2020 இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள்

2020 இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள்

யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் – அங்கஜன் ராமநாதன் முதலிடம் !

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. வழமையான முடிவுகளை போலல்லாது பல மாற்றங்ளை யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகளில் காணக்கூடியதாகவுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி

சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்

எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்

தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

டக்லஸ் தேவனந்தா – 32,146 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகள்

வன்னியின் விருப்பு வாக்குகள் வெளியாகின!

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வன்னி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டவண்ணமுள்ளன.

அதன் அடிப்படையில் வன்னி தேர்தல் மாவட்டத்தினுடைய விருப்பு வாக்கு நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி

ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி

சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்

செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

 

2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் பொதுஜன பொரமுன அமோக வெற்றி ! – ஐ. தே.கட்சி வரலாற்றுச் சரிவு. முழுமையான முடிவுகள் இதோ..!

2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிவுகள் முழுமைவெளியாகி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளதுடன் இரண்டாவது இடத்தினை  ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. 

அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – SLPP – 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள்
 • ஐக்கிய மக்கள் சக்தி – SJB – 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள்
 • தேசிய மக்கள் சக்தி – NPP / JJB – 4,45,958 (3.84%) 3 ஆசனங்கள்
 • இலங்கை தமிழரசு கட்சி – ITAK – 3,27,168 (2.82%) 10 ஆசனங்கள்
 • ஐக்கிய தேசிய கட்சி – UNP – 249,435 (2.15%) 1 ஆசனம்
 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – AITC – 67,766 (0.58%) – 2 ஆசனங்கள்
 • OPPP – 67,758 (0.58%) – 1 ஆசனம்
 • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – TMVP – 67,692 (0.58%) 1 ஆசனம்
 • இலங்கை சுதந்திர கட்சி – SLFP 66,579 (0.57%) 1 ஆசனம்
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி – EPDP – 61,464 (0.53%) 2 ஆசனங்கள்
 • MNA – 55,981 (0.48%) 1 ஆசனம்
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – TMTK – (0.44) 1 ஆசனம்
 • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ACMC (0.37%) 1 ஆசனம்
 • தேசிய காங்கிரஸ் – NC – 39,272 (0.34%) 1 ஆசனம்
 • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – SLMC – 34,428 (0.3%) 1 ஆசனம்

இந்த தேர்தல் முடிவுகளுக்கு அமைய பெரும்பான்மை பலத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதுடன், சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, புதிய பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்.

 

வெளியாகியது ..வவுனியா தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது வன்னி தேர்தல் மாவட்டத்தினுடைய  வவுனியா தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

வவுனியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 22849
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18696
ஐக்கிய மக்கள் சக்தி – 11170

இதனடிப்படையில் வவுனியா தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது

தலைநகரின் தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது கொழும்பு தேர்தல் மாவட்டத்தினுடைய மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு, மற்றும் தெஹிவளை போன்ற  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 64692
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16688
ஐக்கிய தேசிய கட்சி – 2978
தேசிய மக்கள் சக்தி – 1230

கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 41059
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16775
ஐக்கிய தேசிய கட்சி – 2676
தேசிய மக்கள் சக்தி – 1230 

தெஹிவளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 18,611
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -18,244
தேசிய மக்கள் சக்தி – 2,094
ஐக்கிய தேசிய கட்சி -1706

பொரளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 20,450
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -17,680
தேசிய மக்கள் சக்தி – 1,931
ஐக்கிய தேசிய கட்சி – 1,500

இதனடிப்படையில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது திருகோணமலை தேர்தல் மாவட்டத்தினுடைய  திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

திருகோணமலை தேர்தல் தொகுதி போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 23008
ஐக்கிய மக்கள் சக்தி – 18063
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16794
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4457

,தனடிப்படையில் திருகோணமலை தேர்தல் தொகுதிapy;  இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

திருகோணமலை மூதூரில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதிக்கம்!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது திருகோணமலை தேர்தல் மாவட்டத்தினுடைய  மூதூர் தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 51,330

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 11,085

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 9,502

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,073

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 875

இதனடிப்படையில் மூதூர் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

 

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகின!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு முடிவுகள்,
இலங்கை தமிழரசு கட்சி – 6849
இலங்கை சுதந்திர கட்சி – 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4645
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4185
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2114

 

கோப்பாய் தேர்தல் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு முடிவுகள்,

இலங்கை தமிழரசு கட்சி – 9365
இலங்கை சுதந்திர கட்சி – 7188
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5672
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4353
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3549

 

நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி – 8423
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 8386
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3988
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3361
இலங்கை சுதந்திர கட்சி – 2921

 

பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 5803
இலங்கை சுதந்திர கட்சி – 4700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4158
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3382
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2986

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகளினுடைய அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியே முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை – சேறுவிலவிலும் பொதுஜன பெரமுனவின் ஆதிக்கம் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது திருகோணமலை – சேறுவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் ஏனைய பகுதிகளினை போலவே இந்த தொகுதியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கமே காணப்படுகின்றது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 34,035

ஐக்கிய மக்கள் சக்தி – 13,117

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 4,723

தேசிய மக்கள் சக்தி – 992

ஐக்கிய தேசியக் கட்சி – 581

 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 73,782

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59,329

செல்லுபடியான வாக்குகள் – 55,606

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,723

காலியின் முழுமையான தேர்தல் முடிவுகளும் வெளியானது! – ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவு.

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது காலி தேர்தல் மாவட்டத்துக்கான முழுமையான  முடிவுகள்  வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 430,334
ஐக்கிய மக்கள் சக்தி – 115,456
தேசிய மக்கள் சக்தி – 29,963
ஐக்கிய தேசிய கட்சி – 18,968

ஏற்கனவே மாத்தறை மாவட்டத்தில் அமோக வெற்றியை பதிவு செய்திருந்த  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இங்கும்  அபார வெற்றி பெற்றுள்ளது.