இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நேற்றைய தினம் (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல தேர்தல் தொகுதிகளினுடைய முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது வன்னி மாவட்டத்தினுடைய தபால்மூல வாக்குகளினுடைய தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி – 4308
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2771
ஐக்கிய மக்கள் சக்தி – 1811
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி -736
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 602
இதனடிப்படையில் வன்னி தேர்தல் தொகுதியின் தபால் மூல ஓட்டுக்களினுடைய முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றிபெற்றுள்ளது.