிறகு, என்ன இயக்கம் அது? அவன் கரிகாலன் எல்லா இயக்கத்தையும் போட்டு தள்ளினதாலை அந்த இயக்கத்தின்ரை பேர் வருகுதில்லை.

ஈழமாறன்: ஈபிஆர்எல்எவ்……?

கேபி: ஆ….. ஈபி. அந்த இயக்கத்திலை இருந்தும் கொஞ்சப் பேரை பிடிச்சு வைச்சிருந்தவங்கள் தானை.. அவன்…. ஆரது..அதுதான் மாறன்…கள்ளக் காதலியோடை சல்லாபம் ஆடப் போன இடத்திலை குண்டு எறிஞ்சு கால் முறிச்சாங்களே. எறிஞ்சு முறிச்சதும் தாங்கள்தான் எண்டு…கனடாவிலையும் ஒருவர் பதினெட்டோ பத்தொம்பதோ எண்டு இயக்கம் தொடங்கினவர், மற்றாக்களுக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை நாங்கள் தான் போட்டனாங்கள், எண்டு சொல்லித் திரியிறாரே. அவனைத்தான் சொல்லிறன்.

ஈழமாறன்: கிட்டு…..

கேபி: அவன்தான்.. அதுக்காக அந்த ஈபி பெடியள் எல்லாரையும் போட்டுத் தள்ளினபோது… புலம்பெயர்ந்தவை புள்ளையும் பெத்து கனக்க காசும் அள்ளிக் குடுத்தவை. யாழ்ப்பாணத்தார் கொக்கோ கோலா குடுத்தவைதான்.. அதை விடுங்கோ. அந்தப் பணத்திலை வாங்கின வீடுதான் மலேசியா மாளிகை.

ஈழமாறன்: அப்பிடியெண்டா காசு சேத்தது? ஆயுதம் வாங்கி அடிபட எண்டெல்லோ புலன்பெயர் மாக்கள் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தினம்?

கேபி: அப்பிடி அடி முட்டாள்கள் மாதிரி அவை இருக்காட்டி 30 வருசம் வண்டி ஓட்டியிருக்க முடியுமோ?

ஈழமாறன்: அப்ப தமிழீழம் எடுத்திருக்கவே முடியாதா?

கேபி: மாறன்! நீர் என்ன தேசியத் தலைவரை விட மொக்கனா இருக்கிறீர். எங்கையும் உமி விதைச்சு வெள்ளாமை வெட்டினதா கேள்விப் பட்டிருக்கிறியளே?

ஈழமாறன்: அப்படியென்றால் அண்மையில் சாள்ஸ் என்பவர் தேசம்நெற் இணையத்திற்கு வழங்கிய பேட்டியில் நீங்கள் ஒரு பென்னாம் பெரிய ஜனநாயக வாதியெனக் குறிப்பிட்டுள்ளார். ஆனா நீங்களோ ரெலோவைச் சுட்டுத்தள்ளும் போதும் இயக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். பின்னர் ஈபிஆர் எல் எவ் புளட் என்று வரிசையில் சுட்டுத் தள்ளியபோதும் இயக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். இப்ப சாள்ஸ் சொல்லிறமாதிரி ஒரு மனிதாபிமாதிரி எனக்குத் தெரியவில்லையே?.

கேபி: இது மட்டுமல்ல. இன்னும் நிறைய என்னைப் பற்றி வரும். என்னைச் சித்திரவதை செய்ததாய் வரும். எனக்கு சொகுசு மாளிகை தந்ததாக வரும். கேபிக்கு கொம்பிருக்கு எண்டு வரும். கேபிக்கு துவக்குக்கு எழுத்துக் கூட்டக் கூடத் தெரியாது எண்டு வரும். கேபி ஒண்டுக்குப் போனா பெற்றோல் வருது எண்டு வரும். இப்பிடி எத்தினையோ வரும். ஆனா யதார்த்தம் என்ன சொல்லுங்கோ. நான் ஒரு படு பிற்போக்கான பாசிச அமைப்பில் அங்கத்தவராய் இருந்தவன். அதன் தலைவனுக்கு விசுவாசமாய் இருந்தவன். நான் வாங்கி அனுப்பின ஆயுதத்தால் செத்து மடிந்து போனவர்கள் எதிரிகள் மட்டுமல்ல மாறன் எங்கள் நண்பர்கள், அரசில்வாதிகள், மாணவர்கள், புத்திஜீவிகள் என்று ஒரு பெரிய பட்டிலே போடலாம். சாள்ஸ் சொல்லுவது போல எனக்கு மனிதாபிமானம் வந்திருக்கிறது என்பது சிறுபிள்ளைத் தனம்.

ஈழமாறன்: அந்தக் குழுவில் வந்த அருட்குமார் பற்றி?

கேபி: யார் மக்டொனால்ட் பேகர் குடுத்துக் குடுத்து வைத்தியம் பார்த்த டொக்டரையோ கேக்கிறியள்? அந்த மனுசன்  கொழும்பிலை நல்லா இருந்து கதைச்சவர். பிறகு லண்டன் போன பிறகு போறம்  ஜனநாயக முறையிலை வெருட்டியிருக்கினம் போல. இதென்ன பரமேசு பெடியன்ரை உண்ணாவிரத விளையாட்டே சொல்லுங்கோ?

ஈழமாறன்: இந்தியாவிலை செத்தாலும் பட்டம் குடுப்பார். கொழும்பிலை செத்தாலும் பட்டம் குடுப்பார். உதாரணத்திற்கு புளட்டிலை இருக்கும்போது போராளிகளை போட்டுத்தள்ளிய சிவராமுக்கும் பட்டம் குடுத்தவர். இப்பிடி பாம்பு கடிச்சு செத்தவன், விசர் நாய் கடிச்சு செத்தவனுக்கெல்லாம் மாமனிதர், மாமாமனிதர் எண்டெல்லாம் பட்டம் குடுத்த தலைவர், பட்டெண்டு போனபோது சரி அஞ்சலி வேண்டாம். ஒரு பட்டமாவது குடுத்திருக்கலாமே?

கேபி: புலம்பெயர் மக்கள் அவர் இன்னும் சாகேல்லை எண்டு சொல்லுகினம். எப்பிடி பட்டம் குடுக்கிறது. நான் சிலோனுக்கு கிளம்ப முதல் ஒரு பட்டத்தைக் குடுத்து, குத்துவிளக்கை ஏத்தி, கூட இருந்த குற்றத்திற்காக கோடலிக் கொத்தன், கோவணச் சண்டியன், அம்மணச் சோழன் காலிலை விழுந்த கரிகாலன் என்று ஏதாவது பட்டம் குடுக்கிற ஜடியா இருந்தது. உருத்திரகுமாரன் உழைச்சது காணாது எண்டு சொன்னபடியால், அவர் சாகா நாடகத்தை கொஞ்சம் தொடர வேண்டியதாய் போச்சு. இப்பதான் நாடு கழண்ட தழிழீழத்தை அமைச்சிருக்கினம். பொறுமையா இருந்து கேக்கிற போதெல்லாம் காசைக் குடுங்கோ. குறுக்கை குறுக்கை கேள்வி கேக்காமல். நீங்கள் மாற்று அமைப்போ?

ஈழமாறன்: கடைசி வரைக்கும் தொடர்பிலை இருந்த ஒரு ஆள் நீங்கள் தான். உண்மையா சொல்லுங்கோ. அம்மாவாணை அண்ணை இருக்கிறாரோ? ஏன் கேக்கிறன் எண்டா.. புலியிலை ஒரு பிரிவு சொல்லுது அவர் 300 பேரோடை கப்பலிலை சுத்திக் கொண்டிருக்கிறார் எண்டு. சுத்திறதெண்டா விடலை பெடியள் சுத்திற சுத்தில்லை.. இது போறதுக்கு இடம் இல்லாமல் சுத்துற சுத்து.

இன்னொரு பிரிவு சொல்லுது 600 பேரோடை அம்மணியையும் கூட்டிக்கொண்டு தலைவர் எஸ்கேப். அதுவும் ஆபிரிக்காவிலை இருக்கிற ஒரு காட்டிலை இருக்கிறார் எண்டு. அதுக்காக புலியோடை புலியா இல்லை… வலு சொகுசாத்தான்.

வேறை ஒரு பிரிவு சொல்லுது அவர் இருக்கிறார். ஆனா இருக்கிற இடம் சொல்ல மாட்டம். ஒரு நாளைக்கு வருவார் அப்ப தெரியும் எண்டு. எப்ப வருவார் எண்டு கேட்டா, இருக்கிற இடமே சொல்ல மாட்டம் எண்டு சொல்லிறம் வாற நாளை மட்டும் சொல்லிடுவோமோ? எண்டு தினா வெட்டாக் கேக்கிறாங்கள்.

ஒரு பிரிவு கோடாலியாலை கொத்தினதா சொல்லுது. ஒரு பிரிவு கொம்பியூட்டர் கிராபிக்ஸ் எண்டு சொல்லுது. ஒரு பிரிவு கோவணத்தோட வைச்சு அடிச்சுக் கொண்டவங்கள் எண்டு சொல்லுது. ஒரு பிரிவு கொண்ட பிறகுதான் கோவணத்தைக் கட்டிவிட்டவங்கள் எண்டு சொல்லுது. ஒரு பிரிவு வெள்ளைக் கொடியோட, வெள்ளக்காரன்கள் நிண்டவங்கள். நிண்டவங்களைக் கண்டவங்கள் சொன்ன பிறகுதான் அண்ணை கெலியிலை ஏறினவர் எண்றாங்கள். ஏறுன பிறகு மிதிச்சவங்கள் எண்டு ஒரு குறூப் சொல்லுது.

போற வயசிலை உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் அம்மாவாணை ஆள் இருக்கோ இல்லையோ? அண்ணை தேசத் துரோகி எண்டு மாற்றுக் கருத்தாரை வன்னிக் காட்டுக்குள்ளை பிடிச்சுக் கொண்டுபோய் சுட்டபிறகு, சொந்த பந்தம் ஆளிருக்கோ? ஆளிருக்கோ? எண்டு  விட்ட கண்ணீர்… இண்டைக்கு நான் கேக்கிற நிலைக்கு கொண்டுவந்து விட்டிட்டு.…

கேபி: சில விசயம் உங்களுக்கு நான் சொல்லோது. ரெக்கோடரை நிறுத்தினா… ஓவ் த ரெக்கோடா சில விசயம் சொல்லலாம்.

தம்பி தமிழேந்தி ரேப்பை நிப்பாட்டிப் போட்டு கொஞ்சம் வெளியிலை இரு. உவன் கோத்தபாய ஆரையும் விட்டு ஒட்டுக் கேப்பான். ஆரும் வராமல் பார், பாப்பா நீ எயாப் போட்டுக்குப் போய் எங்கட பெடியள் ஆரும் தப்பிப் போனா காட்டிக் குடு. பொட்டு நீ சிவத்தம்பி ஏதோ செம்மறி மொழி மாநாட்டுக்கு போறானாம் அவனை ஏத்திக் கொண்டுபோய் பத்திரமா கலைஞர் வீட்டிலை விட்டிட்டு வா. டேய் பொட்டன்… செம்மறி மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்து அறிஞர்கள் மட்டும் தான் போறாங்களாம். அது உண்மையாத்தான் இருக்கும் எதுக்கும் ஒருக்கா விசாரிச்சுப் பார்.

ஈழமாறன்: இப்ப சொல்லுங்கோ!

கேபி: மாறன்… ஆள் உயிரோடை இல்லை. ஆளை போடுறதுக்கு பிளான் போட்டுக் குடுத்ததே நாங்கள் தான். அவங்கள் சொன்னவங்கள். உள்ளுக்க வர விட்டு அடிக்கிற பிளானும் எங்கடைதான். என்னிலை நம்பிக்கை இல்லை எண்டா பொட்டனைக் கேளுங்கோ.

ஈழமாறன்: அவங்கள் எண்டா..

கேபி: நோர்வே இந்தியா சீனா அமெரிக்கா. அப்பிடிக் கனபேர். முள்ளிவாய்க்கால் வரைக்கும் கதை குடுத்து, கதை குடுத்து கூட்டிக் கொண்டு வா. அதுக்குப் பிறகு வெள்ளைக் கொடியும் காட்டி வெள்ளக் காரனையும் காட்டி …மிச்சம் உங்களுக்கு தெரியும்தானே.

ஈழமாறன்: நாடு  களண்ட மன்னிக்கவும் கடந்த தமிழீழம் தொடர்பாய் உங்கட கருத்து என்ன? நீங்கள் தானை ஆரம்பிச்சனிங்கள்…..

கேபி: ருத்ரகுமாரன்….. ஆரெண்டு தெரிஞ்சா நீங்கள் இந்தக் கேள்வி கேக்க மாட்டிங்கள். போகப் போகத் தெரியும். அதிலை ஒரு நேர்மையான ஆள் காட்டுங்கோ.  யாராவது ஒருத்தனுக்கு வன்னி தெரியும் எண்டு சொல்லுங்கோ?. ஒருத்தன் பத்து நிமிசம் துவக்கு தூக்கியிருபானா? துப்பாக்கி வேண்டாம், காயப்பட்ட போராளிகளுக்கு மருந்து….. இவங்களைப் போய் பொருட்டாய் மதிச்சு கேள்வி கேக்கிறியள்.

ஜநநாயக அமைப்பு எண்டு எல்லோ சொல்லுறாங்கள். அப்பியெண்டா எதுக்கு பிரித்தானியாவிலை கிட்டடியிலை நடந்த கூட்டத்திலை ஒரு வேட்பாளர் கேள்வி கேட்க மொத்து மொத்து எண்டு மொத்தினவை. புலி புலால் தான் உண்ணும். புல்லு தின்னும் எண்டு புலம்பெயர் புத்திசாலி மக்கள் நினைச்சா சிரிக்கலாம். வேறை என்னதான் சொல்ல. கழண்ட தமிழீழத்திலை இருக்கிறவை எல்லாரும்  நல்லா சம்பாதிச்சிட்டாங்கள். சொத்து வேறை சேத்திட்டாங்கள். மெயின்ரெயின் பண்ண வேண்டாமோ? மரத்திலை இருந்து வேருக்கும் வேரிலை இருந்து மசிருக்கும் எண்டு கவிதை எழுதினவர்  எல்லாம் நாடு கழண்ட தமிழீழத்திலை இருக்கிறார், எண்டா வடிவா விளங்கிக் கொள்ளுங்கோ. 30 வருசம் கழிச்சு வந்து கேட்க நானும் இருக்கமாட்டன். அரைவாசிச் சனமும் இருக்காது.

ஈழமாறன்: அப்ப நாடுகடந்த தமிழீழம் மூத்தி ஜயா அனுப்பின வணங்கா மண் கப்பல் மாதிரியோ.

கேபி: எங்களுடன் நெருங்கின தொடர்பிலை இருக்கிற ஆக்களைப் பற்றி நான் விரிவா கதைக்க முடியாது. ஆறுமாசமா கப்பல் விடத் தெரியாதவங்கள் அமெரிக்காவிலை இருந்து ஈழம் எடுத்துத் தாறம் எண்ணிறது எருமையிலை ஏறிப்போய் செவ்வாய் கிரகத்திலை தண்ணியிருக்கோ எண்டு ஆராச்சி செய்த மாதிரித்தான்.

உருத்திர குமாரன் கோழி படிச்சவன் குற்றவாழியா இல்லையா எண்டு வாதிடலாம். சிலவேளை ஜெயிக்கலாம்.

தமிழீழம் எண்டா எல்லாருக்கும் விளையாட்டாப் போச்சு. வடக்கையும் கிழக்கையும் இணைக்கவே வக்கில்லை. தமிழீழமோ? மாறன் உருத்திகமாரும் அவரோடை போட்டி போட்டு வெண்ட வெளிநாட்டு விசுக்கோத்துக்களும் வேணும் எண்டா சண் ரிவியிலை நடக்கும் எல்லோ அசத்தப் போவது யார் நிகழ்ச்சி. அதிலை போய் ஜோக் அடிக்கச் சொல்லுங்கோ. 

ஈழமாறன்: ஒரு குறைஞ்சபட்சத் தீர்வு பற்றிக்கூடக் கதைக்காமல் அபிவிருத்தி என்றும் பொருளாதார மேம்பாடு என்றும் பேசும் நீங்கள் புலம்பெயர் மக்கள் இதைச் செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கிறீர்கள்? ஆமிக்கார கொமாண்டர் சொல்லிற மாதிரி பிரபாகரனிட்டைக் கேட்கேல்லை. அதுக்கு காரணம் இருக்கு. அரசாங்கம் இப்பிடிப் பதில் சொல்லலாமோ?

கேபி: புலம்பெயர் மாக்களைக் குழப்பாட்டி புத்தர் கோயில் கட்டிற மகிந்த சிந்தனைக்கு ஒருநாளைக்கு ஆபத்து வரும் என்று பிரபாகரனை முடிச்சவங்களுக்குத் தெரியாதோ? இதிலை புலம் பெயர் மக்களின்ரை பங்களிப்பு மிக முக்கியம். நான் என்னாலானதை செய்யத் தொடங்கிட்டன். சாள்ஸ் சொன்னமாதிரி தமிழ் மக்களை வைத்தே தமிழரை இல்லாமல் பண்ணிற வித்தையை மகிந்த அரசு நன்றாக விளங்கி வைத்திருக்கு. அதைச் செவ்வனே செய்யக் குழு குழுவாய் வருவினம். போவினம். இனிமேத்தான் வேடிக்கை விநோத நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கு.

ஈழ: வடக்கு கிழக்கு மக்களுக்கு என்ன சொல்ல விரும்பிறியள்?

கேபி: எல்லாரும் குனிஞ்சு நில்லுங்கோ…… மகிந்த சிந்தனையின் கீழ் நல்ல சுகம் கிடைக்கும்.

ஈழ: நன்றி. சிரமத்தையும் பாராமல்…. புலியிலை இருந்த அத்தனை கொமாண்டர்களோடையும் சொகுசா இருந்து பேட்டி தந்ததுக்கு…

யாருக்குப் போடலாம் வாக்கு : ஈழமாறன்

Sarath_Fonseka_Posterதமிழ் பேசும் மக்களின் போராட்ட வரலாற்றில் நாசமாய்ப் போன காலகட்டமாக கடந்த 35 ஆண்டுகள் கடந்தோடியது நாங்கள் அறிந்தது. தமிழரசுக் கட்சியும் தலைவர் செல்வநாயகமும் பொறுப்பில்லாமல் தமிழீழம் என்று சொல்லி விட்டு மேலுலகம் சென்றதும், அதைத் தூக்கி வைச்சு குறுக்கால போன கூட்டணி புலுடா விட்டதும் தம்பிமாரை உசுப்பி விட்டதும் கடந்தகால கசப்பான  விடயங்கள்.

ஒரு தலைமை என்பது தனது கட்சிக்கும், இருப்புக்கும் எது சாதகமாய் இருக்கும் என்று முடிவெடுப்பதல்ல. தான் எடுக்கப் போகும் முடிவால் உடனடியாகவும் எதிர்காலத்திலும் எப்படிப்பட்ட விளைவுகளை அது உண்டு பண்ணும், இது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை என்ன பாடுபடுத்தும் என்று சிந்தித்து, ஆய்வு செய்து முடிவெடுப்பதே ஒரு நல்ல தலைமைக்கு உரிய பண்பியில் இயல்பு. இதன் அடிப்படையில் பார்த்தால் “இனி கடவுள்தான் தமிழ் மக்களைக் காப்பாத்த வேணும்” என்று சொல்வதற்கு எதுக்கு ஒரு தலைவர். அட இழவு விழுவாரே கடவுள்தான் காப்பாத்த வேணுமெண்டால் அது எந்தக் கடவுள் எண்டு சொல்லி விட்டு செத்திருந்தால் தமிழ் மக்கள் தேசியத் தலைவருக்கு அபிசேகம் செய்தது போலவோ அல்லது பிறந்த நாள் பூசை புனர்த்தானங்கள் செய்தது போலவோ அந்தக் கோயிலுக்குச் சென்று ஆண்டவா எங்களைக் காப்பாத்து. எங்களுக்கு உரிமை பெற்றுக் கொடு என்று ஒரு அபிசேகம் செய்திருப்பார்கள். வேணுமென்றால் சில நூறு பலிகளும் கொடுதத்திருக்கலாம். இத்தனை ஆயிரம் அப்பாவி மக்களைப் பலிகொடுத்திருக்கத் தேவையில்லை.

இனவாத அரசுகளிடம் இருந்து உரிமைகளைப் பெறுவதற்காக அதுகாறும் நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் எதுவும் பலனளிக்காது போனதால் மாற்றுத்திட்டங்களை தீட்டி போராட்டத்தை வேறுவழியில் பொறுப்புடன் எடுத்துச் செல்ல வேண்டும் என மாற்று வழியை அல்லவா சொல்லியிருக்க வேண்டும். கடவுள்தான் காப்பாத்த வேண்டும் என்று சொல்ல என்னத்துக்கு தலைவர். ஒரு கட்சி. அதுக்கு வக்காலத்து வாங்க அடங்காமண் புடுங்கா மண் என்று சாதிவெறி பிடித்த ஒத்தூதிகள்.
 
அதை விடுத்து தமிழீழம், பெடரல், கிடறல் என்று சா வாக்கு மூலம் கொடுப்பது எதிர்காலத்தில் தமிழ் மக்களை எங்கே கொண்டுபோய் விடும் என்று கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா? சரி வயது போன நேரத்திலை மனுசன் அறளை பேந்து போய் கதைச்சிட்டாக்கும் என்று விட்டு விட்டு சற்று பிரக்ஞை பூர்வமாக இந்தக் கூட்டணி சிந்தித்திருந்தால் நாம் பாரிய அழிவை நிறுத்தியிருக்கலாம். இந்த கூட்டணி நாடகக் குழு போட்டு முடித்த நாடகங்களின் விளைவாக நாம் புது மாத்தளன் வரை கொடுத்த விலை மானிடமே மௌனித்துபோன வரலாறு. ஆனால் என்ன நடந்தது.

ஒரு தொழிற் சங்கம் வேலை பகிஸ்கரிப்பு பற்றி முடிவெடுக்க நினைக்கிறபோது அந்த முடிவு தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப் போகும் சாதக பாதகங்களை ஆய்வு செய்து விவாதங்கள் நடாத்தி பெரும்பாலானவர்களின் ஒப்புதலை ஏற்ற பின்னரே முடிவெடுப்பார்கள். இங்கு தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு பாரிய முடிவைப் பற்றி கிஞ்சிற்றேனும் சிந்திக்காமல் தமிழீழம் என்று முழங்கிய துலைவார் கூட்டணியின் முடிவைக் கேட்டு கோதாரி விழுவாருக்கு கீறி வைச்ச பொட்டு இண்டைக்கு யாருக்கு வோட்டுப் போடுறது என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத்தை அறிவிக்கும் போது இது சாத்தியமா? அவ்வாறு சாத்தியம் எனின் மாங்காய் புடுங்குவது போல் சுலபமாக புடுங்கி எடுக்கலாமா இல்லை பனங்கிழங்கு கிண்டுவது போல கொஞ்சம் கொஞ்சமாய் கிண்டி எடுக்கலாமா, இல்லையா என்று சுடலையிலை போவார் குறைஞ்சது ஒரு பத்து நிமிசமாவது யோசித்திருக்க வேணும். அப்படி சிந்தித்திருந்தால் இப்பிடி நாம் ஆகியிருக்கத் தேவையில்லை என்பதை நடிகர் விவேக் பாணியிலை நான் எழுத வேண்டி வந்திருக்காது. வெளவால் வரும். துவக்கோடை வரும். தமிழனுக்கு எருமை மாட்டுத் தோல். சுட்டமண்ணும் பச்சமண்ணும் இனி ஒட்டாது என்று விட்டதெல்லாத்தையும் நம்பி அப்பாவி இளைஞர்கள் கொதிச்சு எழ குளிர்காய்ந்த இந்தக் கூட்டணி தமிழ் மக்கள் யாருக்கு வாக்குப் போட வேணும் என்று முடிவெடுத்திருக்கிறர்களாம்.

இவர்கள் கடந்த காலங்களில் எடுத்த எந்த முடிவுகள் சரியாக இருந்திருக்கின்றன? தமிழீழம் முடிந்த முடிவு என்ற இந்த நரிக் கூட்டம் முடிவெடுக்கும் போது இவர்களுக்கே இதன் பொருள் விளங்கியிருக்கவில்லை. அதற்கான திட்டமோ அன்றி அந்த இலக்கை அடைவதற்கான குறைந்தபட்ச வரைபடம் கூட இல்லாத இந்தக் காவாலிக் கூட்டணி பின்னர், வட்டமேசை மாநாடு போட்டபோது கூட கிட்டத் தட்ட என்ன வேணும் என்றதில் ஒரு வீதமேனும் தெளிவிருக்கவில்லை. அதன்பின் புலிக்கு வக்காலத்து வாங்குவதற்கு இவர்கள் எடுத்த முடிவென்று அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு தலைமையின் முடிவு என்ன என்று எதிர்பாப்பதும் அந்தத் தலைமை என்ன சொல்கிறது என்பதை கேட்டு மக்கள் முடிவெடுப்பதும் சாதாரணமாக நடக்கிற ஒரு விசயம் தான். அதற்கான காரணங்களும் இருக்கின்றன. ரோனிபிளயர் என்கிற முன்னாள் பிரித்தானியப் பிரதம மந்திரி மக்களுக்கு ஈராக் தொடர்பாக ஒரு முடிவை அறிவிக்க வேண்டி இருந்தது. அது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருந்த முடிவாக இருந்தபோதிலும் ரோனிபிளயருக்கு இதை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது. அதற்காகவே அவர் யாரோ எழுதிய கட்டுரையை எடுத்து ஒரு சொல்லைக் கூட மாத்தாமல் பிரித்தானிய மக்களுக்கு பெருப்பிச்சுக் காட்டினார். நாட்டின் தலைமை மக்களின் நலன் கருதி முடிவெடுக்கும் என்று நம்பிய பிரித்தானிய மக்களும் சடாம் குசையின் மீது படையெடுப்பதை ஒப்புக் கொண்டார்கள். அதற்காக பிரித்தானிய மக்கள் கொடுத்திருக்கும் விலையும் அளப்பரியது.
 
நாமும் துப்பாக்கி தூக்கி போரடுவதற்கு தயாராகினோம். இதே கூட்டணிதான் துரையப்பாவை சுட்டிக் காட்டி சுட்டுக்காட்டுங்கள் என்று பிரபாகரனிடம் கேட்டதும் அன்றைய அப்பாவிப் பிரபாகரங்கள் சுட்டுத் தள்ளியதும் நடந்தேறின. இதன் பின் போராளிக் குழுக்கள். எந்தத் தலைமையும் தகுதி மட்டும் இல்லாத தலைமையாகவே உருவெடுத்தன. புரட்சி வெடிக்கிறபோது நாம் மக்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பொருளாதாரத் திட்டம் வைத்திருக்க வேண்டும் என்று தோழர்கள் உமா மகேஸ்வரனிடம் கேட்டபோது கீரை தின்னலாம் என்ற அளவுக்கு அவருக்கு தலைமை தாங்கும் தகுதி இருந்திருக்கிறது.

கிளின்ற் ஈஸ்ற்வூட்டின் படத்தைப் பார்த்துதான் திட்டங்கள் தீட்டுவேன் என்று சொன்ன மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையும் என்று ஒவ்வொரு இயக்கமும் தாம் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கையினால் எத்தினை ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் பாதிப்படையப் போகிறார்கள். வளங்கள் சொத்துக்கள் உயிர்கள் என்று எவ்வளவு நாசகாரம் நடக்கப் போகிறது என்று சிந்திக்காத, சிந்திக்க முடியாத, திராணியற்ற 50க்கு மேற்பட்ட இயக்கங்களும் இதனின்றும் முளையெடுத்த பாராளுமன்றக் கட்சிகளும் எங்கே, எப்போது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார்கள்? அப்படியாயின் தமிழ் பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும். அவர்களுக்கு நிஜத்தைச் சொல்லி அதனால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் சாதக பாதகங்களை புரிய வைப்பதற்காக அரசியல் வேலையை செய்து விட்டு மக்களை முடிவெடுக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத் தேர்தல் முடிந்து இவ்வளவு காலம் ஆகியும் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கேல்லை. ரோட்டுப் போடுவதும் இடிந்த கட்டடங்களைக் கட்டுவதும் அபிவிருத்தி கிடையாது. அவை மீள் கட்டுமானப் பணிகளே. மகிந்தவுடனேயே நின்று ஒன்றும் செய்ய முடியாத பிள்ளையான் தலைமை எடுத்திருக்கும் முடிவுக்கும் கிழக்கு மாகாண மக்களின் எதிர் காலத்திற்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது. அம்மானின் கூத்து அதைவிடக் கேலியானது.
 
மகிந்தவுக்குப் போடுங்கோ என்று பிள்ளையான் கட்சி எடுத்திருக்கும் முடிவுக்கான அடித்தளம் எதுவுமே கிடையாது. 13ம் திருத்தமோ மேலையோ கீழையோ மகிந்த எடுக்கும் முடிவுக்கே கட்டுப்படுகிறேன் என்று சொல்ல  ஒரு தலைமை. அந்தத் தலைமையின் முடிவைக் கேட்டு மக்கள் வாக்குப் போட வேணுமெண்டால் “கடவுள் தான் காப்பாத்தவேணும்” (நானும் ஒரு அரசியல் கட்சி தொடங்கலாம் போல இருக்கு. எனது அரசியல் ஞானத்தைப் பார்க்க தந்தை செல்வாவே பிச்சை வாங்க வேணும் போல இருக்கு.)

புளட் தலைவர் என்ன சொல்கிறார். அவரும் மகிந்த மாத்தையாதான் நல்லவராம். தமிழர்கள் என்ன மாப்பிளையா பாக்கிறார்கள்? அவர் குடும்பம் எப்பிடி? மாப்பிழை சிகரட் குடிப்பாரா? தண்ணி அடிப்பாரா என்று சான்றிதழ் முத்திரை குத்துவதற்கு. சித்தாத்தன் ஜயா சின்னத்திலை இருக்கிற உமாமகேஸ்வரன் அந்த இயக்கப் போராளிகளைத் தூக்கி போரணையில் போட்டு கொலை புரிவதற்க்கு காரணமாக இருந்தவர். பிள்ளைகளைப் பறி கொடுத்த தாய்மாரிடம் ஒரு மன்னிப்புக் கேட்கக் கூட திராணியில்லாத சித்தன் மகிந்தவுக்குச் சேட்டிபிக்கேற் குடுக்கிறார். ஆடு நனையிதெண்டு…. ஏதொ ஒரு மிருகம் அழுதமாதிரி இல்லையா இந்தக் கதை.

மகிந்த ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் பிரதமராக இருந்த அமைச்சராக இருந்த பன்னிரண்டு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார். இனி என்ன செய்வதாக உறுதி கொடுத்துள்ளார்? அதை நிறைவேற்றுவார் என்பதற்கான அத்தாட்சி என்ன எந்த இழவும் சொல்லாமல் முறுகண்டி பிள்ளையார் கோயிலுக்கு கும்பாவிசேகம் செய்யப் போயிருக்கும் சித்தனின் முடிவை தமிழ் மக்கள் ஏற்று வாக்குப் போடலாமா?

டக்கிளசை விட்டிடுங்கோ. கோடி எந்தப் பக்கம் அவர் பாட்டும் அந்தப்பக்கம் என்பது மகிந்த சொல்லித்தான் எங்களுக்கே தெரியும். ஆதலால் அவரால் பெரிய ஆபத்தும் இல்லை. அவர் சொல்லை யாரும் கேட்கப் போவதுமில்லை. என்ன மீறினால் குடும்பத்தோடை சுட்டுப் பொசுக்கிப் போட்டு உத்தரத்திலை தொங்க விடும் உத்தரவாதத்தை மட்டும் அவரால் உறுதியாகக் கொடுக்க முடியும்.

மே 17ம் திகதி 2009ல் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி என்று புகழ்ந்து தள்ளிய சம்பந்தர் ஜயா 19ம் திகதி உந்தக் குறுக்கால போனவன்தான் எல்லா அழிவுக்கும் காரணம் என்று சொல்லும் இந்த ஜயா, பொன்சேகாவுக்குப் போடுங்கோ என்று சொல்லுறார். இதற்கான காரணங்களில் முக்கியமானது என்ன தெரியுமோ? நாலு வருசமா மகிந்த ஒண்டும் செய்யேல்லையாம். உங்கட தேசியத் தலைவரை மண்டியிட வைச்சது. பொன்சேகா தலைமையிலை போட்டுத் தள்ளியது. குறைஞ்சது வன்னிக்குப் போய் கதிர்காமக் கோயில் பூசாரி மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு சொல்லிற எல்லாத்தையும் செக்கு மாடுகள் மாதிரி கேட்டுக் கொண்டு வந்து வெளிநாடுகளிலை விளையாட்டுக் காட்டின உங்களை அக்கம் பக்கம் பாத்து பாராமல் அறிக்கை விடுற அளவுக்குச் செய்தது மகிந்த எண்டு அவிட்டு விட ஆயிரம் இருக்கய்யா. உங்களை இன்றைக்கு அரசியல்வாதி என்ற நிலைக்கு உயர்த்தி விட்டதே மகிந்த மாத்தையா தானே. இல்லாட்டி உங்களுக்குப் பெயர் பினாமிகள் எல்லோ? அது மட்டுமே வெளிநாடுகளில உள்ள கனபேர் இப்ப ஊருக்குப் போய் பொம்பிளை தேடுகினம். ஏதோ மகிந்தவின்ர புண்ணியத்தில அவர்களுக்கு கலியாணம் காட்சி என்று நடக்குது.

திருமலை தந்த புலிச் சிங்கமே சம்பந்தர் ஜயா! நாலு வருசமா மகிந்த ஒண்டும் புடுங்கேல்லை எண்டு மட்டுமில்லை இப்ப நீங்கள் வாக்குப் போடச் சொல்லியிருக்கும் பொன்சேகாவை ஆதரிக்கும் ஜக்கிய தேசியக் கட்சியும் ஆதரிக்க வேண்டாம் என்ற சுதந்திரக் கட்சியும் 62 வருசமா எதையும் உமக்கு நட்டு வைக்கேல்லை என்பது தெரியாமல் போச்சுதோ? 62 வருடங்களாக ஒப்பந்தம் இடுவதும், பின்னதைக் கிழிப்பதும் பிறகு வாக்குறுதி அளிப்பதும், நீங்கள் மறப்பதும் என்று நடந்த நாடகத்தில் மகிந்தவின் நாலு வருட ஆட்சியிலை ஒன்றும் நடக்காமல் போனது உங்களுக்கு கோவம் பொத்திக்கொண்டு வரக் காரணம் என்கிறீர்களே இதென்ன விளையாட்டு?

பொன்சேகா யார்? மே 18 வரை விடுதலைப் புலிகளுடன் சேர்த்து நாற்பதாயிரத்திற்கும் மேலான தமிழ் மக்களை கொன்று குவிப்பபதற்கு மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு பெருந்துணையாக இருந்தவர். புலிகளுடனான யுத்த வெற்றிக்கு பின் தமிழர்கள் தொடர்பாகவும் தழிழ்நாடு தொடர்பாகவும் மிக மோசமான துவேச அறிக்ககைளை விட்டவர். அமெரிக்கா சென்று தமிழர்கள் ஒரு மூலையில் இருக்க வேணும் என்றால் இருக்கட்டும். உரிமைக் கதை கதைக்கக் கூடாது என்று கூறியவர்.

எப்படி தேர்தல் களம் வரை வந்தார்? மகிந்த அரசில் ஏற்பட்ட சிறிய முறுகல் மகிந்தவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் இறுக்கம், யுஎன்பி கட்சிக்குள் முத்தியிருக்கும் தலைமைப் போட்டி, அமெரிக்காவுக்கு தலையாட்டுவதற்கு ஆள் பிடிக்க வேண்டிய கட்டாயம் எல்லாம் ஒன்று சேர்ந்து பொன்சேகாவுக்கு முடி சூட்டியதே, தவிர பொன்சேகா நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் எடுத்த நல்லெண்ணம் கிடையாது. பிரபாகரனை முடித்த கையோடு சீனாவின் பக்கம் கூடுதலாக சாய்ந்து கொண்ட மகிந்தவைக் கொண்டுவருவதில் இந்தியாவுக்கு விருப்பம் குறைந்து விட்டாலும் மேற்குலகுடன் எப்பவும் சாயும் யுஎன்பியை ஆதரிக்கவும் இந்தியா தயங்கியது.

சீனாவுடனான வர்த்தக இராணுவ அரசியல் முறுகல் மோசமடைந்து வருகிற இந்த நேரத்தில் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடன் ஏற்பட்டு வரும் உறவைப் பயன்படுத்தி சீனாவை ஓரம் தள்ளி இந்தியா தன்னை இலங்கையில் முன்னிறுத்தலாம் என்று எடுத்துக் கொண்ட முடிவே பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவு. சம்பந்தனுக்கு உருத்திரகுமார் வியன்னாவிலை வைச்சு சொன்னதும் இதைத்தான். இந்தியா தொலைபேசியில் சம்பந்தனுக்கு சொன்னதும் இதுதான்.

இன்று மக்கள் முன் உள்ள கடமை இதுதான். காலத்துக்காலம் சோரம்போன இந்த அரசியல் கட்சிகள் மக்கள் நன்மை தொடர்பாக என்றுமே சிந்தித்து முடி எடுத்ததில்லை. உண்மையில் சாதாரண மக்களுக்கு இருக்கிற அறிவு கூட இந்த தலைமைகளுக்கு இருந்தது கிடையாது. ஆகவே இந்தக் கட்சிகளின் காசுழைக்கும் விஞ்ஞாபனங்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு இன்றைய அரசியல் பொருளாதார சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

மே 18 2009 வரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் உறை குளிரில் உலகமெங்கும் கூக்குரல் இட்டதமிழ் மக்களின் கோரிக்கைகளில் முதன்மையாக ஒலித்தது போர்க் குற்றம் என்பது. இதனை நிரூபிப்பதற்க்கு சனல்4 போன்ற ஊடகங்கள் பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தன என்பதும் எல்லோருக்கும் தெரியும். மே 18 வரை போர்க் குற்றம் புரியும்படி கட்டளையிட்டவர் மகிந்த. அதை நிறைவேற்றியவர் பொன்சேகா. இன்று யாரை முதல் எதிரி என்று வாய் கிழியக் கத்தினோமோ அவரை ஆதரியுங்கள் என்று வந்து நிக்கிறது தங்களைத் தமிழ் மக்களின் தலைமை என்று கூறிக்கொள்ளும் இந்தக் கூட்டம். காலா காலமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைத் திட்டமிட்டே நசுக்கிவந்த சிங்களத் தலைமையும் பௌத்த பீடமும் புதுமாத்தளனுக்குப் பின் ஞானம் பிறந்து தமிழ் பேசும் மக்களை காப்பாத்த அவதாரம் எடுத்திருக்கறார்கள் என்று விசுக்கோத்துத் தனமாக சொல்லும் இந்த தமிழ் அரசில் கட்சிகளின் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவை எண்ணிச் சிரிக்கக் கூட முடியவில்லை.

யுத்தம் நடந்து பேரவலம் கட்டவிழ்த்து விடப்பட்ட அப்பாவி மக்கள் இன்றும் தங்கள் இழப்புக்களில் இருந்து விடுப.டாத நிலையில் ஒரு தேர்தல். அதில் கொன்றவனுக்கும் கொல்லச் சொன்னவனுக்கும் வாக்குப் போடுங்கள் என்று கூட்டம்  போடும் இந்தக் கூட்டமைப்புக்கும் இதர கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்டவேண்டிய தருணம் இது.

விக்கிரமபாகு என்று ஒரு வேட்பாளர். தமிழர்கள் அழிக்கப் பட்டபோது ஓங்கி குரல் கொடுத்த ஒரு இடதுசாரி அரசியல்வாதி. தமிழர்களின் பிரச்சனை நியாயமானது என்று குரல் கொடுப்பவர். புலி கெலி கொண்டு ஓடும்வரை சம்பந்தர் கூட்டமும் விக்கிரபாகு பற்றி பெரிதாகவே பேசினார். இப்போது என்ன நடக்கிறது. பொன்சேகாவுக்கு மாலை சூட்டுகிறார்.

தமிழர்கள் இந்த இருவரில் யாருக்குப் போடாவிட்டாலும் ஒருவர் வெல்வது உறுதி. ஆனால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருங்கிணைந்து வெளிக்காட்ட எமக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவதோடு மாத்திரமல்லாமல் இவர்கள் இருவரையும் ஆதரிப்பதன் மூலம் சர்வதேசத்தின் முன்னால் இவர்கள் போர்க் குற்றவாளிகள் அல்ல, மே 18 முன் நடந்ததெல்லாம் வெறும் வாண வேடிக்கை களியாட்டம் என்று நாமே அவர்களுக்காக நிரூபணம் கொடுத்துவிடுவோம். 

இதுவரை காலமும் இந்தத் தமிழ்கட்சிகள் ஒரு முடிவை ஆராய்ந்து சாதக பாதகங்களை கணக்கெடுத்து எமது எதிர்காலம் பற்றிச் சிந்தித்து செயலாற்றியது கிடையாது. இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தலையாட்டிப் பிழைத்த கூட்டம் தான் இந்தக் கூட்டமைப்பும் கட்சிகளும். இந்தத் தேர்தலில் இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்ற முடிவை இம்முறை நீங்களே சிந்தித்து எடுங்கள். விக்கிரமபாகுவுக்கு வாக்களித்தால் குறைந்தபட்சம் இவர்களது போர்க்குற்றத்தையாவது நாம் அறைந்து சொல்ல முடியும்.

வேட்டும் வோட்டும்! : ஈழமாறன்

Mahinda_and_Fonsekaகேட்டவன் ஒருவன்
கேட்டுக் கொண்டதால் – பார்த்துப் பாராமல்
வேட்டு வைத்தவன் ஒருவன் – வைத்துவிட்டு
தமிழன் ஓரமாய் இருப்பதாயின் இருக்கட்டும்
அன்றி உரிமை கேட்கின்
உரிவோம் கோவணத்தையும் – என்று
அமெரிக்கா சென்று அறிக்கை விட்டவன் ஒருவன்
அந்த அறிக்கை தவறென்று
மறுக்க மறுத்தவன் ஒருவன்.

அள்ளிக் கொண்டுபோய் துலைவார்
முள்ளிவாய்க்காலில் வைத்து
கொள்ளி வைத்தது போக
முள்ளுவேலிக்குள் அடைத்து வைத்து
வெள்ளத்துக்கு ஒதுங்க
வீடில்லாமல்
பிள்ளைக்கு கொடுக்க மருந்துமில்லாமல்
கூனிக் குறுகி எம்மினம் டெங்குக்
காச்சலில் செத்து மடிகையில்
நாடுகடந்த தமிழீழம் அமைக்க
ஒரு கூட்டம்
போடச் சொன்னவனுக்கு போடுவதா – இல்லை
போட்டுத் தள்ளினவனுக்குப் போடுவதா
ஏன்று வியன்னா சென்று
விவாதம் செய்தனர்
முகாமில் அப்போது டெங்கு பிடித்து
செத்தவர் தொகை நாற்பதைத் தாண்டிற்று
சம்பந்தன் ஜயாவோ
சாகாமல் இருப்பவர்கள் சாரவேண்டியது
யார் பக்கம் என்று
கரிகாலன் பாணியில் கணக்கு விடுகிறார்.

வன்னி மன்னன் வெள்ளைக் கொடியுடன்
பிணமாய் கிடக்க
குரு திசை மாறியது
திரு சம்பந்தன் ஜயாவுக்கு.
பெடறல் தொடங்கி தமிழீழமாகி – பின்
வடக்கு கிழக்காகி
அதுவும் இப்ப இல்லையென்றான பின்னே
சம்பந்தம் ஜயா
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு
சம்பந்தம் பேசுறார்.
பதின் மூன்றோ கூடவோ இல்லைக் குறையவோ
என்றெல்லாம் போய்
வட்டமேசை போட்டு வடையும் தேனீரும்
பானமும் பருகிய கூட்டணிக் கூட்டத்தின்
மிஞ்சிய ஆடு – வன்னி
நரி செத்தபின் சிங்கமாய் மாறி
கோரிககை ஏட்டுடன்
கூட்டடமைப்பின் புறோக்கறாய்
தமிழர் மானத்தை விபச்சாரம் செய்ய
ஏறிறார் பொன்சேகா வீட்டுப் படி
இறங்கிறார் மகிந்த கூற்றுப்படி.
ஜரோப்பவிலோ வட்டுக்கொட்டை
மன்னிக்க கோட்டை தீர்மானத்துக்கு
வாக்கு போட வரிசைல் புலன்பெயர் மாக்கள்.

தமிழருக்காய் இணைய மறுத்தது ஒரு புலி
புள்ளையானைப் போட்டுத் தள்ள
அமைச்சராய் ஆனது இன்னொரு புலி
அறிக்கை வந்தது.
மகிந்த வெல்வதற்கு நான் அம்மானோடும்
இணைவேன்
அம்மணமாயும் அலைவேன் என்று.
கிழக்கின் உதயம் குலுங்கி குலுங்கி அழுதது.

வன்னிப்போரில் விழுவது மாடாய் இருந்தாலும்
மனுசனாய் இருந்தாலும்
சுடுவதை நிறுத்தாதே என்று
கட்டளை போட்டவனும்
சுட்டதை நிறுவியவனும்
வாக்குக் கேட்டு வருவது யாரியடம்?
புலி சுட்டு புருசனை இளந்தவள்
கெலிசுட்டு தனையனை தொலைத்தவள்
பிறந்திரு நாட்களில் தலை வெடித்து
பிணமாய்ப் போன தன்
பிஞ்சுக் குழந்தையின் இரத்தம் காயாது
தினம் வெம்பி அழுபவள்
முறிந்த கால் இன்னும்
ரணமாய்க் கொதிக்க
பிணமாய் கிடப்பவள்
சுpதைந்த மார்பிலிருந்து
சீழ் வடிய கதறித் தவிப்பவள்
பட்ட காயங்கள் தீர சிறு கட்டு
மருந்துகூட இல்லாத
அப்பாவி மக்கள் இவர்கள்
ஈனரே எப்படிக் கேப்பீர் வாக்கு
ஏப்படிப் பாப்பீர் அவர் முகம்.

நாசமாய் போவார்
துலைவார் கூட்டமெல்லாம்
தலைமை எனச்சொல்லி
வாக்குக் கேட்டு வந்தால் – ஒரு பிடி மண்ணள்ளி
துலைவாரே நீவிரெல்லாம்
நாசமாய் போக என்று சபித்துவிடுங்கள்
அதைவிட உங்களிடம் வேறென்ன
வலு மிஞ்சியிருக்கிறது.

சுடச் சுடச் ஆற்றும் மாவீரர் தின உரை : ஈழமாறன்

maaverar_thinam_2009என் அன்பார்ந்த தழிழீழ மக்களே!

இந்த நாள் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்க முடியாத நாள். தழிழ் மக்களிடம் இருந்த எல்லா நகைகளையும்  பறித்து தமிழீழ வைப்பகத்தில் வைத்திருந்த போது மகிந்தவின் கொள்ளையர் சூறையாடிச் சென்றுவிட்டதால் இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்க முடியாத நாள்.

இந்த நாள் ஒரு பொல்லாத நாள். புலம் பெயர் பொறிக்கிகள் சிலர் என் படத்தைப் போட்டு டயறி அடித்து, கார்த்திகைப் பூச் செய்து BTF உங்களுக்கு காதிலை பூச் சுத்தும் நாள்.  கலண்டர் தயாரித்து விற்கும் ஒரு காசுழைக்கும் நாள்.

இந்த நாள் வெண்புறா கட்டியவர்கள் கக்கூஸ் கட்டிக் கணக்கு காட்டும் ஒரு எளிய நாள்.

maaverar_thinam_2009என் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

புது மாத்தளனில் மகிந்தவின் ஆக்கிரமிப்பு படைகள் போட்டுத் தள்ளியது போக மிச்சம் மீதி இருக்கும் மக்களே! அந்த நாள் நான் வணங்கா மண் கப்பல் வரும் வந்து என்னையும், மனிசி பிள்ளைகளையும் ஏத்திக்கொண்டு போகும் என்று எண்ணிக் கொண்டிருந்த நாள். உந்த லண்டன் வரதர் கப்பல் விடுவார் என்று நான் பார்த்துக்கொண்டிருக்க ரீல் விட்ட நாள்.

நான் வருடம் தோறும் கார்த்திகை 27ஆம் நாளன்று நீச்சல் குளத்தில், என் குடும்பத்துடன் நீராடி விட்டு, உலகம் முழுக்க பரவியிருக்கும் அரைநாக் கொடி மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். ஏன் நான் உங்களை தொப்புள் கொடி உறவுகள் என்று அழைக்காமல் அரைநாக்கொடி என்று அழைக்கிறேன் என பலர் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னை முள்ளி வாய்க்கால் தண்ணியில் தோய்த்தெடுத்து அம்மணமாகக் போட்டிருந்த படத்தில் காணப்பட்ட அரைநாக் கொடியைப் பாத்து தம்பிகள் லண்டன் சாந்தனும் றெஜியும் என்னை அழைத்து, அண்ணா அரைநாக் கொடியுடன் உங்கள் படத்தைப் பார்த்ததும் நாம் ஆனந்தத்தில் அழுது விட்டோம் அண்ணா என்றார்கள். இனி வரும் காலங்களில், நீங்கள் ஆற்றும் மாவீரர் செய்தியெல்லாம் தொப்புள் கொடி என்று வரக்கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். சுயபுத்தியில் எதுவுமே இன்றுவரை செய்துவராத நான் இந்த வாக்கிய மாற்றத்தையும் பிரக்ஞைபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

Piraba_in_Swimmingpoolஎன் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

27ஆம் நாளன்று வெளிவர வேண்டிய செய்தி ஏன் 26ம் திகதியே தேசம் நெற்றில் வருகிறதே என்று நீங்கள் திகைத்துப்போய் இருப்பீர்கள். புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மாக்களே! நீங்கள் ஆனந்தவிகடன் புத்தகத்தை தவறாது வாங்கிப் படித்து அதன் மூலம் அறிவைப் பெருக்கி அந்த அறிவை வைத்து எனக்கு ஆலோசனை வழங்குவதும் அந்த ஆலோசனைகளை நான் நீச்சல் குளத்தில் இருந்தபடியே செவிமடுத்து செயலாற்றி வந்ததும் ஒரு பெரிய ரகசியம் அல்ல.

அந்த வகையிலே அண்மையில் ஆனந்த விகடன் சஞ்சிகையில் வந்திருக்கும் கட்டுரை புலம் பெயர் மாக்கள் எனக்கு நாசூக்காக கொடுத்த ஆலோசனை என்பதை நான் அறிவேன்.

PottuAmman_and_Pirabaharanபொட்டன் எனக்கு சுத்திப் போட்டு தான் தலைவனாகப் பாக்கிறான் என்று எனக்கு எப்போவோ தெரியும். ஆனால் ஆனந்த விகடன் புத்தகத்தில் அறிக்கை விட்டு விட்டு மாவீரர் செய்தியை அவனே வாசிக்க முற்படுவான் என்று வற்றாபழை அம்மனறிய நான் யோசிக்கவில்லை. ஆனால் உண்மையிலையே சொல்கிறேன். பொட்டன் மாவீரர் செய்தி வாசிக்கப் போறான் என்றதும் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. நான் ஏன் சிரித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.  அவன் தனக்கென ஒரு படையே வைத்திருக்கிறான் என்பதால் அவனை சுலபத்தில் போட்டுத் தள்ளவும் முடியாது.  அதனால்தான் பொட்டனுக்கு முதல் மாவீரர் செய்தி வரவேண்டும் என்று என் குடும்பத்துடன் கலந்தாலோசித்து 26ம் திகதியே செய்தியை வெளியிட்டு பொட்டன் முகத்தில் கரியைப் பூசி உங்களை மகிழ்விக்கலாம் என்று முடிவு செய்தேன். உண்மையில் நானா யோசிச்சு இயக்கத்திலை எடுத்து செயல்படுத்திய ஒரே ஒரு முடிவு இதுதான்.

Piraba_Aliveஎன் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

நான் இறந்து விட்டேன் என்று ஒரு பிரிவும் நான் இறக்கவில்லை என்று ஒரு பிரிவும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள் என்று உளவு ஆய்வுகள் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகளை வெளியிடுகின்றன. எல்லா நாட்டிலையும் குளிரையும் பொருட்படுத்தாம எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கள் தலைவன் பிரபாகரன் என்று வாய் கிழியக் கத்திய உங்களுக்குத் தெரியும் எனக்கு என்ன நடந்தது என்று. வெளிநாட்டில் இருக்கும் சொத்துப் பத்தைச் சுருட்ட நினைக்கும் துலைவாருக்கும் தெரியும் எனக்கு மகிந்த அரசும், இந்தியாவும், சீனாவும், இன்னும் சில நாடுகளும் சேந்து என்ன செய்தன என்று.  இந்த வருடம் என் பிறந்த நாளை எப்படி எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். நினைச்சாலே அழுகை அழுகையா வருது. புலம் பெயர்ந்துபோன நீங்களும் எனக்கு கட்அவுட் கட்டி ஆளுயரத்திற்கு கேக்கும் வெட்டி காசு கலெக்ஷன் விழாவும் வைக்கும் திட்டத்தோடு இருந்ததiயும் நான் நன்கு அறிவேன்.

போன வருசம் என்ரை உரையிலை சொன்னனான் உவன் மகிந்த ஒரு சரியான ஆளெண்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வரவேணும் எண்டு. யாரோ சொன்னாங்கள். உவன் மகிந்தவுக்கு நல்லாத் தழிழ் தெரியும் என்று. அந்த நம்பிக்கையில் மகிந்தா நீ ஒரு நேர்மையான ஆள் என்றால் இந்தப் பிரச்சனைக்கு இந்த வருடத்துக்குள் ஒரு முடிவு கொண்டு வா என்று எச்சரித்தது உண்மைதான். ஒரு முடிவு கொண்டு வரவேணும் எண்டதை பிழையா விளங்கியதால், நான் முள்ளிவாய்க்கால் வரைக்கும் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். நாசமாய் போன மகிந்த நான் சொன்ன முடிவை தாறுமாறா விளங்கி ஆகாயத்தாலை அடிச்சான். தரையாலை அடிச்சான். காரை முள்ளு குத்த, கரம்பை முள்ளுக் கால் கிளிக்க, நாயுருவி தோலுருவ, யங்கம் பத்தைக்குள் பதுங்கியதும், நாய் போல நான் ஓடியதும் இப்போது நினைத்தாலும் எனக்கு உடம்பெல்லாம் கிடு கிடுக்கிறது.

வன்னி மக்கள் எப்பிடித்தான் ஒன்றரை வருடங்களுக்கு மேல் இந்தத் துன்பத்தை எனக்காக தாங்கினார்களோ தெரியாது. ஒரு தலைவனைக் காப்பாற்றுவதற்கு எந்தவிதமான துன்பங்களையும் தாங்க வேண்டும். எந்த விதமான உயிர்த் தியாகங்களையும் செய்ய வேண்டும் என்று கார்ல் மாக்ஸ்சோ லெனினோ அல்லது எங்கட புலம்பெயர் பேப்பர் மார்க்ஸிட்டுக்களோ சும்மா மாவோயிஸ்டுக்களோ அல்லது கருணாநிதியாவது சொல்லியதற்கு இணங்க மக்கள் தாங்களாகவே விரும்பி அரச கட்டுப்பாட்டுக்குள் செல்லாது எனது உயிரைக் காப்பாத்த முயற்சி எடுத்தார்கள்.

நடேசனுக்குச் சொன்னன். இடம் பெயர்ந்த மக்களுக்கு என்று ஜ.நா குடுக்கிற எல்லா சாப்பாட்டையும் வாங்கி விழுங்கி ஏப்பம் விடுறதிலை இருக்காம, அவன் கோப்பத்தாயவுக்காவது போனடிச்சு சுடுறதை நிப்பாட்டு என்று கேள் என்றேன். நான் கேட்டதாகச் சொல்ல வேண்ணடாம் என்று கூடச் சொன்னேன். இந்த விசயம் வெளியில் தெரிந்தால் மலை போல நம்பியிருக்கும் தமிழ் மக்கள் துடிச்சுப் போயிடுவினம். தலைவர் பயமில்லாமல் துணிவோடதான் இருக்கிறார் என்று அடிக்கடி அறிக்கையும் விடச்சொன்னன்.

பசில் சொன்னானாம் உங்கட ஆள்தான் முடிவுக்கு கொண்டுவரச் சொன்னவர். விரைவிலை கொண்டுவாறம் என்று. எனக்கு தூக்கிவாரிப் போட்டுது. நாசமறுப்பார் தழிழ் மக்களின்ரை பிரச்சனைக்கு முடிவு கொண்டு வரச் சொன்னா என்ரை குடும்பத்துக்கு ஒரு முடிவு கொண்டுவாறாங்கள் என்று. என்ன செய்வது. பொட்டனிடம் கேட்டேன் இதுவரை எத்தினை ஆயிரம் மக்கள் இறந்து விட்டார்கள் என்று. அவன் சொன்னான் கிளிநொச்சி வரை எங்கட படை கிளிச்சுப் போடும் என்று நம்பியிருந்த மக்களிலை ஒரு 1 000 பேர் வரை செத்துப் போச்சினம். தெடர்ந்து நாங்கள் ஒடப் போறம் என்பதால் இன்னும் 25 அல்லது 30 ஆயிரம் பேர்வரை சாகக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்று. உடனே நான் வேதனையின் விளிம்புக்குச் சென்றேன். நான் மீண்டும் பொட்டனிடம் நிதானமாகக் கேட்டேன். அரச கட்டுப்பாட்டுக்குள் தப்பிச் சென்ற துரோகிகளை விட எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வீர மிகு மக்கள் எத்தனை ஆயிரம் தேறும் என்று. பொட்டனின் பதில் கிட்டத் தட்ட மூன்று லட்சம் பேர் எஞ்சியுள்ளார்கள் என்பது.  

அப்போதுதான் லண்டனில் நீங்கள் எல்லாம் மக்கள் வெளியேற விருப்பமில்லாமல்தான் இருக்கிறார்கள். உவள் சீவரத்தினத்தின்ர பெடிச்சிக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கிறள். கலியாணம் காட்சி ஒன்றும் இல்லாதவள். எங்களுக்காக லண்டனில உரக்க உரக்க குரல் கொடுத்தவள். தனக்கு பிள்ளையல் இருந்தா தன்ரை பிள்ளையலை புலிப்படையில சேர்திருப்பன் என்று லண்டன் பார்லிமென்டிலேயே கதைச்சவள். ஆன அவளின்ர பிரெண்ட் அங்கையற்கண்ணி கடைசி நேரம் காலை வாரிப் போட்டு டக்ளஸ்சோட ஓடிப்போய் ஒட்டிவிட்டால். உவன் நாசமாப் போன டக்ளஸ்க்கு எத்தினைதரம் ரை பண்ணின்னான். அவனுக்கு ஆயுள்கெட்டி. அது போகட்டும்.

சருவதேசமே (தேசம்நெற் என்று நினைக்க வேண்டாம்) மக்களை அங்கே வைத்தே போரை நிறுத்து என்று கத்திக் கூத்தடித்தீர்கள். என் கட்டளையை மீறி சில தளபதிகள் மக்களை அவ்வப்போது திறந்து விட்டார்கள். அந்தத் தளபதிகளை எல்லாம் போட்டு மணலில் தாட்டேன். மீறி தப்பி ஓட நினைத்த மக்களையெல்லாம் மாடுகளைப் போல சுட்டுத் தள்ளச் சொன்னேன். நான் சொல்வது ஏதாவது பொய்யாய் இருக்குமோ என்று சந்தேகம் கொள்பவர்கள் வன்னி முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் பேசிப் பாருங்கள்.

விசயத்துக்கு வருகிறேன். முடிவை மாத்துங்கோடா உங்களுக்கு புண்ணியமா கிடைக்கும் எண்டு எத்தினை தடவை கெஞ்சியிருப்பன். ஆண்ட பரம்பரையின் மிடுக்குடன் ஆயிம் தடவை போன் பண்ணியிருப்பன். கரிகால சோழனைப் போல் பங்கருக்குள் பதுங்கியிருந்து பாத்மநாதனை, போனிலை இந்த யுத்தத்தை நிறுத்து என்று நான் கேட்காத நாள் கிடையாது. அறுவார் கே.பி, ரூட் ரவி, தனத்தான், ரெஜி உவங்கள் அமெரிக்கா வருது. ஆபிரிக்கா கொதிக்குது. அண்டாடிக்கா எகிறுது. கெலி; வட்டமடிக்குது. டாக்குத்தர் ஜயா அனுப்பின வணங்கா மண் சுணங்காம வருது என்று உவங்கள் விட்ட கதைகள் ஏராளம்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மாக்களே!

ஒரு கட்டத்தில் எனக்குத் தெரிஞ்சு போச்சு. கிளிநொச்சியும் போச்சு. நான் போட்டிருந்த ரவுசரும் கிளிஞ்சு போச்சு. அப்பவும் பொட்டன் சொன்னவன். அண்ணை வெளிநாட்டிலை இருக்கிறவங்கள் உங்களை பப்பா மரத்திலை ஏத்திறாங்கள். ஒரு நாளைக்கு பொத்தெண்டு கீழை போடுவாங்கள். அது மட்டுமில்லை. போட்ட கையோட யாழ்ப்பாணத்திலை கோட்டல் கட்டவும் ரோட்டுப் போடவும் மகிந்த மாத்தையாவப் போல ஒரு மனுசன் கிடையாது என்று அறிக்கை விடவும் கோப்பி குடிக்கவும் கும்மாளம் அடிக்கவும் ஓடுவாங்கள் என்று.

உண்ணா விரதம் இருந்த இடைக்காடர் அம்சாவுக்கு இடையாலை சைக்கிளோடுவார், தூள் விநாயகர் செல்வராசா முதலைக் கண்ணீர் வடிப்பார், சிலர் கூட்டத்திற்கு லேற்றா போனாலும் ஜயின்ரைன் தியறி எல்லாம் சொல்லுவாங்கள். அக்காமார் மகிந்த மாத்தையாவை விட்டா உலகத்திலையே வேறை நல்ல ஆள் கிடையாது என்று அறிக்கை விடுவார்கள். சிலர் வன்னி முகாம் எல்லாம் சொர்க்க பூமி மாதிரி கிடக்கு என்று சொல்வார்கள். வெளிநாட்டுப் புலியும் குழுவை அனுப்பும். மகிந்தவைப் பற்றி புகழ்ந்து தள்ளும். திருமாவளவனுக்கு நீங்கள் குடுத்த காசிலையே பொன்னாடை வாங்கிக் கொண்டு போய் மகிந்தவுக்கு போர்ப்பாங்கள் என்று.  நான் யார் சொன்னதைக் கேட்டேன் இவன் சொல்வதைக் கேட்பதற்கு.

இப்ப எனக்குப் புரிகிறது. புளியங்குளம் புடிச்சிட்டான். நெடுங்கேணி நொருக்கிப் போட்டான். மல்லாவிலை புல்லுக் கூட இல்லை. ஒட்டுசுட்டானிலை எல்லாரையும் சுட்டுப் போட்டான். ஆனையிறவு போச்சுது. கிளாலி கிழிஞ்சுது. கல்லாறு அணைக்கட்டுக்கு குண்டு வைச்சு சுனாமி விளையாட்டுக் காட்டுவம் என்டா அதுவும் வாய்க்கேல்ல. கிளிநொச்சி மிஞ்சும் எண்டு பாத்தா அது பழஞ்சீலை போல சறக் எண்டு போச்சுது.

என் அன்பார்ந்த புலத்து மாக்களே!

தோல்வி நிச்சயம் என்று தெரிஞ்சும் ஏன் இந்த நாய் மக்களை விடாம அடைச்சு வைச்சிருக்கிறான் எண்டு நீங்கள் சில வேளைகளில் சிந்தித்திருக்கக் கூடும். சொல்றன் கேளுங்கோ. எனக்கு புலத்தில இருந்து அழைப்புகள் வந்தது. சனம் ஆயிரக்கணக்கில செத்தால்தான் வெள்ளைக்காரணுக்கு இரக்கம் வந்து உவன் மகிந்தவுக்கு ஒரு பாடம் புகட்டுவான்கள் என்றான்கள். எங்கட சனம் செத்து மகிந்தவுக்கு பாடம் படிப்பிக்கிறதோ சனத்தைக் கொல்லாம ஏதும் செய்யேலாதோ என்று நான் திரும்பவும் கேட்டனான். அதுக்கு அவங்கள் நான் பங்கரிலை இருக்கிறதாலை உலக விசயம் தெரியாதாம் என்று சொல்லிப்போட்டு என்னவோ கோதாரியோ கொசோவாவோ என்ற இடத்தில இப்படித்தான் நடந்ததாம் என்று அந்தத் துலைவார் சொன்னாங்கள். அப்பதான்  ஒரு தீர்க்கமான முடிவு செய்தேன். இன்னும் எத்தினை ஆயிரம் பேர் செத்தாலும் எத்தினையாயிரம் பேரைக் கொன்றாலும் பரவாயில்லை நானும், first ladyயும் குடும்பமும் தப்பும் வரை மக்களை வெளியேற அனுமதிக்க வேண்ணடாம் என்று. உந்த விசயத்தை கேள்விப்பட்ட என்ரை மூத்தவன் வந்தவன் போனவன் குஞ்சு குருமன் என்று பார்க்காம கொசாவோ மாதிரி எங்களுக்கும் தீர்வு வரும் என்று கொன்று குவிச்சம். நாங்கள் கொல்லுறதிலும் பார்க்க மகிந்தவின்ரை படையைக் கொண்டு வந்து கொன்று குவிக்க வைத்தம். அது தான் எங்கட மில்ரி ஸ்ரரர்ஜி. அதை உலகம் எதிர்பார்க்கவில்லை. எங்கட திறமையைக் கண்டு வயந்து போனார்கள். சனம் கூட்டமா இருக்கிற இடங்களில இருந்து எங்கட வீரப்படை கிறைனைட்டை கழட்டி எறியும். உடன மொக்குச் சிங்களவன் அந்த இடத்துக்கு செல்லடிப்பான். சனம் சாகும் நாங்கள் விடியோ பிடித்து அனுப்புவம் நீங்களும் பாத்து மகிழ்ந்திரப்பியல் தானே.

உங்களுக்குத் தெரியும் என்ரை உயிருக்கு ஆபத்தெண்டா படிச்சவன் படிக்காதவன் குஞ்சு குருக்கான் எண்டு பேதம் பாக்காமல் சுட்டுத் தள்ளத் தயங்க மாட்டன் எண்டு. அப்பிடி இருக்கும் போது உங்கட பெஸ்ற் லேடி இருக்கிறாள். என்ரை பிள்ளையள் வேறை பயந்து கொணடிருக்குதுகள். இப்பிடி என்ரை முழுக் குடும்பபே சாவுக்கு பயந்து சயனைட் குப்பிகளை கழற்றி வீசிவிட்டு வீராவேசத்தோடு என்னோடு கதறி அழுது கொண்டிருக்கும் போது மக்களாவது மண்ணாங் கட்டியாவது.

வீட்டுக்கு ஒரு புள்ளை எண்டு ஒரு காலத்திலை புடிச்சது என்னவோ வாஸ்தவம் தான். அதுக்காக கொள்கையை மாத்தக் கூடாதா என்ன. கலியாணம் கட்டக் கூடாது எண்டன் பிறகு மதியுடன் மயங்கிய பின் கலியாணத்துக்கு முன்பே கட்டிலைப் பரிமாறியபின் கொள்கையாவது மசிராவது என்று மாற்றிக் கொண்டேன். அரசுடன் சேந்தா துரோகி என்றேன் பின் நானே பிறேமதாசவுடன், மகிந்தவுடன் கூட்டு வைத்தேன். கோடி கோடியா பணம் புரட்டினேன். கொள்கை எண்டா என்ன? எனக்கு சரி எண்டா சரி யாகவும், பிழையெண்டா பிழையாகவும் எடுத்துக் கொள்வதுதானே. அதைப் புரிந்து கொள்ளாமல் வன்னி மக்கள் சேட்டை விட்டினம். நாங்கள் ஒழிச்சு வந்து இருக்கேக்குள்ளை சாப்பாடு தந்தவதான். பாதுகாத்தவை தான். அதுக்காக என்ரை குடும்பம் அழியும் போது வன்னியாற்ரை புள்ளையள் வாழுறது எந்த புத்தகத்திலை எழுதியிருக்கு சொல்லுங்கோ பாப்பம். வன்னியாக்களுக்குத் தெரியவேணும் நாங்கள் முஸ்லிம் மக்களைத் துரத்தும் போது என்ன செய்தனாங்கள் என்று. காதிலை கையிலை கிடந்த நகைகளையெல்லாம் எப்பிடிப் புடுங்கினோம் என்று.

யாழ்ப்பாணத்திலை இருந்து இடம் பெயரும் போது யாழ்ப்பாண மக்களுக்கு என்ன செய்தனாங்கள். மக்கள் எல்லாம் புலிகளோடுதான் என்று காட்டுவதற்காக மாடுகளை விடக் கேவலமா சாய்ச்சுக் கொண்டு வந்தனாங்கள். மூதூரிலை மட்டும் என்ன குறைவே. இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் நாங்கள் மனிதாபிமானமாய் நடக்கேல்லை எண்டா உதென்ன விளையாட்டு. உவங்கள் கொஞ்சப்பேர் சொல்லுவாங்கள் ஜரோப்பாவிலை அதென்னது? ஆ… பின்னவீனத்துவ விளையாட்டோ?

Piraba_in_Swimmingpoolநான்தான் சொன்னேன். வரமறுக்கிற பிள்ளைகள் எல்லாரையும் அந்த இடத்திலை சுடுங்கள். தடுப்பவர்கள் யாரும் வந்தால் வாகனத்தை விட்டு ஏத்துங்கள் என்று. பச்ச மட்டை வெட்டி பாடம் புகட்டுங்கள் என்று. அன்னம்மாவும் பொன்னமாவும் கந்தப்பனும் ஏரம்பனும் பிள்ளையை இழந்தா எனக்கென்ன. எனக்கு மதி டாலிங் உயிரோடு இருக்கவேணும். பாலச்ந்திரன் நீந்த நீச்சல் குளம் வேணும். அதனால் தான் தழிழீழ வரலாற்றில் போராட்டம் இக்கட்டான சூழலிலில் இருக்கும் போது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தேன். அதுதான் எத்தினை ஆயிரம் வன்னி மக்களும் மாடுகளும் செத்தாலும் பரவாயில்லை. அமெரிக்காவின் கப்பல் வந்து என் குடும்பத்தை ஏத்தும் வரைக்கும் நோ எஸ்கேப் என்று.

இந்த இடத்தில் சில வெளிவராத வரலாற்று உண்மைகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். சும்மா சைக்கிளிலை போன என்னைக் கூப்பிட்டு துவக்கைத் தந்து துரையப்பாவைச் சுடச்சொல்லிப்போட்டு உவன் அமிர்தலிங்கம் பிறகு எனக்கு அரசியல் தெரியாது எண்டு சொன்னான். அதற்காகவே அவனைப் போட்டுத் தள்ள முடிவு செய்தேன். அது மட்டுமல்ல பக்கத்தில் படுத்திருந்த போது பாயில் வைத்துச் சுட்ட மைக்கல்,  களத்தில் விட்டுச் சுட்ட செல்லக்கிளி,  காட்டிக்குடுத்து கொன்ற குட்டிமணி, தங்கத்துரை, சுந்தரம், விக்ரர், இந்திய ராணுவத்துடன் பேச அனுப்பிய ஜொனி, எவ்வளவு பனைகள் முறியாமல் இருக்க முறிஞ்ச பனைகளைப் பற்றிப் புத்தகம் போட்ட ராஜினி,  கருணாநிதிக்கே ஆப்பு வைச்சுப் போட்டுச் சுட்ட பத்மநாபா, என்னைப் பற்றி கவிதை எழுதாமல் பெண்ணியம் கத்தரிக்காய் என்று எழுதிய செல்வி,  என்று நான் நேரடியாக போட்டது. என் உத்தரவில் போட்டது. உத்தரவு வந்திருக்கிறது என்று நினைத்து போட்டது என்று தழிழ் ஈழப் போராட்டத்தில் நான் சுட்ட பட்டியல் இந்த மாவீரர் உரையில் போட நினைத்தால் அது 1000 பக்கங்களை தாண்டிவிடும். சொந்தப் போராளிகளையே போட்டுத் தள்ளியிருக்கிறேன். மாற்றுக் கருத்தாளர்கள் எம்மாத்திரம். 

Hunger_Strikeஇந்த வகையில் லண்டன் தம்பி பரமேஸ்வரனுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தம்பி நீ எனக்காக விழுங்கு விரதம் இருந்தாய். நான் இங்கு மூன்று வேளை உண்டு உற்சாகமாய் இருந்தபோது நீ அங்கே ஒரு வேளை மட்டுமே விழுங்கி இருந்தாய். அதற்காக நான் பெருமைப் படுகிறேன். KFC கோழிக் கடையில் நீ சாப்பாடு வாங்காது McDonald இல் மட்டுமே சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டாய் என்ற ஆத்திரத்தில் கே.எவ்.சி கிளப்பிய புரளியைக் கண்டு நீ ஒன்றும் ஆடிவிடாதே. புலத்து அறளை பேந்ததுகளுக்கு நீ வழக்கு போடுவதாய் சொல்லியே காலத்தைக் கடத்து. வணங்கா மண் போகுது. வருகுது. இறக்குது ஏத்துது எண்டு மூத்தி அண்ணை விட்ட புலுடா வையே நம்பின மக்களுக்கு இது ஒன்றும் பெரிதாக இருக்காது.

என் அன்பார்ந்த புலம் பெயர்ந்த மாக்களே!
 
சருவதேசத்திற்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பாலா அண்ணா அடிக்கடி சொல்லுவார். அமெரிக்கன் தனக்குத் தேவை எண்டா காலையும் பிடிப்பான் தேவை முடிஞ்ச கையோடை ஆளைப் போட்டும் தள்ளிப் போடுவான் எண்டு. எனக்குத் தெரியும் பாலா அண்ணைக்கு உந்த உள்ளநாட்டு உளவுஸ்தாபனங்கள் எல்லத்தோடையும் தொடர்பு இருக்கெண்டு.  என்னுடைய விசயத்திலையும் இதுதான் நடக்கும் எண்டு முன்கூட்டியே பாலா அண்ணை சொன்னவர். நான் சொன்னன் அமெரிக்கன்ரை காலிலை போய் என்னை விழச் சொல்லிறியா என்று. அதற்கு அந்த தேசத்தின் குதம் மன்னிக்கவும் குரல் (அதென்ன கீழே இருந்து வந்தா என்ன மேலை இருந்து வந்தா என்ன அந்தாளிட்டை இருந்து வாறது ஒண்டுதானை) சொன்னான் நீ எம்.ஜி.ஆரின் காலிலேயே விழுந்தனி. அமெரிக்கா எந்தப் பெரிய நாடு. அமெரிக்கான்ரை காலிலை விழுந்தா சர்வதேச அரசியலும் உனக்குத் தெரியும் என்று புலம் பெயர் சனம் பாராட்டும். அதனால தான் நான் அமெரிக்கா என்ன சொன்னாலும் செய்வதென்ற முடிவு செய்தேன். 

அமெரிக்காவே! இலங்கை இந்திய ஒப்பந்தத்தைக் கிழிக்கச் சொன்னாய். கிழித்தேன். இந்திய ஆமியுடன் அடிபடு எண்டாய். அடிபட்டடேன். ராஜீவ் காந்தியை கொல் என்றாய். கொன்றேன். நீ கேட்டு நான் எதைச் செய்யாமல் விட்டேன். நீ எனக்கு சத்தியம் செய்து கொடுத்தாய் தமிழீழம் எடுத்துத்  தருவதாய். உன்னை நம்பித்தானே கடைசிக்காசு அந்தக் காசு இந்தக்காசு என்று புலத்து மக்களிடன் வசூலிச்சேன். அதிலே தங்களுக்கு எண்டு எடுத்த காசு போக மீதி எல்லாம் உன் நாட்டு ஆயுதக் கொம்பனிகளுக்குத் தானே கொடுத்தேன். கப்பல் அனுப்பிறன் கப்பல் அனுப்பிறன் என்று கடசிலை மகிந்த மாத்ததையாவிட்டை கெஞ்ச விட்டிட்டாயே அமெரிக்கா. நீ நாசமா போக. நீ அழிஞ்சு சின்னா பின்னமாக. என் அம்மணச் சாபம் சும்மா விடாது.

என் அன்பார்ந்த தமிழீழ மக்களே

இந்த நாளில் நான் உங்களுக்கு ஒரு பெரிய ஆலோசனை வழங்க உள்ளேன். எதிர்காலத்தில் நான் கொண்டது போக தமிழ் மக்கள் ஏதேனும் மிச்சம் மீதி இருந்தால்இ மகிந்த அவர்களைப் போட்டுத் தள்ளாமல் இருந்தால் அவர்களுக்காக போராட நினைக்கும் எல்லோருக்கும் எனது புத்திமதி இதுதான். தனித் தமிழீழம் உருவாக வேண்டுமானால் நீங்கள் செய்யவேண்டியது ஒரு சின்ன வேலை தான். தயவு செய்து பிளேன் வாங்க வேண்டாம். வாங்கி விளையாட்டுக் காட்ட நினைச்சு நான் பட்ட பாடு உங்கள் எல்லாருக்கும் தெரியும். அப்படியானால் என்ன செய்தால் புரட்சி வெல்லும் என்று நினைக்கிறீர்கள்? மிகச் சுலபம். நான் என்ன என்னவெல்லாம் இந்த 35 வருடங்களாக செய்தேனோ அதை தயவு செய்து செய்வதற்கு கனவிலைகூட நினைக்காதையுங்கோ. அதாவது படுக்கiயிலை வைச்சுச் சுடுறது. படிச்சவனை சுடுறது. மாற்றுக் கருத்தாளர்களைப் போடுறது. உளவுப் படை கட்டிறது. கட்டின கையோடை சயனைட்டைக் குடுத்து சாவெண்டு சொல்லிறது. முக்கியமா மருந்தடிக்கிற பிளேனை வாங்கி பொசுக்கெண்டு குண்டு போடுறது. போட்ட கையோடை போட்டோ எடுத்து தமிழ்நெற்றிலை போடுறது போன்ற எந்த எழிய காரியங்களையும் செய்திடாதையுங்கோ. இன்னொரு செய்தி கடைசிவரைக்கும் புலம் பெயர்ந்த மகக்ளிட்டையும் குறிப்பா சீமான் மாதிரி இந்திய கூத்தாடிகளிட்டையும் அட்வைஸ் கேட்டு ஒரு முடிவும் எடுக்காதையுங்கோ. பிறகு முடிவு என்னவாய் இருக்கும் எண்டு தெரியும்தானை.   முக்கியமா என்படத்தை கட்டவுட் செய்து தமிழீழம் எங்கும் கட்டி வைப்பது மட்டுமல்லாமல் கீழே ஒரு வாசகத்தiயும் போட்டு வையுங்கள். “இவனைப்போல யாராவது இயக்கம் கட்ட நினைத்தால் உடனே அடித்துக் கொல்லுங்கள” என்று. “35 வருடங்கள் தயவு செய்து காத்திருக்க வேண்டாம்” என்று.   

டேய் மகிந்தா! நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீ என்னைப் பிடிப்பாய் என்று எனக்குத் தெரியும். புடிச்சால் உடுப்பு உரிவாய் என்றும் எனக்குத் தெரியும். உரிஞ்சா போட்டோ எடுப்பாய் எண்டும் எனக்குத் தெரியும். எடுத்தா யூ ரியூப்பிலை போடுவாய் எண்டும் எனக்குத் தெரியும். ஆனால் புலம் பெயர் மக்களும் சீமானும் விசுக்கோத்தும் மன்னிக்கவும் வைகோவும் நான் ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்த நெடுமாறனும் இது வெறும் கொம்பியூட்டர் விளையாட்டு எண்டு சொல்லி நம்ப மாட்டாங்கள். உனக்கு தகவல் தந்து கொண்டிருக்கும் பத்மநாதனை ஒருநாள் நீ இலங்கைக்கு கொண்டுவருவாய். கருணாவைக் கொண்டுவந்து என்ரை பிணத்தைக் காட்டுவாய். கண்ணாடி மறைவில் நின்று மகிந்தா நீ என்னை அம்மணமாக இருப்பதைப் பார்ப்பாய். ஆனால் பிரபாகரனைப் பிடித்தால் அந்த இடத்திலை நூறு வருசத்துக்கு புல்லு முளைக்காது எண்டு புலம் பெயர் மக்கள் நம்பிக் கொண்டே இருப்பார்கள். நான் வருவன் வருவன் எண்டு எண்ணிக் கொண்டே இருப்பார்கள்.

என் மகன் சாள்சை தலைவராக்க முயற்சிகள் எடுத்த போது உவன் பானு தலையிடப்பாத்தான். போட்டுத் தள்ளினேன். மணலுக்குள் புதைத்து வைத்திருந்த பிணத்தை எடுத்து மகிந்த அரசு கொக்கரிக்கிறது ஏதோ தாங்கள் தான் பானுவை போட்டோம் என்று.

டேய் மகிந்தா! நீ என்னை சுட்டோ அல்லது கோடரியால் கொத்தியோ கொல்வாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் என்றோ ஒருநாள் நீ யமலோகம் வரத்தான் போகிறாய். அங்கே ஒரு இயக்கம் கட்டி. அங்கும் ஒரு பொட்டனையும் கூட்டி. உனக்கு நான் வேட்டு வைக்கேல்லை. ‘வே’யன்னா ‘பி’னா இல்லை.

உவன் மகிந்த பரவாயில்லை எதிரி. ஆனா உங்க வெளிநாடுகளில இருக்கிற நெடியவன் கொடியவன், ரூட் ரவி, ஊத்தை ரவி, தனத்தான், ரெஜி உவங்கள் எல்லாம் துரோகிகள். என்னை வைச்சுப் பிழைக்கிற பிளான் போட்டுட்டான்கள். வெளிநாட்டுக்கு வந்து வேலை வெட்டிக்குப் போகாம சனத்தின்ர காசிலை ஏப்பம் விடுற இந்த கோஸ்டி ஒரு நாளைக்கு மேல வருவினம் தானே. அவைக்கு அப்ப ஊதுறன் சங்கு.

இந்த உரையை எல்லாருக்கும் விளங்கிற மாதிரித்தான் எழுதி இருக்கிறம். இதவும் விளங்காட் எங்கட கவிப் பேராசிரியர் சேரன் இப்ப சும்மா தான் இருக்கிறார். அவரைக் கொண்டு பொழிப்பெழுதச் சொல்லுங்கோ. அது நல்லா வந்த யப்னா கம்பஸ்ஸில உவன் டக்ளஸ் பிடிச்சு ஒரு வேலை வாங்கிக் குடுப்பம். அதுசரிவராட்டி உவன் பிள்ளையானுக்கு கொஞ்ச னெண்டாலும் விசுவாசம் இருக்கும் அவனைப் பிடிச்சு ஈஸ்ற் கம்பஸ்ஸில வேலை எடுத்துக் குடுக்கலாம்.

புலிகளின் தாகம் ஒரு ரம்ளர் நல்ல குடிதண்ணி.
(ஏனென்றால் புதுமாத்தளன் தண்ணி சரியா உப்புக் கசக்குது.)

வே பிரபாகரன்
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
மேல்லோகம்

._._._._._.

 பின் குறிப்பு:

ஒருவரின் மரணத்தில் ஆனந்தம் கொள்வது மிக மிக அபத்தமானது. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் காவு கொண்ட லட்சத்தை தாண்டிய உயிர் பலிக்கு கொடுத்த விளக்கம் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்விற்கான இறுதித் தீர்வுக்கான போராட்டம் என்பதாகும். இன்று மரியாதை இழந்து சுய கௌரவம் போய் மிருகங்களைக் காட்டிலும் கேவலமாக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் தமிழ் பேசும் மக்களது வாழ்வும் அடிப்படைப் பிரச்சனையும் 83ம் ஆண்டு இருந்ததை விட பன்மடங்கு கூடியே இருக்கிறது. தமிழ்பேசும் மக்களின் விடிவுக்காக போராட்டம் பற்றிச் சிந்திக்கும் யாரும் பிரபாகரனை அருவருப்போடு நினைவு கொள்வது மீண்டும் தமிழ்பேசும் மக்கள் ஒரு புதுமாத்தளனை சந்திக்காமல் இருப்பதற்காகவே இந்த ஆக்கம் தரப்பட்டுள்ளது. பிரபாகரனும் அவருடன் கொலை புரிந்த தளபதிகளும் பிரபாகரன் போலவே சொந்தப் போராளிகளை கொன்று குவித்த உமா மகேஸ்வரன் போன்ற தலைவர்களையும்  தவிர்த்து தழிழீழ போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அனைத்து சிங்கள- தமிழ் -முஸ்லிம் மக்களுக்கும் போராளிகளுக்கும்  என் இதய அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.

அன்பும் பாசமும் வளமும் வசதியும் நிறைந்த டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு! : ஈழமாறன்

Moorthy N S Drஅன்பும் பாசமும் வளமும் வசதியும் நிறைந்த டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு!
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற படுமோசமான பாசிச அமைப்பின் போர்வையின் பின் மறைந்திருந்து கொண்டு நீங்கள் செய்த திருகு தாளங்கள் நிறைய என்பதை நான் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை என்று எனக்குத் தெரியும்.

மு.நித்தியானந்தன் உடன் மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பிய சிறைக் கைதிகளுக்கு உதவியதன் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது சிறை நிருவாகத்துக்கு நீங்கள் சக கைதிகளைக் காட்டிக்கொடுத்த உங்கள் நடவடிக்கையிலிருந்தே நீங்கள் புலிகளுடன் மட்டுமே உறவு கொள்ள முடியும் என்பது தெட்டத் தெளிவாக தெரிந்திருந்தது.

ஈழமாறனுக்கு பண்பாக எழுதத் தெரியவில்லை என்று பலரும் குறைபட்டதாக கேள்விப்பட்டதாலேயே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கிளிநொச்சி மக்கள் 20000 பேர் ஒரு நாளில் கொல்லப்பட்ட அவலத்தைப் பார்த்த பின்னும் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாத ஆனந்த சங்கரிஜயா போலவே நானும் வெறும் கடிதம் எழுதுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வருத்தம் தான்.

ஆனால் இது புலம் பெயர் சூழலில் இருக்கும் புலி வால்களுக்கும் அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் பணக்காரர்களாக்கி விட்டு மௌனமாகவே இருந்துவிடும் தமிழ் உணர்வின் நிமித்தம் கேட்ட உடனேயே பணம் கொடுத்து விடும் அப்பாவி மக்களை விழித்தெழ வைப்பதும் உங்களைப் போன்ற புல்லுருவிகள் இனியும் பிரபாகரன் சாகவில்லை.. உயிரோடுதான் இருக்கிறார். மதியோடுதான் இருக்கிறார். சார்ள்ஸ்சோடுதான் இருகக்கிறார் என்று கதை அளந்து கொண்டு காலத்தை போக்குவதும் தமிழ் மக்கள் காலப் போக்கில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மறந்து போனது போலவே இந்த முறையும் உங்கள் சுருட்டல்களையும் சுத்துமாத்துக்களையும்;… மறந்து விடுவார்கள் என்று கணக்குப் போடுவதை உடைப்பதற்காக என்றாலும் இந்தக் கடிதம் உதவலாம் என்றே எழுதுகிறேன்.

மூத்தி ஜயா  நீங்கள் இங்கிருக்கும் விசுவாசிகளை ஓரம் கட்டியதும் வசதி வருகிறபோதெல்லாம் (உங்கள் பணவசதி அல்ல வெண்புறா வசதியைச் சொல்கிறேன்) வன்னிக்குச் சென்று போட்டோ எடுத்ததும் அதைக் கொண்டுவந்து ஊரெல்லாம் காட்டியதும் பெருமைப்பட்டுக் கொண்டதும் மறைமுகமாக நீங்கள் தான் லண்டன் பிரதி நிதி என்று நிறுவிக் கொண்டதும் கூட எல்லாருக்கும் தெரியும்.

இந்த வரிசையில் தான் புலிகளின் புனர்வாழ்வுக்கழகமும் இன்ன பிற அமைப்புக்களும் அம்பலப் பட்டதும் பல மில்லியன் டொலர்கள் முடக்கப் பட்டதும் வேறு வழியில்லாமல் அண்ணைக்கு அனுப்புவதற்கு வெண்பறா கட்டினீர்கள். இன்று வரையில் எவ்வளவு பணம் சேர்த்தீர்கள் என்ன செய்தீர்கள். என்று யாருக்காவது கணக்கு காட்டினீகளா? கடைக்கு கடை உண்டியல் வைத்து சேர்த்த பணம் எல்லாம் மூட்டை கட்டிச் சென்ற நீங்கள் இந்த கடைகளுக்கு எவ்வளவு பணம் சேர்ந்தது என்ற கணக்கு காட்ட வேண்டும் என்ற குறைந்த பட்ச பொறுப்பும் உங்களுக்கு வரவில்லையே ஏன்?

மூத்தி ஜயா. இது ஒன்றும் அக்குபஞ்சர் ஊசி போடும் விவகாரம் அல்ல. போட்ட ஊசிக்கு நீட்டின காசு செரியாப் போச்சு என்று சொல்வதற்கு. வெண்பறா கட்டி நாலு பிள்ளைகளுக்கு அதுவும் உங்கட தேசியத் தலைவர் துரத்திப் பிடித்து போர்முனையில் விட்டு நாசமாக்கிய சிறுவர்களுக்கு காலும் கையும் போட்டுவிட்டு மற்றதெல்லாம் என்ன செய்தீர்கள்?

தேசியத் தலைவருக்கு தெரிந்திருந்தால் புலிக்கு வால் பிடித்தால் நீங்கள் நேர்மையானவர்கள் என்ற மாயையை உருவாக்கி நாளுக்கு 15 மணி நேரங்கள் வேலை செய்து வீட்டுச் சுமை அடைத்து வாழும் வீட்டுக் கடனடைத்து மீதியை தன் தங்கைக்கு பிள்ளைக்கு என்று குருவி போல சேர்த்த பணம் முழுவதையும் அப்பாவி புலம் பெயர்ந்த மக்களை உசுப்பேத்தி வீர வசனம் பேசி வரலாறு கதைத்து உணர்ச்சி வசப் படவைத்து சேர்த்த பணமெல்லாவற்றையும் வறுகி உங்கள் வங்கியில் போட்டு விட்டு பெரும் தொண்டர்கள் போல நீங்கள் இனியும் வலம் வரலாம் என்ற தப்புக் கணக்கு போட வேண்டாம் என்று செல்லமாக எச்சரிக்கவே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.

பிரபாகரன் என்ற ஒரு தனிமனிதனைக் காப்பாற்ற 20000 தமிழ் மக்களின் (வன்னி மக்கள் என்று சொல்லும் போது சிலருக்கு கோபம் கோவணம் வரையில் செல்வதாக அறிந்தேன்) உயிரை காவு கொண்டு கடைசியில் நந்திக் கடலில் நீந்தக் கூட முடியாமல் விளைந்த காரணத்தால் அத்தனை தளபதிகளையும் கொன்று குவிப்பதற்கு முன்னர் தீபம் தொலைகாட்சியிலும் ஜிரிவி தொலைக் காட்சியிலும் நாளுக்கு நாலு தடைவ வந்து வணங்கா மண் கப்பல் கட்டிறம் தமிழர்கள் வீரம் கொட்டிறம். என்று வாய் கிழியக் கத்தியவர் நீங்கள். வணங்கா மண்ணுக்கு கொட்டிக் கொடுத்த பணத்தின் தொகை என்ன என்று நீங்கள் இந்த இரண்டு தொலைக் காட்சிகளில் ஒன்னிறல் வந்து சொல்லியே ஆகவேண்டும். கப்டன் அலி தான் வணங்கா மண். சேர்த்த பணம் எல்லாம் அதிலேயே போய் விட்டது என்று பூ சுத்தும் வேலை இனி வேண்டாம். எனக்கு ஊசிபோடுற விளையாட்டை விட்டுவிட்டு பதில் தாருங்கள்.  அடுத்த முறை எழுத்து இந்த மாதிரி வராது என்பதை மட்டும் துப்பாக்கி இல்லாமல் மிரட்டுகிறேன் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தீபம் போன்ற பொறுப்றற்ற தொலைக்காட்சிகள் அளவுக்கு அதிக விளம்பரம் கொடுத்து உங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள் என்பதால் அதே தொலைகாட்சியில் தேசம்நெற் ஒரு விளம்பரம் செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன். வணங்கா மண்ணுக்குச் சேர்த்த பணம் பொருட்கள் கப்டன் அலியில் சென்ற பொருட்களின் பட்டியல்  போன்ற விபரங்களைக் கோரும் விளம்பரம் ஒன்றை தீபத்தில் போட வேண்டும். மறுக்கும் சந்தர்ப்பத்தில் தீபமும் இதற்கான பொறுப்பை ஏற்றக வேண்டும் என்று பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஜயா மூத்தி அவர்களே எல்லோரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க கௌரவமாக இந்தக் கடித்ததை எழுதியுள்ளேன். இக் கடிதம் வெளியாகும் நாளில் இருந்து 14 தினங்களுக்குள் உரிய பதிலைத் தரவில்லை என்றால்…. (தொடக்கமே மவனே… என்றுதான் ஆரம்பிக்கும்) மிகவும் மோசமான மொழியில் உங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் நீங்கள் வசூலித்த தொகை எவ்வளவு எங்கு போனது என்ற விபரங்கள் தெரியும் வரையில் என் பேனாமுனை யுத்தம் தொடரும் எனபதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாறனின் தாகம் மூத்தியின் விபரம்

இங்கனம்
யாராய் இருந்தாத் தான் என்ன.

தமிழீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! : ஈழமாறன்

Jan Jananayagamதமிமீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! இங்கு காட்டாற்று வெள்ளம் போல் கூடியிருக்கும் புலம் பெயர்ந்த என் அன்பார்ந்த தமிழீழ மாக்களே! கொள்ளையானந்தன் பேச வருகிறான் என்றதும் விசிலடிப்பதற்கு என்றே வெளி மாவட்டங்களில் இருந்து எல்லாம் சிரமத்தையும் பாராமல் பிரித்தானியா பாராளுமுன்றலில் கூடியிருக்கும் மாணவப் பெருந்தகைகளே! தேசியத் தலைவர் வழிகாட்டலில் வன்னியில் ஒரு சந்ததியே அழிந்தபின் ஆமிக்காரன் சரணடைய வைத்துச் சுட்டுக் கொன்றோ அன்றி சபாரத்தினம் பத்மநாபா ராஜினி திரணகம போன்றோரைக் கொன்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொன்றோ மரணித்துப் போன அண்ணையின்ரை இடத்தை நிரப்பி லண்டனில் இருந்தபடியே தமிழீழம் வாங்கித் தர வந்திருக்கும் எங்கள் தலைவி மேதகு ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதிலே நான் பெருமைப் படுகிறேன்.

இங்கு தேசியத் தலைவரைப் போல போஸ் கொடுத்து அமர்ந்திருக்கும் தலைவி எப்படிப் பட்டவர் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டிய அவசியமில்லை. சிங்கள வெறியர்களுக்கு நான் ஒன்றைத் தெட்டத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் தேசியத் தலைவி ஜனாவின் கோபத்துக்கு ஆளாகி விடாதீர்கள். ஜரோப்பிய பாராளுமன்றத்தில் தன்னம் தனியாக நின்று தமிழீழம் அமைக்கப் போகும் எங்கள் மேதகு தலைவி சொன்னால் வவ்வால் வரும். எப்படி வரும்……. (மாணவர்கள் விசிலடிக்கிறார்கள்.)

தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் தொடங்கியபோது யாழ் லோதிக்க மேட்டுக் குடி மக்களுக்கே உரிய பாணியில் எங்கள் தலைவி சிம்பாப்வேக்கும் பின்னர் நைஜீரியாவுக்கும் தனது பெற்றோருடன் சென்றது எதற்காக? 24 மணி நேரமும் தமிழீழம் எப்படி அமைக்கலாம் என்று சிந்திப்பதற்காகவே என்பது இங்கு நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க் கட்சியினர் சொல்வது போல 30 ஆண்டுகள் நடந்த போராட்த்தில் ஒரு சிறு பாதிப்புக் கூட படாமல் எங்கள் தலைவி தப்பியிருந்தது சொகுசாக வாழ்வதற்கல்ல. தமிழ் மக்களை அண்ணை அம்போ என்று கைவிடும் போது ஓடிவந்து காப்பாத்துவதற்காகவே.

துப்பாக்கிச் சூட்டுக்கும் குண்டு மழையிலும் சிறிலங்கா இராணுவத்தின் அட்டூழியத்திலும் தமிழ் மக்கள் 30 ஆண்டுகள் சீரழிந்த போது தலைவி தமிழீழம் கட்டுவதற்கான படிப்புக்கள் அத்தனையையும் படித்துக் கொண்டு இருந்தார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அவரின் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரத்தைப் பாருங்கள். அதிலே எழுத்துக்களை மாத்திப் போட்டு எம் பி ஏ என்றெல்லாம் படித்திருக்கிறார். அதன் அர்த்தம் பரியாதவர்கள் தலைவி ஏதோ தப்பி ஓடிப் போய் வெளிநாடுகளில் வாழ்ததாகவும் அவருக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாதர் போலும் பூச்சாண்டி காட்டுகிறார்கள். அவர்களுக்கு நான் இரண்டு சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த வேட்பாளராவது இந்தத் தேர்தலில் தனது குவாலிவிக்கேசனைக் காட்டியிருக்கிறர்களா. தலைவியைத் தவிர வேறு யாராவது குவாலிவிக்கேசனைக் காட்டியிருந்தல் நான் இந்த மேடையிலேயே தீக்குளிக்கத் தயார்.

அடுத்தது தலைமை என்பது யாழ்ப்பாணத்திலிருந்து வரவேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட விதி ஆகையால் எங்கள் தானைத் தலைவி கரிகாலி சோழத்து வீராங்கனை தமிழீழ தேசியத் தலைவி ஏகத் தலைவி ஜன ஜநநாயகத்துக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். இதுவே வன்னியா இருந்தா கேக்கிற விதமே வேறை. முல்லைத்தீவில பார்திருப்பீங்கள் எங்கட அண்ணைக்கு வன்னி மக்கள் மண்மூட்டையா நின்றவை. எங்கட விரோதிகள் சொல்லினம் நாங்கள் பலவந்தமா வைச்சிருந்தது என்று. அதில ஒரு துளியும் உண்மையில்லை. வன்னி மாக்கள் அடங்காப்பற்றுடையவர்கள். அவர்களை ஒரு கட்டு வைக்கோலோடு மேய்க்கலாம். தெரியும் தானே கடைசியா அந்தச் சனத்துக்கு தவிடு கரைச்சுக் குடுத்த நாங்கள். இது லண்டனா இருக்கிறபடியா உங்களை எல்லாம் கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து எங்கள் தலைவிக்கு வாக்களியுங்கள்.

ஜரோப்பிய பாராளுமன்றத்தில் ஒரு விதி இருக்கிறது. இது நிறையப் பேருக்குத் தெரியாது. தனித்த வேட்பாளர் அதுவும் லண்டனில் நின்று ஜெயிக்கும் ஒரு வேட்பாளர் எழுந்து எங்களுக்கு தமிழ் ஈழம் வேணும் என்று பேசிவிட்டால் அதுவும் தீபம் ஜிரிவி போன்ற தெல்லைக் காட்சிகளில் அம்ணி பேசும் தங்கிலிஸ் தமிழில் பேசிவிட்டால் உடனே ஒரு பையினுள் போட்டு கையோடு தமிழீழத்தைக் கொடுத்து விட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. சிம்பாப்வே நைஜீரியா பிறகு லண்டன் அதுவும் டபுள் எம்மே படிச்ச ஒரு தலைவி கேட்கும் போது ஜரோப்பியப் பாராளுமன்றமே அதிரப் போகின்றது என்பதை நான் உங்கள் முன் செல்லிக் கொள்வதில் அடங்காத் தமிழன் என்ற முறையில் மார்தட்ச் சொல்லுவேன்.

தயவு செய்து ரத்தத்தில் பொட்டு வைக்க வருபவர்கள் வரிசையாக வந்து தலைவிக்கும் எனக்கும் வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மங்கையக்காவுக்குப் பிறகு ரத்தப் பொட்டு வைக்கிற வீர விளையாட்டுகள் அமந்து போச்சுது. இப்ப எங்கட தானைத் தலைவி வெளிக்கிட்டு இருக்கிறா அவவுக்கு உங்கட வீர விளையாட்டை நீங்கள் காட்டலாம். ஒரு சிறிய வேண்டுகோள். தலைவிக்கு பொட்டுவைப்பவர்கள் குறைந்த பட்சம் சவுத்பாங்க் பல்கலைக் கழகத்திலாவது குவாலிவிக்கேசன் எடுத்திருக்க வேண்டும். அம்மணி இம்பீரியல் எம்மே.

வணங்கா மண் புகழ் டாக்குத்தர் தமிழ் போறம் தலைவர் ஒரு பேப்பர் புகழ் அண்ணன் கோபி என்று எனக்குப் பின் நிறையப் பேர் உங்களுக்கு தமிழீழம் எப்படி எடுப்பது அதற்ககு நீங்கள் எப்படிக் காசு கொடுப்பது. பிறகு நாம் அதை எப்படிப் பிரிப்பது என்து பற்றியெல்லாம் விபரமாகப் பேச இருப்பதால் என் பேச்சை நான் சுருக்கிக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்.

அதில குறிப்பா வணங்கா மண் டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வன்னிப் பேரவலத்தை வைச்சு சேர்த்த காசு வாய்கால் வழியோடி மெற்றோவில விளம்பரம் நோட்டிசுகள் போஸ்ரருகள் என்று நிறையச் செலவாச்சு. இதெல்லாம் எதுக்கு வன்னி மக்களுக்காகத் தானே செய்கிறோம். அவர்களுக்கு தமிழீழம் வாங்கிக் கொடுக்காமல் எங்கள் தலைவி ஜனா ஓயமாட்டார் என்பதை உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழீழம் தொடர்பாக பேசும் போது அப்பனை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று பேட்டி கொடுத்து பின்னர் தமிழீழ உணர்வை ஊட்டி ஊட்டி வளர்த்தார் என் அப்பா என்று கதையளந்த மாபெரும் தத்துவப் பாடகி தற்போது பிச் கிச் என்று எதுகைமோனையுடன் தவைலிக்காக பாடி தனது தலைவிக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கும் மாயா செல்லத்துக்கு இந்தக் கூட்டத்திலே என் இதயத்தைத் தொட்டு நன்றி கூறிக் கொள்கிறேன்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே! ஜனனிக்கு போடுங்கோ. புலம் பெயர் சூழலில் இருக்கும் லண்டன் வாழ் தமிழ் மக்களே தயவு செய்து எங்கள் தலைவி ஜன ஜநநாயயகத்திற்கு போடுங்கோ. வணங்கா மண்ணிலை சுருட்டினது போதாது. கண்ணிர்த் துளிகளில் சேர்ந்தது போதாது. இன்னும் வேணும். அதுக்ககாகவே தேசியத் தலைவர் செத்த செய்தியைக் கூட இன்னும் மறைத்துக் கொண்டு உங்களிடம் வந்திருக்கிறோம். தமிழீழம் வாங்கித் தருவா எங்கடை அக்கா. தயவு செய்து குவாலிவிக்டீகசன் உள்ளவை 10 மணிக்கு முதலும் மற்றவை எல்லாம் 10 மணிக்கு பிறகும் அக்காவுக்கு நேரே பார்த்துப் போடுங்கோ. தமிழீழம் மலரும், ஒரு கேள்வி ஜரோப்பியப் பாராளுமன்றத்தில் கேட்டா போதும். மறு நாளே தமிழீழம் மலரும். மறக்காம நாளைக்கு அக்காவின்யைப் பாத்துப் போடுங்கோ.

மம்மி ஜெய தமிழீழம் வாங்கித் தாறம் என்று வெளிக்கிட இந்தியாக் காரங்கள் எங்கள் முதுகில் குத்திப் போட்டாங்கள். மம்மியை மண் கவ்வ வைச்சிட்டான்கள். மம்மி வருவா ஆசை முத்தம் தருவா என்று பார்திருந்த அண்ணனுக்கு விதி சதி செய்துவிட்டது. மம்மி ஜெயா போனால் என்ன அக்கா ஜனா இருக்கின்றா என்பதை மறந்துவிட வேண்டாம்.

இந்த அரசுகளை நம்ப முடியாது இந்த மாக்களையும் நம்ப முடியாது. போன வருசம் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு லண்டனிலை ஒன்பது பேரைத் தெரிவு செய்தவை. ஆனா இந்த வருசம் 8 ஆக குறைச்சுப் போட்டான்கள். 9வது ஆக ஒரு தமிழன் ஏகபிரதிநிதியாக வந்துவிடக் கூடாது என்று திட்டம் போட்டுச் செய்த சதி இது. இதுக்கு எதிராக நாங்கள் கிளர்ந்து எழ வேண்டும். ஒன்றை மறக்கக் கூடாது வோட்டு போடுற ஆக்களில் 8 வீதம் பேராவது வாக்களித்தால் தான் 8வது இடத்திற்கு வந்து கடைசிக் கதிரையையாவது பிடிக்கலாம். ஆனபடியா அக்காவை வடிவாப் பாத்து அக்காவுக்கு நேர உங்கள் புள்ளடியைப் போடுங்கள். குறைஞ்சது போடுற வோட்டில 2 வீதம் அதாவது 40,000 க்கும் கூடுதலாக அக்காவுக்கு புள்ளடி விழுந்தால் தான் கட்டுக்காசு 5000 பவுண் என்றாலும் கிடைக்கும். வன்னி மக்களுக்காகச் சேர்த்த காசு தயவு செய்து அதை நாசமாகப் போகவிடாதீர்கள். இன்று (யூன் 4) போடுங்கள் வோட்டு அக்காவைப் பாத்து. அக்காவா கொக்கா!!!

நன்றி வணக்கம்.

வணங்கா மண் பொறுப்பாளர் டாக்குத்தர் மூத்தியுடன் ‘பின்நவீனத்துவ’ நேர்காணல். : ஈழமாறன்

Vanni_Missionவணக்கம் தொப்புள் கொடி மற்றும் அரநாக்கொடி உறவுகளே. தொலைவார் தொலைக்காட்சியில் வாரம் தோறும் புலம் பெயர் சூழலில் இருக்கும் கோயில் சங்கம் என்று ஒரு அமைப்புக் கட்டி சுத்தும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களைச் சந்தித்து பேட்டி காணும் நாம் இன்று மிக முக்கியமான ஒரு நபரைப் பேட்டிகாண உள்ளோம். (மூத்தியை இன்னும் திரையில் காட்டவில்லை.) ஆம் அவர் வேறு யாருமல்ல வணங்கா மண் என்ற படத்தின் இயக்குனர் டாக்குத்தர் மூத்தி அவர்களே. இன்று தனது ஆழமான அரசியல் கருத்தை பதுக்கி கொள்ள மன்னிக்கவும் பகிர்ந்து கொள்ள கலையகத்திற்கு வந்திருக்கிறார். (டாக்குத்தர் மூத்தி இப்போது சிரித்துக் கொண்டு திரையில் தோன்றுகிறார்.)

இழிச்சவாயன்: வணக்கம் டாக்குத்தர். நீங்கள் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் போது சிங்கள நிருவாகத்திற்கு அடிக்கடி காட்டிக் கொடுத்து பல இளைஞர்களுக்கு அடிவிழுவதற்கு காரணமாக இருந்திருக்கிறீர்கள் என்று நாம் அறிகிறோம். அதுபற்றிக் கூறமுடியுமா?

டாக்குத்தர்: என்னுடைய தலைவன் கரிகாலன் சோழன் தம்பி என்று செல்லமாக அழைக்கப்படும் தேசியத் தலைவன் பிரபாகரனின் வழிநடத்தலில் அரசியலுக்கு வந்த நான் அப்படிச் செய்ததில் என்ன தவறிருக்கிறது. வரலாறு தெரியாதவர்கள் செய்யும் பித்தலாட்டம் இது. இதைப் போய்க் குற்றம் என்று சொல்கிறார்கள். இளிச்சவாயன் தம்பி, இதிலை உமக்கு நான் ஒண்டு சொல்ல வேணும். வெலிக்கடையிலை இருக்கும் போது இந்தப் போராளிகள் தப்பிறதுக்குப் பிளான் பண்ணுவாங்கள். அவங்கள் தப்பினா இருக்கிற எங்களுக்குத்தான் அடி விழும். அதாலை தழிழீழத் தன்மான உணர்வோடை காட்டிக்குடுக்கிறதை விட வேறை வழி தெரியேல்லை எனக்கு. குட்டிமணி, தங்கத்துரை ஆக்களுக்கு என்ன தலைவர் செய்தாரோ அதையே தொண்டனும் செய்தேன்.

இழிச்சவாயன்: மிக அருமையான பதில். உங்கள் தலைவர் வன்னியில் இன்று மக்களை தடுத்து வைத்து என்ன செய்கிறாரோ, மக்கள் தப்பிப் போனா தனக்கு என்ன நடக்கும் என்று சோழன் வயிறு கலங்கி இப்படிச் செய்கிறாரோ, அதையே முப்பது வருடங்களுக்கு முன் அவரது தொண்டனாக இருந்து செய்திருக்கிறீர்களே உங்கள் தமிழீழ உணர்வை பார்க்கும் போது எனக்கு புல்லரிக்கிறது.

டாக்குத்தர்: சரியாகச் சொன்னீர்கள் தம்பி இழிச்சவாயன்.

இழிச்சவாயன்: நேயர்களே இன்று நாம் வணங்கா மண் படத்தின் இயக்குனர் டாக்குத்தர் மூத்தியை கலையக்தில் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் கீழே கிடக்கும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு டாக்குத்தரிடம் உங்களின் கருத்துக்களையும் பறிகொடுக்கலாம். மன்னிக்வும் டாக்குத்தரை கண்ட நேரம் முதல் எல்லாமே சுத்துமாத்து சொற்களாகவே வருகிறது. பறிகொடுப்பதில்லை. பகிர்ந்து கொள்ளுங்கள்.

இழிச்சவாயன்: வன்னியில் நடக்கும் துயரங்களுக்கு பதில் சொல்வது போல நீங்கள் எடுத்திருக்கும் படம் வணங்கா மண். அதற்கு புலம் பெயர் மக்கள் அள்ளிக் கொடுத்திருக்கும் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கும் என்று நம்புகிறேன். அதைப் பற்றிச் கொஞ்சம் சுத்த முடியுமா. மன்னிக்கவும் சொல்ல முடியுமா?

டாக்குத்தர்: அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கிறியள். நாசாமாய்ப் போன சனம் ஆஸ்டாவிலையும் ரெஸ்கோவிலையும் போய் சாமானை வாங்கிக் கொண்டு வந்து குடுத்திருக்குதள்.

இழிச்சவாயன்: அதெல்லாம் பெரிய கடையள். நல்ல பொருட்களாய்த்தானை இருக்கும்.

டாக்குத்தர்: சாமான் எல்லாம் நல்லதுதான். ஆனா வேறை இடங்களிலை கொண்டுபோய் எப்பிடி விக்கறிது? அதெல்லாம் விக்கிறதுக்கு நோர்வேய் வரைக்கும் கொண்டு போக வேண்டியதாய் போச்சு.

இழிச்சவாயன்: ஏன் விக்கவேணும?; உங்கட படக் கதையின்படி அது வன்னிக்குப் போய், வன்னியிலை உங்கட தலைவர் கைவிட்டு ஒடிப் போன மக்களுக்கு குடுக்கிறது தானை முடிவு. பிறகேன் டாக்குத்தர் விக்கவேணும்?

டாக்குத்தர்: வன்னி மக்களுக்கு சாமான் அனுப்பிற மாதிரித்தான் வெளிப்படையா பாத்தா தெரியும். ஆனா நான் வைச்சிருக்கிற ருவிஸ்ற் என்ன தெரியுமோ? வாற சாமான் எல்லாத்தையும் வித்து வீட்டு மோட்கேச்சை கட்டி முடிக்கிறதுதான். இந்த நாசமாப் போன சனம் என்னெண்டா ரெஸ்கோ ஆஸ்டா என்டு சீலடிச்ச சாமானை வாங்கித் தந்திருக்குதுகள். ஒரு இடத்திலையும் விக்க முடியாம கராச்சில போட்டு வைத்திருக்கிறேன். சொஞ்சம் டென்மர்க் நாட்டுக்கும் கொஞ்சம் நோர்வேக்கும் போயிருக்கு. மிச்சம் எல்லாம் மிச்சம் என்ற இடத்திலை இருக்கிற ஒரு கடையிலை விற்பனைக்குப் போட்டிருக்கு. வணங்கா மண்ணா கொக்கா?

இழிச்சவாயன்: நல்லது டாக்குத்தர். நீங்கள் மணிரத்தினத்தையும் விட நுணுக்கமாக காய் நகர்த்தியும் மக்கள் உங்களைவிட புத்திசாலிகளாக இருந்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. நேயர்களே வன்னியில் எங்கள் மக்கள் தாங்கொணாத் துயரில் வாழும் இந்த வேளையில் டாக்குத்தர் மூத்தி வணங்கா மண்ணுக்காக செய்திருக்கும் தியாகங்கள் எண்ணிலடங்காது. இன்றைய இந்த அவலங்கள் தொடர்பாகவும் பேச இருக்கிறோம். வன்னி மக்கள் தொடர்பாக ஒரு பாடல் காட்சியைத் தொடர்ந்து நேர்காணல் தொடரும்

பாடல்: அடிடாங்க நாக்க மூக்க நாக்க மூக்க……..மூத்தி வந்தான். பேரை வைச்சான். பேரை வைச்சு காசு கேட்டான். அடிடாங்க நாக்க மூக்க. அட அடிடாங்க நாக்க மூக்க…. வெள்ளைப்புறா பறக்க விட்டான். கொள்ளை பணம் மடக்கி விட்டான். வன்னியிலை அண்ணைக் கெண்டு அடிடாங்க நாக்க.. மூக்க நாக்க மூக்க……என்ரை புள்ளை மெடிசின் செய்ய உன்ரை புள்ளை பாளிமெண்டில் அடிடாங்க நாக்க மூக்க. அட அடிடாங்க நாக்க மூக்க….

இழிச்சவாயன்: ஒரு அருமையான பாடலைத் தொடர்ந்து டாக்குத்தர் மூத்தி இந்த வணங்கா மண் கதை எவ்வளவு காலமாக உங்கள் மனதில் இருந்தது என்று சொல்ல முடியுமா?

டாக்குத்தர்: நான் வீடு வாங்கிய காலத்தில் இருந்து இந்த யோசனை இருந்தது. எதுக்கும் ஒரு காலம் வரவேணும் பாருங்கோ. எத்தினை படம் செய்திருப்பன். ஓரு படத்திற்கும் சனம் இவ்வளவு ஆதரவு தரேல்லை. வணங்கா மண் என்னைப் பொறுத்தவரையில் ஜரோப்பா கனடா என்று எல்லா நாடுகளிலும் நல்ல கிட். அதுதான் நான் இப்ப சாபம் போன்ற ரீவியளிலை வாறதைப் பாக்க மாட்டியள்.

இளிச்சவாயன்: நல்லது. இப்போது சாம்பொண்டில் தொலைக்காட்சியில் இருந்து முகட்டுக் கவிஞன் உத்தரக் கவிஞன் இணைப்பிலிருக்கிறார். வணக்கம். கலோ வணக்கம். குறுக்கால போக வணக்கம்.
உத்தரக்கவிஞன்: டாக்குத்தரிட்டை ஒரு கேள்வி.

இளிச்சவாயன்: கேளுங்கோ. நீங்கள் தானே அந்த முகட்டைப் பாத்துக் கொண்டு வன்னி மக்கள் தொடர்பா கவிதை வாசிக்ற கவிஞன்.

உத்தரக் கவிஞன் : ஆமாம் அது நான் தான். இன்றும் டாக்குத்தரைப் பற்றி ஒரு கவிதை வாசிக்க இருக்கிறேன்.

இழிச்சவாயன்: அருமை. டாக்குத்தரிடம் நேரடியாகவே கேள்வியைக் கேளுங்கள்.

உத்தரக் கவிஞன்: உங்களுக்கு ஞபகம் இருக்கோ தெரியாது. நீங்கள் வெலிக்கடைச் சிறையிலை இருக்கும்போது, வெறும் ஆயுள்வேதி டாக்குத்தர் தான். பிறகு வெளியிலை வந்து ஒரு வருடம் இந்தியாவில நிண்டியள். பிறகு ஒரே ஓட்டமாய் லண்டனுக்கு வந்திட்டியள். லண்டனுக்கு வந்த கையோட மூத்தி பிஎச்டி எண்டு போடுறியள். இவ்வளவு கெதியா கலாநிதிப் பட்டம் குடுக்கிற பல்கலைக்கழகம் எங்கை ஜயா இருக்கு. எனக்கும் டொக்டர் எண்டு பொடக் கனநாளா ஆசை. இப்ப டொக்டர். புறபெசர். எண்டு சொன்னாத் தான் கொஞ்சம் காசு சுருட்ட வசதியா இருக்கும்.  சிலவேளை சுருட்டுவதில் தலைசிறந்தவர் என்பதற்காக உங்களுககு கௌரவப் பட்டம் ஏதேனும் கிடைச்சதோ அதை ஒருக்கா உங்கட பாதுகாப்பா இருக்கிற புள்ளையளாணை உண்மையைச் சொல்லங்கோ.

டாக்குத்தர்: வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப் படுகிறார்கள். எமது போராளிகள் வெறும் அலவாங்கினாலும் கருங்காலிக் கொட்டனுகளாலுமே மக்களை போட்டுத் தாக்குவார்கள். அரசாங்கமோ ஆட்லறியால் அடிப்பது கண்டிக்கப்படவேண்டும். வணங்கா மண் அதனையே இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டுகிறது.

இளிச்சவாயன்: கவிஞரே இணைப்பில் இருக்கிறீர்களா?

உத்தரக் கவிஞன்: நான் என்ன கேக்கிறன. டாக்குத்தர் என்ன சொல்லிறார். டொக்டாமாரின்ரை தொல்லை பெரும் தொல்லையா இருக்கு. அண்ணை இழிச்சவாயன் அண்ணை… கவிதையை வாசிக்கட்டோ:

இளிச்சவாயன்: வாசியுங்கோ

உத்தரக்கவிஞன்:
வெலிக்கடைச் சிறையில்
அடிக்கடி நீங்கள்
கொடுத்த தகவலில்
நூறு இளைஞர்கள்
தாறுமாறாகத் தாக்கப் பட்டனர்.
உங்கள் தலைவன் போலவே
கூட்டுச் சேர்வதும்
காட்டிக்கொடுப்பதும்
தமிழீழ தலைநகர் மைந்தா
உன்னால் சிறையில்
பலர் சிந்தினர் ரத்தம்
உன்தலையால் வன்னியில்
வாழ்விழந்தனர் பல லட்சம்

தலைவர் சிரிக்க
தலைவற்றை பிள்ளைகள்
நீச்சல் குளத்திலே குளிக்க
வன்னிப் பிள்ளையள்
பள்ளம் மேடெல்லாம்
பிணமாக் கிடக்க
நாலைஞ்சு போட்டோ
குளோசப் வேறை.

எடுத்த கையோடை லண்டன் பறந்து வந்து
அக்குபஞ்சர் ஊசியும் போட்டாய், குள்ளச் சோழனே
வணங்கா மண் காசெல்லாம் சுருட்டியும் போட்டாய்
புலம்பெயர் மக்களுக்கு
புதுக்கதையும் சொல்கிறாய்
டாக்குத்தா….. இது என்ன நாட்டுக் கூத்தா

இளிச்சவாயன்: நல்லது உத்தரக் கவிஞன். நீங்கள் முகட்டைப் பாக்கத் தொடங்கிட்டியள் போல கிடக்கு. இனி நிப்பாட்டமாட்டியள். உங்கள் கவிதையை சாம்பொண்டில் தொல்லைக் காட்சியில் தொடருங்கள்.

இளிச்சவாயன்: நல்லது டாக்குத்தர். உங்களுக்குத் தெரியும் ஜமுனா ராஜேந்திரன்.

டாக்குத்தர்: சினிமா விமர்சகர்…

இளிச்சவாயன்: ஆமாம். அவரே தான். அவர் உங்களுடைய வணங்கா மண் படம் பற்றிய விமர்சனத்தில் சொல்கிறார் டாக்குத்தர் மூத்தி வணங்கா மண் கப்பலை விடுறமாதிரி பாவனை காட்டி காசு பொருள் எல்லாம் சேத்தபிறகு கப்பலையும் காட்டாமல் காசு சுருட்டின கீரோவையும் சாம்பொண்டில் தொல்லைக் காட்சியில் தலை காட்டாமல் காசு கொடுத்தவர்களை அம்போ என்று விடும் முடிவு பின்நவீனத்துவத்தை திருப்பிப்போட்டு எடுத்தபடம் என்றும் கார்ல் மாக்சினுடைய காலுக்கும் மாவோவின் மண்டைக்கும் உள்ள அடிப்படை முரண்பாடுகளை மேலோட்டமாக எடுத்துச் சொல்லும் படம் என்று கூறியிருக்கிறார். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

டாக்குத்தர்: இதற்கு பதில் சொல்ல முதல், நான்  முதலில் இயக்கிய வெண்புறா படம் பற்றி சிறிது சிலாகிக்க வேணும். வெண்பறா படம் தொடங்கிய போது சில நண்பர்கள் சொன்னார்கள் அந்தப் படத்தின் கதையும் களமும் வேறாக இருப்பதால் அவ்வளவாகச் சம்பாதிக்க முடியாது என்று. நான் அவர்களின் பேச்சைக் கேட்காது படத்தை எடுத்தேன். கொமர்சியல் சக்சர்ஸ் என்று சொல்ல முடியாது. ஆனால் என் திட்டத்தின் படி வீட்டை அகட்டிக் கட்ட முடிந்தது. இந்த அனுபவம் ஒரு சுத்துமாத்து படைப்பாளி என்ற முறையில் எனக்கு நல்ல பாடத்தைக் கொடுத்தது. இனி எடுக்கும் படத்தில் இந்தத் தவறை விடக்கூடாது என்று காத்திருந்த போதுதான் வன்னி மக்களின் அவலம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. உடனே நல்ல தலைப்பொன்றுக்காக ஒரு நாள் முளுக்க நித்திரை இல்லாம இருந்து யோசிச்சன். அப்போது கிடைத்த பெயர்தான் வணங்கா மண். ஜமுனா சொன்னமாதிரி பின்நவீனத்துவத்தை பின்னிப் போட்டு கார்ல்மாக்சை கரைச்சு  தெளிச்சு வணங்கா மண் என்று எடுத்தேன். நல்ல கலக்சன். அதிலை ஒரு பகிடி என்ன தெரியுமோ? கப்பல் இப்பவும் வன்னிக்கு போய்கொண்டிருக்கெண்டு சொல்லிற சனமும் இருக்கு. தலைவர் உள்ளுக்க விட்டு அடிப்பார் எண்டு சொன்னமாதிரி.

இளிச்சவாயன்: நான் நினைக்கிறேன். ஜேர்மனியில் இருந்து ஒரு நேயர் அழைப்பில் இருக்கிறார். வணக்கம். கலோ வணக்கம்

அழைப்பு: வணக்கம். டாக்குத்தரோடை கதைக்கலாமோ?

இளிச்சவாயன்: தாராளமா? உங்கள் கேள்விகளை தயவு செய்து சுருக்கமாக கேளுங்கள்.

அழைப்பு: டேய்…… மகனே….. ஆண்டி….. றிங்ஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙங

இளிச்சவாயன்: அவரது அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். தயவுசெய்து அழைப்பவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். உங்கள் ஆத்திரம் புரிகிறது. அதற்காக அசிங்கமான வார்த்தைகளில் தயவு செய்து திட்ட வேண்டாம். வேண்டுமானால் மூத்தியின் வீட்டு முகவரியைக் கொடுக்கிறோம். அங்கு போய் படத்தின் முடிவில் ஏண்டா நாயே கப்பல் வன்னிக்குப் போகவில்லை என்று புலிப் பாணியில் கேட்டாலும் சரி. பின்நவீனத்துவ முறையிலை கேட்டாலும் சரி. அது உங்களுடைய பொறுப்பு. பணம் கொடுத்தவர்கள் அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது. என்று கேட்கத் தவறுவதால் தான் தவறு செய்பவர்கள் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே செல்கிறார்கள். தயவு செய்து பாராளுமன்றத்திற்க்கு முன் செய்யும் ஆர்ப்பாட்டத்தைப் போல வணங்கா மண் இயக்குனரின் வீட்டுக்கு முன்னும் செய்யத் தயங்க வேண்டாம்.

இளிச்சவாயன்: இறுதியாக ஒரு கேள்வி. இந்த இங்கிலண்ட் பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்யிறவை பிள்ளையளைப் பள்ளிக்கூடத்துக்கு போகவேண்டாம். படிப்பு முக்கியம் இல்லை. எல்லாரும் வந்து போராடுங்கோ எண்டு சொல்லுகினம். நீங்களும் அதுக்கு பூரண உடன்பாடு எண்டு செல்லிறியள். அப்ப ஏன் உங்கட பிள்ளையளை போராட்டத்திற்கு அனுப்பேல்லை.

டாக்குத்தர்: தலைவரை பின்பற்றிறதிலை என்னை விட்டா வேறை ஆள் கிடையாது. தலவைர் என்ன செய்தவர். தன்ரை பிள்ளையளை வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டு, வன்னிப்பிளளையளை கிடங்கு வெட்டி கழுத்தளவு வெள்ளத்திலை காலுக்கு செருப்புக் கூட இல்லாம அடிபட்டுச் சாக விட்டமாதிரி லண்டனிலையும் இந்த நாசமாப் போவாற்றை பிள்ளையளின்ரை படிப்பைக் கெடுத்து தெருவிலை விட்டிட்டு நான் என்ரை பிள்ளையளை ஒழுங்கா பள்ளிக்கூடம் அனுப்பிட்டன்.
 
இளிச்சவாயன்: தமிழ் மக்களின போராட்டத்தை விளையாட்டு மைதானமாக்கி விதை நிலமாக்கி வியாபாரமாக்கி லாபம் ஈட்டி மக்களை மாக்களாக்கிய வரலாறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வணங்கா மண்ணுக்குப் பிறகு அடங்கா பற்றுத் தொடங்கியிருப்பதாக கேள்ளிப் படுகிறோம். புடுங்காத் தமிழன் என்று இன்னொரு நிகழ்ச்சியில் சந்திக்கும் வரை அன்பு வணக்கங்கள்.

சொறிப் புள்ளைக்கொரு பொம்பிளை தேவையோ? : ஈழமாறன்

Mahinda Rajapaksaதமிழீழப் போராட்டம் முல்லைத்தீவில் வந்து நிற்க உலக நாடுகளின் நெடுஞ்சாலைகளை மறித்து, தேம்ஸ் நதியில் குதித்து,  சுவிஸ் ரயிலை மறித்து, பொலிஸ் குண்டித்தோல் உரிக்கும் நிலையில் வந்திருக்கும் இந்த வேளையில், இன்று வன்னி மக்கள் அனுபவிக்கும் அனர்த்தங்கள் அனைத்திற்கும் புலிகளைச் சாட்டி விட்டு வெறுமனே வியாக்கியானம் பேசுவதில் பலன் இருக்குமா என்பது இன்றைய கட்டாய கவனிப்புக்கு உரியதாகும்.

ஏப்ரல் 20, 21 நாட்களில் மட்டும் அண்ணளவாக அறுபதினாயிரம் வன்னிச் சனங்கள் தப்பி வெளியே வந்துள்ளார்கள். இந்தச் சனங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகவே நிற்கிறது. இன்றைக்கு ரோட்டில் இறங்கி வன்னி பூர்வீக மண் என்று முழங்கும் இந்த இளசுகள் இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த மக்களை மறந்துவிட்டு தங்கள் தங்கள் பாடுகளைப் பார்க்க போயிடுவினம். இருந்தாலும் இவர்கள் அந்த மக்களுக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். அதை புலிப் பினாமி அமைப்புகள் தங்கள் நோக்கத்திற்காக ஹைஜாக் பண்ணி புலிக்கொடிக்கு புது விளக்கமும் குடுத்து வன்னிச் சனம் தங்கட இடத்திலைதான் இருக்க வேணும் என்று அண்ணையை காப்பாத்தும் நாடகமும் போடுகிற சுத்துமாத்தை வெட்டியோட்டத்தை புரிந்து கொள்ள இளசுகளுக்கு அனுபவமும் இல்லை. யாழ்ப்பாணத்திலை வளரவும் இல்லை. அது ஒரு புறம் இருக்க இன்றுவரை மௌனமாக இருக்கும் புலியை மட்டும் எதிர்க்கும் கூட்டம் அரசாங்கத்தோடு நிற்கும் கூட்டம் கால்களையும் கைகளையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு நிற்கும் அந்த வன்னிச் சனங்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள். சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாக இல்லாமல் அந்த மக்கள் நியாயமான உரிமைகளோடு வாழ என்ன வழி?

மகிந்தவுக்கு ஜனநாயக போறம் காறரின்ரை பாசையில் சொல்வதானால் அண்கொண்டிசினல் சப்போட் குடுக்கும் முத்துக்கிருஸ்ணன் சர்வானந்தவைக் கூப்பிட்டு மகிந்தவுக்கு நாதஸ்வரக் கச்சேரி வைக்கும் இந்தப் புலத்து மக்கள் அமைப்புக்கள் புலியை அழிப்பதற்க்கு மகிந்த சொல்லும் விளக்கத்தை ஆதரிக்கும் அதேவேளை தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு எண்டதையும் ஒருக்கா சொல்லுங்கோ எண்டு கேட்கக்கூட மனமில்லாதது எதற்காக. ஒரு வேளை 95 வீதத்திற்கும் மேலானவர்கள் (இந்த அமைப்புக்களில் இருப்பவர்கள்) வன்னி அல்லாதோர் என்றபடியினால் வன்னி மக்களை அழிக்க ஏதேனும் அவையின்ர மொழியிலேயே ஹிடின் அஜெண்டா ஏதேனும் வைத்திருக்கினமோ?

1958ல் நூற்றுக்கணக்கான தமிழர்களின் உயிரைக் காவு கொண்டு தொடங்கிய சிங்கள இனவெறியை இரும்புத் தமிழன் மரத்தமிழன் என்று எல்லாம் ஜடத்தைப் பற்றியே பேசி, அரிவு வெட்டி, ஜயநாருக்கு படைத்து விட்டு சிவனே என்று கிடந்த சனத்தையெல்லாம் சீறி எழ வைத்து, தரப்படுத்தல் முறை ஏதோ கறிப்பட்ட முறிப்பு கந்தசாமியின்ரை மகனுக்கு மெடிசின் கிடைப்பதை தடை செய்யும் சட்டம் போல, பூச்சாண்டி காட்டி தொடங்கப்பட்ட போரில் மீண்டும் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் வன்னி மக்கள். தமிழீழப் போராட்டத்திற்கான நியாயப்பாடுக்ள அத்தனையும் தரப்படுத்தலில் இருந்து தொடங்கவில்லை என்றாலும் மேற் சொன்னதே உண்மை.  நான் பேசுவது பச்ச பிரதேசவாதமாக இருந்தால்…… அதைப் பேசியதற்காக நான் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை என்பதையும் இங்கு கூறிக் கொள்ள வேண்டும்.

என்ன தலைப்புக்கும் இவன் பேசுபொருளுக்கும் சம்பந்தம் இல்லை என்று எண்ண வேண்டாம். விடயத்திற்கு வருகிறேன். புலிகளிடம் இருந்து ஏகப் பிரதிநிதித்துவத்தை புடுங்கி எடுத்து முதலமைச்சர் நாற்காலியில் இருந்து சொகுசனுபவிக்கும் கனவில் இருக்கும் சக அரசியல் அமைப்புக்கள், தலைவர்களுக்கும் இந்தத் தலைப்புக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

கதையின் சுருக்கம் இதுதான். ஒரு நரி ஆற்றின் மறு பக்கத்தில் செத்துக்கிடக்கும் ஒரு மானைச் சாப்பிடுவதற்காக காத்திருக்கிறது. நரிக்கோ நீந்தத் தெரியாது. அங்கும் இங்கும் நடந்துகொண்டிருக்கும் நரியைப் பார்த்து ஆற்றில் இருந்த முதலை கேட்டது. என்ன பிரச்சனை என்று. நரி சொல்லிற்று “அந்தக் கரையில் உனக்கு ஒரு பொம்பிளை பாத்திருக்கிறன். அதுதான் யோசிக்கிறன்” என்று.

முதலைக்கு உச்சி வரைக்கும் மகிழ்ச்சி. “அதற்காக ஏன் யோசிக்கிறாய்” என்றது முதலை. “இல்லை நீந்த……..” என்று விசயத்தை சொல்லி முடிக்க முதலே ‘முதுகில் ஏறு நான் உன்னை மறுகரைக்கு ஏற்றிச் செல்கிறேனே’ என்றது முதலை.

முதலையின் முதுகில் சவாரி செய்த நரி மான் இறைச்சியை சாப்பிட்ட பின் திரும்பி வந்தது. இன்னும் பாக்கி இறைச்சி இருப்பதால் வருகிற வழியில் “எல்லாம் சரி பெட்டையின்ரை தகப்பன் வெளியிலையாம். அவர் வந்தவுடனை பேசி முடிச்சிடலாம் என்று சொன்னது நரி. மறுநாள் மீண்டும் சவாரி. முதலைக்கும் ஒரே கிழுகிழுப்பு. (கொழும்புக் குழுவிலை மனிசிமாரைப் பற்றிக் கதைச்சவருக்கு மாதிரி) நாள் நெருங்க நெருங்க சும்மாவா பின்னே…

மிகுதி இறைச்சியையும் தின்று விட்டு திரும்பிய நரி கரை சேரும் வரைக்கும் கதை கொடுத்து விட்டு கரையிலை ஏறியவுடன் முதலையைப் பார்த்து “சொறிப் புள்ளைக்கு ஒரு பொம்பிளை கேட்குதோ” என்று விட்டு போய் விட்டதாம். சிங்களப் படைகளின் மூர்க்கத்தனத்திற்கு பலியாகிப் போன எனது ஊர்ப் பெரியவர் சொன்ன கதை இது. இனி விடயத்திற்கு வருவோம்.

இன்று வன்னி மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திக் கொண்டிருப்பது யுத்தம் அல்ல. தமிழ் மக்களை கூண்டோடு முடித்துக் கட்ட மகிந்த சிந்தனை போட்டிருக்கும் இந்திய சிந்தனைக்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கும் ஒரு இன அழிப்பின் முதல் அத்தியாயம். அது என்னவோ அழிவு என்று வரும்போது பண்டார வன்னியன் என்ற முட்டாள் ஆகட்டும் இப்போ முடிசூட்டி வைத்திருக்கும் கரிகாலன் ஆகட்டும் இந்த வன்னி மக்கள் பலிகடா ஆக்கப்படுவது வெறும் வருடங்கள் கொண்ட வரலாறல்ல. பழைய மாணவர் சங்கம் வைத்து தொகை தொகையா காசு சேர்த்து யாழ்ப்பாணத்திலை இருக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிப் போட்டு வன்னி மண், அடங்கா மண், பூர்வீக மண், புடுங்கா மண் என்று உசுப்பேத்தி அந்த மக்களை கொன்று தொலைத்து, சின்னா பின்னமாக்கி ஒரு சந்ததியை அழித்துக் கொண்டிருக்கும் யாழ் மையவாத சிந்தனையாளர்களின் சூட்சுமம் புரியாமல் செத்து மடியும் அந்த மக்களின் வரலாறு இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. 

Karuna Colஎடுத்ததற்கெல்லாம் கடிதம் எழுதும் சங்கரியாகட்டும் சூழைமேட்டில் சுழட்டிச் சுட்ட டக்ளஸ் ஆகட்டும் மகிந்வின் முன் மானம் கெட்டுப்போய் நிற்க்கும் அம்மான் ஆகட்டும் கிடந்த மிச்ச ஆயுதத்தையும் கொடுத்து விட்டு சிறுபிள்ளைத்தனமா பேசிக் கொண்டிருக்கும் பிள்ளையான் ஆகட்டும் அந்த்தப் புள்ளையானுக்கும் அம்மானுக்கும் விலக்குப் பிடிக்கும் தலித் முன்ணியாகட்டும், டெல்லிக்கும் கொழும்புக்கும் ஆலாய்ப் பறக்கும் ஜனநாயகக்காறர் ஆகட்டும், உல்லாசக் கப்பலில டிஸ்கஸன் நடத்துகின்ற ஜேர்மனி என்ஜிஓ க்கள் ஆகட்டும் அதுக்கையும் இதுக்கையும் எண்டு நிற்கும் தமிழ் போறம் காறர் ஆகட்டும் லண்டனிலை இருந்து ஆலாப் பறக்கும் அக்காமார் ஆகட்டும் (இந்த லிஸ்டில யாராவது விடுபட்டு இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். அடுத்த கட்டுரைகளில் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன்.) வன்னி மக்களின் அழிவுக்கெல்லாம் பிரபாகரன் மேல் பழி போட்டு விட்டு தங்கள் அரசியல் அபிலாசைகளுக்காக அப்பாவித் தழிழர்களின் இன அழிப்பை மௌனமாக இருந்து போற்றிக் கொண்டிருக்கும் இந்த தமிழின விரோதிகளின் அரசியலுக்கு தமிழ் பேசும் மக்கள் தகுந்த பாடம் புகட்டும் நேரம் வெகு தூரத்தில் இல்லை.

Douglas Devanandaபுலிகள் அராஜகவாதிகள் என்று வாய் கிழிய பேசிக் கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பானத்திலிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டபின் செய்து முடித்திருக்கும் கொலைகளின் எண்ணிக்கை உதிரம் உறைந்து போகும் செய்தி. புலியைக் கண்டவனை, கண்டவனைப் பற்றிச் சொன்னதை, கேட்டவனை, கேட்டுக்கொண்டு நின்றததைக் கண்டவனை, பக்கத்தில் நிண்டவனை என்று சுட்டுத் தள்ளப்படும் அப்பாவி மக்களின் பிணங்களை சிலவேளை நாம் எண்ண மறந்திருக்கலாம். மகிந்தவும் பிரபாவும் சுட்டுக் குவிக்கின்ற பிணங்களின் எண்ணிக்கை அதை விட கூட என்பதாலும் கொல்லப் படப்போபவர்களில் அண்ணையும் ஒருவர் என்றதாலும் தமிழ் போறம் காறருக்கு இந்தக் கணக்கு ஒன்றும் பெரிதாகப் பட்டிருக்காது.

தீவுப் பகுதியில் சின்னஞ் சிறு பிள்ளைகள் உட்பட தாய் தகப்பன் என்று ஒரு குடும்பத்தையே படுக்கையில் வைத்து சுட்டுப் பொசுக்கியது மாத்திரமல்லாமல் உத்தரத்தில் கட்டித் தொங்க விட்டு, புலி ஆதரவாளர்களுக்கு கெலிவரச்செய்ததை யாரும் வெகு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. பின் வளவில், தெரு முனையில் கடற்கரையில் பள்ளிக்கூட மைதானத்தில் என்று சுட்டுத் தள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களின் எண்ணிக்கை, புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது சுட்டுப் பொசுக்கிய மக்கள், போராளிகளின் எண்ணிக்கையை விட அதிகமானது என்பது ஒரு அப்பட்டமான உண்மை. புலிகள் அல்லது ஆதரவாளர்கள்  என்று ஈபிடிபி சுடுவது நியாயம் என்றால்,  நீங்கள் புலிகளை அராஜகவாதிகள் என்று சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது.

கிளிநொச்சியில் வளைத்துப் போட்ட காணியெல்லாம் பறிபோய் விட்டது என்ற ஏக்கத்தில் கடிதம் கடிதமாயே எழுதிக் கொண்டிருக்கும் சங்கரிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி டக்ளசுக்கு போய்விடும் என்று தெரிந்ததும் தான் கொத்துக் குண்டு போடுற விசயமும் வன்னிச் சனம் சாகிற விசயமும் தெரியவந்தது போல. ஏதோ இருபதுக்கு இருபது கிறிக்கெற் விளையாட்டில் நாடுகளின் ஓட்டங்களைச் சொல்வது போல் புலிகள் 200, 300, இப்ப 1500 என்று தினம் அறிவிக்கும் பிணங்கள் எல்லாம் உங்களைப் போல சொகுசாகச் சாப்பிட்டு மகிந்தவின் விருந்திலே திளைத்துப் போய் உறங்கிக் கிடக்கும் ஈனர்களது அல்ல. பதிலே போடமாட்டார் என்பது தெரிந்திருந்தும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் ஜயா பக்கத்திலை இருக்கும் மகிந்தவுக்கு ஒரு போஸ்ற் காட் போடுவதற்கு அப்ப உமக்கு நேரம் கிடைக்கவில்லையா? இப்பதான் நேரமும் காலமும் கூடி வந்திருக்குப் போல. கூட்டணியில் எம்பியாக இருந்த காலத்தில் அங்கிருந்த வறிய தமிழர்களின் காணிகளை வளைத்துப் போட்டு ராசதானியம் நடத்திய ஜயா, அந்த காணி பறிகொடுத்த மக்களையே புலிகள் இன்று கேடயமாக வைத்திருப்பதும், சிங்கள இனவெறி இராணுவம் தினம் தினம் சுட்டு விழுத்துவதும் இப்பவாவது உங்களுக்குத் தெரிய வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே? பிரபாகரன் மீது குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதிலும் கடிதம் போடுவதிலும் காலத்தைக் கழிக்காமல், பறிபோன காணியெல்லாம் மீட்டெடுக்கும் கனவில் மிதக்காமல், வன்னி மக்கள் பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பது (காகத்திற்கு எப்பவும் …………..) நல்லது என்று நினைக்கிறேன்.

டக்ளசை விட்டுவிடுங்கள். வெளிப்படையாகவே எனக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை கிடையாது. அதிலும் வன்னி மக்களைக் கொல்வதற்கு எனக்கு நேரம் இல்லை. யாழ்ப்பாணத்து மக்களைச் சுடுவதற்கே எனக்கு ஆள் பத்தாது. இதிலை வன்னி மாடுகளை சுடுவதற்கு எனக்கு எங்கே நேரம் இருக்கிறது என்று சொல்லி மகிந்த ஜயா நீங்கள் எத்தினை பேரைச் சுடுகிறீர்கள் என்பதல்ல முக்கியம், வடக்கு மாகாண சபை எனக்குத் தான், பிறகு கருணாவை கொண்டு போய் முதலமைச்சர் ஆக்கிப் போடவேண்டாம் என்று முதலமைச்சர் பதவிக்காக அணில் ஏறவிட்ட நாய் போல மகிந்த மரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவர் கொலைகளை நிறுத்தும்படி கேட்க முடியாது. முதலைமைச்சர் பதவிக்காக மகிந்த அரசை முதுகில் சுமக்கும் டக்கிளஸ் முதலைக்கு வடக்கு மாகாண பொம்பிளைக் கனவு என்பது வன்னி மக்களின் அதி உயர் எண்ணிக்கையில் நடந்து கொண்டிருக்கும் மரணங்களில அல்லவா தங்கியிருக்கிறது.

Anandasangaree Vசங்கரி முதலை டக்ளஸ் முதலைக்கு சற்றும் சளைத்ததல்ல என்பதை நிருபிப்பதற்காக மக்களின் கொலைகளை எல்லாம் பிரபாகரன் தான் செய்கிறார், இராணுவம் ஆகாயத்தைப் பார்த்துதான் சுடுகிறது என்பது போன்று கதைவிட்டவர் கடிதம் போட்டவர். ஒரு நாளைக்கு கிளிநொச்சிக்கு போவியள் தானை குறைஞ்சது பறிபோன காணிகளுக்கு எல்லை போடுறதுக்காவது.. அப்ப தெரியும் மக்களின் பலம் என்பது என்ன என்று.

நான் போடச்சொன்ன கடிதம் தமிழ் மக்களை அழித்தொழிக்க நடக்கிற திட்டத்தை நிறுத்தும்படி கேட்டு எழுதச் சொன்ன கடிதம்.  அதென்ன கடிதம், காலையும் மாலையும் பிஸ்கற் அதோட தேத்தண்ணி. சங்கரி ஜயா நீங்கள் காணி புடிப்பியள். வால் புடிப்பியள். மன்மோகன் சிங்கனுக்கு…… புடிப்பியள் எண்டு தெரியும். ஜோக் அடிப்பியள் எண்டு சடவன்குளத்து ஜயனாணை எனக்குத்  தெரியாது. அதுவும் அடிபட்டு நொந்து உறவிழந்து உடுத்த உடைகூட தங்கள் மானத்தின் பாதிமறைத்த நிலையில் தப்பி வந்திருக்கும் அப்பாவி வன்னி மக்களை வைத்து நீங்கள் ஜோக் அடிப்பீர்கள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.

தழிழ் மக்களின் போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் 70களில் எப்படி இருந்ததோ அதை விட பத்து மடங்கு தேவை இப்போது இருக்கிறது. எத்தனை பேர் சாகிறார்கள். எத்தனை பேர் அங்கவீனர்களாகிறார்கள் என்பது எமக்கு முக்கியமில்லை. புலிகள் அழியவேண்டும் என்று சொல்கிற இனவெறி அரசு, அதற்கு முண்டு கொடுப்பதற்கும் முண்டி அடித்துக் கொண்டு போய் கோப்பத்தாயாவுக்கு விசுவாசிகள் என்று காட்டி பேப்பருக்கு பேட்டியும் கொடுக்கிற டொக்டர் மாரும் இருக்கிற வரையில் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் இருந்து கொண்டேதான் இருக்கப் போகிறது.

கொழும்புக்குப் போய் என்ரை மனிசி படிச்சவா. நல்லா சமைப்பா. மினுக்கிக் கொண்டுதான் வேலைக்குப் போவா என்று இலங்கை வானொலி சக்கடத்தார் பாணியில் அவவுக்கு பாசிலைப் பிடிக்கும். கிரிபத்தும் கட்டச் சம்பலும் தொட்டுத் தொட்டுச் சாப்பிட மனிசிக்கு விருப்பம். என்று தன்னைப் பற்றியும் தன் மனிசியைப் பற்றியும் பேசியிருக்கும் இந்த டொக்டர்மாரும் அக்காமாரும் எப்படி தமிழ் மக்களின் பிரச்சனை பற்றிப் பேசப் போனார்கள் என்று எண்ணும் போதே வெட்கமாக இருக்கிறது. இந்தப் போராட்டம் தொடங்க முன்னரே வெளிநாட்டுக்கு வந்து படிப்பு பிறகு வேலை குடும்பம் குட்டி …… மண்ணாங்கட்டி என்று அத்தனையும் முடிஞ்சு, புலி பலமாக இருக்கும் போது எதுக்கு வீண் வம்பு என்று எலிகளாக இருந்த இந்த புலம்பெயர் மக்கள் கொழும்புக்குப் போய் நடாத்தி வந்திருப்பது கொமடி சோ.

அட அதிலை ஒரு டொக்டருக்கு ஜயின்ஸ்ரைனின் தியறி வேறை. டொக்டர் ஜயா இதென்ன சக்கரை வியாதிக்கு ஊசி போடுற விளையாட்டா தமிழ் மக்களின் பிரச்சனை. ஆரப்பா உங்களை எல்லாம் தெரிவு செய்தது. சத்தியமா சன் ரிவி அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியின் இயக்குனர் கண்ணிலை பட்டிருந்தா எல்லாரையும் அந்தாள் இந்தியாவுக்கு கொண்டு போயிருக்கும். மனிசியைப் பற்றி ஒருவன் ஜோக் அடிக்கிறான். பேட்டி குடுக்கிறன் என்று ஒராள் ஜோக்கடிக்கிறா. தியறி சொல்லிறார் ஒருவர். சில வேளை வன்னி மக்களுக்கு இப்ப தேவை சிரிப்புத்தான் என்று சிம்போலிக்கா சொல்லியிருப்பாங்களோ. கொன்ஸ்ரன்ரைன் நீங்கள்தான் மீண்டும் ஒரு ஆக்கத்தில் சொல்ல வேண்டும். ஆனா அடுத்த விசிற்றில உங்கட சீற் காலி என்றது மட்டும் எனக்கு தெளிவாத் தெரியுது.

வன்னியில் சிங்கம் அண்ணேன்ரை ஆக்களின்ரை அடி ஒரு பக்கம். புலி அண்ணையின்ரை ஆக்களின்ரை அடி இன்னொரு பக்கம். பசி பிணி நோய் மறுபக்கம் என்று மத்தளத்திலும் மோசமான நிலையில் வன்னி மக்கள் இருக்க கொழும்புக்கு போனவைக்கு மனிசி புராணம் பாடுவதற்கும் மகிந்த புராணம் பாடுவதற்க்குமே நேரம் இருந்திருக்கிதென்றால் அதிலும் ஒராளுக்கு பிளேனிலை ஏறினதிலிருந்து 25 பவுண் ரிக்கற்றுக்கு காணாது என்று கேட்டதிலிருந்து, போய் இறங்கின கையோட சாப்பிட்டது, மற்றது போட்டதிலிருந்து கூட்டம் எப்படா முடியும் பேட்டி எப்படா கொடுப்பன் என்ற அக்கறையிலை திரிஞ்சது வரையிலை யாருக்கும் வன்னி மக்கள் என்ற ஒரு துன்பியல் (அண்ணையின்ரை துன்பியல் கிடையாது) நிகழ்வே அவர்களின் அக்கறைக்கு வரவில்லை என்றால் சிங்கள அரசுகள் எமது பிரச்சனையை தீர்ப்தில் அக்கறையீனம் கொண்டிருப்பதை எப்படி சாடுவது.

லண்டனில இருந்து ஆலாய் பறந்து போனனீங்கள் கதைக்கிறதுக்கு தன்னும் நேர காலத்திற்கு போறியளே. விடிய கூட்டத்திற்கு மதியானம் எழும்பிப் போறியள். அதுசரி ரைம்க்குப் போயும் என்னத்தை கிழிக்கப் போறியள். டொக்டர் ஜயாவுக்கு படுத்துக்கிடுத்து போனாத்தான் தியறி எல்லாம் கிளியராய் வருமோ என்னவோ.

Pillaiyanஅம்பாறையில் 11 வயதுச் சிறுமியை பாலியல் வண்புணர்ச்சிக்கு உட்படுத்திய கொடூரத்தைச் சொன்ன தாயிடம் பிள்ளையான் சொல்கிறார் எனக்குப் பவர் இல்லை. அம்மானிட்டைப் போங்கோ என்று. இரண்டு கிழமை களித்து அம்மான் அம்மணமாய் போய் நின்று பதவிப் பிரமாணம் செய்கிறார். பத்திரிகைகள் சொல்கின்றன மாண்பு மிகு அமைச்சர் என்று. எக்கோணமிக்ஸ் பத்திரிகையின் ஓடியோ பேட்டியில் மக்களுக்கு பொலிஸ் பவர் தேவை இல்லை காசிருந்தா போதும் என்று தமிழ் மக்களின் 30 வருட போராட்டத்திற்க்கு காசையும் வேலுப்பிள்ளையிரை மகனையும் சாட்டிவிட்டு பிள்ளையானுக்கு அறிவில்லை என்று யாழ்ப்பாணத் திமிரில் பேட்டி கொடுத்திருக்கும் இந்த முதலை மகிந்தவை சுமப்பதற்க்கும் கிழக்கு முதலமைச்சர் போஸ்ற் தான் காரணம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

இவைக்கு முண்டு குடுத்த தலித்தியம் கிழக்கியம் குலுக்கிற சங்கங்களை என்ன என்றது. லண்டன் கிருஸ்ணணோடு கருணாவுக்கு மதியுரைஞர் வேலைபார்த்து களைத்துப் போய் இப்ப பிளையானுக்கு மதியுரைஞரா இருக்கினம். பிரான்ஸ் லண்டன் என்று தலித்திய மாநாடு வைச்சு வாய் கிழிய தலித்தியம் பேசியன எல்லாரும் இப்ப மகிந்தவுக்கு அண்கொண்டிசனல் சப்போட்டாம். யாழ் மையவாதத்தால் வேளாள மேலாதிக்கத்தால் எண்ணிலடங்காத் துன்பங்களை அனுபவித்த தலித் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த போன நீங்கள், இதே யாழ் மேலாதிக்கத்தால் படு மோசமாகப் பாதிக்கப்பட்டு கல்லி இழந்து இன்று மிஞ்சியிருந்த கோவணமும் இழந்து நிங்க்கும் மக்களின் மரணங்களை உங்கள் கொள்கைகளை விற்கும் ஆயுதமாகப் பயன் படுத்துகிறீர்களே ஒடுக்கு முறை பற்றிப் பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஜனநாயகக்காறரோட சேர்ந்து திஸ்ஸ விதாரணவுக்கு புரப்போசல் கொடுத்ததோட தலித் பிரச்சினை முடிஞ்சுது என்று நினைப்புப் போல. அன்றைக்கு நிசாம் காரியப்பர் சொன்னவர் நல்ல காலம் ஹெல உருமயாக்காரன்கள் வரேல்லை வந்திருந்தா தலித் முன்னணிக்காரரையும் ஜனநாயகக்காறரையும் கட்டி அணைத்து கூட்டுக்கலவியே செய்திருப்பாங்கள் என்று. அன்றைக்கு சொன்னாங்கள் இன்று போராடிக் கொண்டிருப்பவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் தலித் மக்கள் என்று. இன்று நீங்கள் சொன்ன தலித் மக்களும்தான் பெருமளவில் கொல்லப்படுகிறார்கள். ஏன் வாயடைத்துப் போய் நிற்கிறீர்கள். துக்கம் தாங்க முடியவில்லை என்று ரீல் விடுகிற பிளானோ. அதென்ன பிரதீபனின் குறும்படத்தில் இலங்கை இராணுவத்தை மோசமாகச் சொல்லியாச்சு என்று வேற பீல் பண்ணுறீங்களாம் உண்மையோ?

Uthayarajah_Sri_TELOமுதலை என்று சொல்ல முடியாது. வேண்டும் என்றால் கபறக் கொய்யா என்று சொல்லலாம். வேறுயாருமல்ல. சிறீ ரெலோதான். அட அங்கை இருக்கிறவங்களுக்குத்தான் விட்ட காணியைப் பிடிக்கிறதும் பட்டென்று போடுறதையும் தவிர வேறு தெரியாது விட்டுவிடலாம். ஜயா சிறீ ரெலோ தலைவரே வெளிநாட்டிலை இருந்து ஊருக்குப் போனனீங்கள் கொஞ்சம் காசு உளைச்சுக் கொண்டு போயிருப்பிள். போன கையோட வன்னி மக்களுக்கு அள்ளிக் கொடுத்து அரசியல் செய்யப் போறியளாக்கும் எண்டு பாத்தா. போறியள். வெள்ளை வான் ஒண்டு வாங்கிறியள். வாங்கின கையோட வங்கி மனேச்சரைக் கடத்திறியள். காசும் கேக்கிறியள். கேட்டா புலிகள் சாட்டு. லண்டனிலை அவங்கள் வணங்கா மண் என்று பேரை வைச்சு வெளிநாட்டிலை சுருட்ட நீர் வெளிநாட்டிலை ஒரு கோயிலைத் திறந்திருக்கலாம். வெண்புறா மாதிரி ஒரு சரிற்றியை தொடங்கியிருக்கலாம். அல்லது இளையோர் முதியோர் கன்னி கழியாதோர். சாமத்தியவீடு செய்தோர். செய்வதற்காக எப்ப மகளுக்கு மாதவிடாய் வரும் என்று பாத்துக் கொண்டிருப்போர் என்று ஏதாவது ஒரு அமைப்பைத் தெடங்கி உண்டியலைக் குலுக்கி காசு சேத்திருக்கலாம். அதெல்லாத்தையும் விட்டுப் போட்டு வெறும் கோவணத்தோடு மட்டும் நிற்க்கும் மக்களைக் கடத்தி உது என்ன விளையாட்டு. உருப்படுமோ உந்த அரசியல். அட கோதாரி விழுவார் என்ன செய்தாலும் இந்த வன்னிச் சனத்தை அல்லவா சாகடிக்கிறியள்.

சுகு அணி – சித்தர் அணி என்று அறுபத்தெட்டு அணிகளா பிரிந்திருக்கும் இந்தக் கட்சிகள் குறைந்த பட்சம் ஒரு கூட்டறிக்கை. அணிய எதுவும் இல்லாத வன்னி மக்களைச் சுடாதையுங்கோ என்று ஒரு அறிக்கை.  புலிகளை அழிப்பதற்க்கு எங்கள் பூரண ஆதரவு உண்டு. ஆனா புலியின் பெயரில் ஒரு சந்ததியையே அழிப்பது ஏற்றுக்ககொள்ள முடியாது. என்று. உடல் சிதறி ஊனம் பட்டு இறந்த சிசுவைக்கூட புதைக்க நேரம் இன்றி ஓடி ஓடி மடிந்து கொண்டிருக்கும் இந்த வன்னி மக்கள் உங்கள் அக்கறைக்குள் வரவில்லை என்றால் நீங்கள் பிரபாகரன் இருப்பதற்கான நியாயத்தை இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கே வழிகோலுகிறீர்கள் என்ற வரலாற்று உண்மையை மறந்து விடவேண்டாம்.

சரி ஸ்ரீறிலங்காவில் இருக்கிற அணிகள் அரசாங்கத்தை அண்டிப் பிழைக்க வேண்டும். ஏதாவது கதைத்தால் மகிந்த பாதுகாப்பை தளர்த்துவார் அவையின்ர வெள்ளை வானிலை வந்தே அவைய போடுவாங்கள்;. அதனால அவை வாய் திறக்கிறதேயில்லை. ஆனால் இந்த புலத்தில உள்ள புலிக்கு எதிரான அரசுக்கு ஆதரவான சங்கங்கள் போறங்கள் எல்லாம்? லண்டன் பாரிஸ் ஸ்ருட்காட் என்று கூட்டத்திற்கு மேல் கூட்டம் போட்டு போன் மேல் போன் போட்டு உலகத்தில உள்ள எல்லாரையும் திரட்டி கையெழுத்து வேட்டையும் நடத்துகின்ற பலம் இருக்கிற உங்களுக்கு வன்னிச் சனங்களுக்காக ஏன் வாயே திறக்க முடியவில்லை? இந்த இளவு விழந்த வன்னிச் சனங்களுக்கு இங்கிலுசும் தெரியாது. மேல்தட்டு பழக்கவழக்கங்களும் தெரியாது. ஆதாலை போறங் காறற்ரை மொழி விளங்காது எண்டு விட்டுட்டியளாக்கும்.

கேதீஸ்க்கு நினைவுக் கூட்டம் வைக்கிறியள். நல்ல விசயம். லசந்தாவுக்கும் போராட்டம் நடத்தினியள். கட்டாயம் செய்யத்தான் வேணும். ஆனால் வன்னிச் சனத்திக்காக ஒரு கூட்டமும் இல்லை. ஒரு போராட்டமும் இல்லை. வன்னி மாடுகளுக்கு படிக்கவும் தெரியாது அதைவிட சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது என்றதாலையோ? அது மட்டுமே லசந்தாவுக்கு போராட்டம் நடத்தினியல். உலகப் புரட்சிக்காரரும் வந்தாங்கள். பெரும்பாலும் இலங்கையை உலகப்படத்தில தான் பார்த்திருப்பாங்கள். ஆனாலும் ஒரு சொலிடாரிட்டிக்காக அவங்களும் குரல் கொடுக்கிறாங்கள். உலகப் புரட்சியை வெல்லுறாங்களோ இல்லையோ அவங்கள் பனரைக் கொண்டு வந்து கட்டினா ஜனநாயகத் தலைவி புலி மாதிரிப் பாய்ஞ்சு பனரை அவுக்கிறா? ஜனநாயகத் தலைவர் கொண்டுவந்து வீசிட்டு போறார். நீங்கள் நுனி நாக்கில டெமோகிரசி கதைச்சுக் கொண்டு இன்னும் உந்த இயக்கப் பறியலை காவிக்கொண்டு தான் திரியிறியள். நாங்கள் முன்னாள் உறுப்பினர்கள் என்று சொல்லாட்டி உங்களுக்கு அரசியல்ல இடமில்லைப் போலத்தான் கிடக்கு. ஆனால் கொழும்புக்கு போன கொமடி கோஸ்டி ஒரு பெக்கோக்கள். உங்க மீடியாவில தங்கட விலாசத்தை காட்டேக்க வேட்டி அவிழிறதும் தெரியாம உளறிப் போடுவினம். ஆனால் நீங்கள் ஆபத்தான பேர் வழிகள். சிமிக்கிடாம போய் வந்து காதும் காதும் வைச்சமாதிரி உங்கட கிச்சினிலயே எல்லாம் முடிஞ்சிடும். நீங்கள் மஹிந்தவுக்கு பின்னுக்கோ ரணிலுக்குப் பின்னுக்கோ இல்லை சந்திரிகாக்குப் பின்னுகோ என்றது எல்லாம் அந்தக் கதிர்காமத்தானுக்குத்தான் வெளிச்சம். இந்த முதலைகள் ஒன்றும் அந்த முதலைகளுக்கு குறைந்தவர்களில்லை.

அது இருக்க, தப்பி வந்த மக்களை அரசாங்கம் நன்றாக நடத்துகிறதாம் என்று ரிபிசி வானொலியில் கொமடிக் குழுவில் பங்கு பற்றிய அறிவிப்பாளர் சொல்கிறார். இவர் மாற்றுக் கருத்து, ஜனநாயகம், தலித்தியம் பெண்ணியம் இலக்கியச் சந்திப்பு என்று ஐரோப்பாவில எங்காவது கூட்டம் நடந்தால் அங்க இவரைச் சந்திக்கலாம். வன்னியில் மாடுகளைக் கூட கம்பி வேலி போட்டு அடைத்து வைத்தது கிடையாது. கூடாரங்களை அடித்து சுத்தி கம்பி வேலி போட்டு வைத்திருப்பதை பற்றி புகழ்ந்து பேசும் இந்த முன்னாள் போராளியை என்ன சொல்வது. 80 களின் நடுப்பகுதியில் பூசா முகாமில் படு மோசமாக அடைத்து  வைக்கப்பட்ட கைதிகளில் நானும் ஒருவன். திறந்தவெளி கட்டடத்தில் சுற்றிலும் கம்பி வேலியிட்டு எம்மை அடைத்து வைத்திருந்தர்கள். (எனது சகோதரி அப்போது ஒரு கடிதம் போட்டிருந்தார். கடவுள்தான் உன்னைக் காப்பாற்றி வைத்திருக்கிறார் என்று. நான் எழுதிய பதில் கடவுள் கம்பிவேலி போட்டுத்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டுமா என்று. கம்பி வேலிக்கு வெளியே நின்று சேறு படாமல் பிஸ்கற் கிடைக்கிறதா என்று கேட்டு விட்டு வந்த கொமடிக் குழுவுக்கு மனிதர்களை அடைத்து வைத்திருக்கும் போது ஏற்படும் வலியை உணர்கிற பக்குவம் இல்லாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.)  அதற்கு சற்றும் குறையாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த முகாம்களை பார்வையிட்ட இந்த கொமடிக் கிங் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பாக பேசப் போயிருக்கிறார்கள் என்றால் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வு கிட்டுவதை சிங்கள அரசுகள் இழுத்தடிக்க வேறு என்ன ஆயுதம் வேண்டிக்கிடக்கிறது.

வன்னித் தேர்தல் கனவில் மிதக்கும் இவர் வவுனியா போய் பத்திரிகையாளர் மாநாடு வேறு நடத்தி இருக்கிறார். அரசாங்கத்திடம் வாங்கிற பணம் போதாது என்று வன்னி மக்களிட்டை புளொட் அடிக்கிற கொள்ளை ஒன்றும் பரம ரகசியமல்ல. தங்கள் முன்னாள் போராளிக் குடும்ப உறுப்பினர்களையே கடத்தி அட்டகாசம் பண்ணும் இவர்கள் சாதாரணமானவர்களை எவ்வாறு நடத்துவார்கள். அவர்களிடமே சில ஆயிரத்திற்கு டில் போட்ட சிங்கன் இவர். இவருக்கு ஒரு சின்ன அட்வைஸ். லெக்சன் கேக்க வன்னிக்கு போகேக்க அண்டவெயாரை சொஞ்சம் இறுக்கிப் போட்டுக் கொண்டு போங்கோ. வன்னி மக்கள் இருக்கிற கொதிக்கு என்ன நடக்கும் எண்டு என்னாலை ஆருடம் கூற முடியாது.

இவற்றை இன்னும்மொரு தோஸ்துவும் உந்த கொமடி கோஸ்டியோட போனவராம். அவர் பசிலோட தோள்ள கைபோட்டுத் தானாம் கதைப்பார் அவ்வளவு குளோஸ். உங்களுக்கு கொழும்பிலை யாரையாவது தூக்கோணுமெண்டா அவருக்கு போன் போட்ட போதுமாம். இந்த அறுவார் அந்த அறுவாரோடு சேர்ந்து தாஜ்சமுத்திராவில சாப்பிட்டு மற்றதையும் போட்டுட்டு வன்னிச் சனத்தை துலைக்கிறது என்றே முடிவெடுத்திட்டாங்கள்.

தமிழ் மக்களுக்கு பிரச்சனை ஒன்று இருந்ததே கிடையாது. இந்த வன்னி படிப்பறிவில்லாததுகள் தான் சும்மா சுட்டுத் திரியிறாங்கள் என்பது போல் எத்தனை பேர் செத்தாலும் மகிந்த செய்வதெல்லாம் சரி என்று தம்பட்டம் அடிக்கும் இவர்கள் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த முனைகிறார்கள் என்றால் இவர்கள் பற்றி விழிப்பாக இருக்க வேண்டிய கடமை தமிழ் பேசும் மக்களுக்கு உண்டு. இல்லை தூங்கும் போது கோவணத்தை உருவிக் கொண்டுபோய் மகிந்த சகோதரர்களுக்கு பரிசாக் கொடுக்கவும் இந்த முதலைகள் தயங்க மாட்டார்கள். 

இதுக்குள்ள சில வட்டன்கள் தகப்பன்ர பொலிற்றிக்கல் இன்புலவன்சில கொமடிக்குழுவில சேர்க்கப்பட்டவை. அவை அங்க வந்த செக்கிற்றரி பொம்பிளையளுக்கு கிஸ் அடிக்க முயற்சியாம். தமிழனைக் கொண்டே அடகு வைக்கிறதுக்கு என்றே திரியுறாங்கள்.

பொம்பிளைக் கனவில் முதுகில் சுமந்த முதலை போல தங்கள் முதலமைச்சர் பதவிக்காக மகிந்த அரசை முதுகில் சுமக்கும் டக்கிளஸ் முதலையாகட்டும் சங்கரிப் பேயாகட்டும் சித்தாத்தப் பிசாசாகட்டும் இல்லை வெளிநாடுகளில் இருந்து சென்ற கொமடிக் குழுவாகட்டும் ஒன்றரை இலட்சம் மக்களைக் காவு கொடுத்து முல்லைத்தீவின் ஒரு மூலைக்குள் முடங்கிக் கிடக்கும் இந்தப் போராட்டம் வெறும் வன்முறையின் மீது கொண்ட ஆர்வத்தினால் ஏற்பட்ட போராட்டமல்ல. அந்தப் போராட்டத்திற்கான நியாயத் தன்மைகளை ஏகபிரதிநிதித்துவத்துக்குள் குழிதோண்டிப் புதைத்த புலிகளும் புதினம் பாத்துக் கொண்டிருந்த இந்த முதலைகளும் சேர்ந்து விட்ட வரலாற்றுத் தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். புலிகளை ஒழித்துக் கட்டிய கையோடு மகிந்த அரசு சொல்லும் சொறிப்புள்ளைக்கு முதலமைச்சர் பதவி வேண்டிக் கிடக்கோ என்று. இது பெரிய அரசியல் ஆய்வுகளை செய்து நான் கண்ட முடிவல்ல. இலங்கையின் சரித்திரத்தில். தமிழ்பேசும் மக்களின் உரிமை மறுப்புக்காக சிங்கள அரசுகள் தமிழர்களையே பயன்படுத்திய வரலாறுகளை கண்டதும் கேட்டதாலும் கண்டுகொண்ட முடிவு. இன்று எமக்கு முன்னால் இருக்கும் முக்கிய பொறுப்பு ஒன்றே ஒன்றுதான். புலிகள் பலம் இழந்திருக்கும் இந்த வேளையில் தமிழர்களி;ன உரிமைகளை நசுக்குவதற்கான திட்டங்கள் தயாராகவே இருக்கும். இலங்கையில் எல்லா இன மக்களும் மீண்டும் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் அதற்கான அடிப்படையாக இருக்கும் ஒரு அரசியல் தீர்வு வென்றெடுக்கப் பட வேண்டும். சிங்களவர்களை தமிழர்கள் நம்புவதற்க்கும். தமிழர்களை முஸ்லீம்கள் நம்புவதற்கும் என்று பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்ப இந்த்த தீர்வு மிக மிக அவசியம். அந்தத் தீர்வை இன்று இருக்கும் எந்தத் தலமையும் வென்றெடுக்காது என்பதே நிஜம். அந்தத் தீர்வுக்காக குரல் கொடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதே இன்றைய அவசர அவசியமாகும்.

Related Article :

வணங்கா மண்!!! : ஈழமாறன்

வள்ளம் அனுப்பினேன்…… ஹெலி அனுப்பினேன்……. : ஈழமாறன்

என் அன்பார்ந்த தமிழீழ மக்களே! : ஈழமாறன்

வணங்கா மண்!!! : ஈழமாறன்

Vanni_Missionகப்பல் ஓட்டிய தமிழன்
பின் ஒருநாள்
ஓமந்தைச் சாவடியில்
கப்பம் புடுங்கிய தமிழன்
தொப்புள் கொடி உறவின் பெயரால்
பத்துப் பதினைஞ்சு
வீடு வாங்கிய தமிழன்

முன் ஒருநாள்
புரட்சியின் பெயரால்
கோயிலெல்லாம்
நகை எடுத்தவன்
தண்டவாளம் ஈறாக
கிண்டி எடுத்தவன்
கதிகால் தொடங்கி
கக்கூஸ் கதவுவரை
களவும் எடுத்தவன்

கவி படைத்தவன்
அண்ணையின் பெயரில்
அர்ச்சனை செய்தவன்
பிறிதொரு பொழுதில்
களவாய் கடவுச்சீட்டுச் செய்து
கென்யா ஊடாக
ஜரோப்பா சென்று
ஆமி அடிக்கிறான்
புலி பச்ச மட்டை வெட்டி
பளார் என்றடிக்குது
வீடு எரிஞ்சு போச்சு
கிடந்த தோடும் களவு போச்சு
நாடு திரும்பிப் போனால்
என்னை நாயைப் போல் சுடுவார் என்று
பொய்யாய் சொன்னவன்
அதன் பேரில் அடைக்கலமும் கேட்டவன்.
தங்கையை கூப்பிட்டான்
தம்பியை கூப்பிட்டான்
மாமா மாமி மச்சாள் என்று பின்
வரிசையாய் அழைத்தபின்

மாவீரர் விழாச்சென்று
போர்வீரம் கதைத்தவன்
சந்திரிகாவுடன் கலவி வைக்க
அண்ணைக்கும் ஆசை
இந்த கிளட்டு சிங்கத்திற்கும்
ஆசையென்று அரங்கிலை முழங்க
விசிலடித்தவன்
அன்றிரவே விஸ்கியும் அடித்தவன்.

ஜஞ்சாறு வருசம் கழிச்சு
தெருவில் நின்ற காருடன்
கோட்டுச் சூட்டையும் போட்டு
போட்டோ எடுத்தவன்
எடுத்த கையோடு
எக்கச் சக்கமா புரட்டும் சேர்த்து
கடிதமும் போட்டவன்
வடிவான பொம்பிளை ஒன்று
அனுப்பவும் சொன்னவன்.
வன்னிலை வேண்டாம்
கொஞ்சம் நகரமாய் பாருங்கோ
இங்கிலிசு தெரிஞ்சிருந்தா
இன்னும் கொஞ்சம் நல்லது
சாதி கவனம்
சமயத்தையும் விசாரியுங்கோ
வாற செலவு அவளோடை
வந்த பிறகுமிகுதி என்று
வரிசையாய் சொன்னவன்

வந்திறங்கிய கையோடு
கலியாணம் ஒருநாள்
பின் வேறு ரிசப்சன் மறுநாள்
பிறந்த நாள் ஒருநாள்
31ம் சடங்கெண்டு ஒருநாள்
படுத்தது தவிர்த்து
பிள்ளை குடுத்தது தவிர்த்து
மற்றன எல்லா நாளுக்கும்
விழா எடுத்தவன்
கொஞ்சம் விலாசம்
காட்டினவன்

கொலிடே போனவன்
குடிச்சுத் தினம்
கும்மாளம் போட்டவன்
அரைகுறைப் பயிற்சியில்
அரங்கேற்றம் செய்தவன்
அப்பப்ப வன்னி சென்று
அண்ணைக்கருகில் நின்று
போஸ் கொடுத்தவன்
கொடுத்தெடுத்த படம்
காட்டி அண்ணையோட
குளோஸ் என்று சொன்னவன்
வெள்ளைப் புறாக் கட்டினவன்
கட்டி வந்ததில் வீட்டைக் கொஞ்சம்
நீட்டியும் கட்டினவன்

வருகிற வழியிலை
துடைக்கப் பேப்பரும் கேட்டவன்
வள்ளியும் கந்தனும்
சுப்பனும் பேத்தியும்
பங்கரில் இருக்கையில்
லண்டனில் பிள்ளையும் பெத்தவன்
புரச்சியின் பெயரிலை
கொள்ளையும் அடித்தவன்
கொள்கையின் பெயரிலை
இன்னும் நாலைஞ்சு வீடும்
வாங்கினவன்

மன்னாரில் சாகையில்
மதுவிலை கிடந்தவன்
அண்ணை உள்ளுக்கை விட்டடிப்பார் என்று
மனிசியுடன் தினம் தோறும்
மயக்கத்திலும் கிடந்தவன்
மூதூரில் சனம் சாக
வைவுக்கு முத்தம் கொடுத்தவன்
பேசாலை ஈறாக
பெருவாரி சனம் சாக
பராரிக் கனவோடு
சொகுசாக வாழ்ந்தவன்

ஆனையிறவு போய்
அழிவார் கதைகேட்டு
வன்னிச் சனத்தின்ரை
ஆடுமாடு போய்
பால மோட்டை போய்
படுகாட்டுக் குளம் போய்
படுத்திருந்த பாய் கூடப் போய் துலைஞ்சு
நாசமறுப்பார் செய்த வேலையாலை
நாதியற்ற வன்னிச் சனம்
இருந்ததெல்லாம் இழந்து
மிருகமாய் அலைஞ்சு
கருங்காலி மரத்தின் கீழே
உறங்காமல் உண்பதற்கோ
ஒரு பருக்கை உணவில்லாமல்
திண்ணையும் போய்
பின்வளவு தென்னையும் போய்
புள்ளையும் போய்
புதுவிளாம் குளமும் போகையிலே
கட்டவுட் கட்டினவன்
அண்ணைக்கு பனையுயரக்
கட்டவுட் கட்டினவன்
சாவை நிறுத்துவோம்
வாருங்கள் ஊர்வலம் என்று
தெருவுக்கு கூட்டி வந்து
அண்ணையைக் காப்பாத்த
பதாகை சுமந்தவன்

ஊர்வலத்திலே உல்லாசம் கண்டவன்
பெல்ஜியம் சென்று
துள்ளிக் குதித்த பின்னே
பானம் அருந்தி
சான்ட்விச்சு சாப்பிட்டு
ஏப்பம் விட்டவன்
இளம் பெட்டையளை பார்த்து
மோப்பமும் விட்டவன்.
கோச்சிலை அப்பிடி இப்பிடி
சேட்டையும் விட்டவன்
இளசுகளுக்கு பிக்கினிக்
காட்டவும் செய்தவன்.

காரை முள்ளுக் குத்த
யங்கம் முள்ளு கீறிபாய்ந்த காயம்
உடல் கடுக்க
சிங்களம் ஏவிய செல்
சிங்கனைக் கொன்று
அவன் தங்கையைக் கொன்று
மங்கையின் உடல் தின்று
உடன் கிடந்த தங்கமாம்
ஆறுமாத சிறுமியை பிழிந்தெடுத்து
கோடியில் நின்ற
மாடாடு மரமெல்லாம்
முறித்தெடுத்து
கருப்பட்ட முறிப்பிலே வீழ்ந்து வெடிக்கையில்
நாயே நீ எங்கிருந்தாய்
கற்சிலை மடுவிலே
நெடுங்கேணித் தெருவிலே
புளியங் குளத்திலே
புதுவிளாங்குளத்திலே
அழிந்து சனம்
அழுது ஓலம் விட்டு
விடுங்கடா எங்களை
வே மக்களே என்று சொல்ல
பொல்லால் அடித்து
காலால் போட்டுதைத்து
மாத்தளனில் என் மகளை
மாடாய் அடித்தவனை
மாவீரன் என்று சொல்லி
மார்தட்டிக் கொண்டாடியவன்

கட்டினவள் கதறியழ
பால் மணம் மாறாத பச்சிழம் பாலகன்
கையில் கொண்டு
கரிப்பட்ட முறிப்பு போக
கனகராயன் குளம் போக
முறுகண்டி போக
முழங்காவில் போக
வற்றாப் பழை போக
தண்ணீர் ஊற்று விழ
தண்ணியிலை இருந்தவன்

தன்குறி விறைக்க
சந்தோசம் கொண்டவன்
புதுக்குடியிருப்பு மூலைக்கை
வன்னிச் சனம் சாகைக்கை
கால் சிதறக் கை முறிந்து
தண்ணிகூட இன்றிச் சனம் மாழேக்கை
ஆண்குறி விறைப்பேறி
அனுபசிச்சுக் கிடந்தவனுக்கு
அண்ணைக்கு அனுப்புவதற்கு
அள்ளிக் கொடுங்கள் என்று
வணங்கா மண்
பேர் போட்டு
வருவான் வாசலுக்கு

கேட்டு வையுங்கள்
மட்டக்களப்புச் சனத்தின் உயிர்
மசிரைவிடக் குறைவா
திருகோணமலைச் சனங்கள்
எருமையினப் பிறப்பா
மன்னாரில் செத்தவர்கள்
செல்லாத காசா
மிகுதி வன்னியிலை செத்ததெல்லாம்
மரமேறும் விலங்கா
இவரெல்லாம் சாகையிலை
இரவெல்லாம் கலவிசெய்தீர்
இப்ப அண்ணைக்கு
இருப்புக்கு இடம்வேண்டும்
வணங்கா மண் புலுடாவா
நாயே
வணங்கா மண் புலுடாவா என்று.