செய்திகள்

செய்திகள்

செய்திகள்

றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு !

அண்மையில் றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (29) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

றம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் கடந்த 27ஆம் திகதி உத்தரவிட்டது.

இது தொடர்பான உத்தரவு நேற்று (28) பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்றதுடன், பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைய சந்தேகநபர்கள் நால்வரும் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்ஷன் கடந்த 19ஆம் திகதி றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மிகுந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது தமிழக அரசு !

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில், இலங்கையில் நிலவும் நெருக்கடி விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தீர்மானத்தை கொண்டு வந்தார்.

நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து பேரவையில் விளக்கமளித்த ஸ்டாலின், அத்தியாவசிய மருந்துகள், எரிபொருள் மற்றும் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.

முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகள் செய்வதாக அறிவித்திருந்தேன். பல தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒரு சமூகத்திற்கு மாத்திரமன்றி அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடியின் காரணமாக அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர், என்றார்.

இதற்கமைய, 80 கோடி ரூபாய் பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா (15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இவற்றை தமிழக மாநில அரசினால் நேரடியாக வழங்க முடியாது என்பதால், இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக வழங்கிவைக்க மத்திய அரச அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு தனியாக இந்த உதவிகளை வழங்க முடியாது. மத்திய அரசிடம் அனுமதி பெற்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மட்டுமே இவற்றை விநியோகிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இருந்தும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. எனக் கூறியுள்ளார்.

தொடரும் பொருளாதார நெருக்கடி – இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி !

ஏப்ரல் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும் போது கணிசமாகக் குறைந்துள்ளது, இது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு அதிக சவால்கள் உள்ளன என்பதைக் குறிக்கிறது.

ஏப்ரல் 01-26 காலப்பகுதியில் மொத்தம் 55,590 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மார்ச் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடும் போது, ​​மாதத்திற்கான வருகை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவு.

மார்ச் மாதத்தில் மொத்தம் 106,500 சர்வதேச பார்வையாளர்கள் நாட்டிற்குள் வருகைத் தந்துள்ளனர். இது இவ்வாண்டுக்கான மிக அதிக தொகையாகும்.

சுற்றுலா அமைச்சின் ஏப்ரல் மாதத்திற்கான புள்ளிவிவரங்களுக்கு அமைய நாளாந்த வருகை விகிதம் 2,138 ஆகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. முன்னைய மாதங்களில் நாளாந்தம் 3,500 முதல் 4,000 பேர் வரை நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

ஜனவரி 01 முதல் ஏப்ரல் 26 வரையிலான காலகட்டத்தில் மொத்த வருகை 340,924 ஆக இருந்தது.

10,327 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன், ஐக்கிய இராச்சியம் சுற்றுலாவுக்கான மிகப்பெரிய ஆதார சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்தியா 7,900 வருகையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன்,. ஜேர்மனி 5,756 சுற்றுலாப் பயணிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஏனைய குறிப்பிடத்தக்க சந்தைகளில் பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகியவை உள்ளன.

21 ஆவது நாளாகவும் போராட்டம் – கண்டு கொள்ளாத ராஜபக்ஷக்கள் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலிலும், அலரி மாளிகை வளாகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இன்றைய தினமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, காலி முகத்திடலில் இன்று(வெள்ளிக்கிழமை) 21 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு அப்பால் இந்த போராட்டத்தில் மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கடந்த காலங்களில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளும் இந்தப் போராட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கோட்டா கோ கம எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் தொடர்ச்சியாக கலந்து கொண்டு இரவு – பகலாக அரசாங்கத்திற்கு எதிராக கோஷமெழுப்பி வருகின்றனர்.

தேசியக் கொடிகளை ஏந்தியும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக பதாதைகளை ஏந்தியும் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் போராட்டத்தின் காரணமாக, ஜனாதிபதி செயலக வளாகம் மற்றும் அதனை அண்டியப் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி !

 • ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் அணிகள் ஆரோன் பின்ச் தலைமையிலும், டெஸ்ட் அணி பேட் கம்மின்ஸ் தலைமையிலும் இலங்கைக்கான சுற்றுத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளன.

  இலங்கை சுற்றுப்பயணத்திற்கான அவுஸ்திரேலிய குழாம் கீழே…

  T20 squad

  Aaron Finch (c)
  Sean Abbott
  Ashton Agar
  Josh Hazlewood
  Josh Inglis
  Mitchell Marsh
  Glenn Maxwell
  Jhye Richardson
  Kane Richardson
  Steve Smith
  Mitchell Starc
  Marcus Stoinis
  Mitchell Swepson
  Matthew Wade
  David Warner

  ODI squad:

  Aaron Finch (c)
  Ashton Agar
  Alex Carey
  Pat Cummins
  Cameron Green
  Josh Hazlewood
  Travis Head
  Josh Inglis
  Marnus Labuschagne
  Mitchell Marsh
  Glenn Maxwell
  Steve Smith
  Mitchell Starc
  Marcus Stoinis
  Mitchell Swepson
  David Warner

  Test squad:

  Pat Cummins (c)
  Ashton Agar
  Scott Boland
  Alex Carey
  Cameron Green
  Josh Hazlewood
  Travis Head
  Josh Inglis
  Usman Khawaja
  Marnus Labuschagne
  Nathan Lyon
  Mitchell Marsh
  Steve Smith (vc)
  Mitchell Starc
  Mitchell Swepson
  David Warner

  Australia A squad:

  Sean Abbott
  Scott Boland
  Peter Handscomb
  Aaron Hardie
  Marcus Harris
  Travis Head
  Henry Hunt
  Josh Inglis
  Matthew Kuhnemann
  Nic Maddinson
  Todd Murphy
  Josh Philippe
  Matt Renshaw
  Jhye Richardson
  Tanveer Sangha
  Mark Steketee

தொடர் தோல்விகளுக்கு மத்தியில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைவராக பென் ஸ்டோக்ஸ் !

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 4-0 தோல்வியடைந்தது. இதேபோல் மேற்கிந்தியதீவுகள் அணியிடம்  1-0 என தோல்வியடைந்தது. இந்த தொடர் தோல்வியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் சமீபத்தில் பதவி விலகினார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் அணியின் புதிய தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டெஸ்ட் அணியின் 81வது தலைவர் ஆவார்.
தலைவர் பொறுப்புக்கு பென் ஸ்டோக்ஸ் பெயரை, கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாக இயக்குனர் ரோப் கீ பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரைக்கு கிரிக்கெட் வாரியம் நேற்று மாலை ஒப்புதல் அளித்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து தொடர்களில் வெற்றி பெறாத நிலையில், பென் ஸ்டோக்ஸ் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். இங்கிலாந்து அணி தற்போது 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கடைசி இடத்தில் உள்ளது.

குழந்தைகளின் பெயருக்கு பின்னால் தாயின் பெயர் எங்கே..? – இத்தாலியில் நடைமுறைக்கு வருகிறது புதிய சட்டம் !

இத்தாலி நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயர் சேர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ள நிலையில் இதில் மாற்றம் ஏறு்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கை அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் விசாரித்து, அங்கு பிறக்கிற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் இனி தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்க்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுவரை தந்தையின் பெயரை மட்டுமே தனது பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருந்தது, பாகுபாடு மற்றும் அடையாளத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டால், யாராவது ஒருவரது பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருக்கலாம் எனவும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்புக்கு ஏற்ப, இத்தாலி நாடாளுமன்றம் இப்போது ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும். கோர்ட்டு தீர்ப்பை அரசு முழுமையாக ஆதரிப்பதாக, இத்தாலி குடும்ப மந்திரி எலினா பொனெட்டி ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த முடிவுக்கு நாம் ஒரு பொருளைத்தர வேண்டும். இது அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்தது. அதை செய்து முடிக்க வேண்டும். குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் தந்தையும், தாயும் சம பங்கு எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

நிறுத்தப்படுகிறது திரிபோஷா உற்பத்தி !

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல் சில மாதங்களில் மட்டுமே தமக்கு திரிபோஷ கிடைத்ததாக அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் குற்றம் சுமத்தியிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெறும் வன்முறைகள் – பிரிட்டன் கவலை !

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெறும் வன்முறைகள் குறித்து பிரிட்டன் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெறும் வன்முறைகள் குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ள பிரிட்டன் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்காக அனைத்து தரப்பினரையும் ஜனநாயக அனைவரையும் உள்ளடக்கிய அமைதியான வழிமுறைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
நாங்கள் எங்கள் மனித உரிமை கரிசனைகள் குறித்து இலங்கையுடன் தொடர்ச்சியாக பேச்சுசுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். அஹமட் பிரபு மனித உரிமைகளில் முன்னேற்றம் காணவேண்டியது குறித்தும் இலங்கை மக்களிற்கு நீதி பொறுப்புக்கூறலை வழங்கவேண்டியது குறித்தும் இலங்கை ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சரை சந்தித்தவேளை தெரிவித்திருந்தார் என பிரிட்டனின் நாடாளுமன்றபொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் விக்கி போர்ட் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தென்னாசியாவிற்கான அமைச்சர் தாரிக் அஹமட் அமைதியாக வன்முறையில் ஈடுபடுவதற்கான உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஜாப் அணியாமல் பாடசாலைக்கு வந்த மாணவிகள் – தலிபான்கள் செய்த செயல் – தொடரும் கெடுபிடி !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் விவகாரத்தில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றனர்.

பள்ளிகளில் மாணவிகளுக்கு கடுமையான உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. அந்தவகையில் பல்க் மாகாணத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணியாமலும், ஹிஜாப் அணிந்தும் முகத்தை மூடாமலும் வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பள்ளியை தலிபான்கள் மூடி விட்டதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய உடை கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய தலிபான்கள் கண்காணிப்பாளர்களை நியமித்து உள்ளனர்.

இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் எந்தவித விளக்கமும் கேட்காமல் பள்ளியில் இருந்து நீக்கப்படுவதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.